எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 08, 2007

ஹிஹிஹி, தலைப்புக் கொடுத்தேன், காணல்லை, கண்டு பிடிங்க!

இந்த மே மாதம் என்னாலே மறக்க முடியாததாக இருந்து வருகிறது. போன வரு்ஷம் மே மாதம் 2-ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது. வலை உலகுக்கு வந்து தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு மாதம் ஆகி இருந்தது. அப்போ நான் எழுதறதும் சரி, பின்னூட்டம் கொடுக்கிறதும் சரி ரொம்பவே யோசிப்பேன். யோசித்து யோசித்துத் தான் கொடுப்பேன். சில விஷயங்களைப் பின்னூட்டத்திலோ அல்லது பதிவிலோ எழுதணும்னு ஆர்வம் இருந்தாலும் தயக்கமாக இருக்கும். இத்தனைக்கும் என் கணவர் எனக்குச் சில வி்ஷயங்களுக்குப் பதில் கொடுக்கச் சொல்லி அவர் சார்பில் சொன்னதும் உண்டு. பொதுவாய்ப் பள்ளி நாட்களிலும் சரி, மற்ற சமயங்களிலும் சரி, என்னை முதலில் பார்க்கிறவர்கள் அவ்வளவு புத்திசாலியாய் என்னை நினைத்தது இல்லை. சற்றுச் சராசரியான தோற்றத்துடன் இருப்பதாலோ என்னவோ தெரியாது. எங்கள் கணக்கு ஆசிரியைக்குக் கடைசி வரை என்னிடம் ஆச்சரியம் தான், நான் மற்றப் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறேன் என்பது அறிந்து. ஆனால் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் வாயும், கையுமாய்த் தான் இருப்பேன். அது வெளியே தெரியக் கொஞ்சம் நாள் ஆகும்.

இப்படியாக வலைஉலகில் பிரவேசித்த காலத்தில் நான் எழுதி வந்த பின்னூட்டங்கள் சிலரை நான் அவ்வளவாய் ஆழமாய் யோசிப்பது இல்லை என்ற முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை அவர்கள் எனக்குத் தந்த பதில்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் நான் அதற்காக எல்லாம் மனம் தளரவில்லை. எனக்குள் இருக்கும் ஓட்டம் எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் அல்லவா? உரிய நேரத்தில் தானே வெளியே வரும், அதை அப்போது என்னாலும் தடுக்க முடியாது என்பதை அறிவேன். அது போல் தான் இப்போது பதிவுகள் எழுதுவதும் புதிய பரிமாணம் என்று வல்லி சிம்ஹன் போன்ற ஆரம்பக் காலத் தோழிகள் சிலர் சொல்கின்றனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்குள் ஊறிப் போன விக்ஷயங்கள் இவை எல்லாம். வெளியே வர பகிர்ந்து கொள்ளச் சரியான தருணத்துக்குக் காத்திருந்த கணங்கள் இத்தனை வருஷங்கள் ஆகி இருக்கின்றது.

போஸைப் பற்றியோ, பாரதியைப் பற்றியோ தெரிந்து கொள்ள அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருக்க வேண்டியது இல்லை. சரியான வழிகாட்டல் இருந்தால் போதும். எனக்கு இருந்தது. என் அம்மாவின் சித்தப்பா சுதந்திரப் போராட்ட வீரர். "சுதந்திரச் சங்கு" பத்திரிகைக்காக உழைத்தவர். என் அம்மாவின் அப்பாவும் மறைமுகமாக சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தவர். என் அப்பாவும் படிப்பை விட்டவர். இப்படி அனைவரும் இருக்க அந்த நாளையப் பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் என் தாத்தா சேகரித்து வந்தவைகளை நான் படிக்க நேரிட்டது எனக்கு ஒரு அதிர்்ஷ்டம் என்றால் அதற்குத் தகுந்த ஆசிரியர்களும் அமைந்தார்கள். பள்ளி இறுதி நாட்களில் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான வடிவம் கிடைக்கப் பெற்றது. அப்போது தான் முதல் முதலாய் பம்பாய் கப்பல் புரட்சியைப் பற்றி அறிய நேரிட்டது. திரு நரசையா என்ற கடலோடி (அவர் மிகவும் ரசிக்கும் வார்த்தை இது) எழுதிய புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. போஸையும், அவரின் போராட்டமும், காந்தியின் பங்கும் அறியப் பெற்றேன். அதற்குப் பின் நான் படித்த பல புத்தகங்கள் எனக்கு இந்தியாவை ஒரு புதிய உலகமாய்க் காட்டியது. முக்கியமாய் "மனோஹர் மல்கோங்கர்" எழுதிய இந்திய அரசர்களைப் பற்றிய புத்தகங்கள் மன்னர்களின் வாழ்வு பிரிட்டிக்ஷார் கையில் எவ்வாறு இருந்தது எனச் சித்தரித்தது. பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய ஒரு கணிப்பும், தலாய்லாமா பற்றியும், லாமா தேர்ந்தெடுக்கப் படும் முறை பற்றியும் படித்தேன். ஓரளவு புரிந்து கொண்டேன். இப்போது மறுபடி படிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்தது கொஞ்சம் தான். தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் என்றும் புரிகிறது. ஹிஹிஹி, நான் எழுத வந்தது மே மாதம் பத்தி இல்லை? அ.வ.சி.

