எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 02, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

ஹிஹிஹி, நேத்திக்கு என்னோட வேண்டுகோள் பதிவை ஏத்துக்காத தமிழ்மணம் இன்னிக்கு என்னடான்னா ஏத்துக்கிட்டது! எப்படி? ஒண்ணுமே புரியலை! முந்தாநாள் ராத்திரியே கொடுக்க நினைச்சேன். ஆனால் எல்லாரும் காலையிலே தான் பார்ப்பாங்கன்னு நேத்து கொடுத்தா "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"ன்னே சொல்லிட்டிருந்தாங்க. சரின்னு சரி பார்த்தா, இதை வெளியிட முடியாது,, பிரச்னை வரும்னு ஆங்கிலத்தில் பதில் வந்தது. இன்னிக்கு என்னன்னா வந்திருக்கு. பார்த்துட்டுப் பொன்ஸ் "என்ன சொல்ல வரீங்க? வழக்கம்போல் உங்க பதிவு புரியாத மாதிரி இதுவும் புரியலை!" (:D) அப்படின்னு கேட்கிறாங்க. தமிழ்மணம் தான் பதில் சொல்லணும்.

அப்புறம் நான் சொல்ல வந்த நற்செய்தி அம்பிக்கு. கொஞ்ச நாளைக்கு அதிகமாய் எழுத முடியாது. அவரும் நான் இலக்கியம் சார்ந்த பதிவு எழுதினா ஒண்ணு அவர் அந்தக் குறிப்பிட்ட இலக்கியம் படிக்காமல் சாய்ஸில் விட்டிருப்பார். அல்லது இதை எழுதினா எல்லாம் சரியாப் போச்சான்னு கேட்பார். சரி, பக்திப் பதிவுகள் போடுவோம்னு போட்டால், "உலா வரும் ஒளிக்கதிர்"னு கிண்டல் அடிப்பார். சரி, எதுவும் வேண்டாம், நக்கல், நையாண்டின்னு பதிவு எழுதினால் "மொக்கை"னு சொல்லுவார். ஆகவே அம்பிக்குப் பதிவு எழுதவும் தெரியலை, பின்னூட்டம் கொடுக்கவும் தெரியலை. இந்தக் கார்த்திக் வேறே கஜபதியின் அப்பா உடல் நிலைக்குப் பிரார்த்தித்துக் கொள்றதுக்குப் பதிலாகக் கஜபதிக்கே பிரார்த்தித்துக் கொள்றேன்னு எழுதி இருக்கார். இதிலே ஒழுங்கா பதில் சொன்னது மதுரையம்பதி, ச்யாம், கோபிநாத் போன்றவர்கள் தான். இந்த லட்சணத்திலே இருக்கு நான் தலைவி(வலி)யா இருக்கிற அழகும் பதிவுகள் எழுதிப் பின்னூட்டம் வாங்கற அழகும் . அதான் கொஞ்ச நாள் யு.எஸ். போகப் போறேன். அதனால் கொஞ்சம் இப்படியும், அப்படியுமாத் தான் வந்துட்டு இருப்பேன். அம்பி ரொம்ப சந்தோஷப் படவேண்டாம். உங்க கல்யாணத்துக்கு என்னோட பங்கு மொய் கட்! :D

