எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 28, 2008

என்னால் எழுத முடியாத "மொக்கை"

கொஞ்ச நாளாவே சரியா ஒண்ணும் எழுத முடியலை. ஆரம்பிக்கிற எல்லாமே பாதியிலே நிக்குது. வேறே வலைப்பக்கங்களுக்கும் போக முடியலை. இந்த மாதிரி ஒரு தேக்க நிலை ஏற்பட்டதே இல்லை. எங்கேயாவது ஊருக்குப் போனால் தவிர, அநேகமாய் எப்படியாவது ஒரு போஸ்ட் போட்டுடுவேன், ஆனால் இப்போ முடியலை. கட்டாய ஓய்வில் நான் பார்க்க நேர்ந்த சில படங்கள், சில தொடர்கள், சில புத்தகங்கள்னு இருக்கு. ஆன்லைனில் இருக்கும்போதும் சில சமயம் வலைப்பக்கமே திறக்க வராது. இன்னிக்கு என்னமோ முயற்சி செய்ததில் காலம்பர ப்ளாகர் மெயிண்டனன்ஸ் அப்படினு சொல்லிடுச்சு. இப்போ 1-30 மணியிலே இருந்து முயற்சித்து இப்போ 2-05-க்குத் திறந்து கொண்டது அரை மனசா.

எல்லாரும் காதலர் தினம் கொண்டாடினப்போ "பொதிகை"யும் கொண்டாடினது, அதிலே வந்த இரு படங்கள் "பூவெல்லாம் கேட்டுப் பார்", "மெளன ராகம்", இதிலே மெளனராகம் எத்தனையாவது முறை? படத்தோட முடிவு என்னைப் பொறுத்த வரை மோகன் அந்த டைவோர்ஸ் கடிதத்தை ரேவதியிடம் கொடுத்து அவர் கிழிச்சு எறிஞ்சதுமே முடிஞ்சுடுது. ஆனால் தமிழ் சினிமாவின் மரபை ஒட்டின ஒரு ஆண்டி கிளைமாக்ஸோடு படம் முடியும். நான் எப்போவுமே அந்தப் பகுதி வரும்போது எழுந்து போயிடுவேன். நல்லவேளையா இந்த முறை படம் பார்க்கவே இல்லை. "பூவெல்லாம் கேட்டுப் பார்" படம் வசந்தோடதோ? தெரியலை! படம் பாதியிலே இருந்து தான் பார்த்தேன். சூரியா, ஜோதிகா முதல் முதலாய் ஜோடி சேர்ந்த படம்னு சொல்லுவாங்க. அவங்க வாழ்க்கையை நினைவு கூரும் விதமான வசனங்கள் இருந்தது தற்செயலா? முன்கூட்டியா தெரியலை! முதல்லே இருந்து பார்க்கலையா, புரியலை, கொஞ்சம் கொஞ்சம். ஹிஹிஹி, நமக்குத் தான் ஆரம்பத்திலே இருந்து பார்க்கும் அதிர்ஷ்டமோ, வழக்கமோ கிடையாதே? அப்படி ஆரம்பத்திலே இருந்து பார்த்தால் அதுக்கு முடிவு பார்க்க முடியாது. அந்த மாதிரிப் படங்களில் சமீபத்தில் பார்த்ததில் "பருத்தி வீரன்" இன்னும் முடிவு பார்க்கலை. அப்புறம் "காக்க, காக்க" படமும் முடிவு பார்க்கமுடியலை. டிவியிலே படம் போட்டால் கூட அநேகமாய் முடிவு வரும் நேரம் கரண்ட் கட்ஆயிடும். இந்தப் படம் பார்க்கும்போதும் கரண்ட் கட் ஆயிடுச்சு. அப்புறம் பார்த்தால் படம் முடிஞ்சிருந்தது. இந்த லட்சணத்தில் இருக்கு படம் பார்ப்பது. இதிலே விமரிசனம் ஒரு கேடானு நினைக்காதீங்க. என்ன இருந்தாலும் கதை தெரியுமே. அதுக்குத் தான் விமரிசனம்.

