எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 25, 2008

சக பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பின்னூட்டமிட விரும்பும் மென்பொருள்கள்:எச்சரிக்கை

என்னுடைய வலைப்பூவில் வழக்கத்திற்கு அதிகமாக ஒரே IPயிலிருந்து, அதிலிருக்கும் ஏறக்குறைய எல்லா பதிவுகளுக்கும் வருகை காணப்பட்டது. முதலில் சற்று மகிழ்சியாக இருந்தாலும் கூடவே சந்தேகமும் வந்தது. நாமென்ன தேவனா (துப்பறியும் சாம்பு) அல்லது சாண்டில்யனா, நம்முடைய எழுத்தை எவனாவது இப்படி விழுந்து விழுந்து படிக்க ! பின்னர் மின்னஞ்சலை திறந்து பார்த்தால் Duran என்பவரிடமிருந்து ஒரு பின்னூட்டம். அதைப் பிரித்தால் முக்கியமான செய்தி எதுவும் இல்லாமல் Publish, Reject என்ற Blogger குறிப்புகளுக்கு மேலாக அதே எழுத்துருவில் warning or visit here என்ற வலை இணைப்புகளோடு காணப்பட்டது.

அங்கேதான் அய்யா ஏமாந்து போய்விட்டேன். அது Blogger தரும் செய்தி என்று தெரியாத்தனமாய் க்ளிக்கித் தொலைத்தேன்.

அது உடனே XPvirusscan என்ற வலைக்குத்தாவி மின்னல் வேகத்தில் scan செய்து, என் கணிணினியில் மூன்று அபாயகரமான வைரஸ்கள் இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் பயமுறுத்தியது. Remove என்று ஆணை கொடுத்ததுமே ஒரு புது மென்பொருளை .exe ஐ தரவிறக்கம் செய்ய அனுமதி கோரியது என் கணிணி. அப்பா அந்த அளவிற்காவது ஒரு வேகத்தடை இருந்ததே என்று இப்போது சந்தோஷமடைகிறேன்.

உடனே அதை cancel செய்தேன். விடாகண்டன் மாதிரி அந்த ஜன்னல் மூட மறுத்தது. இன்னொரு ஜன்னலில் Cancel செய்தால் ஆபத்து என்கிற விதமாக புது செய்தி முளைத்தது. இப்போது கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்விட்டது. கண்டிப்பாக இது ஒரு திருட்டு கும்பல் என்று புரிந்து விட்டது. கவலையே படாமல் அந்த வலைப்பக்கத்தை மூடிவிட்டு என் McAfee ஐ வைத்து எல்லா கோப்புகளையும் மென்பொருட்களையும் ஒரு முறை புரட்டிப்பார்க்கச் சொன்னேன். அதற்கு தேவைப்பட்ட நேரம் 40 நிமிடங்கள்.

நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 40 நிமிட வேலையை 40 செகண்டுகளில் யாராவது செய்து 3 வைரஸ்களை பிடித்துத் தரமுடியுமா?

ஆனால் அந்த கும்பலை நமது நண்பர்கள் கண்டிப்பாக புரட்டி எடுக்க முடியும்.அவர்களது IP விலாசம் .. 161.107.18.136 McClean, Virginia United States

இந்த செய்தியை எல்லா சக பதிவாளர்களுக்கும் சொல்லி முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்துங்கள்.
*************************************************************************************

மேற்கண்ட செய்தி நண்பர் உமேஷ் (உமாநாத்னு தப்பா அடிச்சுட்டேன், ஹிஹிஹி, அ.வ.சி.) அவர்கள் கொடுத்தது. ஆனால் இப்போது ஒரு பத்துப் பதினைந்து நாட்களாக எனக்கும் மேற்கண்ட நபரிடம் இருந்து பின்னூட்டங்கள், என்னுடைய இரு சொந்தப் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது. என்றாலும் முன்,பின் தெரியாத பெயர், அதுவும் ஆங்கிலப் பெயர் என்றால் நான் பார்க்காமலேயே பின்னூட்டத்தை அழித்துவிடுவேன். அது எவ்வளவு நல்லது என்று இப்போது புரிகின்றது. சக பதிவர்களும் அதி கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

25 comments:

  1. தலைவி-ன்னா இப்படி இல்ல இருக்கணும்!
    தொண்டர்களுக்கு வைரஸ் அட்டாக் ஆகாமல் காக்க அறிக்கை விட்ட தலைவியே! அறிக்கைக்கு அடுத்து போஸ்டரும் ஒட்டுமாறு தொண்டர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்! :-)

    ReplyDelete
  2. மிக அவசியமான செய்தி....நன்றிகள் பல.

