எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 15, 2007

குற்றாலம் தந்த ஏமாற்றம்

முத்தமிழ்க் குழுமப் போட்டிக்கு நான் எழுதுவதாகவே இல்லை. ஏனெனில் நிறைய எழுதுவது என்று வைத்துக் கொண்டால் சில விஷயங்களுக்குக் கொடுத்து வரும் முன்னுரிமை பாதிக்கப் படும். அந்த வேலை அப்படியே நின்று போகும் அல்லது தாமதம் ஆகும். என்றாலும் இப்போது நாங்கள் திருநெல்வேலிப் பக்கம் போய் விட்டு வந்ததும் திருக்குற்றாலத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எழுதுவது தமிழிலும் இருக்கவேண்டும், தமிழ் நாட்டைப் பற்றியும் இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. தமிழ் பிறந்த இடமான குற்றாலத்தைப் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும் அல்லவா?அதான் நான் பதிவாகப் போட நினைத்த விஷயத்தை இங்கே போட்டிக்காக எழுதுகிறேன்.

என்னை விடச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் அறிஞர்களும்இருக்கும் இடத்தில் "கொல்லன் பட்டறையில் ஊசிக்கு என்ன வேலை"என்பதைப் போல் ஒரு சிறு முயற்சி,அவ்வளவு தான்.

வடநாட்டு முனியான அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் எல்லை தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் காலை இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போகச் சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை!அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறிவருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.


இப்படி மாறிய இறைவனைக் குறித்துஅகத்தியரே பாடியது:
"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்.
குற்றால நாதரின் வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் "குழல்வாய் மொழி அம்மை"கோயில் கொண்டிருக்கிறாள். தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம்.அங்கே ஒரு லிங்கம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர்
உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி.

இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது.குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவதுசற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்.

அதற்குப் பின் தான் தற்சமயம் நாம் பார்க்கும் முக்கிய அருவி என்று சொல்லப்படும் அருவி. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் இடையில் உள்ள பாறைகளிலும் விழுந்து கீழே விழுவதால் வேகம் குறைவாக இருப்பதால் குளிக்க ஏற்றவாறு உள்ளது. அதுவும் முதலில்
பொங்குமாங்கடலில் விழுந்து பின்னே கீழே விழுகிறது.

"வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்மந்திசிந்து
கனிகளுக்குவான்கவிகள் கெஞ்சும்தேனருவித்
திரை எழும்பிவானின் வழி ஒழுகும்செங்கதிரோன்
பரிக்காலும்தேர்க்காலும் வழுகும்"

குற்றாலக் குறவஞ்சியின் இந்தப் பாட்டைப் படித்த பள்ளி நாட்களில் இருந்தே குற்றாலத்தைப் பற்றிய கனவுகளில் இருந்த எனக்கு இப்போதைய குற்றாலம் ஏமாற்றத்தையேஅளித்தது. சுட்டுப் பொசுக்குகிற வெயிலில் முக்கிய அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் அருவியின் ஓசையை அமுக்குகிறது. இருக்கிறது, இப்போதும் இருக்கிறது பலாவும், மாமரங்களும், நெல்லிக்கனிகளும்,அதை உண்ணும் வானரங்களும். என்றாலும் அதை எல்லாம் அழுத்திக் கொண்டு இப்போது வந்திருக்கும் கட்டிடங்கள் அந்த அழகை மங்கச்செய்கின்றது.
குற்றால நாதரோ என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீக ஐதீகப்படிக் "கு" என்பதை ஒரு பக்கம் இந்தப் பூமியாகவும், இன்னொரு பக்கம் பிறவிப்பிணியாகவும் கொண்டால் "தாலம்"என்ற சொல்லானது அதைத் தீர்க்கும் என்று குறிக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.இங்கே உள்ள பராசக்தி யோகத்தில் இருக்கிறாள். இவளே மூவரையும் பயந்தாள்எனவும் சொல்கிறார்கள். அதனாலும்இதற்குத் திரிகூடம் என்னும் பெயர்வந்ததாயும் கூறுகிறார்கள். இவ்வுலகம் தோன்ற மூல காரணமாயிருந்த காரணத்தால் "தரணி பீடம்" எனவும் சொல்கிறார்கள். அதைக் குறிக்க ஒரு தொட்டில் இந்தப் பராசக்தி பீடத்தின் சன்னதியில் ஆடுகிறது.
இப்படிப்பட்டகோயில் இன்று இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மன வருத்தம் மேலிடுகிறது. என்ன தான் முன் மண்டபம் யாத்திரீகர் தங்க ஏற்பாடு செய்து கட்டி இருந்தாலும் சாப்பாட்டு இலைகளில் இருந்து எல்லா அசுத்தங்களையும் அங்கே பொதுமக்கள் செய்கிறார்கள். கண்டும் காணாத கோயில் சிப்பந்திகள்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் வருகிறது பிரசித்தி பெற்ற "சித்திர சபை". கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும் நிலையில் உள்ளது. அரசின் பாதுகாப்பில் உள்ள இதற்கு உள்ளே செல்லக் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில்உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிக்கிறார்.மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இவற்றில் நம் மக்கள் கைவண்ணம் வேறே! அவர்களின் அன்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சித்திரங்கள் தான் கிடைத்ததா புரியவில்லை. இப்போது சற்றுத் தடுப்புப்போட்டிருந்தாலும் பெரும்பாலான சித்திரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. 64 திருவிளையாடல்களைக் காட்டும் சித்திரங்கள் பாதி அழிந்து உள்ளது. நடராஜர் மட்டும் பிழைத்தார். எதோ விட்டு வைத்திருக்கிறார்கள். அரசுமனது வைத்தால் தான் நடராஜரோடுசேர்ந்து எல்லாருக்கும் வழி பிறக்கும். மிகுந்த மனவேதனையோடு திரும்ப
வேண்டியதாயிற்று.

