எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 03, 2008

அனுபவம் புதுமை -2


சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறேன்னு கேஆரெஸ் என்னிக்குச் சொன்னாரோ தெரியலை, அவர் வாயில் சூடா "ஜீரா"வைத் தான் ஊத்தணும், நான் இங்கே சாண்ட்ரோ இல்லை, லிமோவே ஓட்ட வேண்டி இருக்கு. அடுத்து அடுத்துப் பிரச்னைகள் வந்தால், அதுக்கு நடுவில் எழுதறேன்னு ஏதோ பேர் பண்ணறேனே அதே பெரிய விஷயம். இதிலே நேயர் விருப்பம் வேறே நடு, நடுவில். பத்தாக்குறைக்கு வல்லி சிம்ஹனும், துளசியும் அனுபவம் புதுமை, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்கிறாங்க, இந்த திவாவோ, பழைய பதிவைத் தூசு தட்டி எடுத்து, (ஹச், ஹச், ஹச்,) தும்மலுங்க, ரெயிலிலே இருந்து விழுந்தப்புறம் என்ன ஆச்சுனு எழுதவே இல்லையேன்னு கேட்டுட்டு இருக்கார். அதை விடுங்க, திவா, இப்போ லேட்டஸ்ட் என்னன்னு பார்ப்போமா? பழைய பதிவைப் பார்க்க இங்கே சுட்டாதீங்க, வரலைன்னா, நான் பொறுப்பில்லை, கோபி, இப்போ சரியா?

இங்கே பாருங்கள்.

ஏற்கெனவே உடம்பு சரியில்லாமல் இருந்த எனக்கு, இந்த மருந்து மயக்கத்திலே நடக்கிறதே, பறக்கிறாப்போல இருந்தது. ஆகவே, எப்போவும் தங்கற லாட்ஜிலே லிஃப்ட் வசதி இருந்துச்சு, இங்கே இல்லைங்கிறது கூட உறைக்கலை. பறந்தே போனேன், ஏற்கெனவே ரோடெல்லாம் அவ்வளவு நல்லா இருந்தது, வழு, வழுனு அப்படியே சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ சலவைக்கல் போட்டாப்பல. அதுவும் திண்டிவனத்தில் இருந்து, கும்பகோணம் போகும் வரையும், சேத்தியாத் தோப்புக்கு அப்புறம் அணைக்கரைப் பாலத்தைக் கடந்து போகும் போதும் கைலை யாத்திரையை நினைவு படுத்தும் சாலைகள் மட்டுமில்லாமல், அதை விடத் திக், திக், திக், திக், திக். உண்மையில் நம்ம தமிழ்நாட்டு டிரைவர், கண்டக்டர் எல்லாம் இந்தச் சாலையில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டு சேர்க்கிறாங்களே, அதுக்கே ஒரு "பாரத ரத்னா"வை விடப் பெரிய பரிசா இருந்தால் கொடுக்கலாம்.

அங்கே போய் ரெஸ்ட் எல்லாம் எடுத்துக்க முடியலை, சாமானை வச்சுட்டு மறுநாள் குலதெய்வம் கோயிலுக்குப் போகவேண்டியதற்கு வேண்டிய சாமான்களை வாங்கப் போனோம். என்ன ஒரு ஆச்சரியம்? அங்கே காய், கறிகள் எல்லாம் குறைந்த பட்ச விலை கிலோ 5 ரூ, தானாம். இங்கே கிலோ 20, அல்லது 25 கொடுத்து வாங்கும் வெண்டை, கத்திரி, அவரைக்காய்கள் அங்கே கிலோ 5 ரூ.க்கு வாங்குவார் இல்லாமல் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒருவாரம் ஊர் சுத்தணும்கிறதாலே ஒண்ணும் வாங்க முடியாமல் அவற்றைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுட்டு, வழக்கமாய்ச் சாப்பிடும் பஞ்சாபகேச ஐயர் ஓட்டலில், (அபி அப்பாவும், திராச. சாரும் சொன்ன ஓட்டலை, நாகேஸ்வரன் சன்னதி முழுக்கத் தேடியும் கிடைக்கவே இல்லை, அப்படி ஒரு ஓட்டலே இல்லைனு சொல்லிட்டாங்க! :P) சாப்பிட்டுவிட்டு, மறுநாள் பரவக்கரைக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். சாலை வழக்கம்போல் பல்லாங்குழி விளையாடும் வகையில் அருமையாக இருக்க அரிசிலாற்றங்கரையில் பயணித்தோம். வழக்கமாய் அரிசிலாற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் மன உளைச்சல் இப்போதும் ஏற்பட்டது. அவ்வளவு ஆகாயத் தாமரைகள், பல இடங்களில் சுத்தமே செய்யப் படவில்லை. நடு ஆற்றில் "பார்த்தீனியம்" என்னும் விஷச் செடிகள். ஆற்று மணலெங்கும் வீசி எறியப் பட்ட ப்ளாஸ்டிக் பைகள். (கண்டு பிடிச்சது யாரு? அவங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரணும்!) :( அன்றலர்ந்த மலரை வாழை நாரில் கட்டுவதோ, அதை வாழை இலையில் சுற்றி வைப்பதோ அரிதாகி விட்டது. ப்ளாஸ்டிக் மோகம் அப்படித் தலை விரித்தாடுகிறது. ஆனால் நான் விடாப்பிடியாக நாரில் கட்டிய பூவும் வாங்கிக் கொண்டு, அதை வாழை இலையில் தான் சுற்றித் தரவேண்டும் என அடம் பிடிப்பேன். எந்தக் காட்டில் இருந்து வந்திருக்கீங்க என்ற பார்வையுடன் தேடிப் பிடித்து எடுத்துத் தருவார்கள்.

