"பொன்னியின் செல்வன்" கதையை நான் எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. ரொம்பச் சீக்கிரமாகவே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த நான் முதன் முதல் "பொன்னியின் செல்வன்" படிக்கிறப்போ 7 வயசு இருக்கும். அப்போ 3-ம் வகுப்பில் இருந்த நான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டதால் அந்த வருஷம் லீவில் அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த பொன்னியின் செல்வனைப் படிக்க நேர்ந்தது. படிக்கும்போது அந்தக் கதையின் ஓட்டமும், ஆழ்வார்க்கடியான், வந்தியத் தேவனின் சாகசங்களும் மனதைக் கவர்ந்தது. இன்னும் சொல்லப் போனால் வந்தியத் தேவனின் குணமும் என்னோட குணங்களும் கிட்டத் தட்ட ஒத்துப் போனதாக எனக்குத் தோன்றியதாலும் வந்தியத் தேவன் பாத்திரத்தின் மேல் அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. எனெனில் எனக்கும் கொஞ்சம் கிறுக்குப் புத்தி உண்டு. அதனால் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. பலமுறை பலிஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். நெருங்கியவர்கள் என நினைத்தவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டேன். மேலும், வந்தியத் தேவன் போலவே உதவின்னு செய்யப் போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. என்றாலும் அவனைப் போலவே அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வெளியே வர நேர்ந்ததும் உண்டு. (ஹிஹி, மறுபாதியோட கமென்ட், இப்போவும் அப்படித்தான்). அதற்குப் பின்னர் பலமுறை படித்தேன்.
2-ம் முறையாகக் "கல்கி" பத்திரிகையில் தொடர் வந்துகொண்டிருந்தபோது என்னுடைய அம்மாவின் சிநேகிதியின் பெண்களுக்குப் "பொன்னியின் செல்வன்" கதையை நான் எடுத்துச் சொல்ல நேர்ந்தது. வந்தியத் தேவன் மேல் ஈர்ப்பு வரும்படி நான் சொன்னதாலோ என்னவோ, கடைசி பாகத்தில் அவன் சிறையில் அடைக்கப் பட்டதும், அந்தப் பெண்கள் வந்தியத்தேவன் விடுதலைக்காக மதுரை "நேரு விநாயகர்" கோவிலில் தேங்காய் உடைக்கிறேன் என வேண்டிக் கொண்டதும் நினைவில் இருக்கிறது. இப்போவும் இந்தியாவில் என்னிடம் புத்தகம் ஊள்ளது, சற்றே கிழிந்த நிலைமையில். பல ஊர்கள் பார்த்துவிட்டதே அந்தப் புத்தகம். போனமுறை யு.எஸ்ஸுக்குக் கூட வந்தது. இப்போ அதன் உடல்நிலை கருதி எடுத்துவரவில்லை. என்றாலும் கதை என்ன நமக்குத் தெரியாததா என அலட்சியமாக நினைத்துக் கொண்டுதான் "கண்ணபிரான், ரவிசங்கர்" வைத்த "புதிரா, புனிதமா?" போட்டிக்குப் போனேன். முதல் கேள்விக்கே விடை தவறு. இந்த ராமன், கிருஷ்ணன், கிருஷ்ணன்ராமன் என்று மாற்றிவிட்டதில் சற்றே குழம்பிப் போய் முற்றிலும் தவறான விடை கொடுத்துவிட்டேன். அடுத்து வந்தியத் தேவன் முதலில் போவது மாதோட்டம்தான், அங்கே தான் கொடும்பாளூர் வேளிரால் சிறையில் வைக்கப் படுவான், என்று நன்கு தெரிந்திருந்தும் அனுராதபுரம் என்று பின்னர் அவன் ஆழ்வார்க்கடியானுடன் போகும் ஊரை நினைத்துக் கொண்டும், அங்கே தம்பள்ளைக்கு அருண்மொழித்தேவர் போய்விட்டுத் திரும்புவதையும் நினைத்துக் கொண்டுவிட்டேன். அதுவும் தப்பு. கடைசிக் கேள்விக்குப் பெரிய பழுவேட்டரையர்தான் சரியான விடை என்று கண்ணன் சொல்கிறார். ஆனால் நந்தினி அவரிடம் இருந்து பயந்து கொண்டு வெளியே வந்து அழுது முடித்துவிட்டுச் சின்னப் பழுவேட்டரையரின் பரிவாரங்களுடன் வந்த குதிரைகளில் ஒன்றில்தானே போவாள்? அப்போது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துத் தானே அவள் மனம் மாறி ஓடுவாள்? இதுதான் நான் நினைத்தது. நந்தினி ஓடிப் போகும் சமயம் பெரிய பழுவேட்டரையர் குகையை விட்டு வெளியே அப்போதுதான் வந்து கொண்டிருப்பார். ஏனெனில் ரவிதாசன் குழுவினர் குகையை மேலே பாறையைப் போட்டு மூடிவிட்டுத் தப்பி இருப்பார்கள். இதுதான் சரியான பதிலோ என்று நான் நினைத்தது. ஆக மொத்தம் நான் மூவரில் ஒருத்தியாகக் கூட வரவில்லை. உண்மையிலேயே கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது. "கற்றது கைம்மண் அளவு" கூட இல்லை! நான் படிச்சதும் ஒண்ணுமே இல்லை! பலர் ரொம்பவே சுலபமான கேள்விகள் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் கர்வம் பங்கம் ஆனது!
