எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 09, 2007

சொன்னால் நம்பவா போறீங்க?

இத்தனை நாள் 300 போஸ்ட் போட்டு இருந்திருக்கணும், எல்லாம் இந்த தி.ரா.ச. சார். கண்ணு வச்சாலும் வச்சார் :P கொஞ்ச நாளா என்ன கிட்டத்தட்ட 15 நாளா ஆச்சு? எழுதவே முடியலை! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு போஸ்ட் போடறேன்னு எனக்குத் தான் தெரியும். சொன்னால் நம்ப மாட்டீங்க. இந்தியா எவ்வளவோ பரவாயில்லை, அதிலும் என்னோட டாடா இன்டிகாம் கனெக்க்ஷன் இருக்கே, அது மாதிரி வரவே வராது. இங்கேயும் இருக்கே என்னமோ வித விதமான பேரிலே. சில நாள் காலங்கார்த்தாலே கம்ப்யூட்டர் ஃப்ரீயா இருக்கேனு உட்கார்ந்து ஏதாவது எழுதலாம்னோ அல்லது கமென்டுக்குப் பதில் கொடுக்கலாம்னோ பார்த்தால் அன்னிக்குன்னு பார்த்து வரவே வராது. சில சமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும், நாம் யு.எஸ்ஸில் தான் இருக்கோமான்னு! அப்புறமா அது வந்து நான் எழுத ஆரம்பிக்கிறதுக்குள்ளே வேலை ஏதாவது வந்துடும். அன்னிக்குப் பொழுது அப்படியே போயிடும்.

நான் ப்ளாக் போடறதே பெரிய வித்தை தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீங்க! எல்லாரும் இணைய இணைப்பு வந்ததும், நேராய் ப்ளாக்கருக்கோ அல்லது வொர்ட் ப்ரஸ்ஸிற்கோ போய் புது போஸ்ட் செலெக்ட் பண்ணி எழுதுவாங்க, அல்லது வந்திருக்கும் கமென்டுக்கு பதில் கொடுப்பாங்க. அவங்க யு.ஆர்.எல்லும், பாஸ்
வொர்டும் கொடுத்தா தானா அவங்க வலைப்பக்கம் திறக்கும். எனக்கு அதெல்லாம் இந்தியாவில் இருந்தவரைதான் அப்படி எல்லாம் நடந்தது. இங்கே வந்தப்போ முதலில் எல்லாம் எனக்கு எக்ஸ்ப்ளோரர் மூலமாய் ப்ளாக்கரே திறக்க முடியலை. சரின்னு நெருப்பு நரியை இன்ஸ்டால் செய்தேன். எழுத்து உடைந்து தெரிந்தாலும் ஏதோ எழுதினேன்னு பேர் பண்ணிட்டு இருந்தேன். அப்போத் தான் இந்த ப்ளாக் யூனியனுக்கு வந்த அழைப்பை நான் நெருப்பு நரி மூலமா ஒத்துக்கிட்டா அது எனக்கு சரியாவே வரலை. திரும்பத் திரும்ப எர்ரர் வந்துட்டே இருந்தது. என்னடா பண்ணறதுன்னு யோசிச்சு யோசிச்சு அம்பியோடயும், டிடியோடயும் சண்டை போட்டு திரும்ப அழைப்பு வாங்கிட்டு எக்ஸ்ப்ளோரர் மூலமாக் கொடுத்தா என்ன ஆச்சரியம்? என்னோட ப்ளாகின் டாஷ்போர்ட் வந்தே விட்டது! எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை.

அங்கே இருந்தே புது போஸ்ட் கொடுத்துட்டு பப்ளிஷ் பண்ணிட்டு அசட்டுத் தனமாய் அதைக் க்ளோஸ் பண்ணிட்டு (ஹிஹிஹி, மனசாட்சி இப்போ எல்லாம் வெளியே வந்து வேலை செய்யுது!) ஜிமெயிலுக்குப் போயிட்டு மறுபடி வந்து ப்ளாகைத் திறக்கப் போனால் திறக்கவே இல்லை. திரும்பவும் குழப்பமோ குழப்பம். சரின்னு போய் வந்திருக்கிற கமென்டுக்கு பதிலாவது கமென்டுவோம்னு போய்க் கமென்டிட்டுத் திரும்பவும் மறுபடி ஒரு முயற்சி கொடுத்தால் என்ன ஆச்சரியம்? சொன்னால் நம்பவே மாட்டீங்க! இம்முறையும் என்னோட வலைப்பக்கத்தின் டாஷ்போர்ட் திறந்தது. அப்போத் தான் மூளையில் ஒரு சின்ன வெளிச்சம்! (யாருங்க அங்கே அதெல்லாம் இருக்கான்னு கேட்கிறது? அதனாலே தானே இவ்வளவு முயற்சி எல்லாம் செய்யறேன்!) அப்போத் தான் புரிஞ்சது, ஆஹா, ஆஹா, நம்ம ப்ளாக் திறக்கணும்னா நாம ஏதாவது கமென்டுக்கு பதில் கொடுத்துட்டுத் திறக்கணும் அல்லது நமக்கு நாமே திட்டத்தின் படி நமக்கு நாமே கமென்ட் கொடுத்துக்கணும்னு புரிஞ்சது. அப்பாடா! ஒரு வழியா அன்னியிலே இருந்து அப்படித் தாங்க ப்ளாக்கைத் திறக்கிறேன். சொன்னால் நம்பவா போறீங்க?

