எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 13, 2007

மீண்டும் ஜானகிராமன் ஹோட்டல்!!!!!!!

ரொம்ப நாளைக்கு முன்னே இ.கொ.வும், நிலாரசிகனுமா? இல்லை ரசிகவ்
ஞானியாரா? தெரியலை, இரண்டு பேரும் "ஜானகிராமன் ஹோட்டலை"ப் பத்திப் பேசிக்கிட்டாங்க, அவங்க பதிவோட பின்னூட்டங்களிலே. அதனாலே எனக்கு ஜானகிராமன் ஹோட்டல் என்பது பற்றி ஓரளவு நினைவு இருந்தது. "சந்திரவிலாஸ்" ஹோட்டலைப் பற்றி பாலா இப்போது கூறுகிறார். பதிவுகளிலே எழுத மாட்டாரோ? இந்த அம்பாசமுத்திரம் "கெளரிசங்கர் ஹோட்டல்" பத்தி டுபுக்குவும் ஒண்ணுமே எழுதலை. போதாக்குறைக்கு
டுபுக்கு வந்து என்னமோ அம்பி என்கிட்டே எல்லாத்தையும் சொல்லி
இருக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, "அம்பி சொல்லலையா?" என்று கேட்கிறார். எங்கே? அம்பிக்குத் தங்கமணியோட கடலை போடவே நேரம் பத்தலை. எல்லாம் இந்தக் கார்த்திக்கைச் சொல்லணும். அவருக்குப் போய்த் தகவல் தொடர்புத் துறை! எல்லாம் நேரம்! கிடைக்கும் மிச்ச நேரத்தில் கணேசன், பாவம், அப்பாவி, எழுதிக் கொடுக்கிறதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுப் பின்னூட்டம் வாங்கிப்பார். இதிலே நம்ம பதிவு எல்லாம்
அவர் கண்ணிலே மொக்கையோ மொக்கை. நேத்து வேணாக் கொஞ்சம் பெரிசு. அது உண்மையிலே "பூங்கா" பெண்கள் சிறப்பிதழுக்கு எழுதினது. நேத்து அதிலே போட்டிருக்காங்கன்னதும் இங்கேயும் போட்டேன். எழுதிட்டு அப்படியே அனுப்பிடறேனா? எடிட் எல்லாம் செய்யற வழக்கமே இல்லையே! ஹிஹிஹி, நிறையப் பேர் படிக்காம ஓடிட்டாங்க போல் இருக்கு. கார்த்திக்
ஆளே காணோம்.! வேதா தலையே காட்டலை. மணிப்ரகாஷ் டாமேஜர்
கொடுத்த ஆணியைப் பிடுங்கிட்டு இருக்கார். மதுரையம்பதி இப்போத் தான் ஊரிலே இருந்து வந்திருக்கார். கைப்புள்ள ஆணியோ ஆணின்னு கூவிட்டு இருக்கார். ராம் தான் ரொம்பவே ராயலா "தாரை தப்பட்டை"யோட அலைஞ்சிட்டு இருக்கார். சிவா "கடமை வீரன்"னு போர்டு மாட்டிட்டுத் திரியறார். அப்போ அப்போ"சாட்"டுக்கு வந்து "இன்று ஒரு தகவல்" என்று புதுச் செய்திகள் சுடச் சுடக் கொடுத்துட்டுப் போறார். எங்கேயோ சூடானில் இருந்துட்டு அவருக்கு எல்லாம் தெரியுது. நமக்கு ஒண்ணும் தெரியலை. போகட்டும். இப்போ 3 நாளா மயங்கி விழுந்த நான் என்ன ஆனேன்னு பார்க்கலாம்.

