எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 10, 2008

அனுபவம் புதுமை -4 அல்லது 5? தெரியலை!

நாங்க ஸ்வாமிமலைக்குப் போய்த் தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் போயிட்டுப் பின் மதுரைக்கு நேரே போகலாமா, இல்லை நடுவழியிலேயே தங்கலாமான்னு விவாதிச்சோம், எங்க டிரைவருக்கு அர்த்த ராத்திரியானாலும் மதுரைக்குப் போயிடணும்னு ஒரே ஆசை, ஆனால் எங்க பையனுக்கோ இரவில் போக இஷ்டம் இல்லை, காலையில் போகலாம்னு சொல்லிட்டான், மதுரைக்கு அருகே உள்ள எங்க கிராமத்துக்கு மறுநாள் போகலாம்னு கேட்டப்போ, அங்கே கோவிலைச் சுற்றி வராக நதியின் வெள்ளம் இன்னும் வடியலை, அதனால் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிட்டாங்க. நாம் போனது டிசம்பர் 25 தேதின்னாலும், இங்கே தான் மாதம் மும்மாரி இல்லை, 4,5 மாரி கூடப் பெய்யுதே! இப்போக் கூடப் பாருங்க, 2 நாளா மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே! அதுவும், நான் மோர் மிளகாய், சுண்டைக்காய், மிளகு தக்காளி என்னும் மனைத்தக்காளி போன்றவற்றை வற்றல் போடுவதற்கு மோரில் ஊறப் போட்ட அன்னிக்கே மேகம் கருக்குது, மழை வரப் பாக்குது தான். அதை எடுத்து வெயிலில் வைச்சால் உடனேயே மழை கொட்ட ஆரம்பிச்சுடும், எங்க பையன் யு.எஸ்ஸுக்குத் திரும்பும் முன்னர் என்னிடம் கண்டிப்பாய் நீ இப்போ எதுவும் போட்டு வைக்காதே, விமானம் எங்கேயாவது கான்சல் ஆயிடப் போகுது, இல்லைனா மழையிலே போகும்போது நனைஞ்சுட்டே பெட்டி, படுக்கையை எடுத்துட்டுப் போகணும்னு சொல்லி என்னைத் தடுத்துட்டான். ஆக மொத்தம், நாம எங்கே போனாலும் மழை நம்மைத் தொடரும்கிறது என்னமோ உண்மை! அதுக்காக எல்லாம் அஞ்சினால் நாம் வீராங்கனையாக இருக்கிறது எப்படி? :P (எல்லாம் "நமக்கு நாமே" திட்டத்தின் படி வந்த பட்டம்தானுங்க, நல்லா இல்லை?)

தஞ்சாவூரில் என் பெரிய மாமியாரைப் பார்த்துட்டுத் திரும்பும் போது மணி கிட்டத் தட்ட 7-00(இரவு) ஆகி விட்டது. தஞ்சாவூரிலேயே சாப்பிடலாம்னு சொன்னதுக்கு,என் பையனும் ஒத்துக்கலை, ம.பா. சும்மாவே நான் என்ன சொன்னாலும் மறுக்கிறதே அவர் வேலை, இப்போ பையன் வேறே சேர்ந்தாச்சு, ஆகவே அடுத்துப் புதுக்கோட்டையில் தங்கலாம்னு பையனோட எண்ணம். கையிலே தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்தைச் சொல்லும் படம் வச்சுட்டு அவன் தான் டைரக்ட் செய்துட்டு இருக்கான். அப்படி இருந்தும் டிரைவருக்கு மதுரை போகணும்னு ஆசையோ, இல்லை புதுக்கோட்டையில் தங்கும் இடம் எல்லாம் எப்படி இருக்கும்னு தோணிச்சோ தெரியலை, நாங்க சொல்லச் சொல்ல அவர் பாட்டுக்குத் திருச்சி வழியில் வண்டியை வேகமாய் விட்டுட்டு வரார். வேகத்தில் எதிரே வரும் வண்டிகளின் விளக்குகள் கண்ணைக் கூசும் வெளிச்சத்துடன் வரும்போது பயமாவே இருக்கு. உண்மையில் சாலைவிதிகளின்படி அப்படி வெளிச்சம் காட்டும் விளக்குகளைப் போடலாமானு தெரியலை. வல்லம் கல்லூரிக்கு வந்தாச்சு. அப்புறம் தான் டிரைவர் ஒத்துக்கிறார், இது திருச்சி வழின்னு. திரும்பப் போகணும்னு முடிவு எடுத்துட்டார். எனக்கு இவ்வளவு தூரம் வந்தாச்சு, திருச்சியே போகலாமேன்னு ஒரு ஆசை, யார் கேட்கிறாங்க நம்மை? புதுக்கோட்டைக்குத் திரும்பி, திரும்ப ஒரு முறை புதுக்கோட்டை ராஜாவின் சரித்திரத்தைப் பையனுக்குச் சொல்லி, பத்தாதுக்கு ஜெமினி கணேசனுக்கு இந்த ஊர்தான்னும் சொல்லி, ஒருவழியா வந்தாச்சு.

