எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 12, 2007

அமெரிக்கா - கொலம்பஸுக்கு அப்புறம் என்ன?

நான் படிச்ச முதல் அமெரிக்க காமிக்ஸ் "Denis the Menace ". ஆங்கிலப் பத்திரிகைகளில் வருவது தான் அப்போ எல்லாம். காமிக்ஸ் புத்தகம எல்லாம் வாங்கிப் படிச்சது இல்லை. அதுவும் என்னோட அப்பா வீட்டிலே பேப்பர், பத்திரிகை வாங்கவே மாட்டார், ஓசிதான் எல்லாம். :D கல்யாணம் ஆனதுக்குப் பின் குழந்தைகள் படிக்க ஆரம்பிச்சதும்தான் "Archie Comics" காமிக்ஸ் எல்லாம் அவங்க கூடப் போட்டிப் போட்டுப் படிப்பேன். இப்போக் கூட 2 நாளா அதான் படிச்சுட்டு இருக்கேன். :D பொதுவாய் யு.எஸ்ஸில் கிடைக்காத இந்தியத் தயாரிப்புக்கள் இல்லை. அநேகமாய் காய்களில் புடலை, முருங்கை, வாழைப்பூ என எல்லாமே கிடைக்கிறது. சாப்பாட்டு வகைகளிலும் பதப் படுத்தப்பட்டதில் இருந்து, மற்ற இந்திய உணவுப் பொருட்கள் எல்லாமே கிடைக்கிறது. இந்தியன் க்ரோசரி இல்லாத ஊரே இல்லை எனலாம். இங்கே வரும் இளைஞர்களுக்குக் கோவில், தமிழ்ச்சங்கம், அதைச் சேர்ந்த நூலகம் என எல்லாமும் இருப்பதாலோ என்னமோ மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. கிடைக்காத ஒன்றே ஒன்று அப்பாவும், அம்மாவும் தான். அது ரெடிமேடாகக் கிடைப்பதில்லை!
*************************************************************************************
1492-ல் ஆரம்பித்த கொலம்பஸின் கடல்பயணத்தில் அவர் 1498-ல் தான் மெயின்லான்ட் எனப்படும் முக்கியத் தரைப் பகுதியை அடைந்தார் என ஒரு குறிப்பு, இன்னொரு குறிப்பு 1493 நவம்பர் 19-ல் அவர் ப்யூர்டோ ரிகோ வை அடைந்தார் எனவும் சொல்கிறது. கொலம்பஸுக்கு முன்னரே இங்கே இருந்து வந்த மக்களை "native Americans or Pre Colombians" என்று அழைக்கிறார்கள். இவர்கள் பொதுவாகப் பூர்வ குடிகள் எனச் சொல்லப் பட்டாலும் இவர்களிலும் ஹவாய் தீவு, அலாஸ்கா போன்ற இடங்களில் இருந்து வந்தவர்களைத் தனியாகச் சொல்கின்றனர். அமெரிக்கக் கண்டத்திலும், ஸ்பெயின் நாட்டிலும் கொலம்பஸ் தன் பயணத்தை ஆரம்பித்த அக்டோபர் 12-ம் நாள் "கொலம்பஸ் தினம்" என அங்கீகரிக்கப் பட்டு விடுமுறை விடப் படுகிறது. தற்சமயம் யு.எஸ்ஸில் இது பள்ளி, அரசு நிறுவனங்களில் மட்டுமே அனுசரிக்கப் படுகிறது.

அமெரிக்காவின் பூர்வகுடிகள் அதாவது யு.எஸ். நாட்டின் பூர்வ குடிகள் தற்சமயம் அலாஸ்காவிலும், கண்டத்தின் சில பகுதிகளிலும் மிகக் குறைந்த அளவே காணப் படுகிறார்கள். இவர்களைக் கொலம்பஸ் "இந்தியர்" என நினைத்ததால் "இந்தியர்" என அழைக்கப் பட்டாலும் இவர்கள் அதை விரும்புவதில்லை. அமெரின்டன் என அழைக்கப் படுவதை விரும்புகிறார்கள். அல்லது "Aamerica's First Nationals" என்று சொல்லுவதை மிகவும் விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்களில் சிலருக்கு நாடு தங்களுடையாய் இருந்தது என்னும் எண்ணம் இன்னும் இருப்பதாய்க் கூறப் படுகிறது. கொலம்பஸ் வந்து இறங்கிய 15-ம் நூற்றாண்டில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வந்து கூட்டம் கூட்டமாய்க் குடியேற ஆரம்பித்தனர். இவர்களுடன் பெரும் கொள்ளை நோய்களும் வந்து முன்னரே இருந்த பூர்வ குடிகள் நோய்க் கடுமை தாங்காமல் பெரும் அளவில் இறக்க ஆரம்பித்தனர். இங்கே முன்னரே குதிரைகள் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் ஸ்பானிஷ்காரர்களும், ஐரோப்பியரும் வந்து பெரும் அளவில் கப்பல்களில் குதிரைகளைக் கொண்டுவந்து இறக்குமதி செய்தனர். இந்தக் குதிரைகளில் சில தப்பி ஓடிக் காட்டை அடைந்து பூர்வகுடிகளால் பிடிக்கப் பட்டு வளர்க்கப் பட்டு அவர்களின் போக்குவரவுக்குப் பெரிதும் உதவியது.

