எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 08, 2007

பெண்கள், இந்நாட்டின் கண்கள்?

"நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்!
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவேயரிதாவதோர் செய்தியாம்:

குலத்து மாந்தர்க்குக் கற்பியல்பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டீரோ!" புதுமைப் பெண் பற்றிப் பாரதி சொன்னது இது. பாட்டு ரொம்பப் பெரியது. கொஞ்சமாய்ப் போடுகிறேன்.

இன்றைக்கு மகளிர் தினம். பல இடங்களில் இருந்தும் மகளிர்க்கு வாழ்த்துக்கள் பெருகுகின்றன. பொதுவாக நாம் அந்தக் குறிப்பிட்ட நாள் மட்டும் கொண்டாடிவிட்டு மறுநாள் முதல் அதை மறந்து விடுவோம்.
இந்த மகளிர் தினமும் என்னைப்பொறுத்த வரை அப்படித்தான் போகப் போகிறது. ஏனெனில் இன்று ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடிவிட்டால் சரியாப் போச்சா?

பெண் என்பவள் வாழ்வின் ஆதார சுருதியாக இருப்பவள். பெண் இல்லை என்றால் எதுவும் கிடையாது. பெண் இல்லாத உலகில் காட்டுத் தனம்
தான் மிகுந்திருக்கும். அந்தப் பெண் என்பவளை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? இல்லை அவள் தான் தன்னை எப்படி முன்னேற்றிக்
கொண்டிருக்கிறாள்? என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணா இன்று இருக்கிறாள்? இல்லையே! பாரதி கண்டது இந்தப் புதுமைப் பெண்ணை இல்லை.

முன்காலத்தில் இருந்தே பெண்கள் எல்லாவற்றிலும் சிறந்து தான் விளங்கி
வந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு ஒளவையும், ஒரு
காரைக்கால் அம்மையும், ஒரு பாண்டிமாதேவியும், திலகவதியாரும்
போதும். எதிலும் குறைந்தவர்கள் இல்லை பெண்கள். ராணி மங்கம்மாள், ராணி லட்சுமிபாய், ராணி துர்க்காவதி, ராணி அகல்யா பாய் போன்றவர்கள்
இருந்திருக்கிறார்கள். வீரம், வித்தை, கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். பெண்கள் எந்த விதத்திலும் இழிவு படுத்தப் பட்டதாய்த் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் முக்கியமான
தருணங்களில் முக்கியமான முடிவுகள் தன் மனைவியைக் கேட்டுக் கொண்டு எடுத்தவர்கள் உண்டு.

கணவன் சந்நியாசம் வாங்க வேண்டுமென்றால் கூட மனைவி இருக்கும்போது அவள் அனுமதிக்கவில்லை என்றால் சந்நியாசி ஆக முடியாது. அப்படி ஓர் உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் நம் பெண்கள். இன்றோ பெண்கள் அநேகமாய் நன்றாய்த் தான் படிக்கிறார்கள். சில
இடங்களில் படிக்கும் பெண்களைப்படிப்பை நிறுத்தித் திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இருக்கிறது. பொதுவாகப் பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்களா என்றால் இல்லை! இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் ஏமாற்றுபவர்களாயும். ஏமாறுகிறவர்களாயும்தான் இருக்கிறார்கள். இதற்குப் படிப்பு ஒன்று மட்டும் போதுமா? இல்லை என்பது என் கருத்து. ஒழுக்கமும், ஆன்மீகமும் சார்ந்த கல்வியும் தேவை!

ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் பலவிதங்களிலும் இழிவு படுத்தப்
படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் தம்மைத் தாமே இழிவு படுத்திக்
கொள்கிறார்கள். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று சொன்ன பாரதி அதன் உண்மையான அர்த்தம் மாதர் தம்மைத் தாமே இழிவு படுத்திக் கொள்வதைத் தான் குறித்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லையா? அல்லது புரிந்து கொள்ள
முடியவில்லையா? இன்றைக்குத் தொலைக்காட்சிகளிலும், மற்றும்
விளம்பரங்களிலும் தோன்றும் பெண்கள் தம்மைத் தாமே பலவகையிலும் இழிவு செய்து கொள்கிறார்கள். இது புரியாமல் போனது ஏன்?"நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,திமிர்ந்த ஞானச் செருக்கு" பெண்களுக்கு வேண்டும் என்று சொன்ன பாரதி அதன் உண்மையான அர்த்தம்
பெண்களுக்குப் படிப்பு மட்டும் போதாது, அதனால் ஏற்படும் தெளிந்த ஞானமும் வேண்டும் என்றே சொல்லிப் போயிருக்கிறான். ஆனால் இன்றோ
பணமே பிரதானமாகி இருக்கிறது.