************************************************

அது ஒண்ணும் இல்லை. பாலோட விலையப் பார்த்துட்டுத் தான்னு என்
கணவர் உடனேயே புரிஞ்சிட்டுத் தண்ணீர் தெளித்து (நல்லவேளையா நிறையத் (தாமிரபரணி தயவாலே) தண்ணீர் கிடைக்குது) எழுப்பிக் கீழே போய்ப் பார்ப்போம் என்று கூட்டிப் போனார். கீழே போனதும் பக்கத்திலேயே இருந்த ரெஸ்டாரண்டுக்குப் போனோம். அங்கே இட்டிலி விலை கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. என்ன? சென்னை, சரவணபவனுக்குத் தம்பி போல் இருக்கு. அவர் மட்டும் ஆர்டர் செய்து கொண்டார். என்னத்தைச் சொல்றது? 2 வகைச் சட்டினிகள், இட்டிலி மிளகாய்த்தூள்,நல்ல எண்ணெய் போட்டு எல்லாம் கிண்ணங்களில் கொண்டு வைத்த அழகு இருக்கே, அதைப் பார்த்ததுமே என் கணவருக்கு உச்சி குளிர்ந்து விட்டது. சட்டினிக் கிண்ணங்கள் வேறே கொஞ்சம் பெரியதாய் இருக்கவே, சட்டினிக்கே
இவ்வளவு பெரிய கிண்ணம், அதுவும் தனியாய் வைக்கிறார்கள் என்ற
எதிர்பார்ப்புடன் இருந்தால் பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டுப் போல் இட்டிலிகள். ஹிஹிஹி, சட்டினிக்குத் தான் இட்டிலின்னு அப்புறமாத் தான் புரிஞ்சது. ம்ம்ம்ம்., விலையும் 2 இட்டிலி 10 ரூ. இந்த விலைக்கு புழுங்கல் அரிசி வாங்கி, உளுந்தும் போட்டு அரைத்தால் எவ்வளவு இட்டிலி என்ற கணக்கை மனம் போட அவர் இட்டிலியும், தோசையும் சாப்பிட்டு
முடித்தார். தோசைக்கென்று தனிப் ப்ளேட் வைத்திருக்கிறார்கள். அதிலே வருகிறது. தோசை கொஞ்சம் நியாயமாய் இருந்தது.


