எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 03, 2019

ஹூஸ்டன் நகரின் சாவி






























கலை நிகழ்ச்சிகள் படங்கள் கொடுத்திருக்கேன். ஆனால் படங்கள் எல்லாமும் இடம் மாறி வந்துவிட்டன. ஆகவே பொறுத்துக்கொள்ளவும். கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் ஹூஸ்டன் நகரின் மேயர் வந்து அனைவருக்கும் வரவேற்புச் சொல்லிவிட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மோதியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக்குறிப்புக் கொடுத்துவிட்டு இதோ அவரே வந்து விட்டார் எனச் சொல்ல மோதி அரங்கத்தில் பிரவேசம் ஆனார். மோதியைப் பற்றியச் சிறப்பு அறிமுகத்துக்குப் பின்னர் மோதியிடம் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஹூஸ்டன் நகரத்தின் சாவியைக் கொடுத்தார். அதன் பின்னர் மோதி பேசிவிட்டு வந்திருக்கும் விருந்தினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து மரியாதை செய்த பின்னர் மேடையிலிருந்து கீழே இறங்கி முன் வரிசையில் அனைவருடனும் அமர்ந்தார். அனைவரும் திரு ட்ரம்ப் அங்கிள் வருகைக்குக் காத்திருந்தனர். அதன் நடுவே மீண்டும் கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் சுமார் பதினோரு (காலை) மணி அளவில் ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.


48 comments:

  1. ட்ரம்ப் அங்கிள் வரும்போது... ட்ரம்செட் சப்தம் விண்ணைப் பிளந்ததாமே...
    படங்கள் ஒரேபோல நிறைய இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. இல்லை கில்லர்ஜி, வெவ்வேறு படங்கள் தான். இடம் மாறி இருக்கின்றன. எல்லாவற்றிலும் அந்தப் பெண் இருப்பதால் உங்களுக்கு ஒரே மாதிரிப் படங்களாகத் தெரிகின்றன. மோதி வந்தபோதும் வாத்திய சப்தம் காதைத் துளைத்தது. ட்ரம்புக்கும் அதே மாதிரி!

      Delete
  2. //மோதி அரங்கத்தில் பிரவேசம் ஆனார். //

    இந்த பதிவில் மோதி வந்து விட்டார், பார்த்து விட்டேன்.
    படங்களும் செய்திகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நவாராத்திரியில் மும்முரமாக இருக்கிறீர்கள். வாழ்த்துகள். இங்கே சனி, ஞாயிறில் தான். வரப் போகிறார்கள். போகப் போகிறோம். கூடியவரை தனியாக யாரும் வருவதில்லை.

      Delete
  3. அந்தப்பெண்ணை ஒருதரம் திரும்பச் சொல்லி முகத்தை ஒருதரம் போட்டோ எடுத்திருக்கக்கூடாதோ...   !!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, செய்திருக்கலாமோ?

      Delete
    2. நான் கேட்டால் கீசா மேடம் தவறா நினைச்சுக்குவாங்கன்னு கேட்கலை. எல்லாப்படங்களிலும் அந்தப் பெண். அவள் கண்ணாடி போட்டிருக்கிறாள், 18 வயது இருக்கும். இவ்வளவுதான் தெரியுது.

      Delete
    3. அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள். பெரிய பெண்ணிற்கு 8 அல்லது 9 வயசு இருக்கும். சின்னப் பையன் கைக்குழந்தை. எட்டு மாசத்துக்குள்ளாக இருக்கும். :)))))) குழந்தைகளோடு தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். பலரும் இப்படித் தான் வந்திருந்தனர். ஆனால் நாங்க குஞ்சுலுவைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு கூட்டிப் போகலை. குழந்தைக்கு எப்போக் கழிவறைக்குப் போகணும்னு நம்மால் சொல்ல முடியாது. அவங்க வெளியே விடவில்லை. ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 30+30 படிகள் ஏறி இறங்கிப் பையரோ அல்லது மருமகளோ கஷ்டப்பட்டிருப்பார்கள்.

      Delete
    4. கீசா மேடம்... சும்மா வம்பு பண்ணினேன். அதான் ஒரு படத்துல அந்தப் பெண் பக்கத்துல அவர் கணவர் கைக்குழந்தையை தோளில் போட்டிருக்கிறாரே..

      குழந்தைகளோடு இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வருவது ரிஸ்க்தான்.

      Delete
    5. ///நெல்லைத்தமிழன்04 October, 2019
      நான் கேட்டால் கீசா மேடம் தவறா நினைச்சுக்குவாங்கன்னு கேட்கலை. //

      இப்போ மட்டும் நினைச்சுட மாட்டமாக்கும்:)) கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    6. அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!

      Delete
  4. எனக்கெல்லாம் இப்படி நிகழ்ச்சிப் பார்க்க உண்மையில் பொறுமையே கிடையாது!

