அனைவருக்கும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். காவிரியில் கொஞ்சம் போல் தண்ணீர் விட்டிருக்காங்க. ஆனால் நான் இன்னமும் மாடியில் போய்ப் பார்க்கவில்லை. மாடி ஏறத் தடா! ஆனால் எப்படியும் போய்ப் பார்த்துட்டு வந்துடுவேன். கீழே அம்மா மண்டபம் போயும் பார்க்கலாம். ஆனால் அங்கே இன்று ஒரே கூட்டம். காலையிலிருந்து மக்கள் கூட்டம்! தெருப் பூராக் கடைகளும் முளைத்துள்ளதாம். நான் கீழே இறங்கவில்லை. வழக்கமாய்ப் பெருமாள் வருவார் காவிரிக்குச் சீர் கொடுக்க. அனால் இம்முறை இன்று வரவில்லை. அதுவும் ஒரு காரணம் நான் கீழே இறங்காததற்கு. ஆடி 28 ஆம் தேதி தான் பெருமாள் வரப் போகிறாராம். ஜ்யேஷ்டாபிஷேஹம் முடிந்து இன்னமும் 48 நாட்கள் ஆகலைனு நினைக்கிறேன்.
நாங்க கோயிலுக்குப் போயும் 2,3 மாதங்கள் ஆகிவிட்டன. வெயில் காரணமாய்ப் போகவில்லை. அங்கே தாயார் சந்நிதிக்குப் போகும் வழியெல்லாம் சூடு தாங்காது! என்னதான் பாட்டரி காரில் போனாலும் அதுவும் எப்போதும் கிடைக்கணுமே!
இன்று ஆடி பதினெட்டுக்குச் சும்மா எளிமையாகச் சமைச்சேன். தேங்காய் சாதம், வெல்ல சாதம், எலுமிச்சை சாதம், (எலுமிச்சம்பழம் இல்லை என்பதால் நாரத்தங்காய்ச் சாறில் சாதம் செய்தேன்.) தயிர் சாதம். தொட்டுக்க அப்பளம், வடாம் தான். கொஞ்சம் போல் ஆமைவடை/ஆமவடை(?). மேலே உள்ள படங்களில் பார்க்கலாம். சாதம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் இருக்கு. வேணும் என்பவர்கள் எடுத்துச் சாப்பிடலாம். :)))))
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்!
Deleteஇங்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் தேங்காய் சாதம்.
ReplyDeleteபுளிக்காய்ச்சல் காய்ச்சினால் செலவு ஆகாது! ஆதலால் பண்ணவில்லை.பச்சைப் புளியஞ்சாதம் பண்ணி இருக்கலாம். அதுவும் நிறைய வந்துடும். செலவாகணுமே!
Deleteஎங்கள் வீட்டில் இன்றைய மூன்றில் தேசா முதலிடம். புகா வழக்கமான வாசனை மிஸ்சிங்!
Deleteம்ம்ம்? அப்படியா? கொஞ்சம் கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு 4,5 மிவத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு தேவையானால் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு எல்லாவற்றையும் பொடி பண்ணித் தனியாக வைத்துக் கொள்ளவும். சாதம் கலந்ததும் இந்தப் பொடியைக் கொஞ்சம் மேலாகத் தூவிவிட்டு நல்லெண்ணெயைப் பச்சையாக விட்டுக் கிளறினால் மணம் ஊரைத் தூக்கும்.
Deleteசெய்துடுவோம். குறித்துக்கொண்டுள்ளேன். புகாவில் மிளகு போடுவது காஞ்சிபுரம் ஸ்டைலா? நாங்கள் போடுவதில்லை.
Deleteபுளியோதரை கோயில் புளியோதரை என்றால் அதற்கு மிளகு மட்டுமே சேர்ப்பார்கள். ஸ்வாமி நிவேதனத்துக்கு மடப்பள்ளியில் பண்ணும் புளியோதரை மிளகு சேர்த்துத் தான் பண்ணுவார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளியோதரை அப்படித் தான் ருசிக்கும். எந்தக் கோயில் பெருமாள் பிரசாதம் என்றாலும் நிவேதனம் செய்யும் புளியோதரைக்கு மட்டும் மிளகு தான் சேர்ப்பார்கள். மக்கள் விநியோகம் எனில் அதில் மி.வத்தல்+கொ.ம.விதை+மிளகு சேர்ப்பார்கள்.