11 comments:

  1. தப்பான ரூட்ல போயிருக்கீங்க. எங்க ஊர் வழியா அப்படியே சிதம்பரம் பாத்துக்கிட்டு போயிருக்கனும்.
    ப்ளாஸ்டிக் பைய பாத்தாலே எரிச்சல் வருது. எங்க டாக்டரம்மா பார்மஸில ப்ளாஸ்டிக் பையே கிடையாது. உங்க துணிப்பை கொண்டு வாங்க அப்படி பெரிய போர்டு போட்டு வச்சிருக்கு!

    ReplyDelete
  2. ---
    இந்த திவாவோ, பழைய பதிவைத் தூசு தட்டி எடுத்து, (ஹச், ஹச், ஹச்,) தும்மலுங்க, ரெயிலிலே இருந்து விழுந்தப்புறம் என்ன ஆச்சுனு எழுதவே இல்லையேன்னு கேட்டுட்டு இருக்கார். அதை விடுங்க, திவா, இப்போ லேட்டஸ்ட் என்னன்னு பார்ப்போமா? //

    போலாம்பா, ரீட்ஸ்.......

    ReplyDelete
  3. \\பழைய பதிவைப் பார்க்க இங்கே சுட்டாதீங்க, வரலைன்னா, நான் பொறுப்பில்லை, கோபி, இப்போ சரியா\\

    ம்ம்ம்..சரியாக வேலை செய்கிறது...ஆனால் இதை....சரி வேண்டாம் ;))

    அப்புறம் அபி அப்பா சொல்றதை எல்லாம் கேட்காதிங்க...ஏன்னா என்ன சொன்னோமுன்னு அவருக்கே மறந்துடும் ;)

    ReplyDelete
  4. வழக்கமாய்ச் சாப்பிடும் பஞ்சாபகேச ஐயர் ஓட்டலில், (அபி அப்பாவும், திராச. சாரும் சொன்ன ஓட்டலை, நாகேஸ்வரன் சன்னதி முழுக்கத் தேடியும் கிடைக்கவே இல்லை, அப்படி ஒரு ஓட்டலே இல்லைனு சொல்லிட்டாங்க! :P) சாப்பிட்டுவிட்டு, மறுநாள்

    நான் சொன்ன ஓட்டலே பஞ்சாபகேசய்யர் ஓட்டல் தான். என் நண்பர் ராமமூர்தி அவர்ய்டைய பையன்.பசும்பால் காபி ஓட்டல் என்பார்கள்
    மங்களாம்பிகா ஓட்டல் சன்னிதிக்கு செல்லும் கோவில் வழியில் உள்ளது

    ReplyDelete
  5. ஆனால் நான் விடாப்பிடியாக நாரில் கட்டிய பூவும் வாங்கிக் கொண்டு, அதை வாழை இலையில் தான் சுற்றித் தரவேண்டும் என அடம் பிடிப்பேன்


    அதான் தெரிஞ்ச விஷயமாச்சே

    ReplyDelete
  6. திராசா சார் சொல்லும் ராமமூர்த்தி பஞ்சாபகேச அய்யரின் பெரிய மகன். சென்னையில் பேங்கில் வேலை செய்தார். இப்போது இறந்து விட்டார். அவருடைய தம்பிகளில் ஒருவரான பத்மனாபன் கூட சமீபத்தில் இறந்ந்துவிட்டார்.

    இப்போது ஹோட்டல் இல்லை.

    ஒரு நிர்வாகம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் போய் விட்டது அந்த நிறுவனம்.

    இறந்தவரை பற்றி பேச விருப்பம் இல்லை. ஆனாலும்.... வேண்டாம்...

    இனி அப்படி ஒரு ஹோட்டல் பார்ப்பது அபூர்வம்!!

    ReplyDelete
  7. நாகேஸ்வரன் சந்னதியிலே தேடினா எப்படி கிடைக்கும். 3 வது வீடு பஞ்சாமய்யர் வீடு! அதுவும் வித்தாச்சு! கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்தது அந்த ஹோட்டல்!

    மேலும் மங்கள விலாஸ் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் டைமண்ட் தியேட்டர் எதிரே இருக்கிறது!

    ReplyDelete
  8. @அபி அப்பா பத்மநாபன் போனது.தெரியாது.ராமமூர்த்தியும் நானும்..ஒன்றாக பணிபுரிந்தோம்.நல்ல நண்பர்.

    ReplyDelete
  9. நல்லவேளை..... மறக்காமப் பதிவைப் போட்டீங்க.

    இங்கேயும் ப்ளாஸ்டிக் பை பயன்களைக் 'குரை'க்கலாமுன்னு
    99 செண்டுக்கு சூப்பர் மார்கெட்டே துணிப்பை விக்குது.

    வெவ்வெறு கடைகள் வெவ்வெறு கலர்களில்.

    ஒரு நாலுதான் நம்ம வீட்டில் இதுவரை சேர்ந்திருக்கு.

    ReplyDelete
  10. என்ன சாப்புட்டீங்கன்னு சொல்லவே இல்லை?

    ReplyDelete