எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 03, 2007

ஒரு முக்கியமான வேண்டுகோள் தேவை O Rh -ve ரத்தம்!

என்னுடைய நண்பர் திரு கஜபதியின் தந்தையின் அறுவை சிகிச்சைக்காக Rh O-ve ரத்தம் தேவைப் படுகிறது. அவர் என்னைத் தான் நாடினார். என்னோட உடல் நிலை காரணமாய் என்னால் ரத்த தானம் செய்ய முடியாது. ஆகவே இதைப் பார்க்கும் சென்னை அன்பர்கள் அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கும் திரு கஜபதியை இந்தக் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். திரு கஜபதி கைபேசி எண் 93853 72626. அவருடைய தந்தையின் உடல் நலம் சீரடையவும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள் பல. மார்ச் மாதம் 10-ம் நாள் சென்னை, அப்போல்லோ மருத்துவமனையில் நடக்கப் போகும் அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தமான O Rh -ve தேவை. இன்னும் ரத்தம் கிடைக்கவில்லை.

17 comments:

  1. தமிழ்மணம் இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை. இதனால் பிரச்னைகள் வரலாம் என்று தெரிவித்து விட்டது. போட்டதுக்குப் பின் அதை எடுக்கவும் எனக்கு இஷ்டம் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள், சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் திரு கஜபதியைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. இதனால் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது?...ஒன்றும் புரியவில்லை.

    எனிவே, என்னுடைய விரைவில் அவர் குணமடைய என் பிராத்தனைகள்.

    ReplyDelete
  3. திரு.கஜபதி அவர்கள் உடல் நலம் பெற எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. திரு கஜபதி அவர்கள் தந்தை உடல் நலம் பெற நானும் வாழ்த்துகிறேன்..எனது சென்னை நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து விட்டேன்...அவர்களுக்கு தெரிந்து யாராவது 0 -ve இருந்தால் கஜபதி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள உறுதி அளித்து உள்ளார்கள்...

    ReplyDelete
  5. \\இதனால் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது?...ஒன்றும் புரியவில்லை. \\

    எனக்கும் இதே கேள்வி தான்....அப்படி என்ன பிரச்சனை வந்துவிடும்...

    திரு. கஜபதி அவர்களின் தந்தை விரைவில் குணமடைய நானும் பிராத்திக்கிறேன்...

    ReplyDelete
  6. I pray for his speedy recovery....

    Geetha Madam...
    I am reading your blog...since Iam travelling a lot from west to east coast...i dont have much time to write comments (romba busy illai...but getting tired!!

    ReplyDelete
  7. கீதாக்கா,
    என்ன சொல்ல வரீங்க? அதான் தமிழ்மணத்துல தெரியுதே! பின்னூட்டங்கள் கூடத் தெரியுது!

    தமிழ்மணத்திலிருந்து, இது போன்ற உதவிப் பதிவுகளைத் திரட்ட மாட்டோம்னு ஏதும் மடல் அனுப்பினாங்களா என்ன?

    ReplyDelete
  8. பொன்ஸ், அப்படி எல்லாம் ஒண்ணும் சொல்லலை. நேத்திக்கு நான் கொடுத்தப்போ கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் முயற்சித்தும் பதிவு எடுத்துக்கவில்லை. அதனால் சொன்னேன். "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"னு வந்தது. அதைக் கிளிக்கினால் பதிவை ஏற்க முடியாது என்று செய்தி வந்தது. இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனக்குப் புரியவில்லை!

    ReplyDelete
  9. கீதா!
    நல்லுள்ளம் படைத்தோர் உதவுவார்கள் என நம்புகிறேன். அவர் உடல் நலம் தேற ஆண்டவனை வேண்டுகிறேன்.
    மேலும் தமிழ்மணம் திரட்டியில் ஏதாவது தவறு நேர்ந்திருக்கலாம். அவர்கள் இதை நிராகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

    ReplyDelete
  10. கீதா,

    திரு.கஜபதி குணமடைய வாழ்த்துக்கள். நண்பர்கள் முன்னால் சொல்லி கேட்ட தகவல்கள் சில இரத்தம் கிடைக்க உதவலாம்.

    ஜனநாயக வாலிவர் சங்கம், ம.தி.மு.க மற்றும் பல அமைப்புகள் இரத்ததானம் செய்யும் நபர்கள் அவரகளது இரத்த வகைகள் பற்றிய தகவல் திரட்டி வைத்திருக்கும். அவர்கள அணுகினால் சில மணிநேரங்களில் இலவசமாக இரத்தம் கிடைக்க வழியுண்டு. முயற்சி செய்யுங்கள்!

