காட்டாறு ரொம்பவே பாராட்டி இருக்காங்க, என்னோட எழுத்துத் திறமையை! ஹிஹிஹி, இப்படி எல்லாம் மொக்கை போட்டால் தான் கொஞ்சமாவது வருவாங்க! அவங்களுக்கு என்ன? பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை எனக்கு இல்லை தெரியும்? :))))) இந்த சமையல் பத்தி நிறையச் சொல்லணும் தான். ஆனால் நடு நடுவிலே சொல்லிக்கிறேன். இப்போ இங்கே கிடைக்கும் மற்ற செளகரியங்கள் பத்திப் பார்ப்போம். எல்லா வேலையும் நாமே தெரிஞ்சு வச்சுகிறது தான் டாலருக்கு நல்லது. கொஞ்சமாவது கையில் இருக்கும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால் சொத்தை எழுதி வைக்கணும். ஆகவே சொந்த சமையல் நல்லதுன்னாலும் சில இந்தியன் க்ரோசரியில் இட்லி, மசால் வடை, மசால் தோசையில் ஆரம்பித்து வட இந்திய உணவு வகைகள் வரை அனைத்தும் ப்ரோசன் ஆகக் கிடைக்கிறது. உங்களோட ஜீரண சக்தி நல்லா இருந்தால் கவலையே இல்லை. ஜமாய்க்கலாம். அல்லது சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரித்து விற்பனைக்கும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவைப் படும் நேரத்துக்குக் குறைந்தது 2 மணி நேரமாவது முன்னால் சொல்லிவிட்டால் போதும். நிச்சயமாய் உணவு விடுதியை விட விலை குறைச்சல்தான்.டோர் டெலிவெரி சிலர்தான் செய்கிறார்கள் மற்ற இடங்களில் நாமே போய் வாங்கி வந்து விடலாம். நம் நாடு போலவே விசேஷங்களுக்குச் சமைத்துக் கொடுக்கவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வே உங்களுக்கு இருக்காது. கோவில்கள் அனைத்திலும் அநேகமாய் இலவச உணவு ஞாயிற்றுக் கிழமைகளில் கிடைக்கின்றன. இங்கே மெம்பிஸில் அம்மாதிரி இல்லை என்றாலும் அநேகம் கோவில்கள் கொடுக்கின்றன.
பெரும்பாலும் தென் இந்தியக் கோவில்கள் ஆந்திரர்களாலேயே நிர்வகிக்கப் படுகின்றன. சில கோவில்களில் மாறுபட்டிருக்கலாம். குஜராத்தியர்களும் பெரும்பாலாகக் கோவில்களை நிர்வகிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோவில்களும், ஸ்வாமிநாராயண் கோவில்களும் குஜராத்தியர் முற்றிலும் நிர்வகிப்பதோடு, இலவசமாய்ச் சாப்பாடும் கொடுக்கின்றனர். பெருமளவில் ஹோமங்கள், யாகங்கள் போன்றவையும் நடத்தப் படுகின்றன. நிதானமாய் நல்லாத் தரிசனம் செய்யலாம். எல்லாக் கடவுளரும் பாகுபாடு இல்லாமல் ஒரே பெரிய ஹாலிலேயே இடம் பெற்று விடுகின்றனர். அநேகமாய் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் அனைவரும் திருப்பதியில் இருந்தே வருகின்றனர். ஹூஸ்டன் மீனாட்சி கோவில் மட்டும் விதி விலக்கு. அங்கே மதுரையைச் சேர்ந்த பட்டர்தான் இருக்கிறார்.
*************************************************************************************
14-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வகிக்கப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதிகம் பேர் காலனிகளில் வசிக்க முன்வரவில்லை. தவிர எப்போதும் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் உள்ள பகை உணர்வு இந்தக் காலனி ஆதிக்கத்திலும் ஏற்பட்டது. 1629-ல் ஒரு முறையும், 1632-ல் ஒரு முறையும் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் சண்டை ஏற்பட்டு "க்யூபெக்" பிடிக்கப் பட்டது. சாம்ப்ளேன் வேறு இடம் தேடிப் போனார். பின்னர் வந்த உதோப்பிய கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மிஷனரியில் இருந்து பிரசாரகர்களைக் கொண்டு வந்து உள்ளூர் மக்களைப் பெருமளவில் மதம் மாற்றினார்கள். இதை " Iraquois" என்ற பெயருள்ள வேறு இனத்தவர் எதிர்த்தனர். பிரான்ஸில் இருந்து 15 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 700 பேர் இங்கே அரசால் அனுப்பப் பட்டனர். உள்ளூர் மக்களுடன் திருமண உறவும் அனுமதிக்கப் பட்டது. இது ஹென்றி ஹட்சன் தன் வியாபாரத்தை விஸதரிக்கும் வரை நடந்தது. 1670-ல் ஹட்சனின் "பே கம்பனி" பிரான்ஸ் வியாபாரிகளின் வியாபாரத்துக்கு முடிவு கட்டியது. ப்ரெஞ்சுக்காரர்கள் தெற்கே நகர ஆரம்பித்தனர். 1682-ல் "ஒகையோ"வும் "மிஸ்ஸிஸிப்பி" பள்ளத்தாக்கும் கண்டு பிடிக்கப் பட்டது. "கல்ப் ஆப் மெக்ஸிகோ" வரை உள்ள பகுதி ப்ரெஞ்சுக்காரருடையது என அறிவிக்கப் பட்டது. "லூசியானா" என்ற பெயரும் அப்போது தான் வைக்கப் பட்டது. இனி அடுத்து "சூரியன் என்றும் மறையா ஆட்சியைத் தந்த ஆங்கிலேயர் ஆதிக்கம்"!
//பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை எனக்கு இல்லை தெரியும்? :))))) //
ReplyDeleteஎன்ன கொடுமை தலைவி இது...
எனக்குத்தான் இப்படினா ஊரே அறிஞ்ச உங்களுக்கும் அப்படித்தானா?..
இதைவிசாரிக்க கேடி மற்றும் அம்பி தலைமயில் விசாரணை குழு அமைக்க
இன்றிலிருந்து நான்.இந்த உண்மைத் தொண்டம் "உண்ணும் விரதம்" இருக்கிறேன்..
//சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரித்து விற்பனைக்கும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவைப் படும் நேரத்துக்குக் குறைந்தது 2 மணி நேரமாவது முன்னால் சொல்லிவிட்டால் போதும். நிச்சயமாய் உணவு விடுதியை விட விலை குறைச்சல்தான்.டோர் டெலிவெரி சிலர்தான் செய்கிறார்கள் மற்ற இடங்களில் நாமே போய் வாங்கி வந்து விடலாம். நம் நாடு போலவே விசேஷங்களுக்குச் சமைத்துக் கொடுக்கவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வே உங்களுக்கு இருக்காது//
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆ
ஒண்ணுமில்லை, சின்னதா ஒரு புகைச்சல்.
நமக்கு அவ்வளவு பாக்கியம் எல்லாம் இல்லை(-:
தாமாய் தான் எல்லாம்.
Nice info about US food facility details. Good post. :)
ReplyDeletesecond part - that rambam History part thevaiyaaa? semaa bore. Grrrrrrrr.
see no body is commenting on your sec part. marketing strategyaa maathunga. illaati kaalam pooora E otta vendiyathu thaan! :)
14-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வகிக்கப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதிகம் பேர் காலனிகளில் வசிக்க முன்வரவில்லை
ReplyDeleteகீதாமேடம் பதிவுகள் நன்கு எழுதப்பட்டதாக அவ்ர்கள் சொன்னாலும் அதிகம் பேர் பின்னுட்டம் போடுவதில்லை
இதைத்தானே அம்பி என்னிடம் நீ சென்னை வந்த போது சொன்னே
நீஎப்போதும் உனக்கு தெரியாத விஷயத்தை யாராவது சொன்னா கேட்டுக்கவே மாட்டியே
@மணிப்ரகாஷ், முதலிலே தலைவி(வலி)யிடம் எதுவுமே தெரிவிக்காததுக்கு உங்க பேரில் தான் சி.பி.ஐ, விசாரணை போடணும். என்ன அநியாயம், என் கிட்டே தெரிவிக்காமல் இந்தியா போய் இருக்கீங்க, நீங்க இங்கே வருவீங்கன்னு நான் ஹூஸ்டனுக்கு வந்து உட்கார்ந்திருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......:P
ReplyDelete@துளசி, ஹிஹிஹி, பல பெண்கள் இம்மாதிரி செய்து கொடுத்து நல்லா சம்பாதிப்பதோடு இல்லாமல், பல க.பிக்களின் உணவுத்தேவைக்கும் வசதியாக இருக்கிறது. இது ஊருக்குத் தகுந்தபடி, தேவைக்குத் தகுந்தபடி விலைகளில் ஏற்ற, இறக்கத்தோடு இருக்கிறது. ம்ம்ம்ம்ம்., உங்க நியூசியிலே இந்தியர்கள் குறைச்சலோ?
@வேதா(ள்), ஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, டாங்ஸு, எழுத்துத் திறமையைப் பாராட்டியதுக்கு,
நறநறநறநற, இது "உண்ணும் விரதம்" இருக்கும் உங்களுக்கும், மணிப்ரகாஷுக்கும்! :P
@அம்பி, சரித்திரம் பிடிக்காதுன்னால் இவ்வளவு மோசமாவா ஒண்ணுமே புரியாமல் இருக்கணும்? இதிலே நான் எழுதறது மொக்கைனு வேறே சொல்லிட்டு இருக்கீங்க!நறநறநறநற, எல்லாம் இது போதும், உங்க மூளைக்கு இதுவே அதிகம்!
@தி.ரா.ச. சார்,அட, அட, அட, என்ன ஒரு ஒத்துமை, உங்களுக்கும், அருமை சிஷ்யப் பிள்ளைக்கும், அவர் சொன்னாரம், இவர் எழுதினாரம், உங்களுக்கு ஏது சார் இதுக்கெல்லாம் நேரம்? சும்மாக் கதை விடாதீங்க? மெயில் கொடுத்ததுக்கே பதில் போட முடியலை, உங்களாலே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்