எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 20, 2008

யானை வாங்கலியோ, யானை!


யானைன்னா பிடிக்காதவங்க யாரு? எல்லாருக்குமே பிடிக்கும் யானைன்னா. என்றாலும் சிலருக்குத் தனிப் பிரியம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும் இல்லையா? எனக்கும் அப்படித் தான். எங்க வீட்டில் யானைப் படம் போட்ட பேப்பரில் இருந்து, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் வரை யானை வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டுச் சொல்லுவாங்க. இல்லைனா அப்புறமாய் நான் அனத்தற அனத்தல் தாங்க முடியலையோ என்னமோ! :P ஹிஹிஹி, டிஸ்கவரி சானலிலே கூட யானை சம்மந்தப் பட்ட டாகுமெண்டரி என்றால் உடனேயே என்ன வேலை இருந்தாலும் உட்கார்ந்து பார்ப்பேன். மத்தது எல்லாம் நேரம் இருந்தால் தான். இந்த வலை உலகுக்கு வந்தப்போ என்னுடைய இந்த "யானைக் காதல்" பற்றி எழுதணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனால் அந்த ஆசையிலே மண் விழுந்தது.

எல்லாம் நான் "துரோணாச்சாரியார்" மாதிரி குருவாக நினைச்சு, வலைப்பூ ஆரம்பிக்கக் காரணமாய் இருந்த துளசியாலே தான். துளசிக்கு லிங்க் கொடுக்க வேணாம்னு தான் கொடுக்கலை. நான் வலைப்பூ ஆரம்பிக்கக் காரணமே துளசியின் வலைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிச்சதும் தான். அவங்க பிரயாணங்களைப் பற்றிய கட்டுரைகளின் மூலம், நாமும் நம்ம பிரயாணங்களைப் பற்றி எழுதலாமேன்னு நினைச்சுப்பேன். இப்படி ஒரு "ஏகலைவி"யாக இருந்து வலைப்பக்கங்களின் அரசியல் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டதின் விளைவு, துளசிக்காக நான் "யானை"யை விட்டுக் கொடுக்க வேண்டியதாப் போச்சு! "கட்டை விரல்" கேட்ட துரோணர் போல துளசி "யானை"யை விட்டுடுங்கனு என் கிட்டே கேட்கலைதான். என்றாலும் குருவுக்குச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை ஒண்ணு இருக்கே! அப்புறமா மெல்ல, மெல்ல, நம்ம யானைக் காதலைத் தெரிவிச்சுக்கலாம்னா அதுக்கும் வச்சாங்கப்பா ஆப்பு! "பொன்ஸை" தனக்குப் பின்னர் தன்னோட யானை வாரிசா அறிவிச்சாங்களா? அப்போத் தான் உறைச்சது, நம்ம ஒரு "ஏகலைவி"னு! குருதட்சிணையும் அப்புறமாய்த் தான் கொடுத்தேன், யானை பத்தி எழுதாமல்.

ஆனால் இப்போ போன வாரம் "திவா" வோட யானைக் குட்டியைப் பத்திப் பேச்சு வந்ததும் எங்கே வாங்கினீங்கனு ஆசையை அடக்க முடியாமல் கேட்டதும் அவர் எனக்கு மெயிலில் அனுப்பின யானைக்குட்டியைத் தான் மேலே பார்க்கிறீங்க. பிறந்து 7,8 நாள்தான் ஆயிருக்காம். என்னைக் கேட்டால் உலகிலேயே அழகான பிராணி யானைதானு கண்ணை மூடிட்டு மட்டுமில்லை, திறந்துட்டும் சொல்லுவேன். அதுவும் இந்தக் குட்டி யானை இருக்கே, அழகோ, அழகு. இன்னும் நிறைய யானை இருக்கு, இலவசமாவே தராங்க, போய் வாங்கிக்குங்கனும் சொன்னார். சரினு போய்ப் பார்த்துட்டும் வந்தேன். இது தான் எல்லாத்தையும் விட சூப்பரோ சூப்பர்! திருஷ்டி சுத்திப் போடணும் போல இருக்கு, இதைப் பார்த்தாலே! கிடைக்குமிடம் நான் ஏங்க சொல்லணும்? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே! அதான் சொல்லலை!

25 comments:

  1. ஹிஹிஹி, இன்னிக்கு எழுத வந்த விஷயமே வேறே, தினம் ஒரு முறை இந்த யானையைப் பார்த்துப்பேனா? அது மாதிரி இன்னிக்கும் பார்க்கும்போது இந்த யானை பத்தி எழுதற ஆசையை அடக்க முடியலை! எழுதிட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. ஏய்..யாரப்ப அங்கே..பொன்ஸ், துளசி மேடம் வரிசியில் கீதாவுக்கும் யானை பிடிக்கும் என்று அறிவித்து விடுங்கள்...