இந்த மே மாதம் ஏன் மறக்க முடியாதுன்ன நீங்க எல்லாரும் ஒரே குரலில் கத்த எல்லாம் வேண்டாம் "அம்பிக்குக் கல்யாணம்"னு. மொய் எதுவும் இல்லைனு சொல்லிட்டேன் அம்பி கிட்டே. அதனால் அது இல்லை. வேறே ஒரு வி்ஷயம் இல்லை 2 இருக்கு. அப்புறம் வந்து சொல்றேன். ஆணி கூப்பிடுது. வரேன் பிடுங்கிட்டு.

17 comments:

  1. முதல் பொங்கல், புளியோதரை, கேசரி, சுண்டல், வடை, பானகம், நீர்மோர் எல்லாம் எனக்குத் தான். இப்போ சொல்ல வந்தது "மொக்கை"னு லேபில் கொடுத்தால் ஹிஹிஹி, ஏத்துக்கலை, வழக்கம் போல், என்னோட பதிவுகளின் அருமை இப்போ நான் யு.எஸ். வந்ததும் தான் இந்த ப்ளாக்கருக்குப் புரியுது. இதுக்காக எத்தனை செலவு செய்து வரவேண்டி இருக்கு? :)))))))))))))))

    ReplyDelete
  2. //எனக்குள் இருக்கும் ஓட்டம் எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் அல்லவா? உரிய நேரத்தில் தானே வெளியே வரும், அதை அப்போது என்னாலும் தடுக்க முடியாது என்பதை அறிவேன்.//

    நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  3. வந்ததை முதலில் பதிகிறேன் மேடம்!

    அட்டென்டன்ஸ் மேடம்

    ReplyDelete
  4. //ஆணி கூப்பிடுது.//
    உங்களுக்குமா மேடம்

    ReplyDelete
  5. //போஸைப் பற்றியோ, பாரதியைப் பற்றியோ தெரிந்து கொள்ள அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருக்க வேண்டியது இல்லை. //

    நீங்க சொல்றது ரொம்ப உண்மைங்க மேடம்.. நாங்கள் உங்கள் மூலமா இவர்களை பற்றி தெரிந்துகொண்டோமல்லவா

    ReplyDelete
  6. //ஆனால் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் வாயும், கையுமாய்த் தான் இருப்பேன். அது வெளியே தெரியக் கொஞ்சம் நாள் ஆகும்.
    //

    நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள். :))
    அத தான் பெங்களுரில் நீங்கள் வந்த போது பார்த்தேனே!

    //இப்போ சொல்ல வந்தது "மொக்கை"னு லேபில் கொடுத்தால் ஹிஹிஹி, ஏத்துக்கலை//

    வெறும்ன மொக்கைனு குடுத்து பாருங்க. without any specail charecters like -hyphen or exclamatory mark.