:((((((((((
தலைப்புத் தான் கொடுத்தேன் "கர்வ பங்கம்"னு ஆனால் இன்னிக்கு ப்ளாக்கர் தலைப்பை என்னவோ ஏத்துக்க மாட்டேன்னு ஒரே அடம், என்ன செய்யறதுன்னு புரியாமல் லேபலில் பொட்டுட்டேன்.
ReplyDeleteபொன்னியின் செல்வன் படித்துவிட்டு என் தோழியின் தோழி ஒருத்தி கல்கி அவர்களை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரே பிடிவாதம். பிறகு அவளுக்கு புரியவைத்து இப்போது தெளிவாக இருக்கிறாள்.
ReplyDelete\\ஆக மொத்தம் நான் மூவரில் ஒருத்தியாகக் கூட வரவில்லை. \\
என்ன கொடுமை சார் இது ;((((
Now i am reading PONNIYIN SELVAN pat-V it is very intresting,now i am a fan of KALKI......
ReplyDelete//இப்போ அதன் உடல்நிலை கருதி எடுத்துவரவில்லை.//
ReplyDeleteதேவையில்லை. உடல் எங்கிருந்தாலும், உயிர் இணையித்தில் இருக்கிறதே. மதுரைப்ரொஜெக்ட் உதவியால் pdf formateல் download செய்து என் கணணியில் சேமித்து வைத்துள்ளேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம்.
நீங்களும் மீண்டும் ஒரு முறைப் படித்து கர்வத்தை தக்கவைத்துக் கெள்ளலாம்.
@கோபிநாத், இதைவிடக் கொடுமை எனக்குத் தெரிஞ்சு வேறே இல்லை! :(((((
ReplyDeleteகற்பகராஜ், ரொம்பவே சந்தோஷம், உங்கள் ஆர்வத்துக்கு.
@மதி, என்ன இருந்தாலும் கல்கியில் இருந்து எடுத்து வைக்கப் பட்ட படங்களுடன் கூடிய பைன்ட் செய்யப் பட்ட புத்தகங்களைப் படிக்கிற சுகமே தனிதான். ஆன்லைனில் கிடைக்குதுன்னு தெரியும். கூகிள் தயவை நாடி இருந்தால் போட்டியில் வென்றிருப்பேனே! :(((((((((
கீதா,நான் பொன்னியின் செல்வனை,சிவகாமியின் சபதத்துக்கு அப்புறம்தான் படித்தேன்.
ReplyDeleteபாட்டிவீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்ட புத்தகம். மணக்க மணக்கப் படித்த ஞாபகம். பார்த்திபன் கனவும் அப்படியெ.மத்ததெல்லாம் குட்டிப் புத்தகங்கள்.
அதனால் எனக்கு பொ.பு.அறிவு மிகவும் குறைச்சல்.
ஆனால் வந்தியத்தேவன்,குந்தவை வரும் கட்டங்களை மறுபடியும் தேடிப் படிப்பேன்...நிலாக்காலம்தான்.
