தஞ்சாவூரில் பாலபிஷேஹம் முடிஞ்சு, நாங்க திருச்சி போனோம். திருச்சியிலே இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் எங்களுக்குத் திருநெல்வேலிக்கு முன்பதிவு செய்திருந்தோம். மதுரை வழிதான் இருந்தாலும் மதுரையில் இறங்க வில்லை. கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் நேரம் இல்லை. அதனால் மேல் பாலத்தில் இருந்தே தெரியும் கோபுர தரிசனத்தோடு திருப்தி அடைந்தேன். வேறே வழி? அதுக்கு அப்புறம் வந்த வழியில் நான் ரெயில் பயணம் செய்தது இல்லை. திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் (இருமுறை) போயும் இந்த வழி போனதில்லை. ஆகவே ரொம்பவே ரசித்துப் பயணம் செய்து வந்தேன். ஒவ்வொரு ரயில் நிலையம் வரும்போதும் அங்கே இது பிரசித்தி என்று சொல்லிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி தாண்டினதுமே என்னோட கணவர் திருநெல்வேலியில் எங்கே தங்குவது? எங்கே சாப்பிடுவது என விசாரித்துத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாச்சே! எல்லாரும் ஒரே வாயாக (தனித் தனியா அவங்க அவங்க வாயாலே தான்) "ஜானகிராமன் ஹோட்டல்"ஐ சிபாரிசு செய்தனர். அங்கே "சந்திர விலாஸ்" என்றொரு ஹோட்டலில் சாப்பாடு நல்லா இருக்குமாம். அநேகமாய் ஜானகிராமன் ஹோட்டலில் தங்கினாலும் அங்கேதான் சாப்பிடப் போவாங்களாம். எங்க துரதிர்ஷ்டம் அதைப் பத்தி ரெயிலில் யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை. நாங்க திரும்பி சென்னை வரும்போது தான் தெரிந்தது. அப்புறம் இப்போ திரு தி.ரா.ச. அவர்களும் சொல்றார். (நறநறநற). திருநெல்வேலியில் இறங்கினதும் மூட்டை, முடிச்சுக்களைத் தூக்க ஆளைப் பார்த்தால் ஒருத்தர் வந்தார். சாமானைப் பிடுங்கிக் கொண்டார். அடுத்த நிமிஷம் கண்ணில் காணோம். மாற்றுத் துணிகள் உள்பட சுமைதூக்குபவர் கையில். என் கணவர் வெறும் கையுடனும், நான் கையில் கைப்பையுடனும் நிற்கிறோம். சற்றே பதறிப் போய்ப் பார்த்தால் சுமை தூக்குபவர் முன்னால் போய் திரும்பிப் பார்த்து இன்னுமா நீங்க வரலை என்பது போல் அலட்சியமாய்ப் பார்த்துக் கூப்பிடவே சற்றே ஆறுதலுடன் வேக நடை போட்டோம். சுமை தூக்குபவர் வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை. அத்தனை வேகம் பேச்சும், நடையும். அவர் சிபாரிசு செய்தது "பரணி" ஹோட்டல். ஆனால் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்த இன்னொருவர் கிட்டத் தட்ட எங்களை அடிக்கிறாப்போல் பார்த்து விட்டு, "ஜானகிராமன் ஹோட்டலுக்குப் போங்க! வேறே எங்கேயும் போகாதீங்க!" என்று எச்சரித்து விட்டுப் போனார். சற்றே பயத்துடன், "சரி" என்று சொல்லிவிட்டுப் பின் ரெயில் நிலைய வாசலுக்கு வந்தால் மறுபடி சாமான்கள் பிடுங்கப் பட்டது.