Delete//மக்கள் விநியோகம் எனில்// - நான் பல கோவில்களில் மி.வத்தல் போட்ட புளியோதரை சாப்பிட்டிருக்கேன் (திருச்சேறை உட்பட... அங்க ஒரு தடவை புளியோதரை பாத்திரத்தில் 50 மிளகாய் போட்டிருந்தார்கள், நீள மிளகாய்..விநியோகத்துக்கு முன் அந்த மிளகாய்லாம் எடுத்து வெளியே போட்டார்கள்).
Deleteபொதுமக்கள் விநியோகத்தில் கொடுக்கப்படும் புளியோதரையில் மி.வத்தல் இருக்கும். ஆனால் கோஷ்டியின் போது கொடுத்தால் அது மிளகு மட்டும் போட்டே தயாரிக்கப்படும். இப்போவும் இங்கே ஶ்ரீரங்கம் உள் ஆண்டாள் சந்நிதி கோஷ்டியில் கொடுக்கும் புளியோதரை மிளகு சேர்த்திருப்பார்கள். நாம் தளிகைக்குக் கட்டும் பணத்திற்குக் கொடுக்கப்படும் புளியோதரையில் மி.வத்தல்!
Deleteஆடிப் பெருக்கு என்று தலைப்பில் போட்டுவிட்டு, ஆடிக்கொண்டே படமெடுத்தீர்களா? முதல் படம் கலங்கலாக வந்துள்ளது?
ReplyDeleteவாங்க நெல்லைத் தமிழரே, அது கலங்கல் இல்லை. விளக்கு வெளிச்சம் பிரதிபலிப்பினால் அப்படித் தெரிகிறது.
Deleteஒரு கலவை சாதத்துக்கு ஒரு வடை என்ற கணக்கில் பண்ணினீர்களா?
ReplyDeleteகாலம்பர சமைக்கும்போது கொஞ்சம் தான் பண்ணுவேன். பின்னர் மாலை காஃபி அல்லது தேநீர் சாப்பிடும்போது வடை தட்டிக் கொடுத்து அதோடு சாப்பிடுவோம்.
Delete/சாதம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் இருக்கு. வேணும் என்பவர்கள்// - அடடா...இந்த மதுரைக்காரர்களின் உபசரிப்பே வித்தியாசமாக இருக்கே... சாப்பிட்டபிறகு மிஞ்சினால் அப்புறம்தான் மற்றவர்களுக்கா? நெல்லையில் இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே... தனக்கு மிஞ்சித்தான் தானம் என்ற சொல்வழக்கின் ஆரம்பம் மதுரையா?
ReplyDeleteஹாஹாஹாஹா!
Deleteதஞ்சாவூர்க்காரர்கள் எப்போதும் ரெண்டு பேருக்கு சேர்த்தே வடிப்பார்கள்!
Deleteஶ்ரீராம், புரியலை! ஆனால் நானும் கிட்டத்தட்ட நான்கு பேர் சாப்பிடும்படி தான் சமைத்தேன். மிச்சம் இருப்பதை இப்போத் தான் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தேன்.
Deleteசும்மா ஜோக்.
Delete//எப்போதும் ரெண்டு பேருக்கு சேர்த்தே வடிப்பார்கள்!// - எங்க வீட்டிலயும், என் மனைவி பண்ணும்போது எனக்கும் சேர்த்தே வடிப்பார்கள். (கூட ரெண்டுபேருக்கு என்று சொல்ல விட்டுப்போயிடுச்சே).
Deleteஇப்போல்லாம் நான் பண்ணும்போது குறையக் குறைய பண்ணறேன். சாதம் மிஞ்சி தினமும் தூரப்போட (ஒரு நாளைக்கு அனேகமா ஒரு முறைதான் சாதம் சாப்பிடறாங்க...அதுவும் கொஞ்சமா) மனசாவதில்லை (அதுவேறு பாவச் செயல் என்பதால்)
சாதாரண நாட்களில் எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் சமைப்பேன். சாதம் மிஞ்சும்படி வைப்பதில்லை. எப்போதேனும் குழம்பு, ரசம் மிஞ்சும். இப்போ வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவேன். முன்னால் எல்லாம் வைத்திருந்து மறுநாள் கஞ்சியில் விட்டுக் கொள்வோம்.