மேடம்.. இதை விட ரொம்ப கொடுமையானது இன்னும் நான் பொன்னியின் செல்வனை படிக்க வில்லை என்பது தான்.. ஏனோ தெரியவில்லை.. என்னால் இன்று வரை அதை படிக்க முடியவில்லை.. இத்தனை முறை படித்தீர்கள் என்று கேள்விப்படும்போது சற்று எனக்கு பொறாமை எண்ணம் எழுவது உண்மை தான்
ReplyDeleteவணக்கம். நீங்கள் முதலில் படித்தது 7வயதிலா... நான் 10 வயதில் படித்தேன். தற்போது தமிழ் வரலாற்றுப் புதினங்களில் ஆர்வம் துளியும் இல்லாவிட்டாலும், பொ.செ ஐ அலுத்து ஒதுக்க முடிவதில்லை.
ReplyDeleteபெரிய பழுவேட்டரையர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு களைத்து போய் கொள்ளிடம் மண்டபத்தில் ஒதுங்கி கிடப்பாரே,,, அந்த மண்டபம் கொள்ளிடக் கரையில் உள்ளதா என தேடிப் பார்த்து கரையோரமாக நடந்து பார்த்ததுண்டு, கதைப்படி இன்னும் மேற்கே நடந்ததாக புனையப்பட்டிருந்தாலும் !! கதை எழுதிய 'கல்கி' கொள்ளிடக்கரை காரர். இதுபோலவே அரசலாற்றுக் கரையோரமாக குடந்தையிலிருந்து காரைக்கால் போகும் சாலையில் செல்லும் போதெல்லாம் மனம் குதூகலம் அடையும். அருள்மொழித்தேவரும், வானதியும், அட்டை முதலையும் நினைவுக்கு வருவார்கள். கடைசியாக 1996 டீசெம்பரில் ,கரை புரண்டோடும் அரசலாறு கரையோரமாக அம்பேசடர் காரில் போனப்போதும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
எனது மனைவியின் உண்மையான பெயர் பூங்குழலி. முதலில் அவரை சந்தித்த போது இது தெரிய வந்த போது, மனம் மட்டில்லா மகிழ்ச்சி ஓடத்தில் மிதந்தது.
எல்லோருக்கும் வ.தேவன் தான் பெரிய ஆள் என்றாலும் எனக்குப் பிடித்த பாத்திரம் சேந்தன் அமுதன். மருத்துவர் மகன் பினாகபாணி மாதிரி ஓரிரு ஆட்களை நேரிலேயே இங்கே அமேரிக்காவில் சந்தித்திருக்கிறேன். எப்போதாவது இந்தியா போக நேர்ந்தால் பழையாறை,பட்டீசுவரம் போன்ற இடங்களுக்குப் போய் பார்க்க வேண்டும் என உள்ளேன்.
பொ.செ பற்றி அசைபோட வைத்தமைக்கு நன்றி.
//"கற்றது கைம்மண் அளவு" கூட இல்லை//
ReplyDeleteநானும் 9\10 எடுத்தேன் எடுத்தேன் அதுக்காக இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது. ;-))
புரியலைன்னா என் வலைப்பதிவின் தலைப்பை பார்க்கவும் ;-))
-சத்தியா.
கற்றது கைம்மண்ணுலே ஒரே ஒரு துளின்றதாலேதான்,
ReplyDeleteபோட்டிகளில் எல்லாம் வெளியே இருந்து வேடிக்கைமட்டுமே பார்க்கறதுன்னு
இருக்கேன். கொஞ்சநஞ்ச கவுரவத்தையாவது காப்பாத்திக்கலாமுன்னு............:-)
வல்லி, "சிவகாமியின் சபதம்" படிப்பதை நான் ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தேன். காரணம் அதில் காதலர்கள் சேரமாட்டார்கள் என்ற முடிவை என் அம்மா கிட்டே கேட்டுத் தெரிந்து கொண்டதால். அந்த வயதில் அந்த சோகமான முடிவைத் தாங்க முடியுமா என நினைத்தேனோ என்னமோ? ஆனால் 15 வயதுக்குள் படிச்சு விட்டேன். ரொம்பநாள் அந்தக் காதலை மறக்க முடியவில்லை!
ReplyDelete@கார்த்திக், கட்டாயம் ஒருமுறையாவது படியுங்க, சீக்கிரமாவே!
