ரொம்ப நாளா ஒண்ணுமே எழுத முடியலை. எதிர்க்கட்சி ஆளுங்களுக்குச் சந்தோஷமா இருக்கும். இந்த அழகிலே "தேவ்" வேறே சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கார். என்னை நினைப்பு வச்சு அழைச்சிருக்கீங்களேன்னு கேட்டால், சங்கத்தின் முதல் தலைவி நான் அப்படினு ஒரு புதுக்கதை விடறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., சங்கத்தின் "தனிப்பெரும் தலைவி" "நிரந்தரத் தலைவி" "ஒரே தலைவி" "யானைத் தலைவி" சீச்சீ, "தானைத் தலைவி" நான் மட்டும் தான்னு எப்படி மறந்து போச்சுன்னு புரியலை! எல்லாம் இந்த "விவசாயி" செய்த சதிவேலைனு நினைக்கிறேன். அப்போவே அடிச்சுக்கிட்டேன், என்னோட படத்தைப் போடுங்க, போடுங்கனு, இப்போ பாருங்க, நான் யாருனு சொல்லிக்க வேண்டிப் போயிடுச்சு. போகட்டும்.
என்னோட பதிவுகளில் பிடிச்ச பதிவு எதுனு எழுதணுமாம், ஹிஹிஹி, நான் எழுதறதும் ஒரு "பதிவு"னு ஒத்துக்கிட்டதே அதிகமா இல்லை? கொஞ்சம் ஓவராவே இருக்குனு எனக்கே தோணுது! அது சரி, தேவ், என்னை வச்சுக் காமெடி, கீமெடி ஏதும் பண்ணலையே? எனக்குப் பிடிச்ச பதிவுகள் வரிசையிலே எதை எழுதறது? நம்ம அதியமான்ராஜஸ்தான் சிதோட்கட் பத்தியும், குஜராத் பத்தியும் எழுதின பதிவுகள் பிடிக்கும். அப்புறமாய் நம்ம அணுக்கத் தொண்டராய் இருந்து (பொன்னையன் மாதிரி? :P) தற்போது ஒதுங்கி இருக்கும், கார்த்திக், எழுதும் கிராமத்துப்பதிவுகள், வேதா, முயல்எழுதும் பதிவுகள், போல என்னால் எழுத முடியலையேனு இருக்கு.
மற்றபடி மத்தவங்க பதிவுகள் எல்லாம் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அவங்க எல்லாம் எழுதறதுக்குக் கிட்டே கூட என்னால் போக முடியாது. நான் குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று பேரும் தங்களோட அனுபவங்களை என்னை மாதிரி எழுதறாங்கனாலும் ரொம்பவே நல்லா இருக்கு. அதுவும் வேதாவும், கார்த்திக்கும் கவிதைகளிலே கூடக் கலக்கறாங்க. இப்படி எல்லாரும் நல்லா எழுதிட்டு இருக்கும்போது நான் பேத்தறதை நல்லா இருக்குனு சொல்ல என்னோட மனசாட்சியே ஒப்ப வேண்டாமா? ஆகவே சாரி தேவ், எனக்குப் பிடிச்ச மாதிரி ஒண்ணுமே இல்லை. ஏதோ எழுதறேன், அவ்வளவு தான். மத்தபடி நானும் மூன்று பேரைக் கூப்பிடணுமாம். இல்லையா? யாரைக் கூப்பிடறது? எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டு ஆச்சு, நான் கூப்பிட்டு ஏற்கெனவே சில பேர் ஒண்ணுமே எழுதலை. சிபியைக் கூப்பிட்டால் அவர் வந்து "பிடிச்ச பதிவு" அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டுட்டுப் போயிடுவார். ஆள் மாட்டவே மாட்டேங்கறார். இல்லைனா "குமார காவியம்"னு சொல்லி மிரட்டியாவது எழுத வைக்கலாம். இ.கொ. புரியாத மொழியில் அகராதியைப் பார்த்து பயமுறுத்திட்டுப் போயிடுவார். வேதா ஏற்கெனவே நிறைய அர்ரியர்ஸ்! அம்பி? ம்ம்ம்ம்ம்ம்ம்? அம்பி, இப்போ பதிவே எழுதறதில்லை, கணேசனுக்கு வேலை ஜாஸ்திங்கறதாலே! கணேசன், உன்னாலே உதவ முடியுமா உங்க அண்ணனுக்கு? மதுரையம்பதி? புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காராமே? எழுதுவாரா? தெரியலை! திராச சார்? ஒரு முறை மாட்டி விட்டாச்சு. சுமதி? அர்ரியர்ஸ்! ரசிகன், வேணாம், பேத்துவார் ரொம்ப. ஏற்கெனவே அறுவை தாங்கலை! புலி? குகைக்கு வந்துடுச்சா தெரியலை! ராம்? இருக்கிற பிடுங்கல் பத்தாதுன்னு மதுரைக்காக இன்னும் வேறே ஏதோ செய்யப் போறாராம். ஒருவேளை, "ரஞ்சனி"னு சொன்னா ஒத்துக்குவாரோ? ம்ம்ம்ம்ம்ம்? தெரியலையே? :P:P:P:P மணிப்பயல்? இப்போ ஷேர் இருக்கிற நிலைமையிலே எழுதுவாரா? தெரியலை! அபி அப்பா? ம்ஹூம், ஆள் அட்ரஸே தெரியலை! :( கோபிநாத்! வேணாம், ஏற்கெனவே கொடுத்த மொக்கையைச் சரியா எழுதலை. ஆகவே யாருக்குமே இல்லை, வர்ட்டா!!!!