இதற்குப் பெற்றோரும் காரணம் என்பது பத்திரிகைச் செய்திகளில் இருந்தும், தொலைக்காட்சிச் செய்திகளில் இருந்தும் தெரிய வருகிறது. தாய் என்பது எத்தனை மகத்துவமான வார்த்தை? விளையாட்டுப் பெண்ணாக
இருக்கிறவள் திருமணத்திற்குப் பின் தாயாகிறாள். ஒரு துறவியின் மனோநிலை அந்தத் தாயிடம் இருக்கவேண்டும் என்பார்கள் நம் முன்னோர். எவ்வாறு பூமியானது நம் எல்லாரையும் தாங்குகிறதோ, அதுபோல் தாயானவளும் தன் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு நல்வழிப் படுத்த வேண்டும். பெண் குழந்தை என்றால் அந்தத் தாய்க்குப் பொறுப்பு இன்னும் அதிகம். "தாயைப் போல் பிள்ளை! நூலைப் போல் சேலை" என்பது பழமொழி. தாய் எப்படி இருப்பாளோ அப்படியே பிள்ளைகளும் இருக்கும் என்பது தான் இதன் அர்த்தம். அந்தத் தாயே பணத்துக்கு ஆசைப்பட்டுத் தன் மகளை அடக்காமல் இருந்தால்? இப்போது செய்தித் தாள்களில் பார்த்தால்
தாய், தகப்பன் தொந்திரவு தாங்க முடியாமல் ஓடிப் போன பெண், உறவினர்
தொந்திரவால் உயிர்விட்ட பெண், கணவனால் கைவிடப் பட்ட பெண்,
காதலால் கைவிடப் பட்ட பெண் என்று அதிகமாய்ச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

போதாத குறைக்கு இன்று பெண்களுக்கு அளவுக்கு அதிகமாய்ச்
சுதந்திரம் கொடுத்துத் தான் இருக்கிறார்கள். நல்ல படிப்பும், கை நிறையச் சம்பளமும் பெண் வாங்குகிறாள் என்பதற்காக அவளைத் தட்டிக் கேட்காத தாய் பின்னால் ஏமாந்து தான் போகிறாள். பெற்றோர் தட்டிக் கேட்டும் அதைக் கேட்காத பெண்ணும் ஏமாந்த்து தான் போகிறாள். இதெல்லாம் ஏன் நடக்கிறது? எங்கு நடக்கிறது? எப்படி ஆரம்பித்தது? பெரும்பங்கு நம் தொலைக்காட்சிகளுக்கே போகும்.


தொலைக்காட்சித் தொடர்களில்தான் பெண் மிகக் கேவலமாகச் சித்திரிக்கப் படுகிறாள். மிகவும் வக்கிரத்தனமாக, பணத்தாசை கொண்டவளாக, அலங்கார பூஷிதையாக, கொலை செய்யக் கூடத் தயங்காதவளாக ஒருத்தியைக் காட்டினால் கதாநாயகியோ பொறுமையின் பூஷணமாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறவளாக இருப்பாள். ஒரு தொடரில் ஒரு பெண் தன்
கணவனுக்கு மறுமணம் செய்து வைக்கிறாள். எதற்கு? குழந்தை இல்லை
என்பதற்காக! இன்னொரு தொடரில் மனைவி அழகாய் இல்லை என்று
மறுமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்கே மறுமணம் செய்ய
முற்படுகிறான். இதைவிடக் கேவலம் மனைவி கர்ப்பமாய் இருக்கிறதைக் கூட அறியாத கணவனும், கர்ப்பிணியான மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவனும் தொடர்களின் நாயகர்கள்!


எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்? நாம் இருப்பது 21-ம் நூற்றாண்டு. இன்றைய பெண்கள் விமானம் ஓட்டுவதிலும், விண்வெளிப் பயணம் செய்வதிலும் பழகி விட்டாலும் கூட நாம் இம்மாதிரித் தொலைக்காட்சித் தொடர்களே நம் வாழ்வின் ஆதாரம் என்றே இருப்போம். "ரெளத்திரம் பழகு!" என்று சொன்ன பாரதி இதைப் பார்த்தால் இன்று தற்கொலையே செய்து கொள்வான். இதுவா உண்மையான ரெளத்திரம்? இது அல்ல! இதுவும்
ஒருவகையில் பெண்ணடிமை தான். அதை ஏன் பெண்கள் புரிந்து கொள்ள
மறுக்கிறார்கள்? பெரும்பாலான தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள்
சொல்லும் காரணம் பெண்களுக்கு இம்மாதிரித் தொடர்கள்தான் பிடிக்கிறது.
அதிகமாய்க் கதாநாயகி கஷ்டப் படுவதையும், அவளை மாமியாரோ,
நாத்தனாரோ, கணவனோ கொடுமைப் படுத்துவதையும் பார்ப்பது அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பது போல் இருக்கிறது என்று அவர்களுடைய வாதம்.


ஆனால் இம்மாதிரித் தொடர்களைப் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் என்ன
சொல்கிறார்கள். இந்தத் தொடரில் வந்தாற்போல் கொலை செய்யப்
பார்த்தேன். இது மாதிரி என் மனைவியை ஏமாற்றினேன் என்று. நாம் தான்
எல்லாவற்றையும் நம்மோடு சம்மந்தப் படுத்திப் பார்ப்பதோடு அல்லாமல் தொடர் நாயகிகளையும், நாயகர்களையும் நம் தெய்வங்களாக அல்லவா போற்றுகிறோம்? இன்று காளி, துர்கை, முருகன், ஐயப்பன் என்றால் நமக்கு நினைவு வருவது அந்தப் பாத்திரங்களில் நடித்த நடிக, நடிகையர்
நினைவு தானே? அப்படியே எடுத்துக் கொண்டாலும் சமூகத்தில் உள்ள
அம்மாதிரிக் களைகளைக் களைய இதுவா வழி? ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் யோசித்து நல்ல நேர்மறைச் சிந்தனைகளுடன் கூடிய தொலைக்காட்சித் தொடர்கள் போடலாமே? அல்லது பெண்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மிகுந்த மனக்கட்டுப் பாடு வேண்டும். ஆனால் இது ஒரு கனவு தான். நம்மால் கனவு தான் காண முடியும்.
ஆகவே பெண்களே, கனவு காணுங்கள், நாம் பெண்கள் இன்றைய பெண்கள்
தினத்தை நன்றாகக் கொண்டாடி விட்டோம். இத்தோடு எல்லாப்
பெண்களுக்கும் எல்லாக் குறைகளும் தீர்ந்து விட்டது.

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!"

22 comments:

  1. ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துக்கள். பாராட்டுக்கள். (எந்த உள்குத்தும் இல்லை)

    இன்றைய பெண்கள் நிறைய முன்னேறி உள்ளனர், அதற்கு இன்றய ஆண்களும் காரணம். முன்ன மாதிரி இல்லை. இப்ப உங்க சாம்பு மாமவையே எடுத்துகோங்க, உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் குடுத்து இருக்கார்!
    உங்கள கேக்காம ஒரு துரும்பை நகத்தி இருப்பாரா? இல்ல நீங்க தான் சும்மா விட்ருவீங்களா? :p

    ReplyDelete
  2. //அல்லது பெண்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என முடிவு எடுக்க வேண்டும்.//

    கீதாஜி, மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள், நான் தொடர்களை பார்க்காமல் தான் இருக்கிறேன். அதுவும் பெண்ணை முன்னிலை படுத்தி (எந்த விதமாக இருந்தாலும்) நான் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்.
    குழந்தைகள் நிகழ்ச்சி, பாட்டு, செய்திகள், சமையல்,விளையாட்டு என்று எவ்வளவோ இருக்கு தொலைக்காட்சியல் பார்த்து பயன்பெற.

    உங்களின் பதிவின் மூலமாகவும் எல்லா மகளிர்க்கும் எங்களுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்"

    நன்றி

    ReplyDelete
  3. "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
    பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!"

    மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. முதலில் தலைவிக்கு பெண்கள் தின வாழ்த்துக்களை உரித்தாக்கி....

    //அல்லது பெண்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என முடிவு எடுக்க வேண்டும்//

    நீங்க பாக்காட்டி என்ன...நாங்க பார்ப்போம் :-)

    ReplyDelete
  5. //ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துக்கள். பாராட்டுக்கள். (எந்த உள்குத்தும் இல்லை)//

    சேம் பிளட் :-)

    ReplyDelete
  6. absolutely 101% right.