இப்போப் பாருங்க, வீடு மாத்திட்டு ஒரு வாரமா இணைய இணைப்புக்கு முயன்றால் இந்தியாவே பரவாயில்லைனு ஆயிடுச்சு இங்கே அவ்வளவு வேகம். இந்த டி.எஸ்.எல் கனெக்க்ஷன் வாங்கி அவங்க இணைப்பு கொடுத்து இணையம் வர இத்தனை நாள் ஆகிப் போச்சுங்க! அதான் கொஞ்ச நாளா வர முடியலை. அதெல்லாம் யாரையும் சும்மா விடறதா இல்லை. வந்துட்டேனே! தினமும் முடியாட்டாலும் 2 நாளைக்கு ஒருமுறையாவது வந்து உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணாமல் விடறதில்லை. இன்னும் யார் விட்டுக்கும் போகலை. நாளைக்குத் தான் போகணும் எல்லார் வீட்டுக்கும். அம்பி வேறே வந்தாச்சுப் போலிருக்கே! இந்த வீட்டிலே கணினி மாடியிலே இருக்கு. நேரம் கிடைக்கும்போது தான் நான் மாடிக்கு வந்து கணினியைப் பார்க்கணும். கீழே யாரும் இல்லைனா மாடிக்கே வர முடியாது. என்ன செய்யப் போறேனோ? ஒரே கவலையா இருக்கு! சொன்னால் நம்பவா போறீங்க?

7 comments:

  1. ப்ளாக்கரை மறுபடி மூடி இருக்கேன். ஆனால் நானா மூடவே வேணாம். ஜிமெயிலை மூடினால் அதுவும் மூடிக்கும் இல்லையா? ஆனால் பாருங்க ஜிமெயிலைத் திறந்தால் மட்டும் இதுவும் திறந்துக்காது. இதுக்குத் தனி கவனிப்புக் கொடுக்கணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  2. புது டெக்னிக்தான் தெரிஞ்சுபோச்சே..........

    அதை அப்படியே ஃபாலோ பண்ணிக்குங்க.

    நமக்கு ப்ளொக்தான் முக்கியம்:-)))))

    ReplyDelete
  3. வாங்க துளசி, தாமதமான திருமணநாள் வாழ்த்துக்கள். புதுப்புது டெக்னிக் கண்டுபிடிச்சு நானே ஒரு தொழில் நுட்ப நிபுணி ஆயிடுவேன் போலிருக்கு போங்க! :))))))))))

    @வேதா, என்ன இருந்தாலும் நம்ம நாடு, அதன் சுகமே தனிதான். எப்போ வருவோம்னு இருக்கு! :((((((

    ReplyDelete
  4. வீடு மாத்தியாச்சா.
    பேசாம உங்களுக்குத் தனி லாப்டாப் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க.
    பேத்தியைப் பக்கத்தில வச்சிட்டு ப்ளாக் போடுங்க.
    குழந்தையையும் பார்த்துக்கலாம்.
    கணினியும் மேய்ந்தாற்போல இருக்கும்.
    என்னவோ சொல்வார்களே,எங்கே போனாலும் அங்கேயும் வரும்னு
    அதுபோல இருக்கு இந்தக் கதை.:-))))

    ReplyDelete
  5. venum nalla venum. ennai pazicheenkal ille? appatiththaan varum

    ReplyDelete
  6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்..... நல்லா இருக்கு சார், இது சொல்றதுக்குன்னே வந்தீங்களா? ஏதுடா, வந்து ரொம்ப நாளாச்சேன்னு பார்த்தா! :P

    ReplyDelete
  7. சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? எப்படியோ ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டீங்கள இனி தூள் கிளப்புங்க. ;-)

    ReplyDelete