    ReplyDelete
    Replies
    1. இதற்குக் கொடுத்த பதில் எப்படியோ டெலீட் ஆகி இருக்கிறது. எனக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளைக் காணப் பிடிக்கும். பையரும், மாமாவும் பிடிச்சதோ இல்லையோ தெரியாது, எனக்காக உட்கார்ந்திருந்தார்கள்.

      Delete
    2. எனக்கும்தான் ஸ்ரீராம். மேடையைவும் ஒழுங்கா பார்க்க முடியாது. அதை டிவி பெட்டியில் பார்ப்பதற்கு, வீட்டில் உட்கார்ந்து வெண்ணெய் போட்ட பாப்கார்ன் ஒரு பக்கெட் வாங்கிக்கொண்டு ஒவ்வொண்ணாகச் சாப்பிட்டுக்கொண்டே யூடியூபில் பார்த்துவிடலாம்.

      Delete
    3. ஹாஹாஹா, இதெல்லாம் ஓர் அனுபவம்!

      Delete
  5. ஆஆஆஆஆஆஆ நான் ஜொன்னெனே.. ஒரே இடத்தில் இருந்துகொண்டே 90 படங்கள்:) ஹா ஹா ஹா..

    ஆனாலும் மோடி அங்கிளை யூஊம் பண்ணி அழகாக எடுத்திட்டீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! அதிரடி, கவரிமா அதிரா! டாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

      Delete
  6. முன்வரிசையில் இருக்கும் பிள்ளை ஒருவர் மோடி அங்கிள் பெயரிட்ட ரீசேட் போட்டிருக்கிறாவே.. கீசாக்காவைபோல அவவுக்கும் மோடி அங்கிளில் கொள்ளைப்பிரியம்போலும்:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

    மீ ட்றம்ப் அங்கிளுக்காக வெயிட்டிங்:))

    ReplyDelete
    Replies
    1. கவரிமா அதிரா, ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடா இல்லை யாரேனும் ஸ்பான்ஸர் பண்ணினாங்களா தெரியலை. அங்கே எல்லோருக்குமே இந்த மோதி 19 போட்ட டீ ஷர்ட் கொடுத்துட்டு இருந்தாங்க! முதலில் விலைக்குனு நினைச்சோம். ஆனால் பையர் சொன்னார் இலவசம் தான் என!

      Delete
    2. ஓ அப்படியோ... ஆஆஆ அநேகமாக அங்கு வொலன்ரியராக வேர்க் பண்ணுவொருக்காக இருக்கலாம்.

      Delete
    3. இல்லை, வந்திருந்த அனைவருக்குமே கொடுத்துக் கொண்டிருந்தனர். விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொண்டார்கள். நாங்க வாங்கிக்கலை! :)))))

      Delete
  7. புகைப்படங்களில் முன்பு பார்த்த அதே தலைவிரி கோலப் பெண்தான்போல் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இப்போக் கடந்த பத்து வருஷங்களுக்கும் மேலாகத் தலையை விரித்துப் போடாத பெண்குலமே இந்தியாவில் இல்லை/வெளிநாடு வாழ் இந்தியர்களிலும் இல்லை.

      Delete
  8. மனதில் ஒன்று பதிந்து விட்டால் வேறு ஒன்றிலும் கவனம் செல்லாது போலிருக்கிறது. அந்தப் பெண் பற்றித் தான் எத்தனை பேர் கவனம் சிதறியிருக்கிறது!.. ஹஹ்ஹஹா..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அந்தப் பெண் எனக்கு நேர் முன்னால் இருந்தார். எழுந்திருந்து படம் எடுக்க முயன்றால் பின்னால் உட்காரு, உட்காருனு சொல்றாங்க! பின்னர் என்னதான் செய்வது? எழுந்து நடுவே இருக்கும் இடைவெளிக்குப் போனால் தன்னார்வலர்கள், பாதுகாவலர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு இருக்கையில் உட்கார்த்தி வைச்சுட்டுப் போறாங்க!

      Delete
  9. ஹூஸ்டன் நகரின் சாவியை கெளரவிக்கும் விதமாகக் கொடுத்தார்..

    பண்பாடுகள், வழிவழிவரும் உயரிய பழக்க வழக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன. நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது ஒவ்வொரு தருணத்திலும் நினைக்க வைக்கும் வழக்கங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், இது மிகப் பெரிய கௌரவம் எனச் சொல்லிக் கொண்டார்கள். ஹூஸ்டனில் அத்தனை இந்தியர்கள் இருப்பதும் அன்றே தெரியும். இத்தனைக்கும் பலர் வரவில்லை.

      Delete
  10. மோதி வந்தே விட்டார். படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அதிபதியும் தெரிகிறாரே,.
    பொறுமையாகப் போய்விட்டு வந்திருக்கிறீர்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீங்க பார்ப்பது ஹூஸ்டன் நகர மேயர். அதிபர் கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார். எனக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிடிக்கும்.