அப்புறம் ரிசப்ஷனில் நாங்க மறுநாள் காலை வெளியே போக வண்டிக்குச் சொல்லிவிட்டு வந்தோம். டிரைவரும் வந்து பேசி உறுதிப் படுத்திக் கொண்டு போனார்.
முதல் நாளில் "நவதிருப்பதி"யை முடித்துக் கொண்டு மறுநாள் சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் (அங்கே இருந்து மதுரை ரொம்பக் கிட்டே ஹிஹிஹி) போயிட்டுப் பின் அங்கே இருந்து தென்காசி, குற்றாலம்
போவதாயும், மூன்றாம் நாள் பாபநாசம், நவகைலாயத்தில் பார்க்க முடிந்த
கோவில்கள் என்றும் திட்டம் போட்டுக் கொண்டோம். மூன்றாம் நாள் சென்னை திரும்ப டிக்கெட் வாங்கிட்டோம். அதனால் பார்க்க முடிந்த கோவில்கள் என்று குறைத்துக் கொண்டோம். பாபநாசத்தில் இருந்து வரும் வழியிலேயே கல்லிடைக் குறிச்சி வருவதால் கடைசி நாள் அம்பி
வீட்டுக்குப் போய் வத்தி வைக்கும் வேலையை வைத்துக் கொண்டேன். அன்று இரவு நல்லாத் தூங்கி மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு (முதல்நாள் சாப்பிடலையா ஒரே பசி) டிஃபன் சாப்பிடலாம்னு கீழே போய்ப் பொங்கல் ஆர்டர் கொடுத்தேன், முதல் நாள் இட்டிலி
சைஸைப் பார்த்த காரணத்தால் பொங்கல் கொஞ்சம் கணிசமாய் வயிறு நிறைய இருக்கும்னு ஒரு எண்ணம் . ஒரு தட்டு வந்தது. பொங்கல் இல்லை. தட்டு வந்தது. அதில் ஓரமாய்க் கொஞ்சமே கொஞ்சம் ஒரு நெல்லிக்காய் அளவு ஏதோ வைத்திருந்தது. சரி, சைட் டிஷ் போல் இருக்கு, பொங்கல் வரும்னு காத்திருந்தால் ஒண்ணுமே வரலை. சூப்பர்வைஸரைக்
கூப்பிட்டேன். (இதுக்குக் குறைச்சல் இல்லை) அவரிடம், "நான் பொங்கல்
ஆர்டர் பண்ணினேன், இன்னும் வரலியே?" என்றதற்கு, அவர் என்னைப் பார்த்த
பார்வையில் நான் ஒரு அல்பம் என்று சொல்லாமல் சொல்லவே, என்னவோ, ஏதோன்னு நினைச்சு என்னன்னு கேட்டால், "என்ன மேடம்! (மனசுக்குள் இவங்களுக்கு இது வேறேயான்னு நினைச்சிருப்பார்), இதோ தட்டிலே இருக்கே, இது என்ன?" என்றார் அதட்டலே இல்லாத குரலில். "இதுவா?" என்றேன் ஈனஸ்வரத்தில். என் குரல் எனக்கே கேட்கலை. ஆமாம், என்றார் அவர். சரினு பயத்தோடு சொல்லிட்டு கொடுத்திருந்த ஸ்பூனால் அதை எடுத்தால் பூராவும்(ஹிஹிஹி இருந்ததே ஒரு சுண்டைக்காய் அளவு. அதை எத்தனை தரம் எடுக்கிறது?) ஒரேயடியாக வந்துட்டது. அப்படியே வாயில் போட்டால் ஒரு வாய்க்குக் கூட இல்லை. ஆனால் அந்த சூபர்வைஸர் மறுபடி என்னைப் பார்த்த பார்வை இருக்கே! என்னத்தைச் சொல்றது?

41 comments:

  1. பொங்கல் போதாமல் பொங்கி எழுந்த எங்கள் தானைத்தலைவி வாழ்க. சூடவில்லை மாதிரி இட்லி சாப்பிட்டு இந்த பொங்கல் சாப்பிட்டால் இரண்டு லாபம். சுலபமாய் காசு செலவழிச்சு மீதி சுத்தி பாக்காம சீக்கிரம் வீட்டுக்கு போகலாம். இரண்டாவது, உடம்பு நல்லா கொடியாட்டம் இருக்கும். எல்லாம் நல்லதுக்குதான்...

    ReplyDelete
  2. நெல்லை சந்திர விலாஸ் -ஹோட்டல் பற்றி இன்னொரு செய்தி - அதன் முதலாளி (அநேகமாய் அந்த ஹோட்டலை ஆரம்பித்தவர்) சுதந்திரப் போராட்டத்த் தியாகிகளுக்கு நிறைய உத்வியவர். (அவரே கூட சுதந்திரப் போராட்டத்தியாகி ஆகவுமிருக்கலாம்) ஏதோ ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். கல்லூரியில் படிக்கும் போது என்நண்பனொருவன் சந்திர விலாஸிற்குக் கூட்டிக்கொண்டு போனான். அத்ன்பின் சில்முறை சென்றிருக்கிறேன். என் உறவினர் கூட அங்கு சில காலம் வேலை செய்தார்.

    நெல்லையில் பொதுவாக (சென்னையை விட) எல்லா உணவகங்களிலுமே சாப்பாடு ரொம்ப நன்றாக்யிருக்கும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டல் நன்றாக சுத்த்மாக இருக்கும். ஆண்டாள் கோயில் தேரடிப் பக்கத்தில். என் தாத்தா அதை கோவிந்தன் கடை (முதலாளியின் பெயர்) என்று சொல்வார்.