அப்புறம் யு.எஸ். போகிற காரணம் சொல்லலையே! எல்லாம் இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகலையேங்கிற கவலையில் தான், அது பத்திப் பேசறதுக்காகப் போறேன். ஹிஹிஹி, ஏற்கெனவே பான் - கி- மூன், விஜய் நம்பியார் எல்லாரும் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம் ஹிலாரி கிளிண்டன் வேறே அவங்களோட தேர்தலுக்கு நான் வந்து பிரச்சாரம் செய்யணும்னு ஒரே பிடிவாதம்! :)))))))))) அப்படியே கார்த்திக் அமைச்சரவை மாற்றத்தில் எனக்குள்ள வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு அம்பிக்கு ஏதும் பதவி கொடுக்க வேண்டாம் எனச் சொல்வதற்காகவும் போகிறேன். அதுக்காக வலை உலகுக்கு வர மாட்டேன்னு நினைக்க வேண்டாம். வந்துட்டும், போயிட்டும் இருப்பேன். அங்கே போய் ஜெட்லாக் தூக்கம் எல்லாம் போய்த் துணி எல்லாம் கிழிக்க ஆரம்பித்ததும் (ஹிஹிஹி, வாஷிங் மெஷினில் தோய்க்கிறதைச் சொல்றேன்.) எழுத ஆரம்பிச்சுடுவேன். நடுவில் ராத்திரி முழிப்பு வந்தால், (அங்கே போனதும் முதல் பத்து நாளைக்கு ராத்திரி பூரா பேய் மாதிரித் தான் முழிச்சுட்டு இருக்க வேண்டி இருக்கு.) உங்களை எல்லாம் வாட்டி எடுக்கலாம்னு ஒரு எண்ணம். எல்லாம் கையைத் தட்டியோ, அல்லது கல் எறிந்தோ, அல்லது உங்கள் மொழியில் கும்மி அடித்தோ தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொள்ளலாம். திடீர்னு மூன்று பதிவுகள் வந்தாலும் ஆச்சரியப் படவேண்டாம்.

28 comments:

  1. மேடம், ஒரே நாளில் முன்று பதிவா?....அங்க எதுக்கு போகிறீர்கள்ன்னு ஞாயாபகம் இருக்கட்டும்....

    ஆமாம் ஹில்லாரி போட்டியிட சட்டத்திருத்தம் பண்ணணுமாமே, அதுக்கு வழிமுறைகள் பற்றி உங்க யோஜனை கேட்கவும் தான் உங்களை கூப்பிட்டிருக்கறதா சொன்னாங்க....அத விட்டுடிங்க...

    ReplyDelete
  2. ஹிஹிஹி, மதுரையம்பதி, மறந்துட்டேன், ஞாபகப் படுத்தினீங்க, நான் சொல்றது, ஹிலாரியைப் பத்தி! :D
    அப்புறம் அதான் பதிவு ராத்திரி எழுதறேன்னு சொல்லி இருக்கேனே! :))))))

    ReplyDelete
  3. //இந்தக் கார்த்திக் வேறே கஜபதியின் அப்பா உடல் நிலைக்குப் பிரார்த்தித்துக் கொள்றதுக்குப் பதிலாகக் கஜபதிக்கே பிரார்த்தித்துக் கொள்றேன்னு எழுதி இருக்கார்.
    //
    :) கார்த்தி எப்படி பா! கலக்கிட்ட போ! ஆனா, கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சு போஸ்டா போட்டாங்க பத்தியா, அங்கே தான் நிக்கறாங்க கீதா மேடம்! :)

    //உங்க கல்யாணத்துக்கு என்னோட பங்கு மொய் கட்!//
    உங்களுக்காக எடுத்த புடவை வேஸ்ட்டா? :)
    அங்கே போய் கூட செக்காகவோ டி.டியாகவோ அனுப்பலாம். :)

    //ஏற்கெனவே பான் - கி- மூன், விஜய் நம்பியார் எல்லாரும் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம் ஹிலாரி கிளிண்டன் வேறே அவங்களோட தேர்தலுக்கு நான் வந்து பிரச்சாரம் செய்யணும்னு ஒரே பிடிவாதம்//

    அதானே! சில பேர திருத்தவே முடியாது! :)

    ReplyDelete
  4. கீதா எந்த ஊருக்கு வருகிறீர்கள். சொல்லக் கூடிய ரகசியமா இருந்தால் சொல்லுங்கள். என்ன விசேஷம்?
    மதுரையம்பதிக்குத் தெரிஞ்சு இருக்கு. ஹ்ம்ம். க்ளோஸ் சர்கிள்.:-)
    நல்வரவு.

