"பொன்னியின் செல்வன்" பத்தி நான் எழுதின போஸ்டுக்குத் தொடர்ந்து கமென்டுகள் வருவதைப் பார்த்தால் அந்தக் கதை வாசகர்களை எவ்வளவு ஈர்த்திருக்கிறது எனப் புரிகிறது. இத்தனை உயிரோட்டமான கதைகள் எழுத அதுவும் சரித்திரக் கதைகள் எழுத ஒரு முன்னோடியாகக் "கல்கி" அவர்கள் இருந்ததோடு அல்லாமல், தம்முடைய சரளமான எளிய தமிழ் நடையாலும் சாமானிய மக்களுக்கும் தன்னோட எழுத்துப் போய்ச் சேரும்படி எழுதி உள்ளார். அதை வியக்காமல் இருக்க முடியவில்லை. இப்போக் கொஞ்ச நாளாக என்னால் வரமுடியவில்லை, எழுத நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் ஆணிகள் மட்டுமில்லாமல் கொஞ்சம் உடல்நிலையும் காரணம். அதுக்கு இங்கே உள்ள சீதோஷ்ணம் ஒரு காரணம். ஒரு நாள் போல் ஒரு நாள் இங்கே இருப்பது இல்லை. இன்று வெயில் அடித்தால், நாளை மழை, கொட்டும் சில மணி நேரத்துக்காவது. 2 நாள் முன்னால் காலை எழுந்து வெளியே போகமுடியாத அளவுக்கு மூடுபனி இருந்தது. நம் இந்தியா போல் பருவ மழை என்பது இங்கே அந்த அந்தப் பருவத்தில் மட்டும் பெயவதில்லை. வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஒரு வாரத்துக்கான பருவ நிலையை முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல்தான் பருவ காலமும் சரியாக இருக்கும். சற்றும் தவறுவதில்லை. நாங்கள் இருப்பது யு.எஸ்ஸின் தென்பகுதி என்றாலும் இங்கேயும் குளிர்காலத்தில் "ஸ்னோ ஸ்டார்ம்" எனப்படும் பனிமிழை மிதமானது முதல் நடுவாந்திரம் வரை இருக்கிறது, போனமுறை அக்டோபரில் யு.எஸ் வந்தபோது குளிர்கால ஆரம்பம்.
மரங்களில் பசுமை மாறி செம்பழுப்பு நிறத்தை இலைகள் அடையத் துவங்கி இருந்த நேரம். இந்தக் காட்சியைக் காணவென்றே "பாஸ்டன்" நகருக்கும் சுற்றுப் புறங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு என்று சொன்னார்கள். பாஸ்டன் நகர் வடகிழக்கில் உள்ளது. பறவைகளும் போனமுறை கண்ணில் அதிகம், அதிகம் என்ன தென்படவே இல்லை. எல்லாம் விசா இல்லாமலேயே வெளிநாடுகளுக்குக் குளிர் குறைவான பகுதிகளுக்குச் சென்று விட்டன. இருந்த ஒன்றிரண்டு பறவைகளும் சத்தம் கூடப் போட முடியாமல் இருந்தன. இங்கே நாங்கள் தற்சமயம் இருக்கும் மெம்பிஸில் டிசம்பரில் ஒரு நாள் பனிமழை 2 நாட்களுக்குப் பெய்யும் என அறிவித்தார்கள். அதே போல் ஒரு வெள்ளி அன்று காலை சொன்னால் சொன்னபடி பனி பெய்ய ஆரம்பித்து விட்டது. அலுவலகம் செல்பவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே வேலை செய்ய அனுமதி கொடுத்து விடுகிறார்கள். ஆகவே யாரும் போகவில்லை. பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது ஏற்கெனவேயே கிறிஸ்துமஸுக்கு. எங்க வீட்டு வாசல் வரை பனிக்குவியல் வந்து " நலமா" என விசாரித்து விட்டுப் போனது. மறுநாள் அனைவரும் அந்தப் பனியில் நடக்கப் போனோம். அனைவரும் "தொப் தொப்" என்று விழுந்து கொண்டு இருக்கவே என்னை வரவேண்டாம் என்று எச்சரித்த என்னோட மறுபாதி தொப் என விழ நான் ஜம்முனு நடந்தேன். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். இப்போ வெயில் காலம்னு பேர்தான். ஆனால் மாறி மாறி வருகிறது. வெயில் அடித்தாலோ "சுள்"ளெனச் சாயந்திரம் 8-00 மணி 8- 30 மணி வரை வெயில் இருக்கிறது.