Deleteஆஹா! ஶ்ரீராம், தஞ்சாவூர்க்காரங்க பத்திச் சொன்னதுக்கு இப்போத் தான் அர்த்தம் மனசில் ஏறியது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஹா.்்்்்்்். ஹா.்்்். ஹா.்்
Deleteசர்க்கரைப் பொங்கலுக்கும் வெல்ல சாதத்துக்கும் என்ன வித்தியாசம்?
ReplyDeleteசர்க்கரைப் பொங்கல்,அரிசி+பருப்பு+பால்+வெல்லம் எல்லாம் போட்டு அரிசியையும் பருப்பையும் குழைய வேக வைத்துப் பண்ணுவது. இது வெல்லம்+தேங்காய்ப் பூரணம் செய்து கொண்டு அதில் சமைத்த சாதத்தைப் போட்டுக் கிளறிக் கொஞ்சமாக நெய் சேர்த்து எடுத்துவிடுவாங்க. அநேகமா ஆடிப்பெருக்கில் என் பிறந்த/புகுந்த இரண்டு வீடுகளிலும் இதான் பண்ணுவோம். சர்க்கரைப் பொங்கலோ, அக்கார அடிசிலோ பண்ணுவதில்லை. இன்னிக்கு எதிர்வீட்டு மாமி அக்கார அடிசில் கொண்டு வந்து தந்தாங்க! நன்றாக இருந்தது.
Deleteநெய் ஊற்றி பொங்கல் செய்தாலும், பொங்கலை சூடாகத் தட்டிலிட்டு குழித்து அதில்கொஞ்சம் புதுசாக காய்ச்சிய நெய் ஊற்றி சாப்பிட்டால்... சாப்பிட்டேன்!!!
Deleteபொங்கலுக்கு நெய் ஊற்றியும் கிளறுவோம் தான். ஆனால் சாப்பிடுகையிலும் நெய் ஊற்றி அதன் நடுவே நாட்டுச் சர்க்கரை போடுவார்கள். இப்போல்லாம் நாட்டுச் சர்க்கரைனால் தெரியலை! அப்புறம் சிலர் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்வார்கள். எங்க வீட்டில் வெங்கடாசலபதி சமாராதனையின் போது முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிடும் வைதீகர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் போட்டு நெய் நிறைய விடுவார்கள். ஒரு தரம் பெரியப்பா வீட்டு சமாராதனையில் பெரியம்மா நெய்க்குப் பதிலாக விளக்கெண்ணெய்த் (அப்போல்லாம் நிறைய வாங்கி வைச்சிருப்பாங்க!)தூக்கை எடுத்து வந்து கரண்டியால் ஊற்றி விட்டார்கள். ஆசையுடன் அதைக் கையில் வாங்கி உறிஞ்சிய புரோகிதரின் முகம் போன போக்கு! ரமணி வாத்தியார் என்னும் பெயர் அவருக்கு! நாங்க சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்போம்.
Delete/வெல்லம்+தேங்காய்ப் பூரணம் செய்து கொண்டு அதில் சமைத்த சாதத்தைப் போட்டுக்// - இதுவரை இப்படி நான் சாப்பிட்டதே இல்லை.... நல்லா ஞாபகம் இருக்கட்டும். ஒரு வேளை (ஒரு வேளை) மின்னல் விசிட் அடித்தால் (5 நிமிடங்கள்), நான் இனிப்பை விட்டுவிட்டேன் என்பதை மறந்துடாதீங்க...
Delete//பொங்கலை சூடாகத் தட்டிலிட்டு குழித்து அதில்கொஞ்சம் புதுசாக // - நெய் விடுவதே..வாசனைக்கு மட்டுமல்லாமல், இனிப்பைக் குறைக்கும் முயற்சி. அதுல ரெண்டு பிரச்சனை. நிறைய இனிப்பு இருந்தாலும் நாக்குக்குத் தெரியாது (உடலுக்கு நல்லதில்லை). நிறைய நெய் சேர்ந்தாலும், அதுவும் பிரச்சனைதான்.
Deleteபோளி+ புத்துருக்கு நெய், ரோஸ்டா வார்த்த நெய் தோசை, நல்ல நெய்+Bபன்... நல்லா இருக்கும். ம்.ம். இனிப்பை வெறுக்கணும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே இருக்கேன்.