    ReplyDelete
  3. ஓ! இந்த கதை பாதில இருந்தது இல்ல?...எனக்கு மறந்தே போயிடுத்து மேடம்.

    ReplyDelete
  4. உங்க உடல்நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் படி சொல்லி அனுப்பி இருந்தேன். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு போல. :))

    ReplyDelete
  5. :D :D I read all of your new posts.
    Ungalai paathalae vambu panna thonumo? :D Ingae pesittu,angae Vandhu paathu pesittu sollren.

    ReplyDelete
  6. enna idhu ipdi ellam? kuduthada saapidama edhir kelvi kettukittu?? :)

    ReplyDelete
  7. romba indian saapaadu miss panren..waiting to go back :(

    ReplyDelete
  8. //எங்கேயோ சூடானில் இருந்துட்டு அவருக்கு எல்லாம் தெரியுது. நமக்கு ஒண்ணும் தெரியலை. //

    இது தான் சந்துல சிந்து பாடுறதா???

    ReplyDelete
  9. //ஆனால் அந்த சூபர்வைஸர் மறுபடி என்னைப் பார்த்த பார்வை இருக்கே! என்னத்தைச் சொல்றது? //

    அவனுக்கு விதி அன்னிக்கு உங்க ரூபத்தில் வந்து இருக்கு. என்ன பண்ணுறது....

    ReplyDelete
  10. எங்க ஊரு ஹோட்டலைப் பற்றி எழுதிய தலைவி கீதா வாழ்க....

    அப்படியே சுசில இருந்து உங்களுக்கு காலை சாப்பாடு பார்சல்.. சாயுங்காலமா, அரசன் பக்கம் போனீங்கன்னா நல்ல குளிர் ... (அய்யய்யோ.. ஐஸ் க்ரீமுக்கு தமிழ்ல எப்படி சொல்வாங்க??) கிடைக்கும்...

    அப்படியே மேம்பாலத்துக்கு கீழ போய் இருட்டுகடை அல்வா ஒரு கிலோ (அப்போ ரூ70) வாங்கிட்டு அப்படியே ஒரு யுவ் சுத்து அடிச்சிட்டு வீடு போய் சேந்திடலாம்....

    ReplyDelete
  11. முதல்வருகைக்கு நன்றி, சல்மா. உங்க பதிவையும் படிச்சேன். அடிக்கடி வாங்க.

    @தங்கவேல், நறநறநற :Dஇது எல்லாம் நான் போகிறதுக்கு முன்னே சொல்லி இருக்கணும். விட்டுட்டேன். பார்க்கலாம். அப்புறம் ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டல் சுத்தம். மூடி இருந்தது, நாங்க போனப்போ!:(

    ReplyDelete
  12. முதல்வருகைக்கு நன்றி, சல்மா. உங்க பதிவையும் படிச்சேன். அடிக்கடி வாங்க.

    @தங்கவேல், நறநறநற :Dஇது எல்லாம் நான் போகிறதுக்கு முன்னே சொல்லி இருக்கணும். விட்டுட்டேன். பார்க்கலாம். அப்புறம் ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டல் சுத்தம். மூடி இருந்தது, நாங்க போனப்போ!:(

    ReplyDelete
  13. முதல்வருகைக்கு நன்றி, சல்மா. உங்க பதிவையும் படிச்சேன். அடிக்கடி வாங்க.

