ம்ம்ம்ம், பதிவில் வரிசை ஒழுங்கு இல்லையென வேதா சொல்கிறார்.நான் என்ன செய்யறது? நானும் கடிதம் முறையில் தான் கொடுத்திருக்கேன். சிலசமயம் இங்கேயும், முத்தமிழிலும் போடும்போது ஒட்டி, வெட்டிச் செய்யும்போது தவறுகள் நேருகிறது. உடனேயே திருத்தித் தான் போடறேன். ஆனாலும் அது சரியாகிறதில்லை. ஒரே அடம்., அப்படியே விட்டுட்டேன். அப்புறம் இந்தத் தேதி வேறே முன்னாலே தானே மாறிக் கொண்டிருந்தது. இப்போ தினமும் மாத்த வேண்டி இருக்கு. இல்லாட்டா பதிவு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு வரதே இல்லை. கூப்பிட்டாலும் வரதில்லை. இந்த மாதிரி தொலைந்து போன இலக்கியங்களுக்குக் கணக்கே இல்லை!!!!!!!!!!:D
***************************************************************************
ஜானகி ராமன் ஹோட்டலில் "பொங்கல்" என்ற பெயரில் கொடுத்த ஒரு ஸ்பூன் உணவோடு நான் எழுந்தப்போ என் கணவர், இன்னும் 2 இட்லியாவது சாப்பிடு என்றார். நான் அதெல்லாம் வேணாம். நாம் போகப் போறது எல்லாம் பெருமாள் கோவில்களாக்கும். அங்கே பிரசாதம் எல்லாம் கிடைக்கும். அதுவும் காலங்காத்தாலே கோஷ்டி எல்லாம் முடிச்சுச் சுடச் சுடப் பிரசாதம் தருவாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று மதுரையில் பள்ளி நாட்களில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட அனுபவத்தில் சொன்னேன். இப்போ எப்படியோ? அதுவும் வடக்கு கிருஷ்ணன் கோயிலில் என்னோட தலையைப் பார்த்தால் தான் கோஷ்டியே ஆரம்பிக்கும். அந்தளவு பிரசித்தி. ஹிஹிஹி. இப்போ விதி "கெக்கே" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்கிறதைப் பார்க்கவும் இல்லை., கேட்கவும் இல்லை. ரொம்பப் பெருமையா எழுந்துவிட்டேன்.
வசதி கருதியும் கோவில் திறக்கும் நேரத்தை யோசித்தும் முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆரம்பித்தோம். திருநெல்வேலிக்கும், திருச்செந்தூருக்கும் நடுவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது இந்த ஊர். இங்கேயே நவதிருப்பதிகளில் ஒன்றான "கள்ளபிரான் ஆலயமும்" நவ கைலாயத்தில் ஒன்றான "கைலாசநாதர் ஆலயமும்" உள்ள சிறப்பைப் பெற்றது. தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே உள்ளது ஊரும், கோயிலும். அநேகமாய் எல்லாக் கோவில்களும் ஆற்றைச் சுற்றியே அமைந்துள்ளது. தாமிரபரணி இன்னும் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள். கரையெங்கும் மரங்களும், நெல்வயல்களும், வாழைத் தோப்புக்களும்
சூழ மிக அழகான நங்கையாக மிளிர்கிறாள். நகர, நாகரீகங்களோ அதன் சீரழிவோ இன்னும் அவளிடம் ஏற்படவில்லை. மிக அழகிய அரசகுமாரி ஒருத்தி கன்னிமாடத்தில் இருப்பதுபோல் சற்றே பாதுகாப்புடன் இருக்கிறாள். ஒரு சில இடங்களில் கன்னிமாடக் கோட்டையில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இப்போதே கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமிரபரணியின் புனிதத்துக்குப் பங்கம் ஏற்படும்.
