நான் weird ஆனவளான்னு எழுதச் சொல்லி வல்லி கேட்டிருக்காங்க. ஹிஹி, என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்க தான் அவங்க. இருந்தாலும் இப்படிக் கேட்டிருக்காங்க. அவங்க tag எழுதச் சொன்ன சிலரிலே நானும் ஒருத்தி. இதை இப்போ எழுதணுமா? எத்தனயோ அரைகுறை போஸ்ட் இருக்கும்போதுன்னு கேட்கிறவங்க எல்லாருக்கும் "அதான் நான் வியர்டு!" அப்படின்னு பதில் சொல்லிக்க ஆசைப் படறேன். இதிலே ஒரு சந்தேகம் என்னன்னா இந்த வார்த்தையை எந்த form-ல் எடுத்துக்கறதுன்னு!!!!!!! Noun formலா? adjective formலா? ஹிஹிஹி, நான் போஸ்ட் போடறதும், அதை நீங்க படிக்கிறதிலே இருந்தும் உங்க எல்லாருக்குமே அது நீங்க சம்மந்தப் பட்ட noun form weird னு புரிஞ்சிருக்கும். அதான் ச்யாம் எப்போவோ சொல்லிட்டாரே எல்லாம் எங்க head letter அப்படின்னு. இப்போ புதுசா உண்ணாவிரதம் வேறே இருக்கணும் அவர் பாவம். தங்கைக்காக! எல்லாம் தங்கைக்காக!
நான் வலைப்பக்கம் திறந்து பதிவுகள் போடறதே ஒரு வியர்டு தானே! அதுவும் இப்போக் கொஞ்ச நாளா இந்த ப்ளாக்கரும் நானும் போடற சண்டை இருக்கே? அதுவே ஒரு வியர்டுதாங்க!! நான் பதிவு போட ஆரம்பிச்சப்போத் தான் வல்லியும் ஆரம்பிச்சாங்க. அதுவே ஒரு வியர்டோன்னு நினைக்கிறேன். ஆரம்பத்திலே நாங்க 2 பேரும் தான் ஒருத்தருக்கொருத்தர் பின்னூட்டம் கொடுத்துக்குவோம். அதுவே ஒரு வியர்டாத் தான் தெரிஞ்சது அப்போ. அதுக்கு அப்புறம் அவங்க பாதையும், என்னோட பாதையும் மாறிப்போச்சு. இருந்தாலும் என்னைவிட அவங்க பதிவு எல்லாம் படங்கள் எல்லாம் நல்லாப் போட்டு, கவனிக்கவும், நல்லாப் போட்டு படிக்கிறதுக்கும் சுலபமா இருக்கும். புரியறதுக்குக் கஷ்டமே இல்லை.
நமக்கு எழுத ஆரம்பிச்சா கை நிக்கறதே இல்லை! அதான் வியர்டு. அப்புறம் என்னதான் முயற்சித்து கார்த்திக் சொன்ன சைஸில் ஃபோட்டோவைத் திருப்பிக் கிருப்பி அட்ஜஸ்ட் செய்து போட்டாலும் அது என்னமோ பக்கம் முழுதும் நிறைஞ்சு தான் வருவேன்னு ஒரே அடம். அதான் இப்போ படம் எல்லாம் வேண்டாம்னு விட்டுட்டேன். எங்கே ஒழுங்கா வருது? எல்லாம் அந்த ப்ளாக்கரோட இஷ்டம். அப்படித்தான் வரும். நான் ஏதோ வியர்டா இருக்கிறதாலே தான் கொஞ்சமாவது பயப்படுது. இல்லாட்டி "வேதாளம்" வேலையை ஆரம்பிச்சுடாதா?
பாவம், உ.பி.ச. தான். என்னாலே கஷ்டப் படறது அவங்க தான். நான் ஒரு பக்கம் நிறையப் போட்டு வச்ச ஃபோட்டோவை வேலை மெனக்கெட்டுத் திருப்பிச் சின்னதா ஆக்கறதும், என்னோட பதிவுகளிலே நான் இல்லாதப்போ கமெண்ட் பப்ளிஷ் செய்யறதும், சிலசமயம் நான் மெயில் செய்யும் போஸ்டைப் போடறதுமா அவங்க படற கஷ்டம் சொல்லி முடியலை! எல்லாம் நான் வியர்டா இருக்கிறதாலே முடியுது. என்னைக் கேட்டா நான் வியர்டுனு சொல்றதை விட ESPன்னு சொல்லிக்கலாமோன்னு தோணுது. அப்படி இருக்கு நான் போஸ்ட் போடறதும், அது பப்ளிஷ் ஆகறதும், நீங்க எல்லாம் அதையும் படிக்கிறதும்.