17 comments:

  1. வருகைப் பதிவு பின்னூட்டம் மேடம்.. அப்பால வந்து படிக்கிறேன் மேடம்

    ReplyDelete
  2. ematram adhu idhunu peelingoda padhivu potta parisu thanduvangla paati?? :)

    ReplyDelete
  3. en mama family varuda varudam kutralam povanga! naan oru murai kooda ponadu illai :( vazhakkam pola hmmmmmmmm...

    ReplyDelete
  4. நானும் வருகை பதிவு! :)
    கார்த்தி அடுத்த தடவை வருவியா? உணமைய சொல்லு!

    ReplyDelete
  5. என்ன பண்ணுவது, ஆட்சியில் உள்ளவர்களுக்கு வருமானம் தரும் கோவில்கள் மட்டும் தான் தெரியும். இந்தமாதிரி கோவில்களையும் வருமானம் தருவதாக மாற்ற, கொஞ்சம் புராணம், பக்தி, வரலாறு போன்றவை தெரிந்த கலெக்டர்/அமைச்சர் தேவை....

    ReplyDelete
  6. வாங்க கார்த்தி, மெதுவா வாங்க!!!

    @போர்க்கொடி, எல்லாப்பின்னூட்டமும் வந்திருக்கு. பதில் கொடுத்திருக்கேன். போய்ப் பார்த்தால் தானே! எங்கே கிழவியால் என்ன முடியும்? :P

    ReplyDelete
  7. @போர்க்கொடி, ரொம்பப் புகையாதீங்க! இங்கே வந்து சுடுது! :P

    ReplyDelete
  8. க்ர்ர்ர்ர்ர்., அம்பி சமையல் வேலை இருக்கு, மாமியார் அதான் வருங்கால மாமியார் வந்திருக்காங்கனு சொல்லிட்டுப் போங்களேன். உங்களை யார் சமைச்சுப் போட வேண்டாம்னு சொன்னது? அனாவசியமாக் கார்த்தியைக் கெடுக்காதீங்க!!!!!! :P

    ReplyDelete
  9. @அம்பி, எப்படித் தெரியும்னு பார்க்கறீங்களா? உளவுப்படை வச்சிருக்கேனே, அது கொடுத்த தகவல்!!!!!!

    ReplyDelete
  10. மதுரையம்பதி, அரசு அறநிலையத் துறையின் கீழ் தான் வருகிறது. அநேகமாய் அறநிலையத் துறைக்குக் கீழ் வரும் கோவில்களின் பராமரிப்பு போல் தான் இங்கேயும். சுற்றுலாப் பயணிகளின் வருமானம் மட்டும் முன்னுரிமை. மற்றதெல்லாம் பின்னால்.

    ReplyDelete
  11. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் அப்படின்னு இந்த பதிவுக்கு மட்டும் ஏன் அலைன்மென்ட் ஜஸ்டிபய்டா இருக்கு? இப்படிச் செஞ்சா நெருப்பு நரியில் தெரிவதில்லை. என்னை மாதிரி ஆளுங்க அப்புறம் படிக்கிறது கஷ்டம்.

    ReplyDelete
  12. பொதுவாகவே குற்றாலத்தில் கோவிலாக இருக்கட்டும் அருவியாக இருக்கட்டும் பராமரிப்பு ரொம்பவே மோசம். அதை விடுத்துப் பாபநாசம் அருவி செல்ல ஆரம்பித்தால் இப்பொழுது அங்கேயும் அதே கதைதான். அதனால் இப்பொழுது ஊர் பக்கம் சென்றால் அருவிக்காக செல்வது பாணதீர்த்தமோ அல்லது மணிமுத்தாறோதான்.

    ReplyDelete
  13. நம்ம ஜனங்க அதையும் இன்னும் கொஞ்ச நாளில் கெடுத்து விடுவாங்க இ.கொ. பார்த்தாலே மனம் பதறுது, அவ்வளவு மோசமான நிலையில் குற்றால நாதர் கோயிலும், சித்திர சபையும் இருக்கு! என்ன செய்ய :((((((((((((

    ReplyDelete
  14. கீதா இன்னும் குற்றாலம் நான் பார்த்ததில்லை.
    பொதிகைச் சானலில் பார்த்ததோடு சரி. பாலச்சந்தர் சார் படத்திலும் அழகாக இருந்ததே.
    கோபம்தான் மண்டுகிறது.இப்படி இயற்கைவளத்தைச் சூறாடும் மக்களின் அறிவீனத்தை நினைத்து.
    எங்கள் திருக்குறுங்குடி நம்பியாறு என்ன கதியில் இருக்கிறதோ!!

    ReplyDelete
  15. I had been to kurtalam chinna vayasila.But never known all these details.Very informative your posts.Thank you Maami for sharing this with us.

    ReplyDelete
  16. நானும் இதுவரை பார்க்கவில்லை. ம்ம்.... எப்ப நேரம் வாய்க்குமோ.....

    ReplyDelete