2 நாளா நான் ஒண்ணுமே எழுதலைன்னதும், என்னோட அண்ணா பையனின் நண்பர்கள் தொலைபேசி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். (ஹிஹிஹி, அவன் சொன்னது என்னமோ ஒரு பையனைத் தான், சும்மா ஒரு பில்ட்-அப்புக்காக நண்பர்கள்னு எழுதி இருக்கேன்.). அப்பாடா, நம்ம எழுத்துக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களான்னு பார்த்தப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
அம்பி மாதிரி "மொக்கைப் பதிவாளர்கள்' பொறாமைப் படறதிலேயும் அர்த்தம் இருக்குன்னு புரிஞ்சது. அது சரி, இப்போ நான் ஏன் 2 நாளா வரலைன்னு யாருமே கேட்கலையே? எனக்கும் ஆணி ஜாஸ்தியாப் போய் நேத்துக் கையிலே, காலிலே குத்த ஆரம்பிச்சுட்டது. என்னோட அண்ணா பையன் வந்து பார்த்துட்டு, சரி, இதானா விஷயம்?னு போனான். அதுவும் தவிர, தொண்டர்கள் எல்லாருக்கும் ஆணி பிடுங்கிப்பிடுங்கி நேரமே இல்லைங்கறாங்க.
அம்பி வேறே "தாமிரபரணி மகாத்மியம்' புத்தகத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார். மதுரையம்பதி, உங்க கிட்டேயாவது புத்தகத்தைக் கொடுத்தாரா அம்பி? அதான் 2 நாள் லீவ் விட்டுட்டேன். சரி, இந்தத் தி.ரா.ச. சார் கிட்டேயாவது அம்பியைப் பத்திப் புகார் கொடுக்கலாம்னு போனா அவர் என்னமோ அம்பி பதிவையும், அம்பியோட தங்கமணி பதிவையும் விட்டா வலை உலகிலே வேறே கண்ணிலே படலைன்னு சொல்லிட்டார். தலை எழுத்தேன்னு திரும்பி வந்தேன்!!!!! :D
ஆனா இந்தப் பதிவு எழுதறதோ, அதைப் பப்ளிஷ் செய்யறதோ என் கையில் இல்லை. எல்லாம் கடவுள் செயல். அதைக் கடந்த 2,3 நாட்களில் நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன். இது வரைக்கும் நான் எழுதறது மட்டும்தான் கடவுள் செயல்னு நினைச்சேன். ஆனால் திடீர்னு வியாழன் அன்று பாருங்க தாமிரபரணி பத்தின பதிவுக்கு அடுத்த பதிவை எழுதிட்டுப் பப்ளிஷ் கொடுத்தா போகவே இல்லை. We are sorry, we are unable to complete your request. The following errors were found : Security Token: Sorry, your request could not be processed Please try again." அப்படின்னே செய்தி கொடுத்து வருந்திட்டே இருந்தாங்க. சரி, ட்ராஃப்ட் போட்டு வச்சுடலாம்னா அதுவும் ஏத்துக்கலை. ஆனால் கமெண்ட் பப்ளிஷ் ஆகுது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு புலி கிட்டேயும், உ.பி.ச. கிட்டேயும் சொல்லி வச்சேன். புலி வெளியே போயிருந்தது. ஆகவே உ.பி.ச. பார்த்துட்டு ஏற்கெனவே நான் ட்ராஃப்ட் போட்டு வச்ச "குற்றாலத்தில் ஓர் ஏமாற்றம்" பப்ளிஷ் செய்ய அது தெரியாமல் நான் நேரே new post open செய்து நான் எழுதினவற்றைப் பப்ளிஷ் செய்ய ஹிஹிஹி, ஒரே நாளில் 2,3 பதிவு வந்துடுச்சு. அதான் வேண்டாம் வம்புன்னு 2 நாள் ஒதுங்கிட்டேன்.