ஆமாங்க, நான் ஒரு வியர்டு தான். என்னோட கணவரைக் கேளுங்க, கரெக்டாச் சொல்லுவார், ஆமாம்னு. எப்போவும் ரொம்பவே கவனமாத் தான் எடுப்பேன் சாமான்களை. அப்படியும் விழும் அதுவும் சமைக்கும்போது திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் பாருங்க! மனுஷர் நடுங்கிப் போயிடுவார். கடைசியிலே பார்த்தால் ஒரு கரப்பு எங்கே இருந்தோ வந்து என் காலில் நமஸ்காரம் செய்திருக்கும். வீட்டிலே திடீர் திடீர்னு சாமான்கள் எல்லாம் எப்படின்னே தெரியாம விழறதும், அத்தோட சேர்ந்து சில சமயம் நடக்கும்போதே நான் விழறதும் பார்த்து அவருக்குத் தான் எங்கேயாவது வியர்டா ஆயிடுவோமோன்னு ஒரே பயம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்க வேண்டாமா? :D
நான் யாரையும் tag செய்யப் போறதில்லை. இங்கே வரவங்க எல்லாருமே நம்ம மாதிரித் தானே! :))))))))))))))))
நல்லா சொன்னீங்க, இல்லேன்னா நாங்க இங்க வந்து பதிவுகளை படிப்போமா?
ReplyDelete/அதுவும் இப்போக் கொஞ்ச நாளா இந்த ப்ளாக்கரும் நானும் போடற சண்டை இருக்கே? அதுவே ஒரு வியர்டுதாங்க!! /
ReplyDeleteசீக்கிரத்துல பிளாக்கரை எம்.என்.நம்பியார்னு பிரகனப்படுத்துவீங்க போல மேடம்
//அதான் இப்போ படம் எல்லாம் வேண்டாம்னு விட்டுட்டேன்//
ReplyDeleteஅப்பாடா! :-)
/நான் ஒரு வியர்டு தான். //
இது தான் ஊருக்கே தெரியும்னு அம்பி சொன்னா எல்லாம் கவலைப் படாதீங்க மேடம்
//நான் யாரையும் tag செய்யப் போறதில்லை. இங்கே வரவங்க எல்லாருமே நம்ம மாதிரித் தானே! //
ReplyDeleteஹிஹிஹி.. நீங்க வியர்ட் இல்லைங்க மேடம்
அபி அப்பா, உங்களோட tagக்கும் சேர்த்து வச்சுக்குங்க, தனியா வேணாம் இல்லை? அதான் நாம எல்லாருமே வியர்டு தானே!!!! :))))))
ReplyDeleteவந்துட்டேன் மேடம்.. ஆஹா உங்கள இந்த ஆட்டத்துக்கு முன்னமே இழுத்தாச்சா. நான் கூப்பிடலாம்னு நினைச்சு இருந்தேன்...
ReplyDeleteம்ம்ம் :(((
இருக்கு ஆனா இல்லனு சொல்ல வறீங்க போல.....
ReplyDeleteஏன் எழுத்தை எல்லாம் போல்டா போட்டு இருக்கீங்க....
ஏதும் தனிப்பட்ட காரணமோ!!!
//கடைசியிலே பார்த்தால் ஒரு கரப்பு எங்கே இருந்தோ வந்து என் காலில் நமஸ்காரம் செய்திருக்கும். //
ReplyDeleteநமஸ்காரம் செய்தால் வாழ்த்தனும் அது தான் பெரியவங்களுக்கு அழகு. இத எல்லாம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கு.
// சில சமயம் நடக்கும்போதே நான் விழறதும் பார்த்து அவருக்குத் தான் எங்கேயாவது வியர்டா ஆயிடுவோமோன்னு ஒரே பயம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்க வேண்டாமா? :D
ReplyDelete//
கண்டிப்பா கொடுத்து வச்சிருக்கணும் அக்கா :))))
nice....