    உங்களால முடியலைனா உங்க உ.பி.சா வ செய்ய சொல்லுங்க. அவங்க இதுல கில்லாடி. :p

    ReplyDelete
  7. //அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்குள் ஊறிப் போன விக்ஷயங்கள் இவை எல்லாம். வெளியே வர பகிர்ந்து கொள்ளச் சரியான தருணத்துக்குக் காத்திருந்த கணங்கள் இத்தனை வருஷங்கள் ஆகி இருக்கின்றது.
    //

    அது இல்லை மேடம்.என்ன மாதிரியோ,கார்த்தி,நாட்டாமை,அம்பி, அப்புறம் முக்கியமா பொற்கொடி, மாதிரியோ ஆட்கள் சேர்ந்து உங்க திறமைய வெளிய கொண்டு வந்து இருக்கிறோம்...

    ஹீ ஹீ..

    ReplyDelete
  8. //இதுக்காக எத்தனை செலவு செய்து வரவேண்டி இருக்கு? :))))))))))))))) //

    இதுக்கு ஸ்மைலியா?


    மே மாத்தில இன்னொரு சிறப்பும் இருக்கு மேடம்..அத நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் சொல்றேன்

    ReplyDelete
  9. en pathilukku enga madam pathil?

    ReplyDelete
  10. என்ன எழுதறது மணிப்ரகாக்ஷ இப்போ புதுசா ஒரு வழியிலே முயற்சி செய்யறேன். பார்க்கலாம் இதிலே சரியா வருதான்னு, அப்புறமா உங்க எல்லாருக்கும் உடனேயே பதில் கொடுக்க முடியும்னு நம்பறேன். அது வரை மெளனம்.

    ReplyDelete
  11. அம்பி, உஙளுக்கும் உடனேயே பதில் கொடுக்க முடியும்னு நினைக்கிறேன். ஆனால் இந்த முறையில் போஸ்ட் தான் எப்படி போடறதுனு புரியலை. பார்க்கலாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
    @காட்டாறு, ரொம்பவே நன்றி, வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும்.

    @மணிப்ரகாக்ஷ், இந்த "க்ஷ்"மட்டும் இன்னும் சரியா வரலை. அதுவும் சரியா ஆயிடும்னு நினைக்க்றேன். நீங்க கெட்டது "மே" மாதம் என்ன விசேஷம்னு தானே? கையா ஷவும் சரியா வந்துடுச்சு. மே மாதம் ஒரு முக்கியமான மாதம். சஸ்பென்ஸ். அப்புறமாத் தான் சொல்லுவேன்.

    ReplyDelete
  12. கார்த்திக், உங்களுக்கு பதில் சொல்லலைன்னு நினைக்காதீங்க. யார் யார் கமென்ட் கொடுத்திருக்காங்கன்னு பார்த்து வச்சுக்கலை. உங்க ஆணிகளுக்கு நடுவிலே வந்ததுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  13. என்னன்னு சொல்றது ஒண்ணும் புரியலை! சில சமயம் வலைப்பக்கம் திறக்கவே மாட்டேங்குதே! அதன் என்னன்னு புரியலை!

    ReplyDelete
  14. கீதா சாம்பசிவம் said...
    என்னன்னு சொல்றது ஒண்ணும் புரியலை! சில சமயம் வலைப்பக்கம் திறக்கவே மாட்டேங்குதே! அதன் என்னன்னு புரியலை!

    '///


    உங்களுக்குமா...?????


    இங்கேயும் தான்

    யாருகிட்ட சொல்லுறது..:(

    ReplyDelete
  15. //போஸைப் பற்றியோ, பாரதியைப் பற்றியோ தெரிந்து கொள்ள அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருக்க வேண்டியது இல்லை//

    சரித்தான்...எவரெஸ்ட் உச்சில குளிரும்னு போய் பாத்துதான் சொல்லனும்னு இல்ல...:-)

    ReplyDelete
  16. மின்னல், கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாடா, நிம்மதியாவும் இருக்கு. ஒரே வயித்தெரிச்சலில் இருந்தேன்.! :D

    ReplyDelete
  17. ச்யாமுக்கு முதல் பதிவுக்குக் கொடுக்க வேண்டிய பதிலை மாத்திக் கொடுத்துட்டேன். ச்யாம் அங்கே போய்ப் படிச்சுக்குங்க. !:D

    ReplyDelete