      Delete
  11. வணக்கம் சகோதரி

    கலை நிகழ்ச்சிகள் படங்களும், நம் நாட்டு பிரதமர் சம்பந்தபட்ட படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    /மோதியைப் பற்றியச் சிறப்பு அறிமுகத்துக்குப் பின்னர் மோதியிடம் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஹூஸ்டன் நகரத்தின் சாவியைக் கொடுத்தார். அதன் பின்னர் மோதி பேசிவிட்டு வந்திருக்கும் விருந்தினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து மரியாதை செய்த பின்னர் மேடையிலிருந்து கீழே இறங்கி முன் வரிசையில் அனைவருடனும் அமர்ந்தார். /

    எவ்வளவு சிறப்பான கலை விழா நிகழ்ச்சிகள். அனைத்தையும் கண்ட நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். அதுவும் தாங்கள் பையர் வீட்டில் தங்கியிருக்க சென்ற சமயத்தில் அந்த நாட்டில் இந்த விழா நடைபெற்று இருப்பது தங்களது சிறப்பான பெருமைக்குரிய நேரமே..! அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

    அடுத்து அந்நாட்டு அதிபர் படங்களையும் காண ஆவலாயுள்ளேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. தற்செயலாக அமைந்தது. இதற்கு முன்னால் சினிமாப் பிரபலங்களின் நிகழ்ச்சிகள், நாடகங்கள், கச்சேரிகள், சுகி சிவத்தின் சொற்பொழிவுகள் எனப் போயிருக்கோம். அப்போல்லாம் படங்கள் எடுக்கவில்லை. ஏன்னு தெரியலை. இத்தனைக்கும் டிஜிடல் காமிரா வாங்கிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இப்போக் கைபேசி என்பதால் எடுக்க எளிதாக இருக்குனு எடுக்கிறேன் போல!

      Delete
  12. மோடி கூரைக்கு அருகே நின்றதால் படமெடுக்க சௌகரியமாய் இருந்தது இல்லையா

    ReplyDelete
  13. எனக்கென்னவோ... இந்த இடுகையைப் படிச்சவங்க, மோதி படத்துக்குப் பதிலா அந்தப் பெண்ணின் படத்தைப் போட்டிருந்தால் இன்னும் திருப்தியடைஞ்சிருப்பாங்கன்னு தோணுது

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பதில் முன்னால் ஸ்ரீராம் கேட்டதுக்கும், நீங்க அந்தப் பெண்ணின் வயசை அனுமானம் செய்ததுக்கும் சேர்த்துச் சொல்லிட்டேன்.

      Delete
  14. ஹூஸ்டன் சாவின்னு தலைப்பு அழகா போட்டுட்டுட்டீங்க ஆனா உங்க தளத்து சாவியைத்தான் இத்தனை நேரம் தேடிக்கிட்டிருந்தேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பின்ன தளம் ஓப்பன் ஆகவே இல்லை..ஹிஹிஹிஹி.(என் கணினி/நெட் தான் பிரச்சனை.) இப்பத்தான் சரியா ஓப்பன் ஆச்சு வாசித்துவிட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்க இணைய இணைப்பைச் சரி பார்க்கவும் தி/கீதா! :)))))

      Delete
  15. மோதி தாத்தா வந்தாச்சு! அடுத்து ட்ரம்ப் தாத்தாவும் வந்தாச்சா நெஜம்மாவா அப்படின்னா அவர் செக்கரட்டரியைக் காணமே.... தேடிக்கிட்டிருக்கேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தாத்தாவா உங்களுக்கு! அநியாயமா இல்லையோ? நான் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை! :))))))

      Delete
  16. தொடர்ந்து வாசித்து வருகிறேன். அருமையாக உள்ளது.

    ReplyDelete
  17. ஒப்பந்தம் கைச்சாத்தாகப் போகிறது.:))

    ReplyDelete
  18. புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்!

      Delete
  19. தீபாவளி ப்ரிவ்யூ நன்றாக இருக்கிறது. குஞ்சுலு டைப்பிங் ப்ரமாதம்.
    மேத்தி பக்கோடா ஏன் சாப்போபிடவில்லை? கரும்புச்சாறு 4 டாலர் என்றதும் நழுவிவிட்டீர்களா! இந்த மாதிரி மேளாக்களில் சாம்பாரை நினைப்பதே பாவம்! அதையும் சிலர் வாங்கிக் குடிப்பார்கள்தான். அவர்கள் நாக்கின் நிலை அப்படி!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஏகாந்தன் சார், பதிவு அங்கே, கருத்து இங்கேயா? மாத்திச் சொல்லி இருக்கீங்க? போனால் போகட்டும். நாங்க மேதி பகோடாவும் சாப்பிட்டோம். பாவ் பாஜி சாப்பிட நினைச்சு அது நல்லா இல்லைனதாலே மேதி பகோடாவும் கடியும்(தொட்டுக்க) வாங்கிட்டு வந்தார் பையர்.

      Delete
  20. * சாப்பிடவில்லை?

    ReplyDelete
    Replies
    1. கரும்புச்சாறும் குடித்தோம். இந்தியாவில் செய்யற மாதிரி ருசி இல்லை.

      Delete