எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 11, 2008

இடது சாரியும், ஆக்கிரமிப்புக்களும்!


புதுசா போஸ்ட் ஒண்ணும் கொஞ்ச நாளைக்குப் போட முடியாது என்றாலும் அபி அப்பா சொல்றாப்போல் அவ்வப்போது வந்து நானும் மேடையிலே இருக்கேன்னு சொல்லிட்டுப் போக வேண்டி இருக்கு. தவிர, நானும் இடதுசாரியாக மாறியாச்சு கொஞ்ச நாட்களாக. தெருவில் நடந்து போறப்போ கூட வலது பக்கமாய்த் தான் போவேன். இதுக்கு என்னோட விளக்கம். பின்னால் வர வாகனங்கள் நாம் இடது பக்கமாய் நடந்து போகும்போது தெரியாது என்பதோடு, சில சமயம் ரொம்ப வேகமாய் தலை போகிற அவசரத்தோடும் வருவாங்க சில ஆட்டோ, லாரிக்காரங்க, அவங்க கிட்டே இருந்தும் தப்பிக்கலாம்னு தான். ஆகவே நான் எப்போவும் வலது பக்கமாவே நடப்பேன். எதிரே வரும் வாகனங்களும் தெரியும். பின்னாலே வரதும் எல்லாம் அதைத் தாண்டி அந்தப் பக்கமாத் தானே போகும்.

ஆனால் இதில் எனக்கும் ம.பா.வுக்கும் தெருவிலேயும் கருத்து வேறுபாடு வரும். அவர் அந்தப் பக்கமே நடக்க, நான் இந்தப் பக்கமாய் நடக்க, இரண்டு பேருமே அறிமுகம் இல்லாதவங்க மாதிரி போவோம். இப்போ அதை விட மோசமா இருக்கு. அதனாலே குறைந்த பட்சமாய் இதிலாவது அவர் சொல்றதைக் கேட்போமேனு ஒரு எண்ணம். இடது கையால் தட்டச்சப் பழகிட்டு இருக்கேன். இது கூட அப்படித் தான் தட்டச்சியது. எப்படி வந்திருக்கு?? கொஞ்சம் நேரம் ஆகிறது. ஆங்கிலம் சுலபமா இருக்கு. தமிழில் தட்டச்சுவது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. என்ன இருந்தாலும் இடதுசாரிகளை விட்டுக் கொடுக்க முடியுமா?? இடதுசாரிகளுக்கு ஒரு வாழ்க போட்டுக்கலாம். அடுத்துப்பாருங்க முக்கியமான கட்டம் வருது.

என்னத்தைச் சொல்றது? என்னோட சாம்ராஜ்யம் ஆன சமையல் அறை ஆக்கிரமிக்கப் பட்டு விட்டது. கிட்டத் தட்ட ஒரு ஆறு நாட்கள் கழிச்சு நேத்துக் காலம்பர, சமையல் அறையில் நுழைந்தால், எனக்கே ஆச்சரியம், என்னோட சமையல் அறையா இது?? எது எங்கே இருக்குனு கண்டு பிடிக்க முடியலை. மேடை என்னமோ சுத்தமாய்த் தான் இருந்தது. ஆனால் பாத்திரங்கள்?? கடவுளே! எப்படிக் கண்டு பிடிப்பேன் ஒண்ணுமே புரியலை. பால் காய்ச்சும் பாத்திரம் ஒண்ணை எடுத்தால், வந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கு ஒண்ணுக்குள் ஒண்ணாய். அதைக் காணோமேனு கூப்பிட்டுக் கேட்டால் உன் பாத்திரங்களை நான் ஒண்ணும் செய்யலை. பேசாமல் உட்காரு. காஃபி தானே வேணும்? போய் உட்காருனு ஒரு பயங்கர அதட்டல்.
இடது கையால் செய்யறேனே என்று கேட்டதுக்கு போய்க் கணினி முன்னாலே உட்காருனு மறுபடி ஒரு அதட்டல்! அல்லது ஒரு கிண்டல்?? உள் குத்து?? என்னனு புரியறாப்போல் பேசற வழக்கமே கிடையாது. ஸ்தித ப்ரக்ஞன் என்று நினைக்கிறேன். கோபமா, சந்தோஷமா, வருத்தமா எதுவுமே புரியாத ஒரு குரல். என்னவோ போங்க! இத்தனை வருஷமாய்த் தனி ஆட்சி புரிந்து கொண்டிருந்த என்னோட சமையலறையில் பயங்கர ஆக்கிரமிப்பு. வன் கொடுமை! ஆணாதிக்கம் அதிகமாயிடுச்சுனு நினைக்கிறேன்.