    ReplyDelete
  5. அம்பி, புடவையை மதுரையம்பதி கிட்டேக் கொடுத்துடுங்க. என்னிடம் சேர்ப்பித்து விடுவார். ரொம்பக் கவலைப்படறீங்க போல் இருக்கே? அதெல்லாம் புடவை வேணாம்னு எல்லாம் சொல்லலை. ரிவர்ஸிபிள் தான் உங்க அம்மா கிட்டே சொல்லிட்டு வந்தேன்.
    அப்புறம் அம்பி, மதுரையம்பதி சொல்லி இருக்கிறதைப் பாருங்க! சட்டத் திருத்தம் செய்யறதுன்னா தலைவி(வலி) நான் இல்லாமல் எப்படி? அதான் போயிட்டு வந்துடலாம்னு! :)))))))))

    ReplyDelete
  6. அப்புறமா அம்பி, கார்த்திக்குக்கும், எனக்கும் சிண்டு முடியற வேலை எல்லாம் வேணாம். அவர் இருக்கிற ஸ்டேட்டுக்குப் பக்கத்திலே தான் போகப் போறேன். அங்கே போய்க் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கணும், உங்களுக்கு என்ன பதவின்னு! ஞாபகம் இருக்கட்டும்! :D

    ReplyDelete
  7. ஹிஹிஹி, வல்லி மெயிலு, மயிலு எல்லாம் பறந்து வரும் உங்களுக்கு. அதெல்லாம் சொல்லாமல் வருவேனா?

    ReplyDelete
  8. அட... நம்மூருப் பக்கம் வர்றீங்க... வாங்க... வாங்க....

    எல.. யாருல அங்க.... அமெரிக்கா ஏர்போட்டு கேட்ட மூடுல... தலைவி வர்றாங்களாம்....

    ReplyDelete
  9. //ஏற்கெனவே பான் - கி- மூன், விஜய் நம்பியார் எல்லாரும் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம் ஹிலாரி கிளிண்டன் வேறே அவங்களோட தேர்தலுக்கு நான் வந்து பிரச்சாரம் செய்யணும்னு ஒரே பிடிவாதம்//

    ஆரம்பிச்சுடாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க....சப்பான்ல சாக்கி சான் கூப்பிட்டாக...அமேரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக :-)

    ReplyDelete
  10. //இந்த லட்சணத்திலே இருக்கு நான் தலைவி(வலி)யா இருக்கிற அழகும் பதிவுகள் எழுதிப் பின்னூட்டம் வாங்கற அழகும் //

    உங்கள மாதிரிதான உங்க தொண்டர்களும் இருப்போம் :-)

    ReplyDelete
  11. அமெரிக்க பயனம் இனிதே நிறைவேறி..வெற்றியுடன் தாய் நாடு திரும்ப வாழ்த்துக்கள்...(போற வழில பைலட் கிட்ட போய் பிளேடு போட்டுறாதீங்க...பாதி வழில இறக்கி விட்டுறபோறான்).. :-)

    ReplyDelete
  12. ஹிஹிஹி, இப்போவே தொண்டர்கள், குண்டர்கள் எல்லாம் அது என்ன? கும்மி அடிக்கிறதா? அம்பி அதானே சரி? அதை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனிமேல் அங்கே போய் இருக்கு எல்லாருக்கும், ஹிஹிஹிஹிஹிஹி
    ச்யாம், உங்களோட தங்கமணிக்கும் ஒரு மயிலு போகும்.
    ஜி, எந்தக் கேட்டை மூடினாலும் உள்ளே வந்துடுவோமே, என்னன்னு நினைச்சீங்க நம்மளை!
    (யாருமே அம்பியோட பதவியைப் பத்திக் கவலைப்படலை! ஹையா ஜாலி!)

