இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. முதலில் போய்ப் பார்க்கவேண்டும் என நினைத்தோம்., ஆனால் வீட்டில் இருந்து பார்த்தாலே தெரிகிறது. ஒரு வாரமாகவே வெடிக் கொண்டாட்டங்கள் தான். பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்ததைக் குறித்து ஆச்சரியப் படுவதா? புரியவில்லை. முதலில் சில நாடுகள் மட்டும் பிரிட்டனிடம் இருந்து வந்தது. அவை விடுதலைப் போரில் பிரிட்டனைத் தோற்கடித்துவிட்டுப் பின் ஒன்று சேர்ந்தன.
13 மாநிலங்கள் அதில் அநேக வட மாநிலங்கள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தன. நியூ நெதர்லாந்து என்று அழைக்கப் பட்டு வந்த இடம் தான் "நியூயார்க்" என பிரிட்டனால் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இங்கு வந்து குடியேறியவர்கள் என்றாலும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை யாரும் விரும்பவில்லை. முதல் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. 1775 ஜூன் 14-ம் தேதியில் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. ஃப்ரெஞ்சுக் காரர்களின் உதவியுடன் போர் நடைபெற்றது. இதற்கிடையில் "தாமஸ் ஜெஃப்பர்சன்" என்பரால் எழுதப் பட்ட விடுதலைப் பிரகடனம் ஜூலை 4-தேதி 1776-ம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
போரில் பிரிட்டன் படுதோல்வி அடைந்து, பிரிட்டனின் ஆதரவாளர்கள் அனைவரும் வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்தார்கள். இருந்தாலும் சரியான அரசு ஏற்படுத்தச் சில வருடங்கள் பிடித்தன. 1783 வரை பிரிட்டன் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பின்னர்தான் 1789-ம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதவி ஏற்றார். முதலில் நியூயார்க் நகரம்தான் தலைநகரமாக இருந்து வந்தது. வடமாநிலங்களில் கறுப்பு இனத்தவரை அடிமையாக வைக்கும் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப் பட்டது. 1800-ம் ஆண்டு தான் தற்போதைய தலைநகரமான "வாஷிங்டன்" நகரத்திற்கு அரசு குடி பெயர்ந்தது. (இன்னும் வரும்)
nalla solreenga detail :)
ReplyDeleteகூகிளிலிருந்து பதிவு போடவதற்கும் தனி திறமை வேணும். :p
ReplyDeleteவரட்டும் வரட்டும்
ReplyDelete@பரணி, ரொம்ப நன்றி.
ReplyDelete@அம்பி, இந்தத் தகவல்கள் கூகிளில் இருந்து திரட்டியவைதான். விவேகானந்தர் பத்தித் தான் குத்திக் காட்டறீங்கன்னு புரியுது. அது என் கிட்டே இருந்த குறிப்புக்கள், முன்னர் அவர் பிறந்த நாளுக்கு எடுத்து வச்சது அதில் இருந்து எழுதினேன். பின்னர் நானும் போய்ப் பார்த்தேன். ஆகவே உள்குத்து தேவை இல்லை! :P
@புலி, தொடரும். என்ன கொஞ்சம் படிக்க வேண்டி இருக்கிறது, இந்த வரலாற்றில் சில விஷயங்கள் எல்லாம்.
//அது என் கிட்டே இருந்த குறிப்புக்கள், முன்னர் அவர் பிறந்த நாளுக்கு எடுத்து வச்சது அதில் இருந்து எழுதினேன்.//
ReplyDeleteஆமா! ஆமா! உங்க சம காலத்தில் வாழ்ந்தவங்கள பத்தி எழுத உங்கள தவிர யாரால முடியும்? :p
Disci: உள்குத்து இல்லை! :)))
அம்பி, உங்களாலே ஒண்ணும் எழுத முடியலைன்னா எழுதறவங்களையாவது பொறாமைப் படாமல் எழுத விடுங்க! :P
ReplyDelete