எப்படி வெளியே தள்ளறது? யாராவது சொல்லுங்களேன்!

டிஸ்கி: இடது கையால் அடிச்ச இந்தப்பதிவுக்கு எல்லாரும் வந்து வாழ்த்துச் சொல்லுங்க. மறுபடி எப்போ முடியுமோ தெரியலை! இதுக்கே நாக்குத் தள்ளிடுச்சு. ஒரு மணி நேரம் ஆயிருக்கு. கொஞ்சம் பழகணுமோ???

22 comments:

  1. கீதாம்மா, இடது கையால இவ்ளோவும் தட்டறதுக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் ஆச்சா? பின்னீட்டிங்க போங்க :) ஆணாதிக்கம்னு ஏன் நினைக்கிறீங்க? இதை விட்டா உட்கார்ந்து சாப்பிட அப்புறம் எப்ப உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமோ? என்சாய் பண்ணுங்க! :)

    ReplyDelete
  2. //இடது கையால இவ்ளோவும் தட்டறதுக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் ஆச்சா? பின்னீட்டிங்க போங்க//

    ரீப்பீட்டேஏஏஏஏஏஏஏஎ!!!!

    ReplyDelete
  3. கீதா, எதுக்கு இடது கை?
    வலது கை என்ன ஆச்சு.
    முடிஞ்சா அவரை மெயில் போடச் சொல்லுங்க.ப்ளீஸ்.

    ReplyDelete
  4. \\டிஸ்கி: இடது கையால் அடிச்ச இந்தப்பதிவுக்கு எல்லாரும் வந்து வாழ்த்துச் சொல்லுங்க\\

    வாழ்த்துக்கள்..;)

    வலது கைக்கு என்ன ஆச்சு??

    \\என்னனு புரியறாப்போல் பேசற வழக்கமே கிடையாது. \\

    பதிவும் அப்படி தான் இருக்கு...! ;)

    ReplyDelete
  5. கீதாம்மா இடதுசாரியான காரணம் இங்க இருக்கு:

    http://sivamgss.blogspot.com/2008/10/blog-post_3183.html

    ReplyDelete
  6. த பாருய்யா! உதவி பண்ணா ஒரே கம்பளைண்ட். பண்ணாட்டாலும் கொஞ்சம் கூட செய்யலியேன்னு கம்பளைண்ட் இருக்கும். நல்லதுக்கு காலமே இல்லை!
    :P:P:P:P

    வல்லி அக்கா, கோபி அண்ணா இந்த பதிவை படிக்கலையோ?
    http://sivamgss.blogspot.com/2008/10/blog-post_3183.html
    shoulder dislocation. ப்ராksசர் இல்லியாம்.
    சில வாரங்கள் நாம் என்சாய் பண்ணலாம். :-))அவங்க சாம்பு மாமா சமையலை என்சாய் பண்ணட்டும். :-)))))))))

    ReplyDelete
  7. இடது கையாலேயா தட்டச்சினீங்க? நம்ப முடியவில்லை!!
    சீக்கிரம் குணமாகி இரண்டு கையாலும் தட்டச்ச, தில்லை நடராஜனைப் ப்ரார்த்திக்கிறேன்.