அப்புறமாய் ரொம்ப நாளாய் ஒரு மண்டை வெடிக்கிற கேள்வி, மண்டையைக் குடையுது, இந்தப் பாலும், பழமும் படம் இருக்கே, அதிலே சரோஜா தேவி செத்துப் போய்ச் சுடுகாட்டிலே போய் சிவாஜி, "போனால் போகட்டும் போடா" வெல்லாம் பாடுவார்னு கேட்டிருக்கேன்,(இன்னும் படம் முழுசும் பார்க்கிற பாக்கியம் கிடைக்கலை! :P) ஆனால் அப்புறம் பார்த்தால் அவங்க ஸ்விஸ் போயிருக்கிறாப்போலயும், அங்கே போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டதாயும் கதை சொல்லுவாங்க. அப்போ யாரோட உடலை எரிச்சாங்க? ரொம்பவே கவலையா இருக்குங்க இந்த விஷயத்திலே. சிவாஜிக்கு அப்போவே கண்ணு தெரியாமப் போச்சா? அப்படின்னா மத்தவங்க யார் உடலை எடுத்துட்டுப் போய் சரோஜாதேவினு சொல்லி எரிச்சிருப்பாங்க? ஒண்ணுமே புரியலைங்க, உலகத்திலே. ரொம்பவே கவலையா இருக்கு இப்போ இந்த விஷயம் தான். இப்போத் தான் கேடிவியிலே இல்லை, சன் டிவியிலோ "உலகத் தொலைக்காட்சிகளிலே" முதல் முறையாக இந்தப் படம் போட்டிருக்காங்க, எனக்குத் தெரியாமப் போயிடுச்சு. டிவி எல்லாம் பார்க்கிற வழக்கமே இல்லாமப் போனது எவ்வளவு தப்புனு இப்போப் புரியுது.


என்னோட ம.பா. வுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை. சீரியல் தான் அவரோட கவலை. கஸ்தூரியில் ஆரம்பிச்சு வரிசையா ஒவ்வொருத்தருக்காக் கவலைப் படுவார். ஆனந்தம் அபி,தப்பாச் சொல்றேனோ? ஆனந்தம் அபிராமியா? ஏதோ ஒண்ணு, அதிலே வர ஒரு ஆள், இன்னொரு சீரியலிலும் வராரா, எனக்கு ரெண்டும் குழப்பம். இந்த ஆள் தீவிரவாதியேனு ஒரு சீரியலில் கேட்கப் போக என்னை ஒரு அல்பத் தனமாய்ப் பார்த்த ம.பா. அது ஆனந்தம், இது வேறே சீரியல், நீ வந்து குட்டையைக் குழப்பாதேனு சொல்லிட்டார். அப்புறமாய்ப் பார்த்தால் ஆனந்தத்தில் இன்ஸ்பெக்டர் ஜமுனா, வேறே ஒரு சீரியலில் கணவனால் ஏமாற்றப் படறவளாய் வரா போலிருக்கு. இவள்தான் போலீஸ்காரி ஆச்சே, இப்படி ஒருத்தனை ஏன் கல்யாணம் செய்துக்கறானு கேட்கப் போய், முறைச்சாரே ஒரு முறை. என்னத்தைச் சொல்றது? சானல் மாத்தி, மாத்தி, ரிமோட்டைத் திருப்பினா என்ன புரியும் சொல்லுங்க! அதிலே எல்லா சீரியலும் பார்த்தால் ஒரே மாதிரியாக எல்லாமே நடக்குது. இந்த நளினி எல்லாத்திலேயும் ஒரே காஸ்ட்யூமிலே வராங்க. ஒரே மாதிரியா நடிக்கிறாங்க. பாவம், ஒரு சீரியல் காஸ்ட்யூமே இன்னொரு சீரியலுக்கும் உபயோகிக்கணும் போலிருக்கு அவங்களுக்கு. ரொம்பக் கஷ்டம் போலிருக்கு! சீரியல் பார்க்கணும்னு உட்கார்ந்தால், "கஸ்தூரி"னு ஒண்ணு, அதிலே ஆரம்பிச்சு, "கோலங்கள்" வரை எல்லாத்திலேயும் ஏன் இரண்டு மனைவிகள்? சீரியல்னா இரண்டு மனைவிகள் இருக்கணும்னு ஏதாவது சட்டம் போட்டுட்டாங்களா? அப்புறம் சொத்துக்காக எல்லா சீரியலிலேயும் சொந்த அக்கா, அண்ணா, தம்பி, அப்பா, அம்மா, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, னு எல்லா உறவையும் கொச்சைப் படுத்திட்டுக் கேவலப்படுத்திட்டு இருக்காங்க. இதைப் பார்க்கும் சின்னப் பையன், பொண்ணு எல்லாத்துக்கும் என்ன தோணும்? உறவுக்காரங்களையே தப்பா நினைக்கத் தோணாது? இதைப் பார்க்கும்போது, நல்லவேளை, நமக்குச் சொத்து ஒண்ணும் இல்லைனு ஆறுதலா இருந்தது.