புது ப்ளாக்கர் மாத்தினா ஒரே க்ளிக்தான் அப்படின்னு இந்த ராம் எந்த வேளையில் சொன்னாரோ தெரியலை, எப்போப் போனாலும் அது sorry, sorry, னு வருத்தப் படறதைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்துடுச்சு. அதுவும் பப்ளிஷ் ஆகலைன்னு நினைச்சா அப்போ சரியா செய்யுது. வந்துடுச்சுன்னு நினைச்சா மொத்த போஸ்டும் கோவிந்தாதான். அதான் ரிஸ்கே எடுக்கறதில்லை,. இப்போ எல்லாம் காபி, பேஸ்ட்தான். குறைந்த பட்சம் என்னோட இலக்கியக் குறிப்புக்கள் பாதுகாப்பாவாவது இருக்கும் இல்லையா?
அப்புறம் ஒரு நற்செய்தி, ரொம்பவே தன்னடக்கத்தோடு சொல்லிக்கறேன். டாப் 5 பெண் பதிவாளர்களில் நானும் ஒருத்தியாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். எனக்கு யாரெல்லாம் ஓட்டளித்தார்கள்னு தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஓட்டளிப்பு நடந்ததே புலி சொல்லித்தான் தெரியும். முடிவு வந்ததும் வந்து உறுமல் வாழ்த்துத் தெரிவிச்சுட்டுப் போச்சு. அதுக்கு அப்புறம் தான் நானும் இட்லி வடையில் போய்ப் பார்த்தேன். 5-வது இடம்தான் என்று சொன்னாலும் அந்த அளவு சிலரோட நினைவுகளில் என்னோட பதிவுகளும் பெற்றது கொஞ்சம் சந்தோஷமாய்த்தான் இருந்தது.
இதை உடனே சொல்லவேண்டாம்னு தான் சொல்லலை. ஏற்கெனவே நான் கைலைப் பயணம் முடிந்து வந்த நாள் முதல் என்னுடைய பதிவுகள் அதிகம் கவனிக்கப் படுகிறது என்று தெரிந்தது. இது எல்லாம் அந்தக் கைலைநாதனின் அருளாலும், அவன் தயவாலும் தான் முடிந்தது. இந்தப் பெயர் வாங்கினதை விட குறைந்த பட்சம் இதை நிரந்தரமாய்க் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. எல்லாம் வல்ல அந்தக் கைலைநாதன் அருளை வேண்டி நிற்கிறேன்.
ஹிஹிஹி, இன்னிக்கும் அதே தான் மெசேஜ் வருது. எப்போக் கொடுக்க முடியும்னு தெரியலை, பார்க்கிறேன். மறுபடி உ.பி.ச.வைத் தான் நம்பிக் கொடுக்கணும். வேறே வழியே இல்லை. மண்டை காய்ஞ்சு போச்சு ஏற்கெனவே இதை நினைச்சு. நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்குன்னு சொல்லுவாங்களே அது இது தானா????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் இந்த லட்சணத்தில் பதிவு போடறச்சேயே நீங்க எல்லாம் தினம் ஒண்ணு போடாதேன்னு சொல்றீங்களே!!!! என்னத்தைச் சொல்றது????? :)))))))))))))))
என்ன இது ஒரே புலம்பல் ?
ReplyDelete5வது இடத்திற்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete//மதுரையம்பதி, உங்க கிட்டேயாவது புத்தகத்தைக் கொடுத்தாரா அம்பி? அதான் 2 நாள் லீவ் விட்டுட்டேன்.//
ReplyDeleteஅம்பி என்னோட பின்னூட்டத்தை படித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
வாழ்த்துக்கள் மேடம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் மேடம்.. சிறந்த பெண் பதிவாளரா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு..
ReplyDeleteசே.. போட்டி நடந்தது நமக்கு தெரியாது.. இல்லைனா போஸ்டர் அடிச்சு, மைக் பிடிச்சு பிரச்சாரம் பண்ணி உங்களை முதல் இடத்திற்கு கொண்டுவந்திருப்போம்.