\\ஆகவே சாரி தேவ், எனக்குப் பிடிச்ச மாதிரி ஒண்ணுமே இல்லை. ஏதோ எழுதறேன், அவ்வளவு தான்.\\
ReplyDeleteதன்னடக்கத்தில் எங்கள் தலைவியை அடிச்சிக்க ஆளே இல்ல...ஆனாலும் தலைவி இது கொஞ்சம் ஓவரு ;))
இன்னொரு விஷயம் பதிவு லிங்க் எல்லாம் நீங்களே கொடுத்திங்க போல..அதான் ஒன்னு கூட சரியாக வேலை செய்யவில்லை..;))
\\கோபிநாத்! வேணாம், ஏற்கெனவே கொடுத்த மொக்கையைச் சரியா எழுதலை\\
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
#1, viveehanandar kurukku santhu,
ReplyDeleteDubai bustand arukil,
Dubai:-))
பேசாம நீங்களே எல்லார் பேர்லேயும் எழுதலாம்.
ReplyDelete//பேசாம நீங்களே எல்லார் பேர்லேயும் எழுதலாம்.//
ReplyDeleteரீப்பீட்டே....
@கோபிநாத், எனக்கு ரத்னேஷோடது மட்டும் வரலை, மத்தது வருது, என்னோட ப்ளாக் லிங்கில் இருந்து கூடத் திறக்கிறதில்லை, இருந்தாலும் வேதாவுக்கும், ரத்னேஷுக்கும் பெயரை மாத்தி இருக்கேன். மத்தது நல்லாவே வருது. நான் குறிப்பிட்ட பதிவைத் தேடி எடுத்துப் போட நேரம் இல்லை, அவங்க பதிவில் போய்த் தேடணும், சோம்பல், அதனால் வலைப்பக்கம் மட்டுமே லிங்க் கொடுத்தேன்.:)) ஆனாலும் நம்ம திறமையைக் கண்டு பிடிச்சதுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்!
ReplyDelete@கோபிநாத், கிர்ர்ர்ர்ர்ர், நீங்க மட்டும் சபையில் வச்சு மானத்தை வாங்கி இருக்கீங்க, பரவாயில்லையா, இரண்டுக்கும் சரியாப் போச்சு! :P
ReplyDelete@அபி அப்பா, அந்த விலாசத்துக்குத் தான் நடந்தே வந்து தேடினேன், ஒருவழியாக் கண்டு பிடிச்சாச்சு! :))))))))
@வேதா, என்ன பெருந்தன்மை, என்ன பெருந்தன்மை, போங்க, கும்மி அடிக்கக்கூட அர்ரியர்ஸ் கேட்கும் ஒரே ஆள் நீங்க தான்! :P
ReplyDeleteதிராச, சார், என்னோட பக்கத்திலேயே ஒழுங்கா எழுத முடியலை, இதிலே இந்த உ.கு. தேவையா?
@மதுரை, என்ன ஒத்து பலமா ஊதியாகுது? :P
எல்லாரையும் பாராட்டினிங்களே.. உங்க மொக்கை புகழை பரப்பற என்னிய விட்டுட்டிங்களேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்.
ReplyDelete//ரசிகன், வேணாம், பேத்துவார் ரொம்ப. ஏற்கெனவே அறுவை தாங்கலை!//
ஹிஹி... ரசிகன் சரித்தரத்துல நின்னுட்டேன்.. (யாருப்பா அது?.. ஏன் நிக்கனும்?..வேணுமின்னா ஒக்காந்துக்கலாமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேக்கறது? :) )
ரொம்ப நன்றிகள் அக்கா..ஹிஹி..:))
/ராம்? இருக்கிற பிடுங்கல் பத்தாதுன்னு மதுரைக்காக இன்னும் வேறே ஏதோ செய்யப் போறாராம். ஒருவேளை, "ரஞ்சனி"னு சொன்னா ஒத்துக்குவாரோ? ம்ம்ம்ம்ம்ம்? தெரியலையே?//
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நீங்க கூப்பிட்டாட்டியும் நானே எழுதிட்டேன்..... :)
எங்கள் தானைத் தலைவிக்கே பிடிச்ச மாதிரி நான் எழுதிருக்கேனா...என் பேரையும் இந்தப் பதிவுல நான் காண்பது கனவா? நிஜமா? தலைவியைக் கிள்ளிப் பாத்தா தான் தெரியும் :)
ReplyDeleteமேடம், எனது கிராமத்து பதிவுகள் பிடிக்கும் என்று சொன்னது மிகவும் மகிழ்சியை உண்டாக்கியது.. நன்றி.. ஒதுங்கு எல்லாம் இல்லீங்க மேடம்.. இப்போதெல்லாம் வாரதிற்கு ஒன்றாவது எழுதிவிடுகிறேன்.. நானும் இந்த சங்கிலி தொடரை எழுதணும்..
ReplyDelete