முதன்முதல் இங்கு வர்த்தகம் ஆரம்பித்ததும் ஸ்பெயின் நாட்டு அடிமை வியாபாரிகள் தான். அவர்கள் தங்கள் குடியிருப்பை ஃப்ளோரிடா மாகாணத்தில் நிர்மாணிக்கவும், அங்கே உள்ள பூர்வ குடிகளுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை விஸ்தரிக்கவும் முற்பட்டனர். ஆனால் அங்கே இருந்த் பூர்வகுடிகள் இவர்களை எதிர்த்தனர். முதன் முதல் அவர்களுக்குள் ஏற்பட்ட சணடையும் 1513-ல் ஏற்பட்டது. பூர்வகுடிகள் வெல்ல, ஸ்பானிஷ்காரர்கள் மீண்டும் மீண்டும் முயன்றனர். 1521-ல் ஓரளவு ஐரோப்பியரை அங்கே வரவிடாமல் பூர்வகுடிகள் அடித்து விரட்டினர். என்றாலும் பின்னர்?

9 comments:

  1. யூஸ்ல காப்பி எல்லாம் கிடைக்கறதா? :)

    இல்ல, அங்கேயும் கைலாசம் மாதிரி தானா? :p

    ReplyDelete
  2. Anonymous13 July, 2007

    வந்துட்டேன்..நான் கூட நீங்க கார்த்தி பார்க்க கொலம்பஸ்க்கு வந்துட்டீங்களோ அப்படினு நினைச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  3. சுவரஸ்யமான தகவல்கள் மேடம்.. அழகான நடை.. படிப்போரை போரடிக்காமல் கொண்டு செல்கிறது.. இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறேன்.. எப்படி இத்தனை வருடங்களை ஞபகம் வைத்து கொண்டீர்களோ..தெரியவில்லை..

    ReplyDelete
  4. மேடம், பொன்னியின் செல்வன் எங்காவது ஆன்லைனில் கிடைகிறதா என்ன..

    ReplyDelete
  5. அம்பி, காபி முதல் கடுகு வரை எல்லாமே கிடக்கிறது.. அட.. கோயம்பத்தூர் ஓப்பணக்கார வீதி லேபிள் போட்ட எள்ளுமிட்டாய் கூட கிடைக்கிறது

    ReplyDelete
  6. //அழகான நடை.. படிப்போரை போரடிக்காமல் கொண்டு செல்கிறது//

    @karthi, he hee, aniyaayathuku comedy pannatha karthi. :)

    //எப்படி இத்தனை வருடங்களை ஞபகம் வைத்து கொண்டீர்களோ..தெரியவில்லை..
    //
    ROTFL :))) sabaash kaarthi. :)

    //கோயம்பத்தூர் ஓப்பணக்கார வீதி லேபிள் போட்ட எள்ளுமிட்டாய் கூட கிடைக்கிறது
    //
    Wow, it's really amazing.

    ReplyDelete
  7. மு.கார்த்திகேயன் said...

    மேடம், பொன்னியின் செல்வன் எங்காவது ஆன்லைனில் கிடைகிறதா என்ன..

    ///

    இங்கே செல்லவும் கார்த்திக்.. :)

    http://www.chennailibrary.com/kalki/ps/ps1-1.html

    ReplyDelete
  8. வந்துட்டு பின்னுட்டம் போடாம போனா விட்டுவிடுவேனா....?

    :)



    (அப்படினு நீங்க கேட்ட கூடாதிலே)

    ReplyDelete
  9. அந்தக் காலத்தில்(கிளம்பீடடாயா..என்று அங்கலாய்ப்பது கேக்குது)denis the menace, phanton காமிக்ஸ் illustrated weekly-யில் விழுந்து விழுந்து படிப்போம். அது ஞாபகம் வந்தது.யூஸ் நாட்டார் கடையில்(indian crocery) புளியங்காய் கூட
    கிடைக்கிறது. நம்மூர் காய்கறிகடைகளில் பார்த்ததில்லை.
    நல்ல தகவல்கள்! கீதாம்மா!

    ReplyDelete