*********************************************************************************
ஃப்ளோரிடாவில் தோன்றிய ஸ்பானிஷ் காலனிகள் மக்களின் எதிர்ப்பால் தெற்கே நகர ஆரம்பித்தது. தற்சமயம் மெக்ஸிகோவில் அதிகம் ஸ்பானிஷ்காரர் இருக்கின்றனர்.St. Augustine, ஃப்ளோரிடாவில் மட்டும் ஸ்பானிஷ் குடியிருப்பு உள்ளது. இது 1565-ல் கண்டுபிடிக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இவர்களைத் தவிர, ஐரோப்பியரில் பிரிட்டிஷ், ஃப்ரெஞ்சுக் காரர்கள், ஸ்வீடிஷ் காரர்கள், நெதர்லாண்ட்ஸ், நார்வே, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் குடி பெயர்ந்தனர். இதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது பிரிட்டிஷ்காரரும், ஃப்ரெஞ்சுக்காரரும்தான். எப்போதும் ஒன்றை ஒன்று ஜெயிக்கப் போட்டி போடும் இங்கிலாந்தும், பிரான்ஸும் இதிலும் போட்டி போட்டன. வட அமெரிக்காவின் உள்பாகத்தில் ஃப்ரெஞ்சுக்காரர்களால் பல குடியிருப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. இந்தக் குடி இருப்புக்கள் கொண்ட பாகம் "New France" என்று அழைக்கப் படுகிறது. 1534-ல் "Jacques Cartier" என்பவரால் ஏற்படுத்தப் பட்ட இது 1763 வரை ஃப்ரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. "New France " எல்லை "New Foundlanad to Lake Superior " இருந்தும் மேலும் "Hudson Bay to Gulf of Mexico" வரையும் இருந்து வந்தது. இது பின்னர் 5 காலனிகளாய்ப் பிரிக்கப் பட்டு சுய ஆட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்பட்டது. அந்த 5 காலனிகளாவன: கனடா, அகேடியா, ஹட்சன்பே, நியூஃபவுன்ட்லான்ட், லூசியானா, ஆகியவை ஆகும். (தற்சமயம் கனடா நாட்டில் பெரும்பான்மையாகப் ஃப்ரெஞ்சுக்காரர்கள் வசிப்பதாய்ச் சொல்கிறார்கள்.) மிகுந்த இயற்கை வளமும், கனிப்பொருட்களும் நிறைந்த இந்த நாட்டில் குடியிருப்புக்கள் அமைய வேண்டிய உபரி நிலமும் தாராளமாய்க் கிடைப்பதால் எவ்விதமான இடையூறுமின்றி ஐரோப்பியரால் இங்கே வசிக்க முடிந்தது. விலைமதிப்பில்லாப் பொருட்கள் அவர்களைக் கவர்ந்ததோடு அல்லாமல் வியாபாரம் செய்யவும் முற்பட்டனர். ஃப்ரெஞ்சு நாட்டில் இருந்து பல வியாபாரக் கப்பல்கள் வந்து இங்கே இருந்து ஏற்றிக் கொண்டு போன சரக்குகளின் உண்மையான விவரம் கிடைக்கவில்லை. அதற்கான ஆவணங்கள் அழிக்கப் பட்டதாய்க் கூறப் படுகிறது. எனினும் இவர்களால் வேகமாய்க் குடியிருப்புக்களை எற்படுத்த முடியாமல் உள்ளூர் மக்களின் மொழியும் பழக்க வழக்கங்களும் தடை செய்தன. ஆகவே அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
தப்பைத் திருத்தறதுக்குள் பப்ளிஷ் ஆயிடுச்சு! :(
ReplyDelete\அனைவரும் "தொப் தொப்" என்று விழுந்து கொண்டு இருக்கவே என்னை வரவேண்டாம் என்று எச்சரித்த என்னோட மறுபாதி தொப் என விழ நான் ஜம்முனு நடந்தேன். ுகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம \\
ReplyDeleteநம்பிட்டேன் தலைவி ;))
புகைப்படங்கள் எங்கே??
ஹிஹிஹி, கோபிநாத், புகைப்படம் தானே, போடறேன், போடறேன், அதிலே எப்படியும் என்னோட அழகான முகமோ அல்லது என் உருவமோ தெரியாது, அவ்வளவு குளிருக்கான ஆடைகள் அணிந்திருப்பேன், அப்புறம் என்ன போட? போட்டால் போச்சு, கொஞ்சம் பொறுங்க. அப்புறம் பாருங்க, இந்த டூல்ஸில் காபி, பேஸ்ட் பண்ணும்போது ஃபோட்டோ என்று எழுதினால் சும்மாக் கட்டம் தான் வருது, ஃப்ரான்ஸ் என்றும் எழுத முடியலை. என்ன செய்யலாம்? நீங்க ஹைகோபி இல்லைனு தெரியும், இருந்தாலும் கேட்கிறேன்.
ReplyDeletehaa, haa, inggee vanthirukkee, appoo pathivileethaan varaathaa? thalaiyaip pichukkaNum pooliruke? :P
ReplyDeleteநான் முன்னேயே சொன்னேன் கீதா, பின்னூட்டத்தில் எல்லாம் ஈசியா இருக்கு. பதிவிலே தப்புதப்பா வரதுனு. இப்பப் பார்த்தீங்களா.
ReplyDeleteஆங்கிலம் எழுதினால் ஸ்மைலி போட முடியும் தமிழில் எழுதினா அதுவும் முடியாது.
முகம் தெரியாமல் இருந்தாலும் படம் போடவும்.
ரொம்ப நல்லா இருக்கு. தான்க்ஸ். இலவசமா சரித்திரம் சொல்லிக் கொடுப்பதற்கு.
உடல்நலம் பார்த்துக்கொள்ளவும்.