ஹிஹிஹி, சமைக்கும் முறை பத்திக் கூறுவது கொஞ்சம் ஓவர்னாலும் புதிசா வந்து மாட்டிக்கிறவங்க தெரிஞ்சுக்கலாம் இல்லையா? அப்புறம் என்னதான் பிஞ்சாகப் பார்த்து வாங்கினாலும் கொத்தவரை, அவரை, பீன்ஸ் போன்றவற்றில் தேங்காய் சேர்த்துப் பொரியல் என்பதை மறந்துடணும்! ஹிஹிஹி, டாக்டரும், வேந்தரும் அடிக்கப் போறாங்க! :P வதக்கினால் தான் இவை நன்கு பதமாக வேகிறது. வேகவைத்துச் செய்தால் அப்புறம் தேங்காய்த் துருவல் போட்டுத் தாளிக்கும்போது ரப்பரை விட மோசமாக விறைத்துப் போகிறது. ப்ரோசன் காய்கள் எல்லாம் இந்தச் சூட்டில் நல்லா வேகும்போது இது ஏன் இப்படின்னு எனக்குப் புரியாத மர்மம்! கூடியவரை பருத்தி ஆடை உடுத்திக் கொண்டு சமைக்கணும்னாலும் இங்கே அது கஷ்டம். ஏனெனில் வாஷிங் மெஷின் எப்படிப்பட்ட உயர்தரப் பருத்திச் சேலையானாலும் சரி, சல்வார், குர்த்தாவானலும் சரி, மெஷினில் துவைத்து டிரையரில் போட்டால் உங்களுக்குத் திரும்பக் கொடுப்பது ஒரு ரிப்பன் மட்டும்தான். துவைத்துவிட்டு வெளியில் உலர்த்தலாம் என்றாலோ அபார்ட்மென்டில் பால்கனி இருந்தால் கூட போட அனுமதிப்பது இல்லை. தனிவீடுன்னால் இன்னும் கஷ்டம், ஹோம் அசோசியேஷனில் அனுமதிக்க வேண்டும். ஆகவே சுருங்கினாலும் சுமாராக இருக்கும் பாலிகாட் ரக ஆடைகள் தான் சிறந்தது, அல்லது ஜார்ஜெட்டில் நல்லரகமாகவோ, பூனம் சேலைகளோ பரவாயில்லை! ஜீன்ஸ் போடும் வழக்கம் இருந்தால் ரொம்பவே நல்லது. ஜீன்ஸை நல்லாவே துவைத்து உலர்த்திக் கொடுக்கும். நான் கூட ஜீன்ஸ் பழக்கப் படுத்திக் கொண்டிருக்கலாம்னு இப்போ தோணுது! :)))))))))
இந்தியத் தயாரிப்புக்களான மிக்ஸியோ, கிரைண்டரோ யு.எஸ்ஸின் 110 வோல்ட்ஸுக்குத் தகுந்தவாறு தயாரிக்கப் பட்டது, இங்கே நல்லா வேலை செய்யும். இந்தியாவில் இருந்து தைரியமாக 110 வோல்ட்ஸுக்கு உள்ளதை வாங்கி வரலாம். ஆனால் இங்கிருந்து நீங்கள் அதுமாதிரி ஒரு ப்ரெட் டோஸ்டர் கூட வாங்கிப் போய் இந்தியாவில் உபயோகிக்க முடியாது என்னதான் கன்வெர்டர் இருந்தாலும்!யு.எஸ்.தயாரிப்புக்களான எலக்ட்ரானிக் சாதனங்களை எங்க வீட்டிலே எல்லாம் சரஸ்வதி பூஜைக்குப் பூஜை செய்ய மட்டும்தான் வெளியே எடுப்போம். துணிகளோ என்றால் அநேகமாய் எல்லாம் இந்தியா, பங்களா தேஷ், இலங்கையில் இருந்து வருபவை,இவைதான் விற்பனைக்கு இருக்கும். சரியா இல்லைன்னால் அது நாம் ஊருக்கு எடுத்துப் போகும் முன்னேயே சரி பார்க்கணும். பரிசாக எல்லாம் வாங்கிப் போனால் அவ்வளவுதான், சரியா வரலைனால் ஒண்ணும் செய்ய முடியாது! இந்தியாவிலேயே நம் பட்ஜெட்டுக்குள் ஏற்றாற்போல் வாங்கிக் கொடுத்துடலாம். :P
*************************************************************************************
ப்ரெஞ்சுக்காரர்கள் பல முறை முயற்சித்தும் அவர்களால் யு.எஸ்ஸில் சரியான காலனிகளை ஏற்படுத்த முடியவில்லை. 1598 -ல் இருந்து 1608 வரை சாதாரண வியாபாரிகளாலும், மற்றவர்களாலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