    ReplyDelete
  7. அல்லது பெண்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மிகுந்த மனக்கட்டுப் பாடு வேண்டும். ஆனால் இது ஒரு கனவு தான். நம்மால் கனவு தான் காண முடியும்.

    "கனவு மெய்ப்படவேண்டும்."

    ReplyDelete
  8. வேதா, இன்று மகளிர் தினம் என்று எத்தனை சாதாரணப் பெண்களுக்குத் தெரியும்? சொல்லுங்க, பார்ப்போம். அதனால் தான் வெறும் கொண்டாட்டம் மட்டும் போதாது, என்றைக்குமே மகளிருக்கான உலகமாக இருக்க வேண்டும் என்ற பேராசைதான். மகளிரும் அதற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பரிசு பெறுபவர்களும் சரி, கொடுப்பவர்களும் சரி அளவு கோல் இல்லாமலா பெறுவதோ, கொடுப்பதோ வைத்திருக்கிறார்கள்? சின்னப் பிள்ளை போன்ற ஒரு சாதாரணப் பெண்மணிக்குப் பரிசு கொடுத்தாற்போல் எங்கேயாவது கொடுத்திருக்கிறார்களா என்று தேட வேண்டி உள்ளதே?

    ReplyDelete
  9. வன்முறை என்பது பெண் தன்னோட முக்கியத்துவத்தை உணராமல் இருப்பதால் நேர்வது என்று என்னோட கருத்து.
    @அம்பி, பாராட்டுக்கு ரொம்பவே நன்றிகள். :P

    ReplyDelete
  10. @ அம்பி, அப்புறம் உங்க தங்கமணி இப்போவே உங்களை வேலையில் பழக்கி விடறதுக்கு எல்லாம் ஒரு பதிவு எழுத வேண்டாமா?

    @கவிதா, நானும் அநேகமாய்த் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்குவது இல்லை. பொதிகையில் வரும் "மகளிர் பஞ்சாயத்து" நல்ல நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள். அது 2 முறை ஒளிபரப்பாகியும் என்னால் பார்க்க முடியவில்லை. அது போல் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் பொதிகை ஒளிபரப்புகிறது, இப்போது மக்கள் தொலைக்காட்சியில் வரும் தமிழிலேயே 2 நிமிடங்கள் பேசிப் பரிசு வாங்கும் நிகழ்ச்சிக் குறிப்பிடும் அளவு ஆர்வத்தைத் தூண்டுவதாய் உள்ளது. உங்களோட பதிவுகளில் இருந்து என்னோட எண்ண அலைவரிசையும், உங்களோட எண்ண அலைவரிசையும் ஒரே மாதிரி இருப்பதைத் தெரிந்து கொள்கிறேன். ரொம்பவே நன்றி, வந்ததுக்கும், வாழ்த்துச் சொன்னதற்கும். உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @மணிப்ரகாஷ், ரொம்பவே நன்றி.

    @ச்யாம், அதானே உங்களைத் திருத்தவே முடியாதே!!!! :)))))))))), என்ன பாசம் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு போல் இருக்கு?, தங்கமணி கிட்டே அடி வாங்கறதிலே கூட அதே ஒத்துமையைக் கடைப் பிடிங்க நீங்களும், அம்பியும். :D

    ReplyDelete
  12. எஸ்.கே.எம். உங்களுக்கு மெயிலணும், கொஞ்சம் முடியலை. வந்ததுக்கும் கருத்துக்கும் ரொம்பவே நன்றிகள். சுருக்கமாச் சொல்றீங்க. நம்மளை மாதிரி பின்னூட்டப் பதிவு போடாமல்! :D

    ReplyDelete
  13. தி.ரா.ச.சார், கனவு மெய்ப்படுவது என்ன சாதாரண விஷயமா? பாரதி கனவு கண்டு இத்தனை வருஷங்களில் மெய்ப்படாதது நம் வாழ்நாளில் மெய்ப்படுமா என்ன? Nope.

    ReplyDelete
  14. கீதா!

    உங்களின் மிக சிறந்த பதிவா இத சொல்லுவேன். நீங்க சொல்லுற அத்தனை விசயத்திலும் நான் ஒத்துப் போகின்றேன். இதை தான் நாங்களும் சொல்லுறோம். ஆனால் நாங்கள் கூறும்போது தோணி மாறி விடுகின்றோதோ என்னவோ தவறாக பொருள் கொண்டு விடுகின்றார்கள்.

    ReplyDelete
  15. இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் மேடம்!