    ReplyDelete
  3. யானை கிடைக்கிறதா?
    ஓ எங்கே கீதா?
    அவங்களே சாப்பாடும் கொடுத்து விடுவாங்களா:))

    நான் கூட நேத்திக்கு யானை அட்டகாசம் டிஸ்கவரில பார்த்தேன்.
    ஆனா நமக்குத் தெரிந்த யானையார் தினம் விக்கினம் தீர உட்கார்ந்து இருக்காரே.

    ReplyDelete
  4. ennanga idu commentum neengaleva?? idu ellam romba over solliten

    ReplyDelete
  5. ஹையோ! செல்லம்போலிருக்கே!!

    ReplyDelete
  6. ஆனையோ ஆனை!
    ஆனைக்கு வாயோட ஓரம் உள்மடங்கி மேலே தூக்கி இருக்கும். அத்னால சிரிக்கிறாப்போல எப்பவும் தோணும். அதனாலேயே அதை பாத்துக்கிட்டே இருக்கலாம்.
    ஆனை கூட்டம் எப்பவும் நகந்துகிட்டே இருக்கணும். நிறைய சாப்பிடனுமே! அவ்ளோ பெரிய உடம்பு, நிறைய கலோரி வேணும். இலை தழைல அதிகமா கிடக்காது. அதனால குட்டி போட்ட 4 மணில கூட்டம் நகர ஆரம்பிச்சுடும். குட்டி முத நாளே 20 கி.மீ நடக்கும். அப்ப நாம?

    ReplyDelete
  7. //யானை கிடைக்கிறதா?
    //The area that attracts all, however, is the one where the elephants are lined up for sale. Sonepur Fair is the only one where such a large number of elephants are sold.

    Sonepur is 25 kilometres from Patna which is well connected by air, rail and road.
    You can also purchase elephants at a lesser price say Rs.7,99,999 onwards in Sri Lanka. But transport costs are prohibitive.(Note: Debit cards are not allowed). for Further details please log on (with sufficient bank balance to)
    http://www.elephantsinneed.org/tame.html


    ஜாதகத்தில் மேஷ லக்னமாகி, லக்னத்தில் செவ்வாயும் 2ல் சுக்கிரனும் 4ல் சந்திரனும் 9ல் குருவும் இருந்தால்
    யானை வாங்கும் யோகம் உண்டு என பிருஹத் சம்ஹிதை கூறுகிறது.

    நான் போன வருடம் கோவில் ட்ரஸ்டி ஒருவரது ஜாதகத்தை வேறு காரணங்களுக்காகப்
    பார்த்தேன். அவரது ஜாதகத்தில் இந்த யோகம் இருப்பது தெரிந்து அவரிடம் கேட்டேன்.
    உண்மையாகவே ஒரு யானை வாங்கி கோவிலுக்கு அவர் குடும்பத்தார் கொடுத்திருக்கின்றனர்.

    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullaValaipathivugal.blogspot.com

    ReplyDelete
  8. அம்பத்தூர்லே அதெல்லாம் வெசுக்கமுடியாது.படத்திலே வேணா மாட்டலாம்.தண்ணிகஷ்டம் வந்தா யாணை எப்படி குடிக்கும் குளிக்கும்?

    ReplyDelete
  9. @பாசமலர், நன்னி, நன்னி! இந்த அறிவிப்புக்கு அப்புறமாவது மனசு மாறறாங்களானு பார்ப்போம்! :P

    @வல்லி, உங்களுக்கு இல்லாத யானையா? கிடைக்குமிடம் மெயிலே தரேன், அதுவரைக்கும் சூரி சார் சொல்ற இடம் கட்டுப்படி ஆகுமானு யோசிங்க! :))))))

    @டிடி அக்கா, கொடுத்த மெயிலுக்கு பதிலே இல்லை? இதிலே இந்தக் கேள்வி வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P

    ReplyDelete
  10. @நானானி, ஆமாம், ரொம்பவே செல்லமாத் தான் இருக்கு இல்லை?

    @திவா, கீழே திராச சார் கேட்டிருக்கும் கேள்விக்குப் பதில் சொல்லப் போறேன், என்னனு வந்து பார்த்துட்டுப் போங்க! :P அப்புறம் நடக்கலாம், 200 கி.மீ. கூட யானையோட!