//இங்கே வரவங்க எல்லாருமே நம்ம மாதிரித் தானே! ://....LOL...unga nalla manasa ennanu solradhu :)
ReplyDelete//இப்போ புதுசா உண்ணாவிரதம் வேறே இருக்கணும் அவர் பாவம்//
ReplyDeleteஇது என்ன புதுக்கதை சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்வேவேவே இல்ல...என்ன வேனா பண்ணுங்க ஆனா சாப்பாட்டுல கைய வெக்காதீங்க :-)
//என்னைக் கேட்டா நான் வியர்டுனு சொல்றதை விட ESPன்னு சொல்லிக்கலாமோன்னு தோணுது//
ReplyDeleteஇதுதான் கேக்கறதுக்கு ஆள் இருந்தா கேரளால elephant ஏரோபிளேன் ஓட்டும்னு சொல்றது :-)
கீதா, ரொம்ப நன்றி.
ReplyDeleteஏதோ சொன்ன பேச்சைக் கேட்க நீங்க வந்தது மகா சந்தோஷம்.
ஒரே சமயத்தில ஆரம்பிச்சது என்னவோ உண்மைதான்.
நீங்க வளர்ந்திருப்பது மானசரோவர் வரை.
பழையதெல்லாம் சொல்லி போரடிக்கலை. இருந்தாலும் சொல்லணும். என் பழைய ஐடியைக் கூட மறக்கலை நீங்க.
நீங்களும் அஞ்சு பேரைக் கூப்பிட்டு இருக்கணும். உரிமையோடு சொல்றேன்.
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி மதுரையம்பதி!! :)))))))
ReplyDelete@கார்த்திக், எம்.என்.நம்பியார் மட்டும் இல்லை இது, அப்புறம் அம்பியை நான் வியர்டுன்னு தனியா வேறே சொல்லணுமா என்ன?
ஹிஹிஹி, அதான் எல்லாருக்கும் சேர்த்து மொத்தமா வச்சேன் "ஆப்பு" இது எப்படி இருக்கு? :D
வருத்தமே வேணாம் மணிப்ரகாஷ், நம்ம தொண்டர்கள் எல்லாம் எப்படின்னு எனக்குத் தெரியாதா? ஏற்கெனவே வல்லி, அபி அப்பா 2 பேரும் கண்டுபிடிச்சுட்டாங்க. இன்னும் நீங்க வேறே பாக்கியா? :))))))
ReplyDeleteஹிஹிஹி, சிவா எழுத்தை போல்டா போட்டது என்னோட கம்ப்யூட்டர் இல்லை, அதுக்கு இதெல்லாம் தெரியாது. அதான் நான் வியர்டுன்னு சொன்னேனே, தானா பப்ளிஷ் ஆயிடுச்சு!!!!!!! :)))))))))
ReplyDeleteகரப்புக்குக் கூட ஆசி கொடுக்கச் சொன்ன உங்க நல்ல மனசைப் பாராட்டறேன். :D
வாங்க இம்சை, இவ்வளவு நல்ல பேரை வச்சிட்டு நீங்க என்னமோ ஒதுங்கிப் போறதா எல்லாரும் பேசிக்கிறாங்களேன்னு தான் உங்க வீட்டுப்பக்கம் வந்து வந்து போவேன். நீங்களும் நம்மளை மாதிரித்தான்னு தெரிஞ்சாச்சு! இனி கவலை இல்லை! :D
ReplyDeleteஹிஹிஹி, பரணி, உண்மைத் தொண்டர் நீங்களே தான். உங்களை "டாக்" செய்யலாமான்னு யோசிக்கிறேன்! வசதி எப்படி?
ReplyDeleteச்யாம், என்ன பதிவு படிக்கிறீங்க நீங்க? அதான் உங்க அருமைத் தங்கச்சி, பாசமலர், கொ.ப.செ. துணை முதலை அமைச்சர் உங்க உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிச்சிருக்காங்களே? என்ன முதலமைச்சர் நீங்க? தலைவிக்காக இது கூடச் செய்யாம?
ReplyDeleteஅப்புறம் உங்களை வியர்டுக்குக் கூப்பிடலாமான்னு தான் யோசனை. ஆனால் நீங்க தான் வியர்டுன்னு எல்லாருக்குமே தெரியுமே!!!!!!! நீங்களே ஒத்துக்கிட்டாச்சே! :))))))
@ச்யாம், யானை ஏரோப்ளேன் ஓட்டாதுன்னு சொல்றீங்க?
ReplyDelete@வல்லி, யாரை மாட்டி விடறதுன்னு தெரியலை. பார்க்கிறேன் இன்னிக்கு யாரை மாட்டறதுன்னு.