நினைங்க, நினைங்க!
Deleteநெல்லை சர்க்கரை சாதம் சாப்பிடதில்லையஆ? சூப்பரா இருக்கும். வெல்லம் தேங்காய் போட்டு கிளறி சாதம் கலந்து?
Deleteசெம டேஸ்டியா இருக்கும்..
கீதா
வாங்க தி/கீதா, வட மாநிலங்களில் சர்க்கரை சேர்த்துத் தேங்காய் போட்டோ, போடாமலோ, பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ் எல்லாம் போட்டுப் பண்ணுவாங்களே! பெயர் மறந்துட்டேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஆடி பதினெட்டாம் பெருக்கு வாழ்த்துகள். கலந்த சாதமெல்லாம் நன்றாக உள்ளது. எனக்கு முன்னமையே வந்தவர்கள் பிரசாதம் எடுத்துக் கொண்டதால், அப்போதே கொஞ்சம்தான் உள்ளது என்றீர்கள். இப்போது படங்களை பார்த்து தரிசித்து கொண்டேன். பதிவும், படங்களும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா, கமலா, இருப்பதில் நீங்களும் எடுத்துக் கொண்டிருக்கலாமே! :)))))
Deleteபதார்த்தங்களை புகைப்படத்தில் போட்டு காண்பித்தே ஏமாற்றி விடுகிறீர்களே...
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! முழுச்சாப்பாடே போட்டுடலாம்!:)
Deleteஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரசாதங்கள் எடுத்துக் கொண்டேன்.
அம்மா மண்டபத்தில் கொஞ்சமாய் இருக்கும் தண்ணீரில் மக்கள் ஆடிபெருக்கை கொண்டாடியதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
மருத்துவரை பார்க்க போனால் மருத்துவர் இன்று விடுமுறை விட்டு விட்டார். வடக்குகோபுர வாசல் அருகே மருத்துவர். அவர் இல்லாதது நல்லதாக போய் விட்டது அம்மா மீனாட்சியை தரிசனம் செய்து வந்தோம்.
காலை 10.30 க்கு 100 டிக்கட் எடுத்து போனோம் ஒரு மணி நேரம் திரை போட்டு இருந்த காரணத்தால்(கால சந்தி பூஜை) தாமதம் ஆனது. ஆனால் தீபாராதனை கிடைத்தது. ஸ்வாமியை 10 நிமிடத்தில் பார்த்து விட்டோம்.
கோவில் முழுக்க புதுமணதம்பதிகள் வந்து இருந்தார்கள். எல்லோரும் புது சரடு மாற்றிக் கொண்டு இருந்தார்கள்.
அம்மாமண்டபம் காட்டினப்போ நான் ஏதோ வேலையாய் இருந்ததால் பார்க்கலை!
Deleteஓ மருத்துவரிடம் போனீங்களா?மீனாக்ஷிக்குத் திருவிழா என்றாலே கொண்டாட்டம் தானே! கோயிலில் முளைக்கொட்டு உற்சவம் நல்லபடி நடந்திருக்கும்னு நினைக்கிறேன். மருத்துவரிடம் போய்விட்டு வந்து சொல்லுங்கள். உடல் நலம் முன்னேறி இருக்கிறது என்று சொன்னால் மகிழ்ச்சி.
ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். எப்பொழுதும் நிறைவா,சந்தோஷமா, ஆரோக்கியமா இருக்கணும். வெல்ல சாதம் ரெசிபி சூப்பர்.
ReplyDeleteகாவேரி ஏமாந்துட்டாளா. மாப்பிள்ளையைப் பார்க்காமல்.
சமுத்திரராஜன் மனிவி என்பதால் லக்ஷ்மியோட
அம்மா காவேரி. அதனால் மாப்பிள்ளை ரங்கராஜனுக்கு சீர் கொடுப்பாளாம். மறு சீராக அவர் ஆடிப் பதினெட்டுக்கு சீர் கொண்டு வருவாராம்.
சரி ,பிறகு கொண்டு வரட்டும்.
வாங்க வல்லி. அரங்கனை நீங்க மாப்பிள்ளை என்கிறீர்கள். ஆனால் காவிரி அரங்கனுக்குச் சகோதரி எனச் சொல்கின்றனர் இங்கே! எப்படியோ ஆடிப் பதினெட்டுக்கு அரங்கன் வரலை. ஆடி 28 ஆம் தேதி வருவார்னு சொல்றாங்க!