"என்ன இது இந்த ஊரிலே? இப்படித்தானா? என்று நினைப்பதற்குள் சுமை தூக்குபவர் எங்களைப் பார்த்து, "அவர் ஒரு ஆட்டோக்காரர். உங்களை ஜானகி ராமன் ஹோட்டலில் இறக்கி விடுவார்." என்று சொல்லிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டார். நாங்கள் இப்போ ஆட்டோக் காரரைத் தேடணும். வேக நடை போட்டால் வரிசையாக ஆட்டோக்கள். எங்கே இருக்கிறார்? எங்க சாமான்களோடு வந்தவர்? அதற்குள் ஒருத்தர் நாங்க தேடறதைப் பார்த்துட்டு, "அதோ, அந்த முதல் ஆட்டோ, என்றார். முதலில் வரிசையாக நான்கு ஆட்டோக்கள். ஒவ்வொரு ஆட்டோவிற்கும் உள்ளே பார்த்து எங்களோட ஒரு பையை வைத்து (இதுக்குன்னே அந்தப் பையை எடுத்துட்டுப் போவோம்) அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து ஆட்டோக் காரரிடம் என்ன இது? இப்படிப் பண்ணினீங்க? என்று கேட்டால் அவர் எனக்குத் தான் உங்களைத் தெரியுமே? நான் கூப்பிட்டு உட்கார்த்தி வச்சுட்டுத் தானே போவேன்! என்ன பயம்? இது பட்டணம் இல்லை!" என்றார். இருந்தாலும் ஆட்டோக்காரர் முகம் கூடத் தெரியாத அளவு இவ்வளவு வேகத்துடன் அவர் ஓடியது தேவைதானா என்று எனக்குப் புரியவில்லை.
ஜானகிராமன் ஹோட்டலில் போய் இறங்கினதும் அறை வாடகைக்கு எடுத்து விட்டு உணவுகளை அறையிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி உண்டா எனக் கேட்டோம். அந்த வரவேற்பாளிக்கும், வரவேற்பாளருக்கும் கொஞ்சம் சந்தேகம், நாங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷங்களா என்று. இருந்தாலும் மரியாதையுடன் இருக்கு என்றார்கள்.. அவர்கள் சந்தேகத்தைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாய் இருந்தது. என்னவோ என நினைத்து 4வது மாடியில் உள்ள அறைக்கு வந்தால் (நல்லவேளை லிஃப்ட் இருக்கிறது), அறை சுத்தமோ, சுத்தம்! நல்ல பராமரிப்பு. மனதுக்கு நிம்மதியாயும் திருப்தியாயும் இருந்தது. ரூம் செர்வீஸ் மெனு கார்ட் இருந்தது. வேறே ஒண்ணும் சாப்பிட முடியாது. ஒரு பாலாவது சாப்பிடலாம் என மெனு கார்டை எடுத்துப் பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்தது.
//ஒரு பாலாவது சாப்பிடலாம் என மெனு கார்டை எடுத்துப் பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்தது. //
ReplyDeleteவிலைய பார்த்தா????????
//"ஜானகிராமன் ஹோட்டலுக்குப் போங்க! வேறே எங்கேயும் போகாதீங்க!" என்று எச்சரித்து விட்டுப் போனார். //
ReplyDeleteஅந்த ஊருக்காரங்க அப்படிதாங்க, பாசக்கார பய புள்ளங்க, அவ்வளவு உரிமை எடுத்துப்பாங்க. என்ன கோவம் வந்த்தா, என்ன பண்ணுறோம் அவிங்களுக்கே தெரியாது.
indha pakkam thala kaatitu poga vandhen :)
ReplyDeleteaaha...neenga bharani hotel-la thangama vandhuteengale....anga thangi irundha indha post-oda title-e maari evlo super irundu irukum :)
ReplyDeleteஎங்க ஊரைப் பத்தி எல்லாம் நல்ல விதமாவே சொல்லுவீங்கன்னு நம்பறேன்.
ReplyDeleteஏல மக்கா, கத்திய உள்ள தூக்கி வையுல. இவுக நல்லவகளாத்தேன் தெரியுதாக!!
ம்ம்ம் .. அப்புறம் :-)
ReplyDeleteஹிஹிஹி, சிவா, சரியாச் சொல்றீங்களே? திடீர்னு மூளை எல்லாம் வேலை செய்யுது போல் இருக்கே? :))))))))))
ReplyDeleteம்ம்ம், அந்த ஊருக்காரங்களைப் பத்தி நீங்க சொல்றதும் சரின்னு கீழே இ.கொ.வந்து சொல்லிட்டுப் போயிருக்கார் பாருங்க!