    மைதிலி

    ReplyDelete
  8. //ஆகவே நான் எப்போவும் வலது பக்கமாவே நடப்பேன். எதிரே வரும் வாகனங்களும் தெரியும். பின்னாலே வரதும் எல்லாம் அதைத் தாண்டி அந்தப் பக்கமாத் தானே போகும்.//

    Hi!I also do the same thing. My Dad is responsible for that.:)

    ReplyDelete
  9. //இடது கையால இவ்ளோவும் தட்டறதுக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் ஆச்சா? பின்னீட்டிங்க போங்க//

    Thats it!!! Supero super. UnGaL Tenacity_ku oru OH! pottuten. ungalukku 15 dhae vayasudhan....now I agree.

    ReplyDelete
  10. samayalarai aadhikkam Mamavin Rajyam aanadhukku sandhosham padungo.Ensoyyyy. Indha nilamaiyilum neengadhan saiyanum-nu adam pidikkama ...Pavam! samartha Poruppa priyama saidhu kodutha complain panreengalae? Niyamaa? Enjoyyyyyyy.

    ReplyDelete
  11. எங்க ஊருக்கு வரும் பொழுது இடதுபக்கம் நீங்க நடப்பீங்க, அப்போ ரங்க்ஸ்?

    அப்புறம் இடது கையால டைப் அடிச்சீங்களா? அல்லது இடது கையால உங்க அவரை அடிச்சு டைப் அடிக்க வெச்சீங்களா?

    ReplyDelete
  12. என்னவோ இப்ப தான் சமையல் எல்லாம் சாம்பு மாமா! என்ற பிம்பத்தை உண்டு பண்ண வேணாம். :)))

    இடது கையால அடிச்சே இவ்ளோ மொக்கையா? :D

    ReplyDelete
  13. அடடா, உங்க சிறப்பு அலங்காரத்தை பல இடத்துல சுண்டல் சாப்பாடு எல்லாம் முடிச்சுட்டு நிதானமா பார்க்கலாம்னா இங்க கதையே வேறே :(

    பாவம் மேடம். சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.

    ஃபோர்ஸ்டு ரெஸ்ட் ஒருவிதத்துல நல்லதுதான். படிச்சத அசை போட நேரம் கிடைக்கும் :)

    ReplyDelete
  14. பட் ஏன் இடது கைன்னு சொல்லிருந்தீங்கன்னா நல்லாருந்துருக்கும். நான் சொன்ன மாதிரி பஜ்ஜி செஞ்சிக் குடுத்திருந்தீங்கன்னா இப்படி அங்கிள் ஆக்கிரமிப்பு செஞ்சிருப்பாரா? அதுக்குத் தான் சின்னவங்க சொன்னா ஸ்ரீராமன் சொன்ன மாதிரின்னு இப்பவாச்சும் புரிஞ்சுக்கங்க.
    :)

    ReplyDelete
  15. @kavinaya, நீங்க சொன்னாப்பல உட்கார்ந்து சாப்பிட்டாச்சு, இனிமேல் நின்னுண்டு தான்! :P

    @மெளலி, வாங்க, இங்கேயும் நினைவு வச்சுட்டு வந்திருக்கீங்களே, அதுவே பெரிசு! :P

    ReplyDelete
  16. @வல்லி, சரியாப் போச்சு போங்க,பொண்ணோ, பையனோ அனுப்பிய மெயில் வந்தா வந்து பாருங்கனு கெஞ்சினால் கூட வரமாட்டார், அவர் வந்து தட்டச்சி, அதை நீங்க படிச்சு! நடக்கிற காரியமா? சூரியர் அப்புறம் மேற்கே கூட இல்லை, வடக்கே உதிக்க ஆரம்பிச்சுடுவார்!

    @கோபிநாத், எங்கே?? வந்து ரெகுலராப் படிச்சாத் தானே தெரியும்?? என்னிக்கோ வந்தால் இப்படித் தான்! லிங்க் கொடுத்திருக்கேன் போய்ப் பாருங்க! :P

    ReplyDelete
  17. @கவிநயா, சிரமம் எடுத்துட்டு இரண்டாம் முறை வந்ததுக்கு நன்னி.

    @திவா, ரொம்பவே சந்தோஷப் படுவீங்கனு தெரியுமே! தாங்க்கீஸ்ஸ்ஸ்!!!