1608-ல் தான் ப்ரெஞ்சு அரசு நேரிடையாக இதில் தலைஇட்டது. 4-ம் ஹென்றி என்று சொல்கிறார்கள். அவர் காலத்தில் தான் "சாம்ப்ளேன்" என்பவர் அரசரின் உதவியுடன் 28 நபர்கள் கொண்ட 6 குடும்பங்களைக் கனடாவில் குடியமர்த்தினார். அப்போது கனடாஎன்ற பெயர் பேரளவுக்குத் தான் இருந்திருக்கிறது என நினைக்கிறேன். அங்கே உள்ள தட்ப, வெப்ப நிலை தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் இறந்தனர். கனடாவில் தற்சமயம் உள்ள க்யூபெக்கில் ஆரம்பித்ததாய்ச் சொல்கிறார்கள். . 1630-ல் 100 காலனிகளாய் இருந்தது 1639- -ல் 359 ஆக அதிகரித்தது. ப்ரெஞ்சு இளைஞர்கள் உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழக அனுமதிக்கப் பட்டனர். திருமண உறவும் ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். வியாபாரம் விஸ்தரிக்கப் பட்டது. உள்ளூர் மக்களின் பழக்க, வழக்கங்கள், மொழி, வழிபாடு முதலியவற்றைத் தெரிந்து கொள்ள இளைஞர்கள் தயார்படுத்தப் பட்டனர். "சாம்ப்ளேன்" நியூ பிரான்ஸின்
கவர்னர் ஆக்கப் பட்டார். "க்யூபெக்" வியாபாரக் கேந்திரமாகத் திகழ்ந்தது. ஆனால் அப்போதைய கார்டினல் "ரிச்லீ" கத்தோலிக்கர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் "ப்ராட்டஸ்டென்ட்"டுகளுக்குப் பிடிக்கவில்லை.
ஏற்கெனவே மதக் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பரவலாக இருந்தது. ஆகவே பலர் ஆங்கிலேயக் காலனிகளுக்குக் குடி பெயர்ந்தனர். தென் பகுதியிலோ ஆங்கிலேயர் ஆதிக்கம் அதிகமாகவும் ஸ்திரமாகவும் இருந்து வந்தது. அதை நாளை பார்ப்போம்!
adada americala irukradhu apdi onnum kashtama illiye?! :-/ neenga solra alavu electric aduppu paduthalaiye! enna kodumai paati idhu...
ReplyDelete//வாஷிங் மெஷின் எப்படிப்பட்ட உயர்தரப் பருத்திச் சேலையானாலும் சரி, சல்வார், குர்த்தாவானலும் சரி, மெஷினில் துவைத்து டிரையரில் போட்டால் உங்களுக்குத் திரும்பக் கொடுப்பது ஒரு ரிப்பன் மட்டும்தான்.//
ReplyDeleteஹா ஹா ஹா.... உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி தானுங்க.
எங்கேயோ ஆரம்பிச்சி... வரலாறு பாடத்துக்கு வந்துட்டீங்க பாருங்க... அது அழகு.
இரசித்தேன்.
என்னடா இது தலைப்புக்கும் நாம படிக்கிற தலைப்புக்கும் சம்பந்தம் இல்லியேன்னு பார்த்தா, சொல்ல வந்த விஷயம் பின்னால் வருகிறது..
ReplyDeleteஹ்ம்ம்..சமயலில் இவ்வளவு மேட்டரா?
வாஷிங் மிஷின்ல இவ்வளவு விஷயமா.. ஹ்ம்ம்.. நமக்கு இந்த பிரச்சனை எல்லாம் வந்ததே இல்லை
ReplyDeleteஸ்ஸ்ப்பா இந்த அமெரிக்க புராணம் இன்னும் முடிஞ்ச பாடில்லையா? :p
ReplyDelete@போர்க்கொடி, நீங்க சமைச்சால் தானே கஷ்டம் தெரியும்? சும்மாக் கடையிலே வாங்கி மைக்ரோவேவில் சூடு பண்ணிச் சாப்பிடறவங்களுக்கு என்ன புரியும்??????? :P:P:P:P:P
ReplyDelete@ஹிஹிஹி, காட்டாறு, அதிலே பாருங்க, நான் சும்மா சரித்திரம் மட்டுமே எழுதினால் அப்புறம்ம் கென்ட்ஸ் ஹிட்டுக்கு எங்கே போறது? ஏற்கெனவே தொண்டர் படை பல விஷயங்களில் பிசீஈஈஈஈஈஈஈஈஈஈ! வர ஒண்ணு, ரெண்டும் வரலைன்னா, இப்படி எல்லாம் பில்ட்-அப் கொடுத்தால்தானே! :))))))))
@வாங்க, கார்த்திக், கொடுத்து வச்சிருக்கீங்க, சமைக்காமலேயே சாப்பிடவும், துவைக்காமலேயும் துணி கட்டவும் தெரிஞ்சு வச்சுட்டீங்க போலிருக்கே!
@ஆப்பு, என்ன ரொம்பவே புகை விட்டுட்டு? உங்களுக்காகத் தான் தனியா "மொக்கை" எழுதறதே, உங்க ரேஞ்சுக்கு அதுவே அதிகம், சரித்திரம் எல்லாம் புரியாது உங்களுக்குன்னு எனக்குத் தெரியாதா, என்ன?