@வாசன், "பொரித்த குழம்பு" வாசன் தானே, என்ன உங்க பதிவுக்கு வரவே முடியலை, இந்த லிங்க் மூலம்? :((((((((
@சத்தியா, வந்துட்டுப் போனது தெரிஞ்சுதா?
@துளசி, இந்த யோசனை தோணாமப் போச்சு! :P
@வேதா, நிஜமாவா? எங்க பேப்பர்காரர் கிட்டே சொல்லிக் "கல்கி" எடுத்துவைக்கச் சொல்லணும். படங்கள் யாரோடது வரப் போகுதோ?
எங்க வீட்டிற்குப் போனாலே(திருச்சிக்கு) ஏதாவது ஒரு பகுதியை எடுத்து வைச்சு படிக்க ஆரம்பிச்சிருவேன். சொல்லப்போனால் முதல் பக்கத்திலிருந்து கூட இருக்காது.
ReplyDeleteபுக் கிரிக்கெட் விளையாடுவோ அதை மாதிரி, ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து வாசிக்க ஆரம்பிப்பேன் அப்படியே புத்தக முடிவு வரை படிக்க முடியும்.
சில சமயம் தொடர்ச்சியான பகுதிகளையும் இதனால் படிப்பேன்.
அப்படி எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் திறந்து படிக்கக்கூடிய ஒன்றாய் பொன்னியின் செல்வன் இருந்தது. தற்சமயம் அப்படிச் சொல்லக்கூடிய ஒரு புத்தகம் என் பெயர் ராமசேஷன்.
பொன்னியின் செலவனை 65ல் ஒரேமூச்சில் படித்து முடித்தேன். அவ்வளவு விறுவிறுப்பு.1973 ல் அவரது மனைவியை சென்றுபார்த்து பேசிவிட்டு வந்தேன்
ReplyDeleteபொன்னியின் செல்வன் காவியத்தில் வரும் காதலர்கள் காதலின் சுவையை அன்பவிக்க கொடுத்து வைக்காதவர்கள் என்றால் மிகையாகாது. அது குறித்த ஒரு சுவையான சிறு ஆராய்ச்சி இதோ.
ReplyDeletehttp://ppattian.blogspot.com/2007/07/blog-post_08.html
நான் நாவலாக தான் படித்தேன். ஒரே மூச்சில் 5 பாகங்களையும். மூன்று நாட்களுக்கு என் மனதில் வந்திய தேவன் உம் குந்தவையும் ஊமை ராணியும் நந்தினியும் சேந்தன் அமுதனும் வானதியும் பழுவேட்டரையர்களும் அருன் மொழி வர்மனும் ஆதித்த கரிகாலனும் அப்பப்பா
ReplyDeleteவந்திய தேவன் - கமல்
அருன் மொழி வர்மன் - சூர்யா
ஆதித்த கரிகாலன் - விக்ரம்
வானதி - ஸ்ரெயா
குந்தவை - நயந்தார
நந்தினி - இஷ்வர்யா ராய்
பழுவேட்டரையர் - பகவதி,வீரப்பா போன்றவர்கள்
நான் பல முறை படித்ததன் விளைவுதான் என் பெயர்.
ReplyDeleteகீதா,
ReplyDeleteசிவகாமியின் சபதத்தை
என் பதினைந்து வயது கோடையில்தான் படித்தேன்.
அரிசி மூட்டை பெஞ்சுக்கும் வெப்பமரஜன்னலுக்கும் நடுவில் எழுந்திருக்காமல் படித்துச் சிவகாமிக்காக அழுது, நரசிம்ம பல்லவனைக் கோபித்து.... நமக்கே நாம் உண்மையாக இருந்த காலம் அது. கல்கி எழுத்துக்குச் சொல்லவேண்டுமா.
வாசன் சொல்லி இருப்பதுபோல வீரநாரயணபுரம் ஏரியையும் தேடி இருக்கிறேன்.
//ரொம்பச் சீக்கிரமாகவே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த நான் முதன் முதல் "பொன்னியின் செல்வன்" படிக்கிறப்போ 7 வயசு இருக்கும்.//
ReplyDeleteஅப்போ நீங்க என்னை விட 20 வருஷம் தான் சீனியரா???