    ReplyDelete
  11. சூரி சார், ஜாதகம் பார்க்காமலேயே தெரியும், நான் யானை வாங்கப் போறதில்லை! ஏதோ இப்படியாவது பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம்னு ஒரு எண்ணம் அவ்வளவு தான்! :)))))

    @திராச, சார், அதெல்லாம் யானைக்கான செலவு என்னோடது இல்லையே? திவா தான் கொடுக்கப் போறார், அக்காவுக்காக இது கூடத் தம்பி செய்ய மாட்டாரா என்ன? யானை அனுப்பும்போதே அதெல்லாம் ஒப்பந்தம் போட்டாச்சு! :)))))))))

    ReplyDelete
  12. @டிடி அக்கா, கொடுத்த மெயிலுக்கு பதிலே இல்லை? இதிலே இந்தக் கேள்வி வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P//
    neenga anupina mailuku bathil podanuma.. verum invitethanenu pesama irunthiten.. seri seri kochikadeenga.. reply panniten.. :D

    ReplyDelete
  13. //@திராச, சார், அதெல்லாம் யானைக்கான செலவு என்னோடது இல்லையே? திவா தான் கொடுக்கப் போறார், அக்காவுக்காக இது கூடத் தம்பி செய்ய மாட்டாரா என்ன? யானை அனுப்பும்போதே அதெல்லாம் ஒப்பந்தம் போட்டாச்சு! :)))))))))//

    ஆஹா!
    உங்களுக்கு அனுப்பிய கையோட அந்த ஆனையை என் பிள்ளைக்கும் அனுப்பினேன். அதுக்கு என்ன உடம்பு சரியில்லையா, படுத்துக்கிட்டு இருக்குன்னு மெய்ல் அனுப்பினான்.
    இல்லைடா, அது 200 கி.மீ தூரம் 2 வினாடில போச்சு. அதனால களைப்பா படுத்துக்கிட்டு இருக்குன்னேன்.
    ஆக ஆனை ஏற்கெனவே 200 கி.மீ போயாச்சு.
    ஆனை வாங்கிடலாம். தீனி?

    -தம்பி

    ReplyDelete
  14. என் செல்ல பெப்போவுக்கு இந்த அப்புவை எடுத்துக்கிட்டேன். நன்றி!

    இது போல படம் இருந்தா நிறைய போடுங்க, கதை சொல்ல வசதியா இருக்கும்;-)

    ReplyDelete
  15. @திவா, உங்க பையன் எனக்கு போன் செய்து யானைக்குத் தீனிச் செலவுக்கு அப்பா, பணம் கொடுக்கச் சொன்னார்னு சொல்லிக் கொண்டு வந்துகொடுக்கறேன்னு சொல்லிட்டான், ரொம்ப நன்றி, பணம் அனுப்பி வச்சதுக்கு! (தம்பி உடையாள் செலவுக்கு அஞ்சாள்!)

    அது சரி, சிஷ்யகேடிங்க எல்லாத்துக்கும் என்ன ஆச்சுனு தெரியலை, யாருமே வரலை யானை பார்க்கக் கூட :((((((

    @முகவை, வாங்க, வாங்க முதல் வரவுக்கு நன்றி, யானையை எடுத்துக்கிட்டாச்சா? தெரியுமே, நான் ஒரு பொருள் ஓசியிலே வாங்கினால் அம்பிக்குத் தான் கண்ணை உறுத்தும்னு நினைச்சேன், நீங்க வந்துட்டீங்க போட்டிக்கு! :)))))
    அது என்னங்க, எல்லாரும் நான் போன வருஷம் தமிழ்த் தாத்தாவோட பிறந்த நாளுக்கு எழுதின போஸ்டுக்கே கமெண்ட்ஸ் போடறாங்க இந்த வருஷமும்? இந்த ரத்னேஷ் ஆரம்பிச்சு வச்சார். நேத்திலே இருந்து 214-வது போஸ்டுக்கே கமெண்ட்ஸ் வருது!! :P :P

    ReplyDelete
  16. சூரி சார் சொன்ன அந்த யோகம் உங்களுக்கு இல்லைனா என்ன, சாம்பு மாமாவுக்கு இருக்கே! :)))

    ReplyDelete
  17. //4ல் சந்திரனும் 9ல் குருவும் இருந்தால்
    யானை வாங்கும் யோகம் உண்டு//

    @sury sir, கஜ கேசரி யோகமும் இந்த மாதிரி ஜாதக அமைப்புக்கு அமையுமோ?

    ReplyDelete
  18. @அம்பி, ரொம்பவே கண்ணு வைக்காதீங்க, ஏற்கெனவே தகராறு, எனக்கு, உங்க கண்ணு வேறே!

    ReplyDelete
  19. ரொம்ப நன்றி, பணம் அனுப்பி வச்சதுக்கு! (தம்பி உடையாள் செலவுக்கு அஞ்சாள்!)

