எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 05, 2008

ANUBAVAM PUDHUMAI - 3

என்னோட மறுபாதி இருக்காரே, அவருக்குப் பல சமயம், நான் ஒருத்தி கூட வரேன் அப்படினே நினைப்பு இருக்காது. அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார். நான் ரொம்பவே "அப்பாவி"யாய்ப் பின்னாலே போகணும். அதுவும் இப்போ அவருக்குக் கழுத்தில் பிரச்னை வந்து திரும்ப முடியாமல் போனதுக்குப் பின்னர் ரொம்பவே கஷ்டமாப் போச்சு. இப்படி வேகமாப் போகாதீங்க, நில்லுங்கனு சொன்னால் கேட்டால் தானே? ஹோட்டலில் அறை எடுக்கும்போது கூட இப்படித்தான், அவர் பாட்டுக்கு எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பார், நான் வரேனான்னு கூடப் பார்க்க மாட்டார். இப்படித் தான் போன முறை நான் அறை இரண்டு இருந்ததாலே எதுனு புரியாமல் உட்கார்ந்திருக்கேன், முழுசா, ரிசெப்ஷனிலே, என்னோட ம.பா,. விவரங்கள் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் லிஃப்ட் ஏறிப் போயாச்சு. நான் என்னடா, இந்த மனுஷனைக் காணோமேன்னு உட்கார்ந்திருக்கேன். மாடிக்குப் போனவருக்கு ரூமுக்குள் போனதும் தான் சூட்கேஸைப் பார்த்ததும், என்னைக் காணலைனு உறைச்சிருக்கு. மறுபடி கீழே இறங்கி வரார் படிகள் வழியா. அதுக்குள்ளே, நான் லிஃப்ட் மூலம் மேலே ஏற, அறை பூட்டி இருக்க, மறுபடியும் நான் கீழே இறங்க, அவர் மேலே வர, கொஞ்ச நேரம் "கண்ணாமூச்சி, ரே ரே, ரே," விளையாடிட்டு அப்புறம் என்னோட ரத்த அழுத்தம் எகிற, அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்புறமா அவர் வந்து,
ரூம் திறந்து, அது தனிக்கதை!

இந்த வாட்டி அப்படி எதுவும் நடக்கவில்லை. அதான், கூடவே பையன் வந்திருந்தானே? ஆகவே குழப்பம் இல்லாமல் அவன் கூட்டிப் போயிட்டான், என்னை முன்னாலேயே! ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது? வம்ச வழி அப்படியே வருமோ என்னமோ? சரி, சரி, சுய புராணம் போதும் இல்லை? அங்கிருந்து மறுநாள் காலை கிளம்பி எங்க ஊர் ஆன "பரவாக்கரை"க்குப் போனோம். சாலையா அது? காரைக்கால் செல்லும் வழி அது இத்தனைக்கும். திவா, உங்க ஊர் எதுனு தெரியலை, ஆனால் சிதம்பரம் வந்து அப்புறமாக் கும்பகோணம் போகணும்னு இல்லை. சிதம்பரம் பாதை தனியாப் பிரியும், சிதம்பரம் போகாமலேயே கும்பகோணம் போகலாம், சேத்தியாத் தோப்பு வழியா. சிதம்பரம் பாதையும் அப்படி ஒண்ணும் நல்லா இருக்காது. அதுவும் பல்லாங்குழி தான். என்ன கும்பகோணம் பாதையில் குழிகள் அதிகமா இருக்கும், அங்கே கொஞ்சம் கம்மியா இருக்கலாம் அவ்வளவுதான்.


ஒரு மாதிரியா ஊர் போய்ச் சேர்ந்து, மாரி அம்மனுக்கு அபிஷேஹம் எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பினோம். சாயங்காலமாய் சுவாமிமலை போகணும்னு திட்டம். ஆகவே அதுக்குத் தயார் ஆனோம். வண்டியிலேயே வந்திருந்ததால் நினைச்ச நேரம் கிளம்ப முடியும் ஒரு வசதி, ஆனால் சுவாமி மலை போயிட்டுத் தஞ்சாவூர் போக நினைச்சா, இந்த டிரைவருக்கு என்ன கோபம்னு தெரியலையே?


அனுபவம் புதுமை மூன்றாம் பகுதி தலைப்பு ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். வேறே வழியே இல்லை! :(

11 comments:

  1. நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பதில்..கலக்குறீங்க கீதா...

    ReplyDelete
  2. நாங்க ஊருக்கு போறதானா டாக்ஸி மக்கள் கிட்ட விசாரிப்போம், எந்த ரூட்டு பரவாயில்லைன்னு. தற்சமயம் நீங்க போனா
    ரூட்டு மகா மோசமா இருக்கு. எங்க ஊரான கடலூர், சிதம்பரம், மாயவரம் னு போனா அது ஒரே ஸ்டண்டர்ட் மோசமா இருக்கும். சமீபத்தில வேதாரண்யம் போய் வந்தோம். அதனால தெரியும்.