    @தங்கவேல், நறநறநற :Dஇது எல்லாம் நான் போகிறதுக்கு முன்னே சொல்லி இருக்கணும். விட்டுட்டேன். பார்க்கலாம். அப்புறம் ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டல் சுத்தம். மூடி இருந்தது, நாங்க போனப்போ!:(

    ReplyDelete
  14. மதுரையம்பதி, ஒரு பத்து நாள் வரலைன்னதும் என்னையே மற்ந்துட்டீங்களே? :(

    ReplyDelete
  15. இ.கொ. நல்லாச் சொல்லி அனுப்பினீங்க போங்க, கொஞ்சம் நல்லாக் கவனிக்கச் சொல்லி இருக்கலாம், தலைவி வராங்கன்னு. இப்படியா ஒரு தொண்டர்? என்னத்தைச் சொல்வேன்? :P

    ReplyDelete
  16. ஹிஹிஹி, எஸ்.கே.எம். நேரிலே பார்த்தா ஏமாந்து போயிடப் போறீங்க! அப்புறம் திருக்கைலைப் பயணத்துக்கு அப்புறம் நிறையப் பேர் என்னைப் பார்க்க ஆசைப்படறதாலே சிறப்புக் கட்டணம் அறிவிப்புச் செய்திருக்கேன். :D அதிலே உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்துட்டு வாங்க. என்னோட பையன் வேறே வீட்டு வாசலில் டீக்கடை, தேங்காய், பூ, பழக்கடை எல்லாம் போட டெண்டர் விடச் சொல்லி இருக்கான். அது வேறே வேலை இருக்கு. :D

    ReplyDelete
  17. போர்க்கொடி, நீங்க கொடுத்ததைச் சாப்பிடுவீங்களாக்கும்? :P

    Ms.C., அதான் உங்க ரங்கமணி சமையல் கத்துக்கறதிலே முனைப்போடு இருக்கார் போல் இருக்கே? :D

    ReplyDelete
  18. ஹிஹிஹி, சிவா, அப்படிங்கறீங்க? :D
    அப்புறம் போதாத காலம் சூபர்வைஸருக்கு இல்லை எனக்கு!:-)

    ReplyDelete
  19. ஜி-z, எல்லாம் இப்போ வந்து வரிசையாச் சொல்லுங்க. ரொம்ப மோசம். :P

    ReplyDelete
  20. கதிரவன் ஹோட்டல்காரங்க ரொம்ப பங்ச்சுவாலிட்டியானவர்கள். மதியம் 2 மணிக்கு எல்லாம் சாப்பாட்டுக் கடையை மூடிவிடுவார்கள். மாலை 4 மணிக்குத்தான் மீண்டும் திறப்பார்கள். இதுவும் ஒருவகை வியாபார தந்திரமாக இருக்கலாம்.

    ஹி.. ஹி இனிமேல் தெற்குச் சீமைக்குப் போனீங்கன்னா எனக்கு ஒரு மெயில் தட்டுங்கள்.

    ReplyDelete
  21. சந்திரவிலாஸ்!!! சாலைக்குமரன் கோயில் பக்கத்தில் இன்னும் இருக்கிறதா? அந்த காலத்தில் எங்கள்
    வீட்டிற்கு திடீர் விருந்தினர் வந்தால்
    அங்கிருந்துதான் வடை,மெதுபக்கோடா
    எல்லாம் சுடச்சுட வரும்! அருமையாயிருக்கும்!
    இருட்டுக்கடை நெல்லையப்பர் பார்வை படுமிடத்தில் இருக்கிற்து.

    ReplyDelete
  22. தங்க வேல், நாங்க போனப்போ பகல் 12 மணி கூட இல்லை. அன்னைக்குக் கடை லீவு நாளாம். அதனால் கதிரவன் உதிக்கவே இல்லை!