@பரணி, அது சரி, தலை மட்டும் காட்டினா எப்படி? உங்க பின்னூட்டத்தை வச்சுத்தான் உள்ளே ஏதானும் இருக்கான்னு தெரியும்!!! :D
ReplyDeleteநீங்க வருவீங்கன்னு தெரிஞ்சா நாங்க அங்கேயே தங்கி இருந்திருப்போம். :P
இ.கொ. நேத்தே வரலையேன்னு நினைச்சேன். ஊர்ப்பாசம் காந்தம் போல் இழுக்குது போல் இருக்கே!
ReplyDelete@உஷா, இருங்க வரேன். வேறே ஒரு வேலை வந்துடுச்சு அதுக்குள்ளே. அதை முடிச்சுத் தரதா ஒத்துக் கொண்டு விட்டேன். இன்னிக்கு முடியாது.
\\ஒண்ணும் சாப்பிட முடியாது. ஒரு பாலாவது சாப்பிடலாம் என மெனு கார்டை எடுத்துப் பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்தது.\\
ReplyDeleteம்ம்ம்....சீக்கிரம் சொல்லுங்க தலைவி...
இல்லைன்னா என் தலை சுத்த ஆரம்பிச்சிடும்....
யம்மாடியோவ். சந்திர விலாஸ் (மேம்பாலத்து அடியில், இரயில்வே கேட் அருகே) இன்னும் இருக்கா? 77-80 களில் எனக்கு் அங்கேதான் போஜனம். என்ன, வயதான பாட்டி, கொஞ்சம் கண் தெரியாமல் சமைத்த சாப்பாடு போல் இருக்கும். உள்ளேயும் ஒரே இருட்டாக இருக்கும். நண்பர்கள் பழையது ஹோட்டல் என்று கிண்டல் பண்ணுவார்கள். ஆனால் உடம்புக்கு ஒன்றும் பண்ணாது. உள்ளுர் நண்பர்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று எழுதினால் தேவலை.
ReplyDeleteஅதற்கு எதிர்புறம் இருக்கும் கடையில் (பெயர் மறந்து போய் விட்டது) சுடச் சுட நெய் வழியும் அல்வா ரொம்ப பிரசித்தம் என்னாளில். கூடவே ஒரு பிடி மணக்கும் மிக்ஸர்.
மலரும் நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள். மிகவும் நன்றி.
தலைய சுத்த ஆரம்பிச்சுதா? -அங்க மெட்ராஸ கம்பேர் பண்ணும் போது சீப்பாத் தானே இருக்கும்?
ReplyDeleteசாப்பாடும் நல்லாத்தேன் இருக்கும். ஆமா அம்பி கிட்ட கேட்டுட்டுப் போகலையா? ரயில்வே டேசன்லேர்ந்து ஜானகிராம் பக்கம் தான்கிறதையும் சொல்லலையா? ஆட்டோகாரர் கரெக்டாத் தான் வாங்கியிருப்பார்ன்னு நினைக்கிறேன். ஆனா மத்த ஊர் மாதிரி ஆட்டாக்காரர் சாமானை எடுட்துக்கொண்டு ஒடுற அளவுக்கு ஏமாத்தமாட்டாங்க...பயமில்லை...
ஆர்.எம்.கே.வி கிட்ட நெல்லை சரவணா பவன் ஒன்னு ஆரம்பிச்சிருகாங்க...அதுவும் நல்லா இருந்தது.
மதுரையிலும் இதே கதைதான், கேபிஎன் பஸ்ல போயி எறங்க விடமாட்டாங்க ஆட்டோகாரங்க.....
ReplyDeleteஆமாம், தலை சுற்றியபோது என்ன கிடைத்தது பிடித்துக் கொள்ள?. இப்பிடி சஸ்பென்ஸ் வச்சு எழுதலாமா?.....ஹிஹிஹி
எல்லாரும் இப்போ வந்து சொல்லுங்க.குறைஞ்ச பட்சம் அவங்க அவங்க ப்திவிலே போட்டிருந்தாலாவது தெரிஞ்சிருக்கும். எங்கே? எல்லாருக்கும் தங்கமணியைப் பத்தி எழுதத் தான் நேரம் இருக்கு. :P
ReplyDelete