உலகிலேயே மூத்த நதி என்று சொல்லப் படும் தாமிரபரணியானது கிருத யுகத்திலேயே தோன்றியதாய்க் கூறப்படுகிறது. கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் இந்த நதியை "மஹாநதி" என்று அழைக்கிறார். முருகப் பெருமான் எவ்வாறு விசாக நட்சத்திரத்தில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறதோ அவ்வாறே இந்நதியும் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதாய்க் கூறப்படுகிறது. தாமிரபரணி நான்கு இடங்களில் வடக்கு நோக்கி ஓடுகிறது. அதன் ஆரம்பஸ்தானமான ஏகபொதிகையில் இருந்து பாணதீர்த்தம், பின் கீழே இறங்கும்போது பாபநாசம், திருப்புடைமருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் வடக்கு நோக்கி ஓடுகின்றது. இதன் தண்ணீரின் சுவையையும், அதன் சக்தியையும் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் ஆகாயத் தாமரைகள் முளைக்க ஆரம்பித்துள்ளது. கரைகள் பரவாயில்லை. மக்களும் பெரும்பாலும் அசுத்தம் செய்வது இல்லை. ஓரளவு விழிப்புணர்ச்சியுடனேயே இருக்கிறார்கள். கிராமங்களில் இது நன்கு தெரிகிறது.
தாமிரபரணியில் திரிவேணி சங்கமம் உள்ளது. "முக்கூடல்" என்னும் ஊரில் "கடனா, அருணா" என்னும் நதிகள் தாமிரபரணியில் கலக்கின்றன. சீவலப்பேரியில் "சிற்றாறு, கயத்தாறு" கலக்கிறது. மற்றும் பழைய காயலில்தான் முத்துக்கள் இன்னும் கிடைக்கிறதாய்ச் சொல்கிறார்கள். இந்த நதிக்கரையில் தான் நவ கைலாயங்கள், நவதிருப்பதிகள் உள்ளன. இந்த நதி தோன்றும் ஏகப் பொதிகையில் இருந்து கடலில் கலக்கும் புன்னைக் காயல் வரை சமீபத்தில் சி.பா. ஆதித்தனாரின் அண்ணன் மகனான பாலசுப்பிரமணிய ஆதித்தன் புனிதப் பயணம் மேற்கொண்டு நதியைச் சுத்தப்படுத்தவும் கரைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். தாமிரபரணி மட்டுமல்லாது அதன் பாசனக் குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன. தமிழ்நாட்டுக்கே ஒரே வற்றாத ஜீவநதியான இதன் மீது "தாமிரபரணி மகாத்மியம்" என்னும் புத்தகமே உள்ளது. ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரில் உள்ள மூலவர் சிலை தாமிரபரணித் தண்ணீரில் உள்ள தாமிரத்தை எடுத்துச் செய்யப் பட்டிருக்கிறது. இது எல்லாம் நான் புத்தகங்களில் இருந்து திரட்டிய தகவல். "தாமிரபரணி மகாத்மியம்" புத்தகம் இன்னும் எனக்கு அம்பி அனுப்பவில்லை. நறநறநற நறநறநற.அவர் அனுப்பினதும் மற்ற விஷயங்கள் எழுதுகிறேன்.

/தாமிரபரணி இன்னும் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள்//
ReplyDelete//
ஆரோக்யமாக, செழிப்பாக தான் உள்ளாள். இப்ப இந்த கோலா கம்பெனி கடை வெக்க முயற்சி செய்வதாக கேள்வி.
உங்க தலையை பணயம் வெச்சாவது அதை தடுத்து நிறுத்துவோம் இல்ல? :p
எலேய் மக்கா! தீட்டுங்கல அறுவாள!
நாலு வரி நல்லதாக எழுதியதால் தப்பிச்சீங்க.
அந்த புக் உங்களுக்கு அனுப்பறதா இல்லை. நீங்க தான் அமெரிக்கா போறீங்களே! :)
க்ர்ர்ர்ர்ர்ர்,, கல்லிடைக்குறிச்சிக்குத் தந்தி, ஃபாக்ஸ், மெயில், குயில், கடிதம் எல்லாம் போகும். பத்தாததுக்கு மிச்சிகனுக்கும் போகும். ஃபோனும் போகும் 2 இடத்துக்கும். என்ன? மாமியார் சமையல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களாக்கும்? அதான், இந்தக் குதி குதிக்கிறீங்க!!!!!!! தங்கமணி வந்து சொல்லணும். சொல்ல வைக்க மாட்டோமே!!!!!!!:P
ReplyDeleteஆஹா!!சிந்துபூந்துறை...! எங்கள் ஊர்! பேரைப்படித்ததும் புல்லரித்துப்போனேன்!!