ஆக்சுவலா புத்தகத்தை வாங்கி வைத்து (வழக்கம் போல) படிக்காமல் தான் இருந்தேன். பின் மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' படித்தவுடன், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் (ஜஸ்ட் 400 வருடங்களுக்கு முன்) இருந்த நம்ம மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்ற ஆர்வத்தில் தான் பொ.செ.வை படிக்க ஆரம்பித்தேன். முதல் இரு பக்கங்கள் தான் போயிருக்கும், அந்த மொழியில் ஆளுமையிலேயே முதல் நாளில் 150 பக்கங்கள் படித்து, மறுநாள் அலுவலுக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக மூடினேன். பின், தினமும் அவசர அவசரமாக எல்லா வேளைகளையும் முடித்து பொ.செ.வை படிக்க ஆரம்பித்துவிடுவேன். 22 நாட்களில் முடித்து விட்டு, சாப்பிட்டு வாயில் ரத்த கரையுடன் உட்கார்ந்திருக்குமே சிங்கம்போல (சரி! கொஞ்சம் ஓவர் தான்) அசை போடுவேன்.
//வந்திய தேவன் - கமல்
அருன் மொழி வர்மன் - சூர்யா
ஆதித்த கரிகாலன் - விக்ரம்
வானதி - ஸ்ரெயா
குந்தவை - நயந்தார
நந்தினி - இஷ்வர்யா ராய்
பழுவேட்டரையர் - பகவதி,வீரப்பா போன்றவர்கள்
//
அட! இதை பற்றி ஒரு பதிவு கூட எழுதியிருக்கிறேன். அப்படி ஒன்றுவிட்டது பொ.செ.
பின் ஆர்வ மிகுதியால் வீட்டில் இருந்த 73-ம் வருட காப்பியை சுட்டுவரும் பொழுது என் அம்மா, 'அதை ஏண்டா எடுத்திட்டு போறே. நீ ஒழுங்கா வெச்சிருக்கமாட்டே. பத்திரமா வெச்சுக்கோ'-ன்னு மிரட்டி அனுப்பினார், of course இப்போ அவள் அதை படிக்கலைன்னாலும்.
அதுசரி! பொ.செ. பத்தி பேசுறதுக்கு யாஹூவில் ஒரு குழு இருக்கு. தெரியுமா? இஷ்டம் இருந்தால் இனையலாம்.
மோகன் தாஸ், ரொம்பவே நன்றி உங்களோட எண்ணங்களுக்கு, உங்களோட சோழகுல ஆராய்ச்சி எல்லாம் படிச்சிருக்கேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதி.ரா.ச. சார், ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, ரொம்பவே நன்றி,
மோகன் தாஸ், ரொம்பவே நன்றி உங்களோட எண்ணங்களுக்கு, உங்களோட சோழகுல ஆராய்ச்சி எல்லாம் படிச்சிருக்கேன். வாழ்த்துக்கள்.
தி.ரா.ச. சார், ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, ரொம்பவே நன்றி,
, என்ன பேரோ புரியலை! உங்க பதிவுக்கு வந்து உங்க ஆராய்ச்சியையும் பார்த்தேன், முடிஞ்சப்போ அது பத்தின என்னோட ஆராய்ச்சியையும் எழுதறேன். :D
வாத்திலை முரளி, என்ன பேருங்க இது? ரொம்பவே நன்றி, ஆனால் தேர்வுகள் ஒண்ணும் சரி இல்லை! :(
வந்தியத்தேவரே, நான் ஏற்கெனவே ஊகம் செய்து வச்சிருந்தேன், இதான் என்று. :P
@வல்லி, எனக்குக் கல்கியோட எழுதின காதல் கதைகளிலேயே ரொம்பவும் பிடிச்சது "அமரதாரா" மட்டும்தான். இதை முடிக்கும் முன்னரே அவர் இறந்துட்டதா என் அம்மா சொல்லுவாங்க. அவர் எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருந்கிருக்கும். :(