    நானானி, எல்லாம் இப்போ வந்து வரிசையாச் சொல்லுங்க, என்னங்க இது? தலைவி சூறாவளி சுற்றுப் பயணம், அதுவும் ரகசியப் பயணத்திட்டம், எதுக்கும் இருக்கட்டும்னு இது எல்லாம் சொல்ல வேண்டாம்? என்னவோ போங்க!!!!:))))))))

    ReplyDelete
  23. நம்ம வருகையை குறிசுக்கோங்க மேடம்.. தோ.. ஒரு குளியலை போட்டுட்டு வந்து கன்டினியூ பண்றேன் :-)

    ReplyDelete
  24. //எல்லாம் இந்தக் கார்த்திக்கைச் சொல்லணும்.//

    நம்ம காலை வாரலைனா உங்களுக்கு தூக்கம் வராதோ மேடம் :-)

    ReplyDelete
  25. எனக்கு நீங்க சொல்ற எந்த ஹோட்டல்லையும் சாப்பிடுற பாக்கியம் கிடைக்கலங்க மேடம்.. ஆனா எங்க முனியாண்டி விலாஸ் பாத்தாலும் நுழஞ்சுடுவேன். எல்லா முனியாண்டி விலாஸுமே நல்லா இருக்குமான்னு தெரியாது.. ஆனா ஒரு சிலது, பட்டையை கிளப்பும்.. திண்டுக்கல்ல, பிரியாணிக்கு பேர் போனது.. தலப்பாக்கட்டி கடை தான் (பின்னூட்டம் தொடரும்)

    ReplyDelete
  26. நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. ஆனா இப்போ பேகம்பூரில் இருக்கும் பொன்ராம், சோலைஹால் தியேட்டர் அருகில் இருக்கும் வாணி, நாகல்நகரில் இருக்கும் துளசி இது மூணும் தான் பிரசித்தி.. பாத்தீங்களா.. நமக்கு நான்-வெஜ் ஹோட்டல் பேராத்தான் வருது.. வெஜ்-னா எப்பவும் எனக்கு சென்னை வடபழநி சரவண பவன் தான் மேடம்..

    ReplyDelete
  27. \\இதோ தட்டிலே இருக்கே, இது என்ன?" என்றார் அதட்டலே இல்லாத குரலில். "இதுவா?" என்றேன் ஈனஸ்வரத்தில். என் குரல் எனக்கே கேட்கலை. \\

    எல யாரது எங்க தலைவிக்கு தட்டில் பொங்கல் வச்சி கொடுத்தது...சரி விடுங்க தலைவி சின்ன பைய பாவம்.

    ReplyDelete
  28. thalaiviye! adhu enna salma madam n thangavel sir na ungluku avlo bayamma?? ithana dadava bathil solringa?? :) thalaivikke bayam kaatina ivanga rendu perrum vaazhga!!

    ReplyDelete
  29. //பொங்கல் போதாமல் பொங்கி எழுந்த எங்கள் தானைத்தலைவி வாழ்க//

    நான் இதை வழி மொழிகிறேன் :-)

    ReplyDelete
  30. //நடிகர் ஸ்ரீகாந்தோட தாத்தா கடை.. //

    தல இது என்ன புது தகவலா இருக்கு..அவங்க பூர்வீகம் திருப்பதி :-)

    ReplyDelete
  31. அதான் தங்கமணி கமண்ட் போட்டாச்சே! நான் எதுக்கு தனியா?னு சும்மா இருந்தேன்.

    என் கமண்ட்டுக்காக வெய்டிங்க் போலிருக்கு! :)

    நெல்லைக்கு போறேன்!னு ஒரு (மொக்கை)போஸ்ட் போட்டுட்டு போயிருந்தா நாங்க நாலு விஷயம் சொல்லி இருப்போம். இப்படி அங்கே போயி திரு திருனு முழிச்சிருக்க வேண்டாம். இப்ப நஷ்டம் யாருக்கு?

    ReplyDelete
  32. போர்க்கொடி, அது என்னோட தப்பு இல்லை, ப்ளாக்கரோடதுன்னு கூட நினைப்பில்லாம, ரங்கமணி நினைப்பிலேயே இருந்தா இப்படித்தான்.