இந்த போஸ்ட்டுக்குத் தலைப்புக் கொடுத்திருந்தேன். அது வரலை. ஆன்மீகப் பயணம் பக்கத்திலாவது போஸ்ட் போட முடிஞ்சது. இன்னிக்கு அதுவும் முடியலை. இதிலும் முடியலை. திரும்பத் திரும்ப அதே மெசேஜ் தான் வருது. என்னன்னு புரியல்லை.
ReplyDeleteமேடம், தலைவிதியேன்னு எழுதனதாலா, தலைப்பை காணோம் இந்த பதிவுக்கு..
ReplyDeleteஇது ஒண்ணு தான் குறைச்சலான்னு திரும்பி கேள்விகேட்காதீங்க மேடம்
புலம்பல் ஒண்ணும் இல்லை மதுரையம்பதி, என்னோட கையறு நிலை!!!!!!!! உங்களுக்குப் புரியலை. வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்புறம் அம்பிதான் "தங்கமணி"யோட செல்பேசறதிலே மும்முரமா இருக்காரே! தெரியாதா உங்களுக்கு? அவங்க பதிவைத் தவிர வேறு பதிவுக்குப் போவதில்லை, பின்னூட்டம் கொடுப்பதில்லைனு முடிவு எடுத்திருக்கார். எனக்கு மெயிலில் தெரிவிச்சார். :)))))))) அதான் புத்தகம் பத்தி நீங்க கேட்டதைக் கண்டுக்கலை. (இல்லாட்டியும் அவர் கையிலே மாட்டிக்கிட்டது எப்படி வரும்? எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்வாங்களே? :D)
ReplyDelete@ஜீவா, ரொம்பவே நன்றிகள் பல.
ReplyDelete@ கார்த்திக், நீங்க ஆணி பிடுங்கறதுலே பிசின்னு தான் நான் ஒண்ணும் சொல்லலை. அதனால் என்ன? அதான் யு.எஸ். வரப்போ ஏற்கெனவே கோபிநாத் 10,000$ கொடுத்திருக்கார். வேதா வேறே கலெக்ஷன் பெட்டி அனுப்பி இருக்காங்க. கலக்குங்க!!!!!!!! :)))))))
தலைப்பு எல்லாம் கொடுத்திருந்தேன். ஆனால் இதைப் போஸ்ட் செய்தது நான் இல்லை, இல்லவே இல்லை, உ.பி.ச. தான் எனக்காக போஸ்ட் செய்யறாங்க கொஞ்ச நாளா. அவங்க உடம்பு சரியில்லையா? கடமை தவறக் கூடாது என்ற உணர்வில் போஸ்ட் செய்து விட்டுத் தலைப்பைக் கவனிக்க வில்லைனு நினைக்கிறேன். ஹிஹிஹி, இதுவும் ஒரு புதுமைன்னு வச்சுக்குங்களேன்!!!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதா.
ReplyDeleteCongratulations on the voting, Geetha madam :)
ReplyDeleteCongratulations!!! Sorry for not writing comments....
ReplyDeletewas busy with so many interviews(job) and finally decided to stay in west coast...but moving to Vancoevur, WA.
Shankar
//அம்பி என்னோட பின்னூட்டத்தை படித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
ReplyDelete//
@maduraimpathi, தனி மெயில் அனுப்ப தங்கள் ஈமெயில் முகவரி கிடைக்குமா?னு உங்கள் பிளாக் போயி பார்த்து ஏமாந்து திரும்பி வந்தேன்.
கைலாசம் போனாலும் காபியை மறக்காத மனிதர்கள் மத்தியில்
கொஞ்சம் கூட பின்னூட்ட விளம்பரத்தை விரும்பாத உங்கள் பண்பட்ட மனதினை கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன்.
என்ன செய்வது? காசிக்கு போனாலும் ஏதோட பாவம் தொலையாதாமே!
ஓப்பனாக எனது வீட்டு விலாசத்தை பின்னூட்டதில் அறிவிக்க நான் விரும்பவில்லை.
//புலம்பல் ஒண்ணும் இல்லை மதுரையம்பதி, என்னோட கையறு நிலை!!!!!!!! //
ஒரே காமடி தான் போங்க! ha haa :)
tiruneleveli la neenga endha area?