    ReplyDelete
  13. //இந்தக் கார்த்திக் வேறே கஜபதியின் அப்பா உடல் நிலைக்குப் பிரார்த்தித்துக் கொள்றதுக்குப் பதிலாகக் கஜபதிக்கே பிரார்த்தித்துக் கொள்றேன்னு எழுதி இருக்கார்//

    மேடம், கஜபதிக்கு தான் தன் தந்தையை காப்பாற்றும் பொறுப்பெல்லாம்.. அதனால அவருக்காக வேண்டிகிட்டா அவங்க அப்பாவுக்காகவும் வேண்டிகிட்ட மாதிரி இல்லியா. அது தான்..

    ஸ்ஸ்ஸ்.. ஒரு உளறு உளருனதுக்கு இத்தன தடவை மறுபடியும் உளற வேண்டியது இருக்கே ஆண்டவ

    கஜபதியின் தந்தை நலமுடன் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  14. //எல்லாம் கையைத் தட்டியோ, அல்லது கல் எறிந்தோ, அல்லது உங்கள் மொழியில் கும்மி அடித்தோ தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொள்ளலாம்.//

    சிங்கார சென்னையிலே, இத்தனை காலம் செயல்பட்டு வந்த தங்கத் தலைவி, எங்கள் அம்மா, அமெரிக்கா என்னும் அகண்ட தேசத்தில் அரசாங்க அலுவலுக்காக விஜயம் செய்கிறார்..

    அவர்களை, இருகரம் கூப்பி, வணங்கி வரவேற்கிறொம்..

    (யாருல அது.. சும்மா குந்திகினு இருக்கது.. நல்லா சத்தமா கோசம் போடுங்கப்பா.. அப்போ தான் வான்கோழி பிரியாணி..)

    ஷ்யாம்.. ஷ்யாம்.. எல்லோருக்கும் கொடுக்கணும்னு உங்களை வரச் சொன்ன பத்து பொட்டலத்தை லவட்டிகிட்டு கிளம்புறீங்களே..

    ReplyDelete
  15. //கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சு போஸ்டா போட்டாங்க பத்தியா, அங்கே தான் நிக்கறாங்க கீதா மேடம்!//

    அது எப்படி அம்பி.. மேடம் என்ன போஸ்ட் போட்டாலும் மறைமுகமா மொக்கை போஸ்டுங்கிறதை நீ சொல்லிடுறா..

    ReplyDelete
  16. வாங்க வாங்க அமெரிக்காவுக்கு..

    //ஆரம்பிச்சுடாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க....சப்பான்ல சாக்கி சான் கூப்பிட்டாக...அமேரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக :-) //

    முதல்வரே ,தமிழ் நாட்டுல விஜய காந்தும் கூப்பிட்டாராம் ...

    ஆனா இப்பதான் ஊழல் அமைச்சர சேர்த்து கெட்ட பெயர வருது. அடுத்த ரவுண்டு பார்க்கலாம்னு சொன்னத தலைவி சொல்லவே மாட்டேன் கிறாங்க...

    ReplyDelete
  17. \\அப்புறம் ஹிலாரி கிளிண்டன் வேறே அவங்களோட தேர்தலுக்கு நான் வந்து பிரச்சாரம் செய்யணும்னு ஒரே பிடிவாதம்! :)))))))))) \\

    ஹிலாரி கிளிண்டனுக்கு டெப்பாசிட் காலி...

    ReplyDelete
  18. எல அமெரிக்க பாசக்கார பயலுவுலா...

    தலைவி வாறாங்க...
    வரவேற்ப்பு எல்லாம் சும்மா பலமா இருக்கனும்...

    ReplyDelete
  19. முக்கிய செய்தி தலைவர் கார்த்திக் தலைமறைவு...