@சீனு, என்னது 20 வருஷம் நான் உங்களுக்கு சீனியரா? சான்ஸே இல்லை. என்னோட வயசை ரொம்பவே அதிகமா இல்லை சொல்லிட்டு இருக்கீங்க! அப்புறம் நடிகர் தேர்வு ஒண்ணும் நல்லாவே இல்லை. :(
PPaattian, என்ன பேரோ புரியலை! உங்க பதிவுக்கு வந்து உங்க ஆராய்ச்சியையும் பார்த்தேன், முடிஞ்சப்போ அது பத்தின என்னோட ஆராய்ச்சியையும் எழுதறேன். :D
வாத்திலை முரளி, என்ன பேருங்க இது? ரொம்பவே நன்றி, ஆனால் தேர்வுகள் ஒண்ணும் சரி இல்லை! :(
வந்தியத்தேவரே, நான் ஏற்கெனவே ஊகம் செய்து வச்சிருந்தேன், இதான் என்று. :P
@வல்லி, எனக்குக் கல்கியோட எழுதின காதல் கதைகளிலேயே ரொம்பவும் பிடிச்சது "அமரதாரா" மட்டும்தான். இதை முடிக்கும் முன்னரே அவர் இறந்துட்டதா என் அம்மா சொல்லுவாங்க. அவர் எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருந்கிருக்கும். :(
@சீனு, என்னது 20 வருஷம் நான் உங்களுக்கு சீனியரா? சான்ஸே இல்லை. என்னோட வயசை ரொம்பவே அதிகமா இல்லை சொல்லிட்டு இருக்கீங்க! அப்புறம் நடிகர் தேர்வு ஒண்ணும் நல்லாவே இல்லை. :(
//என்னது 20 வருஷம் நான் உங்களுக்கு சீனியரா? //
ReplyDeleteநான் 27-ல் படிக்க ஆரம்பித்தேன் என்று சொன்னேன்.
//அப்புறம் நடிகர் தேர்வு ஒண்ணும் நல்லாவே இல்லை//
அது என் தேர்வு இல்லையே!!
//ஆக மொத்தம் நான் மூவரில் ஒருத்தியாகக் கூட வரவில்லை. உண்மையிலேயே கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது. ஆனால் கர்வம் பங்கம் ஆனது!//
ReplyDeleteகீதாம்மா...என்னைய இப்படி ஃபீல் பண்ண வைச்சுட்டீங்களே! இதுக்கு அடியேனை ஒரு அடி அடிச்சு இருக்கலாமே! :-)
சரி, அதுக்கென்ன அம்பியை அனுப்பி வைக்கட்டுமா? ஆடியில் அடி பெறுவது விசேஷம் தானே! :-)
//கடைசிக் கேள்விக்குப் பெரிய பழுவேட்டரையர்தான் சரியான விடை என்று கண்ணன் சொல்கிறார். ஆனால் நந்தினி அவரிடம் இருந்து பயந்து கொண்டு வெளியே வந்து அழுது முடித்துவிட்டுச் சின்னப் பழுவேட்டரையரின் பரிவாரங்களுடன் வந்த குதிரைகளில் ஒன்றில்தானே போவாள்?//
கண்ணன் என்றாலே மாயக்காரன் தானே! :-)
அதான் 4 option-இல் பெயரை அப்படியும் இப்படியும் மாத்தி போட்டு, கன்ப்யூஷன் செஞ்சேன்!
அதில் நல்லாப் பாருங்க...பெரிய பழுவேட்டரையர் என்று சொல்லி இருக்க மாட்டேன். வெறுமனே "பழுவேட்டரையர்" என்று தான் சொல்லி இருப்பேன்! :-))
சின்னப் பழுவேட்டரையர் தடுத்துப் பிடிக்க எண்ண, பெரிய பழுவேட்டரையர் வேண்டாம் என்று சொல்லி விடுவாரே! உங்கள் கூற்று சரியே!
பரிசு உங்களுக்கும் சேர்த்து தானே அங்கே இருந்தது! எடுத்துக்கலையா? :-)
ReplyDeleteசரி...தலைவிக்காக ஸ்பெசலா, அடுத்த புதிரா புனிதமா-வில் என்ன வைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்க!
அங்குப் பதிவில் நான் சொல்லியிருந்தது போல் yahoo groupஇல் மெம்பர் ஆகி விட்டீர்களா?
என் சொந்த ஊர் வத்தலக்குண்டு (திண்டுக்கல் மாவட்டம்). அதன் சுருக்கமே வதிலை. எங்களுக்கும் அடை மொழி தேவைப்படுதில்லே
ReplyDelete