    ஓ வந்துடுத்தா? சொல்லாமலே பண்ணிட்டான். பரவாயில்லை.

    //அது சரி, சிஷ்யகேடிங்க எல்லாத்துக்கும் என்ன ஆச்சுனு தெரியலை, யாருமே வரலை யானை பார்க்கக் கூட :((((((//

    கொடுத்து வைக்கலை! இல்லை ஒரு வேளை நாம ஒரு வருஷம் முன்னாலே போயிட்டமா? தமிழ் தாத்தா பதிவு பாத்தா அப்படிதானே இருக்கு?

    ReplyDelete
  20. This answers Ambi's question with regard to Gaja kesari yoga in one's horoscope.

    பொதுவாக‌, குரு, ச‌ந்திர‌ன் இருக்கும் ராசியிலிருந்து 1,4, 7, 10 ஆகிய‌ கேந்திர‌ ஸ்தான‌ங்க‌ளில் அமையும்போது க‌ஜ‌ கேச‌ரி யோக‌ம் என‌ப்ப‌டும். இது பொது விதியே.
    ஜாத‌க‌த்தில் ம‌ற்ற‌ கிர‌க‌ங்க‌ளையும் க‌வ‌னிக்க‌வேண்டும். ம‌ற்ற‌ கிர‌க‌ங்க‌ள் க‌ஜ‌ கேச‌ரி
    யோக‌ம் கிடைப்ப‌தை த‌டை செய்ய‌வும் கூடும். உதார‌ண‌மாக‌, மீன‌ ல‌க்ன‌ ஜாத‌க‌ன்
    ஒருவ‌னுக்கு ல‌க்ன‌த்தில் ச‌னியும், கும்ப‌த்தில் குருவும் இருப்ப‌தாக‌ வைத்துக்கொள்வோம். இவை இர‌ண்டும் ம‌ற்ற‌வ‌ர‌து வீட்டில் இருக்கின்ற‌ன‌ இல்லையா !
    இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒருவ‌னுக்கு வ்ருச்சிக‌த்தில் (விசாக‌ம் 4ம் பாத‌த்தில்) ச‌ ந்திர‌ன் இருக்கும்போது, சந்திர‌னிலிருந்து 4 வ‌து இட‌த்தில் குரு இருந்தும் க‌ஜ‌ கேச‌ரி யோக‌ம்
    கிடைக்காது. இது ஒரு exception.
    Having said, to enjoy gaja kesari yogam, either Guru dasa or Moon dasa should be having its tenure during the productive years of one's career.

    ஆக‌, க‌ஜ‌கேச‌ரி யோக‌ம் சொல்லும்போது, க‌வ‌னத்துட‌ன் எல்லா கிர‌ஹ‌ங்க‌ள் அமைப்பையும் பார்த்து நிதான‌மாக‌ சொல்ல‌வேண்டும்.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.

    ReplyDelete
  21. avvvv inga vanthaa etho yanai vaanga virkannu pariya items matteraa illa irukku?..

    10 yannai valartha arasanaum andinnu pariyavanga solliyirukkaanga..:)

    athanalla yaanaiya suthanthirama kaattula (irukkaa?) vittudarathuthaan nallathunnu thoonuthu :)

    ReplyDelete
  22. I also have kajekasari yogam, recently i bought one elephant...:) 10000Rs. In Kaveri Bangalore hehehe

    ReplyDelete
  23. யானை யானை - வாங்கலாமே - வாங்கிடலாமே - யாராச்சும் டிஸ்கவுண்ட் கொடுத்தா வாங்கிடலாமே

    ReplyDelete
  24. இங்கெ இவ்வளோ நடந்துருக்கு, எனக்குத் தெரியாமப் போச்சே(-:

    நானு அங்கே மா(ய்)ஞ்சுமா(ய்)ஞ்சு,
    பூ கட்டிக்கிட்டு இருந்தேன். இப்ப வீட்டுக்குத் திரும்பிவந்தால்.......

    ஹைய்யடா.............

    ஒரே ஜாலிதான். செல்லக்குட்டி எவ்வளோ ஸ்வீட்டாப் படுத்துருக்கு.

    பொன்ஸை வாரிசா நியமிச்சப்ப ஒரு கோடி காமிச்சிருக்கலாமுல்லே? இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போகலை...... உயிலை மாத்தி எழுதத்தெரியாதா என்ன?

    உங்களுக்கும் என் யானைகளில் ஒரு 50 சதமானம் உரிமைன்னு ஆக்கியிருக்கேன்.

    இப்ப மகிழ்ச்சிதானே?

    யானையைப் பார்க்கும்போது என்னை நினைக்கவேண்டாம்:-))))))

    ReplyDelete