ஆமாம் நீங்க வியர்டுதான். அதெல்லாம் தொல்லைத் தமிழ்ன்னு எழுதம் போது ஞாபகம் இருக்கட்டும்.
ReplyDeleteellarukkum aappu vachiteenga...hmm...
ReplyDeleteThanks!!! enna nandri-nu pakareengala...(not weird though)
Thanks for your wishes for my job...will be moving this weekend to Washington..
முதன் முறையாக உண்மை எல்லாம் சொல்லி இருக்கீங்க. அதுக்கு முதலில் உங்களை பாராட்டனும். உண்மையை கக்க வைத்த வல்லி மேடத்தை அடுத்து பாராட்டனும். :)
ReplyDeletemaduraimpathi called me. thanks. :)
adadada enakku romba sandhoshama irukku! idhe naan neradiya kuduthu irundha ezhudi irupingla? adhadhu solravanga sonna than nadakkudhu :)
ReplyDeleteஇ.கொ. "தொல்லைத் தமிழ்னு" சொன்னா அவ்வளவு கோபமா? அது சரி, நீங்க வியர்டுன்னு ஒத்துண்டாச்சா? இல்லையா? இல்லாட்டி மாட்டி விடலாமா?
ReplyDelete@hot cat உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்றிகள் பலப்பல. புது ஊருக்குப் போய் நல்லா செட்டில் ஆகி சந்தோஷமாய் இருக்க வாழ்த்துக்கள். "வாஷிங்டனில் திருமணம்"நடந்த போடோமாக் ரிவர், ஜெஃபர்ஸன் மண்டபம், அப்பளம் உலர்த்திய இடங்கள் எல்லாம் பாத்துட்டு எழுதுங்க. :)))))))))))
@ஆப்பு அம்பி,
ReplyDelete@போர்க்கொடி, என்ன ஒரு ஒத்துமைம்மா அண்ணனுக்கும், தங்கைக்கும்? நான் தான் கடைசியிலே எல்லாருக்குமே ஆப்பு வச்சிட்டேனே? அது புரியலை? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!!!!!! இது வில்லி சிரிப்பு!!!!!!!!!!!!
எப்போவும் ரொம்பவே கவனமாத் தான் எடுப்பேன் சாமான்களை. அப்படியும் விழும் அதுவும் சமைக்கும்போது திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் பாருங்க! மனுஷர் நடுங்கிப் போயிடுவார்//
ReplyDeleteஅது ஏன் பொண்ணுக மட்டும் வீல் ன்னு கத்துறீங்க
அப்புறம் இதெல்லாம் கிறுக்கு தனம் இல்லை , உண்மையான கிறுக்கு தனம் னா என்னான்னு என் பக்கம் வந்து பாருங்க
\\இதிலே ஒரு சந்தேகம் என்னன்னா இந்த வார்த்தையை எந்த form-ல் எடுத்துக்கறதுன்னு!!!!!!! Noun formலா? adjective formலா?\\
ReplyDeleteஉண்மையிலேயே நீங்க weird தான் ஒத்துக்கிறேன் ;-))) (எப்படி எல்லாம் யோசிச்சுயிருக்கீங்க)
\\இப்போ புதுசா உண்ணாவிரதம் வேறே இருக்கணும் அவர் பாவம். \\
நம்பிட்டோம் ;-))))
// கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteவாங்க இம்சை, இவ்வளவு நல்ல பேரை வச்சிட்டு நீங்க என்னமோ ஒதுங்கிப் போறதா எல்லாரும் பேசிக்கிறாங்களேன்னு தான் உங்க வீட்டுப்பக்கம் வந்து வந்து போவேன். நீங்களும் நம்மளை மாதிரித்தான்னு தெரிஞ்சாச்சு! இனி கவலை இல்லை! :D
//
thanks a lot...
:') - இது ஆனந்த கண்ணீர் அக்கா :)
//அபி அப்பா, உங்களோட tagக்கும் சேர்த்து வச்சுக்குங்க, தனியா வேணாம் இல்லை? அதான் நாம எல்லாருமே வியர்டு தானே!!!! :)))))) //
ReplyDeleteகண்டிப்பா நாம எல்லாருமே வியர்டுதான் அதிலும் கீதாமேடம் விவரமான வியுர்டு:)))
//ஏன் எழுத்தை எல்லாம் போல்டா போட்டு இருக்கீங்க....
