எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 19, 2007

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!

பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்துட்டிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அனைவருக்கும் தனித்தனியா பதில் கொடுக்க முடியலை. மன்னிக்கவும். வேதா, கொலம்பஸ் ஸ்பெயினில் இருந்து வந்தார், என்னோட முந்தைய பதிவுகளை நீங்க சரியாப் படிக்கலைன்னு புரியுது! :P அம்பி, ச்யாம், மணிப்ரகாஷ், நாகை சிவா, அபி அப்பா போன்றோருக்குச் சரித்திரம்னால் எட்டிக்காய்னு புரியுது. அதுவும் அம்பி ரொம்பவே சரித்திரம், பூகோளத்தில் வீக்னு அவங்க அம்மா கூடச் சொன்னாங்க என்னிடம் தனியா. :P
************************************************************************************

இங்கே இந்திய உணவு வகைகள் அனைத்தும் இந்திய உணவு விடுதிகளில் கிடைக்கிறது என்றாலும் தரம், சுவை என்று பார்க்கும்போது சில உணவு விடுதிகளில் தோசை, தோசையாகவே இருக்காது. அதிலும் பாரம்பரிய முறைப்படி இட்டிலிப் பானையில் இட்டிலி வேக வைக்கும் என் போன்றோருக்கு இங்கே கிடைக்கும் இட்டிலியைப் பார்த்தால் அதாலேயே அந்த உணவு விடுதிக்காரரை அடிக்கலாம் போல் வரும். சமீபத்தில் இங்கே "நாஷ்விலெ" என்னும் இடத்தில் உள்ள கோவிலுக்குப் போய்விட்டு அங்கேயே உள்ள உட்லண்ட்ஸ் உணவு விடுதியில் சாப்பிடப் போனோம். மெனு கார்டு கொடுத்ததும் அதிலே அடையோடு வெஜெடபில் எல்லாம் போட்டுக் கிடைக்கும் என்று போட்டிருந்தது. நாவில் நீர் ஊற அடை, அவியல் என்று நினைத்துக் கொண்டேன், அது என்னோட தப்பு! போனதோ உட்லண்ட்ஸ். இது சென்னையைச் சேர்ந்ததா? அல்லது நியூஜெர்ஸியில் தொழில் துவங்கிய சகோதரர்களின் கிளையானு புரியலை. சரி உட்லண்ட்ஸ் உணவுதான் பிரசித்தி ஆச்சேனு ஆர்டர் செய்தேன் எனக்கு, மத்தவங்க எல்லாம் தோசைக்குப் போக நான் மட்டுமே அடை விரும்பி. ஆனால் வந்தது என்னமோ வெஜெடபில் ஊத்தப்பம். அத்தோடு சட்னி, சாம்பார் துணைக்கு. கேட்கலாமான்னு நினைச்சால் வரும்போதே உணவு பரிமாறுபவர் அடை, உங்களுக்குத் தானே என்று கேட்டு விட்டுத் தான் கொடுத்தார். சரி, போகட்டும்னு சாப்பிட்டேன். கொஞ்சம் தோசை வாசனை வந்தது என்றாலும் அடை மாதிரி கொஞ்சம் கூட இல்லை. மற்ற உணவு விடுதிக்கு இது பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன்.

மற்றபடி இங்கே குளிர்பதனப் படுத்தப் பட்ட உணவு வகைகளும் எல்லா வகைகளிலும் கிடைக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவது என்றால் கவலையே இல்லை. ஹூஸ்டனில் இட்டிலி, தோசைக்கு அரைத்த மாவே புதியதாய்க் கிடைக்கிறது. ஆகவே நாம் போகிற ஊரில் இந்திய உணவு விடுதி இருக்கும் இடம் தேடிப் போக வேண்டும். சில விடுதிகளில் சைவம், அசைவம் இரண்டுமே வைக்கிறார்கள். அம்மாதிரி விடுதிகளில் பெரும்பாலும் சைவ உணவுக்காரர்கள் சாப்பிடக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கிறது. நம்ம ஊர் இட்டிலிப் புழுங்கல் அரிசி கிடைத்தாலும் கிரைண்டர் இருந்தால்தான் அதிலே நல்லா வரும். மிக்ஸியில் என்றால் அவ்வளவு நல்லாய் வருவதில்லை. இங்கே நாங்கள் உபயோகிப்பது அமெரிக்கன் லாங் கிரெயின் அரிசியும், அங்கிள் பீன்ஸ் புழுங்கல் அரிசியும். இதில் அங்கிள் பீன்ஸ் புழுங்கல் அரிசியை ஒரு கைப்பிடி மட்டும் போட்டால் போதும். மற்றபடிப் பெரும்பான்மையாகப் பச்சை அரிசிதான் போட வேண்டி இருக்கிறது.