    ReplyDelete
  20. மு.கா.நீங்க உளறுகிறதை நீங்களே ஒத்துக்கறீங்களே! சந்தோஷம். அப்புறம், இந்தப் போஸ்டர் எல்லாம் வேணாம், விளம்பர பானர் போதும். செலவு நீங்க, ச்யாம், மணிப்ரகாஷ், ஜி-Z, கோபிநாத (அங்கேதானே இருக்கார்?) பகிர்ந்துக்குங்க. சும்மா ஒரு 5,000$ செலவு செய்தாப் போதும். அதிகம் வேணாம். :D

    ReplyDelete
  21. பாசமழை பொழியும் வேதாவே, கண்ணைத் துடைச்சுக்குங்க அம்மா, ரொம்பவே ஃபீலிங்ஸ் ஜாஸ்தியா இருக்கே? :-)

    ReplyDelete
  22. நடுவில் ராத்திரி முழிப்பு வந்தால், (அங்கே போனதும் முதல் பத்து நாளைக்கு ராத்திரி பூரா பேய் மாதிரித் தான் முழிச்சுட்டு இருக்க வேண்டி இருக்கு

    இதுக்கு எதுக்கு பேய் மாதிரின்னு அப்படி இப்படின்னு சொல்லனும்.

    அமெரிக்கா போனாலும் அம்பிக்கு ஆப்பு மாத்திரம் குறையாது போல இருக்கே.

    ReplyDelete
  23. அதான் கண்ணிலே விளக்கெண்ணை விட்டுட்டுப்பார்க்கிறேனே, நீங்க எல்லாம் எங்கே தப்புப் பண்ணறீங்கன்னு, அதான் உடனே கண்ணிலே பட்டுது. அம்பி எதைத் தான் "மொக்கை"னு சொல்லலை? எல்லாத்தையும் "மொக்கை"னு தான் சொல்லுவார். உங்களோட பதிவு உள்பட. எனக்குத் தனியா மெயில் போடும்போது எழுதி இருக்கார். உங்களுக்கு forward செய்யறேன். :D

    ReplyDelete
  24. மணி ப்ரகாஷ், இப்போவும் அந்த கட்-அவுட் விஷயம் கவனிச்சுக்கோங்க! (ஹிஹிஹி, எனக்கு விளம்பரமே பிடிக்காது! எங்கே எஸ்.கே.எம். இங்கே இல்லையே?) அப்பாடி, நீங்க புரிஞ்சுட்டா சரி. :)))))))))

    ReplyDelete
  25. கோபிநாத், உங்க பங்குக்கு நீங்களும் மறக்காமல் மணிப்ரகாஷுக்கும், கார்த்திக், ச்யாமுக்கும் உதவி செய்யுங்க. அதான் ஒரு நல்ல தொண்டருக்கு அழகு. :)

    ReplyDelete
  26. ஹிஹிஹி, சார், அம்பி போன ஜன்மத்தில் எனக்கு மாமியாரா இருந்திருப்பார் போலிருக்கு. அதான் இரண்டு பேருக்கும் இப்படி ஏழாம் பொருத்தம்! கொஞ்சம் அடக்கியே வாசிக்கச் சொல்லுங்க. தங்கமணி வந்து அடக்கணுமோ என்னமோ? அப்புறம் தான் பார்க்கணும் அம்பியோட ப்ளாகை! :-)

    ReplyDelete
  27. ஏற்கெனவெ ஒரு குறள் கொடுத்திருக்கேனே அம்பிக்கு என்னோட ஆப்பைப் பற்றி"
    "எல்லா ஆப்பும் ஆப்பல்ல- அம்பிக்கு
    நான் வழங்கும் ஆப்பே ஆப்பு!"
    நினைவு வச்சுக்கச் சொல்லுங்க. :))))))

    ReplyDelete
  28. //கோபிநாத், உங்க பங்குக்கு நீங்களும் மறக்காமல் மணிப்ரகாஷுக்கும், கார்த்திக், ச்யாமுக்கும் உதவி செய்யுங்க//

    அப்படியே ரெண்டு பிளைட்டைல பேனர கட்டிவிட்டு அமெரிக்கா முழுவதும் சுத்தி வர ஏற்பாடு செஞ்சிருக்கோம், இது போதுமா மேடம்

    ReplyDelete