Deleteநேற்று ஆடிப்பூரத்திற்கு ஸ்ரீ ரங்கம் கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு சீர் போவதை தொலைக்காட்சியில் காட்டினார்கள் செய்தித் தொகுப்பில்
ReplyDeleteஶ்ரீவில்லிபுத்தூரில் இன்று தான் ஆடிப்பூரம். அதனால் நேற்றுப் போயிருக்கும். அதையும் பார்க்கவில்லை. இங்கே உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் காட்டுவாங்க. நேத்திக்கு அதையும் பார்க்கலை!
Deleteஆடிப் பெருக்கு வாழ்த்துகள். இந்த வருடமும் காவிரியில் நீர் இல்லை :( வறண்டு கிடக்கும் காவிரியில் ஆடிப்பெருக்கு... அடுத்த வருடமாவது நிறைய தண்ணீர் வரத்து இருக்கட்டும்.
ReplyDeleteஆனாலும் மக்கள் கூட்டம் நிறையவே வந்திருந்ததாகத் தெரிந்தது.
வாங்க வெங்கட், ஆமாம், அம்மாமண்டபத்தில் கூட்டம் இருந்தது என்று தான் சொன்னார்கள். நான் கீழே போய்ப் பார்க்கவில்லை.
Deleteநன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துகள்...
வாங்க டிடி, நன்றியும் வாழ்த்துகளும் உங்களுக்கும்.
Deleteகாலையில் நா போட்ட கமென்ட் பப்ளிஷ் ஆகவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...போகவே இல்லை போல..
ReplyDeleteஇங்கும் ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை எதுவும் இல்லாமலே ஆடிப்பெருக்கு கொண்டாடியாச்சு. இங்கு இன்றுதான் ஆடிப்பூரம்...
எனக்கு ஊர் நினைவுகள் ஆடிப் பெருக்கிற்கு எல்லாம்
கீதா
தி/கீதா, ஊர் நினைவுகளை விட எனக்குக் குழந்தைகள் நினைவு தான் அதிகம் வரும். அவங்க பள்ளிக்கு ஏழரைக்குக் கிளம்பணும். காலம்பரச் சீக்கிரமே எழுந்து அதுக்குள்ளே எல்லாச் சாதங்களும் கலந்து ஸ்வாமிக்கும் நிவேதனம் செய்து, அவங்க ஆசிரியப் பெருமக்களுக்கும் சேர்த்துக் கட்டிக் கொடுப்பேன். ஒவ்வொரு ஆடிப்பெருக்கின்போதும் அதான் நினைவில் வரும்.
Deleteஸ்பாமில் கூடத் தேடினேன் தி/கீதா, எதுவும் கிடைக்கலை!
Deleteஇணையம் இருந்தும் இழுவையோ.... இழுவை...
ReplyDeleteஇதற்கு முன் இப்படி இருந்ததில்லை...
தங்களுக்கும் அன்புநிறை வாழ்த்துகள்..
எங்கும் நலமும் வளமும் பெருகட்டும்....
வாங்க துரை, அதனால் என்ன? உங்களுக்கு இணையம் கிடைக்கும்போது வந்து பார்த்துக் கருத்தைப் பகிருங்கள். நன்றிப்பா!
ReplyDeleteஉங்கள் மின்னூல் கீதா கல்யாண வைபோகமே! படித்தேன்.
ReplyDeleteஅருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
போன ஜென்மத்து பந்தம் என்று கேட்கும் போது சிலிர்க்கிறது. 100 ஆண்டு வாழ்க!
பெண் பார்க்க வரும் போது ஏற்பட்ட உடல்நிலை. (வேனல்கட்டி) அவர்கள் பார்க்க வரும் போது முகம் வடு இருக்க கூடாதே என்ற பதட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது.
மாப்பிள்ளை முந்தின நாளே வந்து கொடுத்த அதிர்ச்சி! பெண் அழைத்தல் வேண்டும் என்று மாமியார் சொன்னது.
ஆற்று மணலில் கால் புதைய புதைய நடந்து சென்றது, ஆரத்தி இல்லாமல் பெண் அழைப்பா என்று திகைத்தது. எல்லாம் படிக்க படிக்க நன்றாக இருந்தது.