    ReplyDelete
  3. நேற்று எனக்கும் வந்தது , என்கிட்டயேவா என்று அதை கையும் களவுமாக பிடித்து விட்டேன்.

    அந்த வைரஸ் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் என்னிடம் உள்ளது.

    அதை மட்டும் நீங்க இன்ஸ்டால் செய்ய விட்டிருந்தால் இந்நேரம் உங்கள் பாஸ்வார்ட் அனைதையும் அது சுருட்டிக்கொண்டு ஓடி இருக்கும்.

    யாராவது விரும்பி கேட்டால் தனி பதிவாகவே போடுகிறேன்.

    ReplyDelete
  4. thanks for the info.. appadiye oru vote podunga namma unionku link ellam ambiyoda padivula iruku

    ReplyDelete
  5. நன்னி யக்கா1 ஆனா எனக்கு அதிகம் பிரச்சினை இல்லை. பயன்படுத்துவது லினக்ஸ். முக்காலே மூணு வீசம் வைரஸ் போன்றவை பாதிப்பது விண்டோஸைதான்.

    ReplyDelete
  6. //
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    தலைவி-ன்னா இப்படி இல்ல இருக்கணும்!
    தொண்டர்களுக்கு வைரஸ் அட்டாக் ஆகாமல் காக்க அறிக்கை விட்ட தலைவியே! அறிக்கைக்கு அடுத்து போஸ்டரும் ஒட்டுமாறு தொண்டர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்! :-)
    //

    வழிமொழிகிறேன்

    பேர் தமிழ்ல தான் வெச்சிருக்கேனுங்கோ கொஞ்சம் அப்ரூவ் பண்ணீடுங்கோ!!!!!

    ReplyDelete
  7. எனக்கும் வந்தது. உங்களை மாதிரி கமண்ட்டுக்கு ஆசைபட்டு நான் ஒன்னும் பல்ல காட்டலையாக்கும்.
    இனிமேலாவது திருந்துங்க. :)))

    @KRS, அண்ணே, செம காமெடி பண்றீங்க போங்க. :p

    ReplyDelete
  8. வசந்த ரவி,

    தனிப்பதிவாக போடுங்க. கணிணித்துறையை சாராத என்னைப் போன்றவர்களூக்கு உபயோகமா இருக்கும்.

    நன்றி கீதா மேடம்.

    ReplyDelete
  9. @கண்ணன், விழியன் அதைப் பார்த்து ஏமாந்ததை எழுதி இருந்தார், அப்போத் தான் எனக்கு அது பற்றிய உண்மையே புரிந்தது. அதான் அவர் எழுதினதை அப்படியே ஜி3 பண்ணிட்டேன்.

    @மதுரை, நன்றிக்கு நன்றி.

    @வசந்தம் ரவி, முதல்லே பதிவாப் போட்டுட்டுச் சுட்டியும் கொடுங்க, எங்க மாதிரி க.கை.நா. எல்லாம் தெரிஞ்சுப்போம் இல்லை? கேட்டுட்டு இருக்கீங்க? :P

    ReplyDelete
  10. டிடி அக்கா, போய்ப் பார்த்தேன், என்னமோ தெரியலை ஓட்டுப் போட்டால் அது எடுத்துக்கவே இல்லை, அம்பி சொல்றதுக்கு முன்னேயே போனேன். :))))))))

    @மங்களூர், நன்னி, நன்னி!

    ReplyDelete
  11. @திவா, உங்க வழி தான் எப்போவுமே தனீஈஈஈஈஈஈஈ வழியாச்சே, அது சரி இந்த லினக்ஸ் பத்தி விளக்கி ஒரு பதிவு போடக் கூடாது? செந்தமிழில்?