    பாரதியார் இப்போ இருந்தா என்ன சொல்லி குமுறுவாரோ அப்படியே அதை பிரதிபலிக்கிறது உங்க பதிவு... அதுவும் இப்போது இந்திய அளவில் சென்னை பெண்களை கொடுமைபடுத்துவதில் இன்னமும் முன்னாலே தான் இருக்கிறது.. இது போன்ற கொடுமைகளை என்னன்னு சொல்றது..

    சீக்கிரம் எல்லாம் மாறணும்!

    ReplyDelete
  16. வேலைகள் அதிகம் மேடம், சில நாட்களாக.. ஆனாலும் உங்கள் பதிவுகளுக்கு லேட்டா வந்தாலும் நம்ம பின்னூட்டம் இல்லாம இருக்காதுங்க மேடம்..

    பல ஆணிகள் வெயிட்டிங் :-)

    ReplyDelete
  17. ஷு என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு?? அமைதி. நான் எல்லாத்தையு படிக்கணும்.

    ReplyDelete
  18. //இதற்குப் படிப்பு ஒன்று மட்டும் போதுமா? இல்லை என்பது என் கருத்து. ஒழுக்கமும், ஆன்மீகமும் சார்ந்த கல்வியும் தேவை!//

    very valid..actually whole post aye quote panni naa valid points nu podanum :-)

    ReplyDelete
  19. //பாரதியார் இப்போ இருந்தா என்ன சொல்லி குமுறுவாரோ அப்படியே அதை பிரதிபலிக்கிறது உங்க பதிவு... அதுவும் இப்போது இந்திய அளவில் சென்னை பெண்களை கொடுமைபடுத்துவதில் இன்னமும் முன்னாலே தான் இருக்கிறது.. இது போன்ற கொடுமைகளை என்னன்னு சொல்றது.//

    அப்பா ஒரு வழியா எங்க தலைவர் கருத்து சொல்லிட்டாரு :-)

    ReplyDelete
  20. சிவா, வாங்க, வாங்க, நீங்க கருத்துச் சொல்லக்கூடக் கேட்டு மெயிலவேண்டி இருக்கு. என்னோட நிலமை அப்படி இருக்கு. ஆனால் உங்களுக்குத் "தோணி" மாறினால் கட்டாயம் தவறாய்ப் பொருள் வரும். "தொனி" மாறினால் கோபம் வரும். புரியுதோ? :D

    @கார்த்திக், கருத்துக்கு நன்றி. ஆனால் உங்க கிட்டேயும் கேட்டு வாங்க வேண்டி இருக்கு, என்னவோ போங்க, எல்லாருக்கும் ஒரே சமயத்தில் ஆணி அதிகமாய்ப் போயிருக்கு. :)))))))) கையிலேகுத்திக்காமப் பிடுங்குங்க. தூங்கும்போது கூட MP3யிலே பாட்டுக் கேட்டா எப்படி? :D

    வாங்கம்மா போர்க்கொடி, இத்தனை நாளாக் காணோமேன்னு நினைச்சேன். என்ன pointers இன்னுமா முடியலை? ரொம்பவே ஸ்லோ. :P

    @Ms.C, வாங்க, வாங்க, தங்கமணி, முதல்வரவு, நல்வரவு. அம்பி அனுமதி கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன். கொடுக்காட்டிக்கூடக் கவலைப் படாதீங்க. 2 பேரும் சேர்ந்து ஒரு கை பார்த்துடுவோம். :D
    @Ms.C, உங்களோட கருத்துக்களுக்கு ரொம்பவே நன்றி. நல்லாப் புரிஞ்சிக்கிட்டீங்க. அதுக்கும் வாழ்த்துக்கள்.

    @ச்யாம், வாங்க, வாங்க, 50 பதிவு போட்டாச்சுன்னு விழாக் கொண்டாடிட்டு "பக்கார்டி"யிலே முழுகாமல் வந்திருக்கீங்கன்னா ஆச்சரியமா இருக்கே? ஆனால் உங்க தலைவரை இல்லை பாராட்டி இருக்கீங்க? :P

    ReplyDelete
  21. //அப்பா ஒரு வழியா எங்க தலைவர் கருத்து சொல்லிட்டாரு//

    நன்றி முதல்வரே (மேடம்..ம்ம்.. இப்படி எல்லாம் பொறாமையா பாக்கப்படாது.. )

    ReplyDelete
  22. என்னுடைய பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும், மற்ற பெண் பதிவர்களுக்கும்.

    ReplyDelete