வீட்டோடு சேர்ந்து ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு, மின்சார அடுப்பு, அத்துடன் சேர்ந்த அவன், வாஷிங்க் மெஷின், டிஷ் வாஷர் எல்லாமும் அநேகமாய் எல்லா அபார்ட்மென்டுகளிலும் இருக்கின்றன. நம்மால் வாடகை கொடுக்க முடியாது அவ்வளவு என்றால் வாஷிங் மெஷினும், மைக்ரோவேவும் இருக்காது, மற்றவை கட்டாயமாய் இருக்கும். வாஷிங் மெஷின் காமன் லாண்டரிக்குப் போய் வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் நேரத்தைப் பொறுத்தோ துணிகளைத் துவைக்கலாம். வீடு சொந்தமாய் வாங்கினாலோ, கட்டாயம் மின் அடுப்போ, அல்லது அந்தப் பகுதி காஸ்சப்ளை உள்ள பகுதி என்றால் காஸ் கனெக்க்ஷனோ கட்டாயமாய் இருக்கும். டிஷ் வாஷரும் வீட்டுடன் சேர்ந்தே வரும். இந்த மின் அடுப்பு 4 பர்னர் கொண்டது. 2 சின்னது, 2 பெரிது. அடுப்பை நீங்கள் ஏற்றும் முன்னேயே எல்லாமும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியைப் போட்டுவிட்டு, அது காய்ந்ததும், எண்ணெய், பின் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மற்ற சாமான்கள் என்று போட்டால் அவ்வளவு தான். ஸ்மோக் டிடெக்டர் ஊரைக் கூட்டி விடும். அடுப்பு ஏற்றும் முன்னேயே வாணலியில் எண்ணெய் ஊற்றிவிட்டுப் பெருங்காயம், கடுகு போட்டுவிட்டு அடுப்பை ஹையில் வைத்தால் அது காய ஆரம்பித்ததுமே மற்ற சாமான்களைப் போட்டு விட்டு அடுப்பை உடனே அணைத்தால் பிழைத்தீர்கள். இல்லைனால் என்னதான் எக்ஸ்ஹாஸ்ட் ஃபான் சுற்றினாலும் ஸ்மோக் டிடெக்டர் ஊரைக் கூட்டி உங்களை இரண்டில் ஒன்று பார்த்து விடும். அம்பி ஆலாய்ப் பறக்கிற "காபி"க்குப் பின்னால் வரேன். இது கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தது நீஈஈஈஇளமாய்ப் போயிடுச்சு. அதனால் சரித்திரம் நாளைக்கு, இன்னிக்கு எல்லாருக்கும் லீவு விட்டாச்சு, கொலம்பஸ்!

6 comments:

  1. //வீட்டோடு சேர்ந்து ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு, மின்சார அடுப்பு, வாஷிங்க் மெஷின், டிஷ் வாஷர்//

    Sssppaa, எத்தனை ஆங்கில வார்த்தைகள். :p

    //அத்துடன் சேர்ந்த அவன்,//

    எவன்..? :p

    சரித்திரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும். ஆனால் நீங்க ரொம்ப கடியா எழுதினீங்க. ;)

    ஹ, நாங்களே போன ஜென்மத்துல ராஜ ராஜ சோழனாக்கும். :p

    ReplyDelete
  2. @அம்பி, நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாதா? கரெக்டா இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் கொடுக்கிறதிலே இருந்தே தெரியுதே! :P அது சரி, கூடத் தெரியலையா?

    ReplyDelete
  3. வேதா, ஆனாலும் ரொம்ப ஸ்லோ நீங்க. அங்கே என்னடான்னா முத்தமிழில் ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூடப்போட முடியாதான்னு கேட்கிறாங்க, நீங்க என்னடான்னா படிக்கவே நாளாகுதுன்னு சொல்றீங்க! :P

    ReplyDelete
  4. //நல்லாப் பதிவு எழுதினா உங்களாலே புரிஞ்சுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாதா? //

    நல்ல பதிவா? அதை நாங்க சொல்லனும். குழந்தைக்கு கூட புரியும்படியா எழுதனும். :p

    யாரு குழந்தை?னு இந்த வாழப்பழ காமடி எல்லாம் பண்ணப்படாது! :)

    ReplyDelete
  5. Anonymous20 July, 2007

    என்னுடைய கமெண்ட் எங்கே????

    ReplyDelete
  6. அம்பி, ஆங்கிலத்திலும் நீங்க வீக்குன்னு இப்போப் புரிஞ்சது! மொக்கை, மொக்கைனு சொல்றீங்களே தவிர, இந்த மாதிரி எழுதினால்தான் பின்னூட்டமே கொடுக்கிறீங்க, இதிலே நக்கல் வேறேயா?

    @மணிப்ரகாஷ், எந்தப் பதிவுக்கு எப்போ கமென்ட் கொடுத்தீங்க? :P வந்திருக்கிறதே இன்னிக்குத் தான். மெயிலி இருக்கேன். பார்த்துக்குங்க! :P

    ReplyDelete