ReplyDeleteவாங்க, வாங்க,. முதலை அமைச்சரே!! பொறுப்பு ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கிட்டீங்க, ஆளே பார்க்க முடியறதில்லை. ரொம்ப நன்றி உங்களுக்கு, எல்லாத்துக்கும் தான். :)))))))
ReplyDeleteவாங்க நானானி, உங்க ஊர் சிந்துபூந்துறையா சொல்லவே இல்லையே? ர.சு. நல்லபெருமாள் கதைகளில் சிந்துபூந்துறை வராமலே இருக்காது. ம்ம்ம்ம்ம்ம்ம், எனக்கு இந்தப் பேர் என்னமோ ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteதாமிரபரணியின் பெருமையை நாட்டுக்குச் சொன்ன கீதாக்கா வாழ்க!!
ReplyDeleteஅமெரிக்கா வறீங்களா? சொல்லவே இல்லையே? எந்த ஊரு? பக்கமா இருந்தா சந்திக்கலாமே!
சரியாப் போச்சு இ.கொ. நான் தான் கிட்டத் தட்ட மேடை போட்டு விழா எடுத்து அறிவிப்புக் கொடுத்திருக்கேன். இந்தியாவிலே இருக்கிற தொண்டர்கள் எல்லாம் சந்தோஷத்திலே தலை,கால் தெரியாமல் குதிக்கிறாங்க. அமெரிக்கத் தொண்டர்கள் எல்லாம் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு எல்லாம் செய்துட்டு இருக்கிறதாலே என்னோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் கூடப் போட முடியலை. போனாப் போகுதுன்னு தாயுள்ளத்தோடு மன்னிச்சிருக்கேன். நீங்க என்னடான்னா? எங்கே மழை? அப்படின்னு கேட்டுட்டு இருக்கீங்க? :P
ReplyDeleteஇ.கொ. வந்ததும் மெயிலறேன்.
ReplyDeleteஅது சரி, இ.கொ..இப்போ அங்கே நடு ராத்திரி ஆச்சே? ராத்திரி தூங்காமல் களப்பணி ஆற்றிக்கிட்டு இருக்கீங்க போல் இருக்கு!!!!!!! :)))))))))))
ReplyDeleteஅதான் புது தாமிரபரணி மகாத்மீயம் நீங்க ஆரம்பிச்சுட்டிங்களே.....ஆனால் படிக்கும் போதே பார்க்கத் தூண்டுகிறது....
ReplyDeleteஆமாம் ஏதோ ஒரு பெருமாள் கோவிலில் பாலில் அன்னம் வடித்து கல்கண்டு சாதம் செய்வார்களே அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...மறந்து விட்டது அந்த ஊர், பெருமாள் பெயர் எல்லாம்....25 வருடங்களுக்கு முன் சென்றது. ஜீயர் எல்லாம் உண்டு அந்த தலத்தில்(எந்த மடம் என்று ஞாபகம் வரவில்லை)
//அந்த புக் உங்களுக்கு அனுப்பறதா இல்லை. நீங்க தான் அமெரிக்கா போறீங்களே! :) //
அம்பி, நானும் பெங்களூர்தான், இந்த புத்தகம் தரமுடியுமா?. படித்துவிட்டுத் தந்துவிடுகிறேன்.நான் நேரே வந்து பெற்றுக்கொள்கிறேன்.
மதுரையம்பதி, அம்பியோட பழைய விலாசம்னா எனக்குத் தெரியும். இப்போத் தான் வீடு மாறி இருக்காரே! எனக்கு விலாசம் எல்லாம் கொடுக்கலை! எங்கே வந்துடுவேனோன்னு பயம்! வேறே என்ன? நீங்க புத்தகம் வாங்கிப் படிச்சதும் நினைவா எனக்கு அனுப்பிச்சிடுங்க. மெயிலறேன் விலாசத்தை.