    ==
    //கீதா சாம்பசிவம் said...
    பொன்ஸ், அப்படி எல்லாம் ஒண்ணும் சொல்லலை. நேத்திக்கு நான் கொடுத்தப்போ கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் முயற்சித்தும் பதிவு எடுத்துக்கவில்லை. அதனால் சொன்னேன். "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"னு வந்தது. அதைக் கிளிக்கினால் பதிவை ஏற்க முடியாது என்று செய்தி வந்தது. இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனக்குப் புரியவில்லை!//

    தமிழ்மணத்தில் திரட்டபடாமல் இருந்தது தமிழ்மணத்தின் தவறு அல்ல என நினைக்கிறேம். எனது பல பதிவுகளுக்கும் "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"னு வந்தது. இது blogger அல்லது வேறு ஏதாவது தொழில்நுட்ப கோழாறு காரணமாக இருக்கலாம். தமிழ்மணம் நிர்வாகத்தின் தலையீடு இந்த விசயத்தில் இல்லை என்பது என் அனுபவம் வழி உறுதி. தமிழ்மணத்தை இதில் குறை சொல்ல ஒன்றுமில்ல.

    ReplyDelete
  11. தெளிவாக தொழிற்நுட்பப் பிரச்சனை, செய்தியோடைப் பிழைன்னு ஏதாச்சும் சொல்லி இருந்திருக்கலாம்க்கா.. ஏற்கனவே அவங்கவங்க, தமிழ்மணத்தில் என் பதிவு வரலை, உன் பதிவு வரலைன்னு பிரச்சனை பண்ணிகிட்டிருக்காங்க.. நீங்களும் அப்படிப் பொருள் படும்படியா எழுதுவதைத் தவிர்த்திருக்கலாம்..

    மத்தபடி என்னுது ஓ இல்லை.. திரு. கஜபதியின் தந்தை உடல் நலம் சீரடைந்து நல்ல்லா இருக்க வேண்டிக்கிறேன்.. இரத்தம் கிடைச்சிட்டதாமா?

    ReplyDelete
  12. ஏங்க, இத நான் படிக்கலையே...

    முடிஞ்சா ப்ளட் க்ரூப்ப தலைப்பிலேயே சேர்க்கலாம்...மேலும், செல் நெம்பர் கொடுத்திருக்கீங்க, அப்போல்லோ, எந்த நகர அப்பல்லோ? இவைகள் மேலும் தாமதமாக்கலாம்...

    ReplyDelete
  13. எனக்குப் புரியாததால் தான் எழுதினேன். தமிழ்மணத்தைக் குறை கூறும் நோக்கம் ஏதும் இல்லை. தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கியதற்கு மனப்பூர்வமாக வருந்துகிறேன். நேற்றுச் செய்தியைக் கொடுக்கும் அவசரத்திலும், என்னோட வேலைகளின் அழுத்தத்திலும் "செய்தியோடையைச் சரி பார்க்கவும்"னு வந்ததை எழுதணும்னு தோன்றவில்லை. பகிரங்கமாய் மன்னிப்பு வேண்டுமானாலும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. சென்னையிலே உள்ள அப்போல்லோ தான். க்ரீம்ஸ் ரோடில் இருக்கிறது. அதனால் தான் சென்னை நண்பர்கள் என்று குறிப்பிட்டேன். புரிஞ்சுக்குவாங்கன்னு.

    ReplyDelete
  15. //அதனால் சொன்னேன். "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"னு வந்தது. அதைக் கிளிக்கினால் பதிவை ஏற்க முடியாது என்று செய்தி வந்தது. இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனக்குப் புரியவில்லை!//
    //இது blogger அல்லது வேறு ஏதாவது தொழில்நுட்ப கோழாறு காரணமாக இருக்கலாம்.//

    இது தமிழ்மணத்தின் டெக்னிகல் பிரச்சினை. மற்றபடி யாரும் மேனுவலா செய்வது கிடையாது. "தமிழ்மணம் நிர்வாகத்தின் தலையீடு இந்த விசயத்தில் இல்லை என்பது என் அனுபவம் வழி உறுதி."

    //அதனால் தான் சென்னை நண்பர்கள் என்று குறிப்பிட்டேன். புரிஞ்சுக்குவாங்கன்னு.//

    ஓகே.ஓகே.

    ReplyDelete
  16. தலைவி, கஜபதியின் தந்தையின் உடல் நலம் எவ்வாறு உள்ளது.

    விரைவில் நலம அடைய ஆண்டவனை வேண்டுகிறென்

    ReplyDelete
  17. my bad experience with Apollo makes me think twice. They were adamant on considering donors weighing above 50 kilos against the rule of 45 kilos and above is OK. BTW, I have committed for O+ve to one heart surgery in MIOT to one Mr.Lenin, a scholar from Periyar Science Centre, on 10th MArch. Anyone willing to donate O+ve can contact Mr.Lenin on number 9884825759

    ReplyDelete