புதுகைத் தென்றல்? அது என்னங்க? இப்படி ஒரு ஊரா இருக்கு உங்க ஊர்? இரவு 9-00 மணிக்கே கடையைக் கட்டிடுவாங்க போலிருக்கே? தங்குவதற்கு நல்ல லாட்ஜ்&சாப்பிட நல்ல ஹோட்டல்னு கேட்டதுக்கு ஒருத்தர் என்ன நினைச்சாரோ தெரியலை, அங்கே இருந்த ஒரு கையேந்தி பவனைக் காட்ட, நாங்களும் அங்கே பக்கத்தில் ஏதோ லாட்ஜ் இருக்காக்கும்னு நினைச்சுப் போக அப்புறம் யார் கண்ணிலோ பட்டது ஹோட்டல் மாரிஸ் பெயர். உடனேயே அங்கே போய் அறை பதிவு செய்யறேன்னு போயிட்டான் பையன். அறை என்னமோ நல்லாத் தான் இருந்தது. ஆனால் வெந்நீர்தான் வராதாம். இத்தனைக்கும் அது ஸ்டார் ஓட்டல்னு சொன்னாங்க. சரி, வெந்நீர்க் கவலையைக் காலம்பர பட்டுக்கலாம்னு சாப்பிட அங்கேயே பக்கத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்குப் போனோம். விலை எல்லாம் இப்போ தங்கம் விக்கிற விலைதான் அதிகமாச் சொல்லலை. ஆலு மட்டர் கேட்டதுக்கு, ஒரே ஒரு உருளைக்கிழங்குத் துண்டம் போட்டு, பேருக்குக் கூடப் பட்டாணி இல்லாமல் ஒரு க்ரேவி வந்தது. அவரிடம் ஆலு மட்டர் நல்லா இருக்குமா என்றதுக்கு அவர் முன்பே "க்ரேவி"தானே சார், நல்லாவே இருக்கும்னு சொல்லி இருந்தார். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். சாப்பிட்டோம்னு பேர் பண்ணிவிட்டுப் படுத்தோம். மறு நாள் மதுரையில் நடக்கப் போவதை அறியாமல். படம் எங்கே இருக்குனு தெரியலை, தேடிட்டு இருக்கேன், கிடைச்சதும் போடறேன்.

5 comments:

  1. //எங்க பையன் யு.எஸ்ஸுக்குத் திரும்பும் முன்னர் என்னிடம் கண்டிப்பாய் நீ இப்போ எதுவும் போட்டு வைக்காதே, விமானம் எங்கேயாவது கான்சல் ஆயிடப் போகுது, இல்லைனா மழையிலே போகும்போது நனைஞ்சுட்டே பெட்டி, படுக்கையை எடுத்துட்டுப் போகணும்னு சொல்லி என்னைத் தடுத்துட்டான்.//

    haa..haa...

    ReplyDelete
  2. சென்ற பதிவின் பின்னூட்டம் இப்பதான் அனுப்ப முடியுது:

    கிழக்குகடற்கரைசாலை வழியே
    புதுச்சேரி-> கடலூர்->சிதம்பரம்->
    மயிலாடுதுறை சென்றிருந்தால்
    பயணத்தில் இவ்வளவு கஷ்டம்
    இருந்திருக்காது

    ReplyDelete
  3. நைஸ்

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  4. ஆஹா,
    எங்க ஊருக்குப் போயிருந்தீங்களா?
    அது ஒண்ணும் அவ்வுளவு பெரிய ஊர் இல்லை.சின்ன ஊர்தான். எங்க ஊருக்கு டிராபிக் லைட்டெல்லாம் போட்டிருந்ததைப் பார்க்க எனக்கே சிரிப்பு வந்தது.

    மண்ணின் மணம் மாறாத ஊர்தான்.

    1 மணி நேரப்பய்ணத்தில் திருச்சியோ,தஞ்சாவூரோ போயிடலாம் என்பதால் இங்கே ஹோட்டல்கள் பெரிசாக இருக்காது.

    சாப்பிட நல்ல ஹோட்டல்கள் உண்டே?பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில், அய்யா டவர் அருகில் என்று நல்ல இடங்களும் இருக்கும். நீங்கள் ஹோட்டல் சிவாலயா போயிருக்கலாம். அங்கே 2 பிர்ச்சனை, அங்கே பார் இருக்கு, அருகில் தியேட்டர்.

    சென்றமுறை ஹோட்டல் மாரிஸில்தான் எங்கள் இலங்கைவீட்டு
    உரிமையாளர் தங்கியிருந்தார்.

    ReplyDelete