ReplyDeleteஅப்புறம் பொதுவாத் தென் மாவட்டங்களிலேயே பாலில்தான் அரிசியை வேகவைத்துப் பொங்கல் செய்வார்கள். வசதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றவாறு வெல்லமோ, சர்க்கரையோ, கல்கண்டோ போடுவார்கள். மதுரையில் கூட அப்படித்தான். ஆகவே நீங்க சொல்றது எந்தக் கோயிலில்னு தெரியலை. யோசிக்கிறேன். என்க்குத் தெரிஞ்சு கோயில்களில் என்றால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் "கல்கண்டு சர்க்கரைப் பொங்கல்" பிரசாதம் ரொம்பவே பிரசித்தி பெற்றது.
ReplyDeleteஇல்லை கீதாம்மா, இதற்கு பெயர் ஷீரான்னம் என்பார்கள் வருடத்தில் ஏதோ ஒரு தினம் மட்டும் பெருமாளுக்கு ஊர் முழுதும் பால், அரிசி, கல்கண்டு கொடுக்க, அதனை வைத்து செய்வார்கள்....
ReplyDeleteஇதைத்தான் சொன்னேன் கீதா. இந்த நல்லறிவைத்தான் என் பதிவிலும் குறிப்பிட்டேன்.
ReplyDeleteதாமிரபரணியின் கண்ணாடித் தண்ணீர்
ஏதோ ஒரு மூலையில் நினைவில் இருக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலகத்தில்தான் எங்கள் தாத்தாவின் பணிஆரம்பித்ததாகச் சொல்லுவார் என் அப்பா,.
'கல்கண்டு சாதம்' கீழநத்தமாக இருக்குமோ?அங்குதான் வேணுகோபாலப் பெருமாள்.
நன்றி நன்றி நன்றி. இந்தப் பதிவுக்கு.
/ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று மதுரையில் பள்ளி நாட்களில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட அனுபவத்தில் சொன்னேன்//
ReplyDeleteபழைய உண்மை எல்லாம் எப்போ தான் மெல்ல வருது போல, மேடம்..
//ஆரோக்யமாக, செழிப்பாக தான் உள்ளாள். இப்ப இந்த கோலா கம்பெனி கடை வெக்க முயற்சி செய்வதாக கேள்வி. //
ReplyDeleteஆரம்பத்திலே தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையெனில் பூச்சி மருந்துகாரன் எல்லாத் தண்ணியையும் உறிஞ்சிடுவான் அம்பி
தாமிரபரணி ஆற்றுப் புராணம் நல்லாவே இருக்கு மேடம்.. முழுசா எழுதுங்க.. அம்பி அந்த புத்தகத்தை அனுப்புப்பா
ReplyDeleteதெரியலை மதுரையம்பதி, ஒருவேளை வல்லி சொல்றது சரியா இருக்குமோ என்னமோ? நான் கேட்டுச் சொல்றேன். உங்களுக்கு, என்ன கொஞ்சம் டைம் எடுக்கும்.
ReplyDelete@வல்லி, ரொம்பவே நன்றி, உங்களோட கருத்துக்களுக்கு. சிலபேர் உங்களை மாதிரிப் பாராட்டினாலும், ரொம்பவே எழுதறேன்னும் சிலர் சொல்றாங்க. ஆகவே நானும் எப்படி எழுதினாச் சிறப்பா இருக்கும்னு தெரியாமத் தான் இருக்கேன். ஏதோ எழுதறேன். திரும்பிப் பார்த்தால் ஒருவேளை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். அது என்னமோ வரமாட்டேங்குது. :)))))))))))
ஹிஹிஹி, கார்த்திக், இந்த மாதிரி நிறையப் பழைய உண்மைகள் இருக்கே!! :D
ReplyDeleteஅப்புறம் தாமிரபரணித் தண்ணீரை கோகா கோலாவுக்கு எடுக்கக் கூடாதுன்னு போராட்டம் என்னமோ செய்யறாங்க. ஆனால் அம்பி மாதிரி கோலாப் பிரியர்கள் அதைத் தடுக்கிறதில்லை. என் தலையைப் பணயம் வைக்கத் தான் தெரியும் உங்க அம்பிக்கு :P
புத்தகத்தை அனுப்பச் சொல்லி விடாமல் சொல்லிட்டே இருங்க எல்லாரும் அப்போத் தான் வரும்.