    ReplyDelete
  18. @மைனா, மெயிலியதுக்கும், கமெண்டியதுக்கும் நன்னிங்கோ
    !!!

    எஸ்கேஎம், என்ன இருந்தாலும் நாம பக்கத்துப் பக்கத்து ஊர் இல்லை?? அதான் GREAT WOMEN THINK ALIKE, thankeess!!!!!!
    ஹிஹிஹி, 15 வயசுதான்னு ஒத்துண்டதுக்கு நன்னி!

    @லதா, இந்த சமயங்களில் மூக்கில் வேர்க்குமே உங்களுக்கு எங்கே காணோம், ரொம்ப நாளா?? சுஜாதா புத்தகம் பேரைத் தப்பா எழுதினதிலே இன்னும் வருத்தமா இருக்கோ???

    ReplyDelete
  19. //Indha nilamaiyilum neengadhan saiyanum-nu adam pidikkama ...//

    அட, நீங்க வேறே இந்த சமயத்திலேயாவது தன் இஷ்டப்படி சமைக்கலாமேனு சந்தோஷம் அவருக்கு! :P:P:P அதெல்லாம் அடம் பிடிக்கிற டைப் இல்லை

    ReplyDelete
  20. //எங்க ஊருக்கு வரும் பொழுது இடதுபக்கம் நீங்க நடப்பீங்க, அப்போ ரங்க்ஸ்? //

    @கொத்து, உங்க ஊரிலே தான் நடக்கப் பாதை தனியா இருக்கே, மொத்தப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வச்சுட்டு ரோடை க்ராஸ் பண்ணுவோமே, அதனால் மாறி மாறி இரண்டு பக்கமும் நடந்துப்போம்!

    //அப்புறம் இடது கையால டைப் அடிச்சீங்களா? அல்லது இடது கையால உங்க அவரை அடிச்சு டைப் அடிக்க வெச்சீங்களா?//

    ஏன் கேட்க மாட்டீங்க?? நீங்க ஒரு வலைப்பதிவுக்கே கூட்டு! இதிலே நீங்க வேறே பேரிலேயும் எழுதிட்டு இருக்கிறதா புரளி!! நானும் அப்படிச் செய்யலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். அவராவது வந்து டைப் பண்ணறதாவது?? நல்ல ஆளைப் பார்த்துச் சொல்றீங்க போங்க! மனுஷன் செக்கிலே கூடக் கையெழுத்துப் போடறதில்லை! :P:P:P

    ReplyDelete
  21. @அம்பி, உங்களுக்கு உங்க தம்பியும் செய்யறார், பத்தாதுக்கு உங்க ப்ளாகும் எழுதிக் கொடுக்கிறார். ஆனால் இவரோட தம்பி யாரும் செய்யறதில்லையே என்ன செய்யறது?? பார்த்து, நமீதா, ஸ்ரேயா விஷயத்தில் ஏற்கெனவேயே தங்க்ஸ் டின் கட்டிட்டாங்கனு கேள்வி! எஞ்சாய்!!!!!

    ReplyDelete
  22. @வாங்க கபீரன்பன், வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் பாருங்க, இப்படி ஜாடையா என்னை அஃறிணையாக்கி இருக்கவேண்டாம்! :P ஓபனாவே சொல்லி இருக்கலாம்! :))))))))

    @கைப்புள்ள, வாங்க, பொண்ணு எப்படி இருக்கா?? தீபாவளிக்கு பொண்ணோட தானே??? அதெல்லாம் நீங்க சொன்னாப்போல் பஞ்ச பூதங்கள் நிறைந்த பஜ்ஜி செய்ஞ்சு கொடுத்தாச்சு, அப்படியும் தான் இப்படி ஆச்சு, உங்களுக்கு என்னை எல்லாம் ஞாபகம் இருக்கே அதுவே பெரிசு!! :P

    ஒருவேளை அதனாலேயே இப்படி ஆச்சோ? :P:P:P:P

    ReplyDelete