இந்த ரசிகன் யானை நிஜமாவே நான் வாங்கிட்டேன் போலிருக்குனு நினைச்சுட்டு இருந்திருக்கார். ஆமாம்னு சொல்லி யானைச் செலவுக்குப் பணம் கொடுங்கனு கேட்டிருக்கணும். அப்புறம் அபி அப்பா "வலைச்சரம்" ஆசிரியர் ஆக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். எல்லாம் முத்துலட்சுமியை மிரட்டித் தான் வாங்கி இருப்பார் போலே. முத்துலட்சுமியைக் கேட்டால் தெரியும். முதல் நாள் போனது தான். இன்னிக்குச் சாட்டிங்கிலே கேட்டார், ஏன் பார்க்கலைனு, (நல்லவேளை, இணையம் இல்லைனு மனசிலே நினைச்சு சந்தோஷப் பட்டுக்கிட்டேன்).அப்புறம் சூடான் புலியும் இந்த வலை உலகிலே தான் இருக்கு. ஆனால் ரொம்ப பிகுவா உட்கார்ந்திருக்கு. சரினு வந்துட்டேன். கண்டுக்கலையாம். ஓகே, புலினா பதுங்கிட்டுத் தான் வெளியே வரும். சும்மா ஒரு மொக்கை போடலாம்னு வந்தேன். ஆனால் மொக்கை போட முடியலை. மூட் அவுட். அதான் ஏதோ எழுதிட்டுப் போறேன். வர்ட்டாஆஆஆஆஆஆ????????? அப்புறமாய்ப் பார்க்கலாம்.

10 comments:

  1. என்னனு யோசிக்கிறவங்களுக்கு, கொஞ்சம் வெயில் அதிகமா இருக்கு, அதான், இன்னும் போகப் போக எப்படி இருக்குமோ சொல்ல முடியாது, தயாராக இருக்கவும்! :P

    ReplyDelete
  2. பா ப ல வர சுடுகாடு சும்மா ஒரு எபெக்டுக்குதான். ஒரு ரயில் விபத்துல நிறைய பேர் செத்துபோறாங்க. அதுல சரோஜா தேவியும் போனதாக நினச்சுட்டாங்க. விபத்துல உடல் எல்லாம் சரியா அடையாளம் பாக்க முடியாதில்லையா? ஆனா ரயில்ல போகும்போது ஒரு நோயாளியா இருந்து ச. வால் நல்லா கவனிக்கப்பட்டவர் அவரை அழைச்சிட்டு போயிடறார்.
    அவ்ளோதான்.
    இதெல்லாம் எப்படி தெரிஞ்சதுனா... ஒன்னுமில்லை படம் பாத்தேன். திருட்டு சிடி யான்னு கேக்காதீங்க. நான் திருட்டு சிடி பக்கமாட்டேன்னு சபதம் பண்ணி இருக்கேன். டிவிடி மட்டுமே பாப்பேன்.

    ReplyDelete
  3. aaha aaha... nalla mokkai akka

    natpodu
    nivisha

    ReplyDelete
  4. \\"பூவெல்லாம் கேட்டுப் பார்" படம் வசந்தோடதோ? தெரியலை!\\

    வசந்தோ தான்..;)

    \\என்னோட ம.பா. வுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை. சீரியல் தான் அவரோட கவலை. \\

    ஆகா...வித்தியாசமான ஜோடி தான் ;))


    \\\எல்லாம் முத்துலட்சுமியை மிரட்டித் தான் வாங்கி இருப்பார் போலே. \\

    தலைவி நீங்க ஒரு திர்கதரிசி ;)) (யப்பா.. கொளுத்தி போட்டாச்சு..;))

    ReplyDelete
  5. என்னது இதுவே மொக்கை இல்லையா? :p

    இப்ப தான் மார்ச் வர போகுது. இன்னும் ஏப்ரல், மே மாதம் வேற வருது. முருகா! எல்லாரையும் காப்பாத்து! :)))

    ReplyDelete
  6. ஹாய் தலைவி,

    //இந்த ரசிகன் யானை நிஜமாவே நான் வாங்கிட்டேன் போலிருக்குனு நினைச்சுட்டு இருந்திருக்கார்..//

    ஹா ஹா ஹாஹா...உங்ககிட்டயும் ஏமாந்துட்டாரா? அய்யோ அய்யோ...
    சரியான அசடு தான்.எல்லாரையும் நம்பிடராரு.

    ReplyDelete
  7. // சும்மா ஒரு மொக்கை போடலாம்னு வந்தேன். ஆனால் மொக்கை போட முடியலை. மூட் அவுட். அதான் ஏதோ எழுதிட்டுப் போறேன். வர்ட்டாஆஆஆஆஆஆ????????? அப்புறமாய்ப் பார்க்கலாம்.//

    ஹா..ஹா... இதுவே மொக்கை இல்லியா?..
    அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  8. மொக்கை மாதிரி இருக்கறதே இப்பிடின்னா தலைவியோட மொக்கை எப்படி இருக்கும்? ஆனாலும் ரசித்தேன்.

    ReplyDelete
  9. சூப்பர் மொக்கை எல்லாம் இல்லக்கா..வெக்கை இல்லா மொக்கை..:)

    நல்லா எழுதி இருகீங்க.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஐய...பாலும்பழமும் கதை கேக்குற காலமா இது? என்ன கொடுமை சரோஜாதேவி இது?
    மொக்கையின்னாலும் மொக்கை...மொக்கையான மொக்கை!!
    யப்பா!..ஏங் கை!!!!

    ReplyDelete