    ReplyDelete
  33. கார்த்திக், ஆணி மட்டும் அதிகம் இல்லை, கொஞ்சம் ஓய்வும் வேணும்னு நினைக்கிறேன். ஓய்வு எடுத்துட்டு வாங்க, மெதுவா, உங்களோட நல்ல பதிவுகளுக்காகவும் வெளிப்படையான பின்னூட்டங்களுக்கும் வெயிட்டிங்க்.

    ReplyDelete
  34. ஹிஹிஹி, கோபிநாத், என்ன இது? அதட்டல் எல்லாம் போட்டா எப்படி? மறுநாளைக்கும் இங்கே தானே சாப்பிட்டாகணும்? அ.வ.சி.

    ReplyDelete
  35. ஹிஹிஹி, சயாம், உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டு இருக்கீங்க! ரொம்பவே சந்தோஷம், நான் வந்ததும் புஷ் கிட்டேச் சொல்லறேன் உங்க வேலைத் திறமையைப் பத்தி!!!!!!:D

    @ஆப்பு, இதே வேலையாப் போச்சு, எப்பப் பார்த்தாலும் அப்புறமாச் சொல்றதுன்னா எப்படி? இப்போ நீங்க போகாத இடத்துக்கெல்லாம் நாங்க வழி மட்டும் இல்லை, எல்லாத் தகவலும் கொடுக்கிறோம் இல்லை, அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கணும், நெல்லையிலே எது எது எங்கே, எங்கே இருக்குதுன்னு ஒரு பதிவு போட்டிருக்கணும். இப்போ ராம், பாருங்க, மண்ணின் மைந்தர், மதுரை ஹோட்டல்களைப் பத்தி எழுதினதும், நானும் போய் ஊரில் உள்ள ஹோட்டல்களை எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். இது தெரியாமா நீங்க என்ன பதிவு போடறீங்களோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  36. //மெதுவா, உங்களோட நல்ல பதிவுகளுக்காகவும் வெளிப்படையான பின்னூட்டங்களுக்கும் வெயிட்டிங்க்.
    //
    அப்ப இதுவரை கார்த்தி போட்ட பதிவு எல்லாம் மொக்கை!னு சொல்ல வறீங்களா? :)

    //நெல்லையிலே எது எது எங்கே, எங்கே இருக்குதுன்னு ஒரு பதிவு போட்டிருக்கணும்.//
    சரி தான்! கைலாசத்துல காப்பி கிடைக்கும்!னு நானும் போஸ்ட் போட்டு இருக்கனும். :)

    ReplyDelete
  37. கீதா மேடம்! ஜானகிராமன் ஹோட்டல்ன்னு பேர் பாத்ததுமே வந்திருக்கனும். கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். இதுவே நம்ம பக்க(தஞ்சை) ஹோட்டலா இருந்தா பூந்து ரவுண்டு கட்டியிருப்பேன். இப்போ வேடிக்கைதான் பார்க்க முடியுது!

    ReplyDelete
  38. அம்பி, நீங்க என்ன முயற்சித்தாலும் கார்த்திக்கை எனக்கு எதிராய் மாத்த முடியாது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
    அப்புறம் உங்களுக்கு நெல்லை ஹோட்டல் பத்தித் தெரியாதுன்னு சொல்லிட்டுப்போங்க, அதுக்கு என்ன சமாளிப்பு? நறநறநறநற

    ReplyDelete
  39. அபி அப்பா, வாங்க, வாங்க, லேட்டா வந்தா என்ன? பரவாயில்லை, பின்னூட்டம் தான் கணக்கு. ஹிஹிஹி......

    ReplyDelete
  40. ம்ம்ம்ம், இன்னைக்குக் கொடுத்த பதிவு போகவே இல்லை. காலையிலே இருந்தே முயற்சி செய்தும் ஒண்ணும் நடக்கலை. இது சோதனைப் பின்னூட்டம்.

    ReplyDelete
  41. ம்ம்ம்ம்ம்ம்பின்னூட்டம் போகுதே? ஏன் பதிவு மட்டும் போகலை?

    ReplyDelete