    @அம்பி,
    //எனக்கும் வந்தது. உங்களை மாதிரி கமண்ட்டுக்கு ஆசைபட்டு நான் ஒன்னும் பல்ல காட்டலையாக்கும்.
    இனிமேலாவது திருந்துங்க. :)))//

    எப்போ நீங்க ஒழுங்காப் பதிவைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுவீங்க? திரும்பி ஒரு தரம் போய்ப் படிங்க, ஓவர் பில்ட் அப் வேணாம், சொல்லிட்டேன்! :P :P

    @புதுகை, நன்றிக்கு நன்றிம்மா! நீங்க வசந்தம் ரவிக்கு விடுத்த வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  12. //@திவா, உங்க வழி தான் எப்போவுமே தனீஈஈஈஈஈஈஈ வழியாச்சே, அது சரி இந்த லினக்ஸ் பத்தி விளக்கி ஒரு பதிவு போடக் கூடாது? செந்தமிழில்? //

    போச்சுடா!
    இப்பதான் நீங்க கைவல்லிய நவநீதம் இன்னும் விளக்கம் கேட்டதாலே ஒரு மடல் போட்டேன். இப்ப இதுவா? வேலை மேல வேலை வைக்கிறிங்களே?!
    அது சரி எதுல போடறது. என் ஒரு ப்ளாக் நல்ல சேதி. இன்னொன்னு கதை. கதை விடவே நேரமில்லை. அப்படியே நிக்குது- 2-3 சூப்பர் கதை கரு இருந்தாலும்.
    ம்ம்ம் பாக்கலாம். ஒரு கதை மாதிரி லினக்ஸ் கட்டுரை எழுதி அப்படியே கிடக்குது பேப்பர்ல. யார் எழுதறது கணினில?

    ReplyDelete
  13. Thanks for sharing . This will really be very helpful to all of us!

    VM

    ReplyDelete
  14. டிடி அக்கா, போய்ப் பார்த்தேன், என்னமோ தெரியலை ஓட்டுப் போட்டால் அது எடுத்துக்கவே இல்லை, அம்பி சொல்றதுக்கு முன்னேயே போனேன்.//
    aiyayo.. enna sathi idu

    ReplyDelete
  15. //என்னமோ தெரியலை ஓட்டுப் போட்டால் அது எடுத்துக்கவே இல்லை//

    இந்த கதையே வேணாம். ஓட்டு போடா விட்டால் யூனியனில் இருந்து அறிவிப்பின்றி பெயர் தூக்கபடும். :p

    ஹிஹி, நான் மட்டுமே ஆபிஸ்ல இருந்து ரெண்டு ஓட்டு போட்டேனாக்கும். :))

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றிகள் பல‌

    ReplyDelete
  17. ஆகா...தலைவிக்கு என்னோட நன்னி ;))

    ReplyDelete
  18. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  19. ///XPvirusscan என்ற வலைக்குத்தாவி மின்னல் வேகத்தில் scan செய்து, என் கணிணினியில் மூன்று அபாயகரமான வைரஸ்கள் இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் பயமுறுத்தியது. Remove என்று ஆணை கொடுத்ததுமே ஒரு புது மென்பொருளை .exe ஐ தரவிறக்கம் செய்ய அனுமதி கோரியது என் கணிணி.////



    எனக்கும் இதே மாதிரிதான் ஆனது. கணிணி அறிவு சுத்தமா இல்லைன்னாலும் ஒருவழியா எல்லாத்தையும் close பண்ணி தப்பிச்சேன்.இந்த மாதிரி தகவல்களை யாரவது ஒரு தனி வலைப்பூவுல ஒரு விழிப்புணர்வுக்காக எழுதினா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  20. புதுகைத் தென்றல் said...
    வசந்த ரவி,

    தனிப்பதிவாக போடுங்க. கணிணித்துறையை சாராத என்னைப் போன்றவர்களூக்கு உபயோகமா இருக்கும்.

    நன்றி கீதா மேடம்.







    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  21. தகவலுக்கு நன்றி. ஆனா புரட்டி எடுக்க முடியுமான்னு தெரியலை... ஹிஹிஹி

    ReplyDelete
  22. engalukkum info sonnadhukku thanks akka

    natpodu
    nivisha

    ReplyDelete
  23. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    தலைவி-ன்னா இப்படி இல்ல இருக்கணும்!
    தொண்டர்களுக்கு வைரஸ் அட்டாக் ஆகாமல் காக்க அறிக்கை விட்ட தலைவியே! அறிக்கைக்கு அடுத்து போஸ்டரும் ஒட்டுமாறு தொண்டர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்! :-)//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....

    ReplyDelete
  24. //தகவலுக்கு நன்றி. ஆனா புரட்டி எடுக்க முடியுமான்னு தெரியலை... ஹிஹிஹி//
    ஹா..ஹா..:))))))ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....

    ReplyDelete