ReplyDeletenan kadayam ,near tenkasi!!
@வேதா, ஹிஹிஹி, முதலை அமைச்சர், நாட்டாமை என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் "ச்யாம்"முக்கு ஆப்பு வைத்த கொ.ப.செ.வாழ்க! வளர்க! என்ன இருந்தாலும் அன்புத் தங்கை, பாசமலருக்குத் தானே தெரியும் அண்ணனுக்கு என்ன வேணும்னு? அதை நிறைவேற்றி வைத்த அன்புத் தங்கச்சியே! வாழ்த்துக்கள்.
ReplyDelete@ஆப்பு அம்பி, திடீர்னு உங்களுக்கு உங்க விலாசம், கொடுக்கிறதிலே விழிப்புணர்ச்சி வந்தது ஆச்சரியமா இருக்கே? இன்னும் அந்தக் காபி விஷயத்திலேயே தொங்கிட்டு இருக்கீங்களே? அதிலே உள்ள மற்ற நல்ல விஷயங்கள் உங்க மாதிரி ஆட்களுக்குக் கண்ணிலேயே படாது.:P
ReplyDelete@மதுரையம்பதி, இப்போ நீங்க என்னிடம் தமிழ் எழுத என்ன செய்யறதுன்னு கேட்டிருந்தால் அம்பி உடனேயே பாய்ந்து வந்து தன்னோட மெயில் ஐ.டி. கொடுத்திருப்பார்.
ஹிஹிஹி, Ms.C.உங்க வாழ்த்தைக் கவனிக்கவில்லை. என்னடா, அம்பி இங்கே எல்லாம் வந்திருக்காரேன்னு நினைச்சேன். நீங்க வந்ததாலேதான் வந்திருக்கார். :P
ReplyDelete@Ms.Cஉங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே உள்ள :P உங்க ரங்கமணிக்கு.
வல்லி, நீங்களும் தானே அந்த லிஸ்ட்லே இருக்கீங்க. நீங்க சொல்லிக்கலை, நான் சொல்லிக்கிட்டேன். அவ்வளவு தான். உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.
ReplyDeletehotcat, நல்ல வேலை, மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்க என்னோட வாழ்த்துக்கள். இவ்வளவு வேலைத் தொந்திரவிலும் என்னை வந்து வாழ்த்திய உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
ReplyDeleteகார்த்திக் பிரபு, நீங்க இப்போதான் என்னோட வலைப்பக்கத்துக்கு வரீங்க இல்லையா? அதான் தெரியலை. எனக்கு மதுரை. நான் திருநெல்வேலிக்குச் சுத்திப் பார்க்கத் தான் போனேன். நீங்க கடையம் என்று உங்க வலைப்பக்கத்தில் இருந்து புரிஞ்சது. வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.
ReplyDeleteதலைவி வாழ்த்துகள் ..
ReplyDeleteஎன்னது 5 வது இடம் தானா????? யாருப்பா நடத்துனது எலக்சன?
நான் கோர்ட்டுக்கு போகிறேன்ன்..
//சே.. போட்டி நடந்தது நமக்கு தெரியாது.. இல்லைனா போஸ்டர் அடிச்சு, மைக் பிடிச்சு பிரச்சாரம் பண்ணி உங்களை முதல் இடத்திற்கு கொண்டுவந்திருப்போம்.//
ஆமாம் கார்த்தி சொன்ன மாதிரி செஞ்சு இருப்போம்
இல்லைனா
கள்ள ஒட்டு போட்டு இருப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் டூ லேட்ட்ட்.
வாழ்த்துக்கள் தலைவி !
ReplyDeleteவாழ்த்துக்கள் தலைவி !!
வாழ்த்துக்கள் தலைவி !!!
வாழ்த்துக்கள் தலைவி !!!!
வாழ்த்துக்கள் தலைவி !!!!!
வாழ்த்துக்கள் தலைவி !வாழ்த்துக்கள்!
ReplyDeleteYou must be very busy with this blogger troubles.Nalla Time pass.;D