ReplyDeleteஏதும் தனிப்பட்ட காரணமோ!!!//
புலி! அதுக்கும் வியர்டுதான் காரணம்:-))
//நீங்களும் அஞ்சு பேரைக் கூப்பிட்டு இருக்கணும். உரிமையோடு சொல்றேன்//
ReplyDeleteவல்லியம்மா! இனிமே தமிழ்மணத்துல வியர்டே இல்லை! த்மிழ்மணமே கிறுக்கா சுத்துது:-)
இம்சை, நேத்திலே இருந்து பக்கமெல்லாம் நனைஞ்சு இருக்கேன்னு பார்த்தேன், சீக்கிரம் ஆனந்தக் கண்ணீரைத் துடைங்க. :))))))) ஹிஹிஹி, இன்னொரு உ.பி.ச. அவதாஆஆஆஆரம்?
ReplyDeleteஅபி அப்பா, புலிக்குத் தெரியும் ஏன் போல்டா வருதுன்னு? சும்மா என் வாயிலே இருந்து வரவழைக்கப் பார்க்குது! கண்டுக்காதீங்க!!!
ReplyDelete//thanks a lot...
ReplyDelete:') - இது ஆனந்த கண்ணீர் அக்கா :)//
என் பாசமலரை அழ வச்சுட்டீங்களே மேடம்:((
ஓகோ அது ஆனந்த அழுகையா, சரி சரி 1 மணி நேரம் அழும்மா:-))))
ReplyDeleteகார்த்திக், உங்க பக்கத்திலே போய்ப் பார்த்தேன், அதெல்லாம் நம்மளை மிஞ்ச ஆள் கிடையாது, கீழே பாருங்க், அபி அப்பா, என்ன ஒரு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்திருக்கார்னு, "விவரமான வியர்டு"ன்னு.
ReplyDelete@கோபிநாத், இதெல்லாம் உட்கார்ந்து யோசிக்கணும். புலி பாருங்க, வேலை மெனக்கெட்டு அகராதியை எல்லாம் புரட்டி இருக்கு, இதுக்காக. நாம தான் நம்மளே ஒரு "அகராதி!" ஆச்சே! :))))) அதான் இத்தோட போகட்டும்னு விட்டுட்டேன். :-)
நானும் இந்த ஆட்டத்தில சேர்ந்து எழுதியிருக்கேன், பாருங்கோ.
ReplyDelete/அதுவும் இப்போக் கொஞ்ச நாளா இந்த ப்ளாக்கரும் நானும் போடற சண்டை இருக்கே? அதுவே ஒரு வியர்டுதாங்க!! /
இது எனக்கு மட்டுந்தான் இப்பிடி என்று இதுவரை நினைச்சிருந்தேன்.அப்போ ஏறக்குறைய எல்லாருக்குமே இதே நிலமைதானா?
ஆஹா, எத்தனை எத்தனை பாசமலர்கள்? ஒரு பக்கம் அம்பியும், போர்க்கொடியும், இன்னொரு பக்கம் ச்யாமும், வேதா(ள்)வும், இப்போ நீங்களும் இம்சையுமா அபி அப்பா? எல்லாரும் சேர்ந்து "கை வீசம்மா, கை வீசு" பாடிட்டு இருப்பீங்களோ?:P
ReplyDelete@செல்லி, இதோ வந்து பார்க்கிறேன். இந்த ப்ளாக்கர் உங்களையும் படுத்துதுன்னு தெரிஞ்சதும் மனதில் ஒரு நிம்மதி எங்கே இருந்தோ வருது, பாருங்க! :)))))))))))
Neengalum "tag" la mattikiteengala?
ReplyDeleteTruely you are weird dhan. Sandhaegamae illa.
//வீட்டிலே திடீர் திடீர்னு சாமான்கள் எல்லாம் எப்படின்னே தெரியாம விழறதும், அத்தோட சேர்ந்து சில சமயம் நடக்கும்போதே நான் விழறதும் பார்த்து அவருக்குத் தான் எங்கேயாவது வியர்டா ஆயிடுவோமோன்னு ஒரே பயம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்க வேண்டாமா? :D //
yup, romba koduthu vaichurukkanum.
indha madhiri yellam special people ku mattum dhan nadakkum.:D
Sure, it rains (atleast drizzles) here at washington...seems to improve in summer, really I want sunshine...madras veyil vennumnunga..
ReplyDelete