    //அனுபவம் புதுமை மூன்றாம் பகுதி தலைப்பு ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். வேறே வழியே இல்லை! :(//
    ஏன்?

    ReplyDelete
  3. //ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது?//

    ஆகா...
    சந்தடி சாக்குல நல்ல பையனுக்கு இப்படி எல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? :-)))

    //சிதம்பரம் பாதையும் அப்படி ஒண்ணும் நல்லா இருக்காது. அதுவும் பல்லாங்குழி தான். என்ன கும்பகோணம் பாதையில் குழிகள் அதிகமா இருக்கும்//

    சோழ வள நாட்டைப் பதிவுலகில் டேமேஜ் செய்யும் பாண்டிய நாட்டின் மீது போர்! போர்!
    அணி திரளுங்கள் சோழ வீரர்களே!
    தளபதி அபி அப்பா எங்கிருந்தாலும் போர் மேடைக்கு வரவும்!

    ReplyDelete
  4. தரிசனம் எல்லாம் நன்றாக முடிச்சிக்கிட்டு வந்திருக்கிங்க...சூப்பர் ;))

    \\என்னை முன்னாலேயே! ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது? வம்ச வழி அப்படியே வருமோ என்னமோ?\\

    ;))))))))))))))))

    அடுத்து..

    ReplyDelete
  5. //அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார்.//

    நானும் என் தம்பியும்,இந்த கூத்தை பெங்களுர் ரயில் நிலையத்தில் கண்டு களித்து பேரானந்தபட்டோம். :)

    போன பதிவும் படிச்சாச்சு! ஆறி போன அவல் கேசரினு கமண்ட் போடலம்னு பாத்தேன்.

    எதுக்கு ஒரு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணனும்?னு தான் சும்மா இருந்தேன். :)))

    ReplyDelete
  6. சுவராஸ்யமாக விவரிக்கிறீர்கள்!
    தொடரட்டும் உங்கள் பயணம்!!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  7. அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்புறமா அவர் வந்து,
    ரூம் திறந்து, அது தனிக்கதை!

    ஆஹா கதை ந்ல்லா போகுதே ம் அப்பறம்...:))

    டிரைவ்ருக்கு கோபம்
    நல்ல சஸ்பென்ஸில் நிறுத்தலாமா?

    ReplyDelete
  8. பாசமலர், என் கடன் சிரிக்க வைப்பதே! :)))))

    @திவா, எல்லாம் ஒரே மாதிரித் தான், அப்புறம் ஆங்கிலத் தலைப்புக் காரணம் மட்டும் கேட்டுடாதீங்க, ப்ளீஸ் மானம் போகுது ஏற்கெனவே! :P

    கேஆர் எஸ், அதெல்லாம் அபி அப்பா வந்து சண்டை போட மாட்டார், ரொம்ம்ம்ம்ம்ம்ம்பபபபபப ரொம்ம்ம்ம்பபபபபபபபப நல்லவர் ஆச்சே! :P

    @அபி அப்பா, உங்களுக்குத் தனியா காத்திருக்குங்க ஒரு பெரிய ஆப்பு! என்னையா "பாட்டி"னு சொல்லிப் பதிவு போடறீங்க? :P

    @கோபிநாத், முன்னாலேயே சொல்லக் கூடாதா அபி அப்பா பத்தி! என்ன தொண்டர் நீங்க!

    @அம்பி, எப்போப் பார்த்தாலும் கேசரி நினைப்புத் தானா? ஆபீஸிலே வேலை ஏதானும் செய்வீங்களா? அதுக்கும் தம்பி தான் "ப்ராக்ஸி"யா? :P

    @ஜோதி பாரதி, நன்றி, புதுசுனு நினைக்கிறேன், அதான் பாராட்டறீங்க! :))))

    @திராச சார், நான் கேட்டப்போ நாகேஸ்வரன் சன்னதினு சொல்லிட்டும் இப்போ வந்து அதே ஹோட்டல் தான்னு சொல்றீங்களே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., கும்பகோணம் பூராவும் வலை போட்டுத் தேடிட்டு இருந்தோம். :P

    ReplyDelete
  9. ஓவர் சஸ்பேன்ஸாயிருக்கு. தொடரை சீக்கிரம் தொடரவும்...

    ReplyDelete
  10. எல்லா வூட்லேயும் ஒரே கதை தான்.
    பேர்தான் வித்தியாசம்.
    கவலைப்படாதீக..அடுத்த ஜனுமத்திலே
    நீங்க சாம்பசிவமா புறந்து ஜமாச்சிடலாம்.
    மேனகா சுப்புரத்தினம்.
    சென்னை.
    வரவும். பெறவும்.
    http://meenasury.googlepages.com/myhappinessisinmyhands

    ReplyDelete
  11. பயணங்களே 'திரும்பிப் பார்க்கும்போது' ரொம்ப சுவைதான்.

    எல்லாம் அவரவர் மனசுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள். கூட வர்றவ வரட்டுமேன்னு இருப்பாங்க போல!

    ReplyDelete