சின்ன நாத்தனார் கணக்கில் அரிசி போட்டு சமைத்து அதை சமாளித்த விதம் . சென்னையில் ஜாகை, அதன் பின் அம்பத்தூர் வாழ்க்கை எல்லாம் நன்றாக இருந்தது சொல்லி சென்ற விதம்.
வெளியில் போனவர்களை காணவில்லை என்றால் இரும்பு கரண்டியை தண்ணீரில் போடுவது புதிய செய்தி எனக்கு.
கல்யாணவீட்டில் செய்யபடும் சடங்குகள் ஏன் எதற்கு என்ற காரணகாரியங்கள் எல்லாம் மிக அருமை.
வேலை என்னாச்சு ? வேறு ஊர் என்பதால் பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது.
மீள் மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி! அப்புறமும் பலமுறை சின்ன நாத்தனார் சொல்லிச் செய்து மாட்டிக் கொண்டு விழித்திருக்கிறேன். :)))))) எனக்குமே என் மாமியார் செய்து தான் இரும்புக்கரண்டியைத் தண்ணீரில் போடணும்னு தெரியும். அதிலே இருந்து நானும் போட ஆரம்பித்து விட்டேன். வேலையைச் சென்னை தண்டையார்ப்பேட்டைக்கு மாற்றிக் கொண்டு போக ஆரம்பித்தேன். அது குறித்துப் பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எழுதி இருக்கேன். பலரும் இப்போது வரை உள்ள நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதும்படி சொல்கின்றனர் என் உறவுகள் உள்பட! அது அவ்வளவு சுலபம் இல்லை. சில நிகழ்ச்சிகளின் விளைவுகளை எழுதுவதில் சங்கடங்கள் இருக்கின்றன என்பதால் சுபமாக முடித்து விட்டேன்.
Deleteஅந்த ஜோசியர் எனக்குக் கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் இருந்தார். அவர் எங்கள் கல்யாண வாழ்க்கை குறித்தும் என் கணவரின் உத்தியோக மாற்றல் குறித்தும் சொன்னவை எல்லாம் நடந்திருக்கின்றன. முதலில் அவரை நம்பாத என் கணவர் பின்னால் அவரை நம்பும்படியான நிகழ்ச்சியும் நடந்தது. என் கடைசி நாத்தனார் கல்யாணத்திலும் அவர் எழுதிக் கொடுத்தபடியே நடந்தது.
Delete//சில நிகழ்ச்சிகளின் விளைவுகளை எழுதுவதில் சங்கடங்கள் இருக்கின்றன என்பதால் சுபமாக முடித்து விட்டேன்.//
Deleteநீங்கள் எழுதினவரை மிக நன்றாக இருக்கிறது.
சுபம் தான் வேண்டும்.
சில ஜோசியர்கள் மிக நன்றாக சொல்வார்கள்.
ஆமாம், அப்போது தான் என்னுடைய நண்பன் ஆன சிவா என்னும் பையர் என் கை ரேகைகளைப் பார்த்துவிட்டுக் கல்யாண வாழ்க்கை, குழந்தைகள், நான் வடநாடு போவது என எல்லாமும் சொன்னதோடு 50 வயதுக்குப் பின்னர் வெளிநாடு போவாய் என்றும் சொன்னார். நான் கேலி செய்வேன். இப்போது அவர் எங்கே இருக்காரோ? அதே போல் வேலை பார்த்த அலுவலகத்திலும் லக்ஷ்மி என்னும் தோழி மேலே சொன்னமாதிரிச் சொன்னதோடு நான் அனுபவிக்கப் போகும் சங்கடங்களையும், கஷ்டங்களையும் மறைமுகமாகச் சொன்னார். ஆனால் நீ எல்லாவற்றையும் சமாளிப்பாய் என தைரியமும் கொடுத்தார். :))))))
Deleteஇவங்க 3 பேருக்கும் பின்னால் எந்த ஜோதிடரும் என்னைப் பொறுத்தவரையில் சரியாகச் சொல்லவில்லை.
Deleteஆடிப்பெருக்கு விருந்துடன் வாழ்துகள்.
ReplyDeleteசுவைத்தோம்.
வாங்க மாதேவி, நன்றி.
ReplyDelete