திவா கேட்டிருக்கார் ஸ்வீட், காரம் இல்லையானு! ஸ்வீட் இல்லைனாலும் காரமாவது வேணும்னு சொல்லி இருக்கார். அதுக்காக இதோ! கல்யாணம் ஆகி வந்ததிலே இருந்து ட்ரம்மிலே காரம், இனிப்பு எல்லாம் செய்து பழக்கம்.பெரிய குடும்பம், வரவங்க, போறவங்களும் நிறைய இருப்பாங்க அப்போ! நானும், எங்க மாமியாருமா ஒரு வாரம் சேர்ந்து எல்லா பட்சணங்களும் பண்ணுவோம். "பையர்" இப்போக் கூட பட்சண பாக்டரி ஆரம்பிக்கிற வழக்கம் நின்னு போச்சு போலிருக்கேனு சொல்லுவார், நக்கலாக. அந்த அளவுக்குப் பண்ணிட்டு, அப்புறமா ஒரு கிலோ, 2 கிலோ டப்பாக்களில் மட்டுமே பண்ணிட்டு இருந்தேன். அதுவும் இந்த வருஷம் இல்லாமல் போய் எல்லாம் ஓசி. எனக்குப் பிடிச்ச ஸ்வீட்டிலே லட்டுவும் ஒண்ணு. அதுவும் கல்கத்தா, உ.பியிலே மாவாவும் சேர்த்து மாவா லட்டுனு பண்ணுவாங்க. தனி டேஸ்ட் தான். தீபாவளிப் பண்டிகை மட்டும் இல்லை, அநேகமாய் எல்லாப் பண்டிகைகளுமே இந்தியா பூராக் கொண்டாடறதாலே, என்ன கொஞ்சம் பழக்கம் தான் மாறும், அதிகமா தனிமை வாட்டியதில்லை. ஆனால் இப்போ இந்தியாவில், தமிழ்நாட்டில் சொந்த வீட்டில் இருந்தும்???? :(
மிக்சரும் எனக்குப் பிடிச்சது. சிலருக்குப் பிடிக்கிறதில்லை. கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். ஆனால் அதுக்கு உதாரணம் எங்க வீட்டிலேயே இருக்கிறதாலே, ரசிக்கத் தெரியலைனு நினைச்சுக்க வேண்டியது தான். அனைவரும் தீபாவளி நல்லாக் கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன். நாளை கொண்டாடுபவர்களுக்கும் வாழ்த்துகள். சீக்கிரமா வாங்கப்பா, தீர்ந்து போயிடும் அப்புறம். ஏற்கெனவே ஓசி வாங்கி வச்சிருக்கேன்.
ஏன்பா தனிமைன்னு சொல்றீங்க.
ReplyDeleteபட்சணமெல்லாம் பார்க்க நல்லா இருக்கு.
மிக்சர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில இடங்களில் சரியாகச் செய்யாத்தால் போரடிக்கும். என்னெயில் முக்காமல் காராபூந்தியும் மற்ற பண்டங்களும் சேர்த்தால் நல்லாத்தான் இருக்கும். உடல் நலமா கீதா. மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்ளுகிறேன்.
ஓசி வாங்கி ஓசி குடுக்கறீங்களா? :) நல்லா இருந்தது. நன்றிம்மா.
ReplyDeleteம்ம்ம்...எங்க கதையை கொஞ்சம் நினைச்சி பாருங்க அந்த தனிமை எல்லாம் ஒடிபோயிடும் தலைவி ;))
ReplyDeleteஸ்வீட், காரம் மிச்சர் எல்லாத்துக்கும் நன்றி தலைவி ;)
கோபிநாத், இது சொல்ல முடியாத தனிமை.
ReplyDeleteசின்ன வயதில தெரியாது. எங்களை மாத்ரி கொஞ்சம் முதுமையை எட்டிப் பார்க்கும்போது கூடவே வரும் வெறுமை.ஆனால் கீதா மகா புத்திசாலி.ஆன்மீகமும்,தமிழும் அவருக்கு எப்பவும் துணை இருக்கும்.
@வல்லி, தனிமையா? வெறுமையா?? பின்னதோனு நினைக்கிறேன். ஏனென்றால் கூட்டத்துக்கு நடுவில் கூடத் தனிமையை அனுபவிக்கலாம், அது ஒரு தனி ரசனை! இது?? வேறே! இல்லையா?
ReplyDelete@கவிநயா, வாங்க, ஓ.சி. தான் நல்லா இருக்கும், உங்களுக்கு அனுபவம் இல்லை போல! :))))))
ReplyDelete@கோபி, ம்ம்ம்ம்., உங்க அம்மா, அப்பாவையும் சேர்த்துத் தான் நினைச்சுக்கிட்டேன், மறக்கவே இல்லையே! :P
ReplyDelete@வல்லி, கோபி இப்போ சொல்லுவார், இன்னும் கல்யாணம் ஆகலையே! ஆனதும் பாருங்க!
ReplyDeleteஓசி எல்லாம் வேண்டாம், உங்க வீட்டிலே செய்கிறப்ப சொல்லுங்க வரேன்! :P:P:P""
ReplyDeleteவெறுமை! ஆஹா, புரியுது.
கோபிக்கு சீக்கிரமா ஒரு கால்கட்டு போடுங்க!
அன்புச் சகோதரி கீதா,
ReplyDeleteமுதுமையில் தனிமை தவிர்க்க இயலாதது - தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - தனிமையை இனிமையாக மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். ஆன்மீகமும் தமிழும் இருக்கும் வரை என்ன கவலை ?
தீந்து போறதுக்குள்ளே வந்துட்டேனா ?
Belated Diwali wishes ,Maami. How are you doing now? Thanks for the laddu and mixer.
ReplyDeleteoosi dhan romba sweet_a irukkum.
Thanks again
@திவா, ! :P:P:P:P வேண்டாம்னா போங்க! நாங்க சாப்பிட்டுக்கறோம்!
ReplyDelete@சீனா சார், அடுத்தடுத்து நேர்ந்த சில நிகழ்வுகளால் அதைத் தொடரவில்லை, என்றாலும் மதுரைப் பதிவிலே இருக்கேனே, என்னோட டாஷ்போர்டிலே தெரியுதே???
தீர்ந்து போனாலும் உங்களுக்கு வரவழைச்சுக் கொடுக்க மாட்டோம்??? :))))))
வாங்க எஸ்கேஎம், ஜிலேபி செய்திருப்பீங்கனு நம்பறேன், ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம், திரும்ப வருமா தெரியலை! :(((((
@ தலைவி
ReplyDelete@ வல்லிம்மா
@ திவா
\\வெறுமை! ஆஹா, புரியுது.
கோபிக்கு சீக்கிரமா ஒரு கால்கட்டு போடுங்க!
\\
ஆகா....ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா...நான் எஸ்கேப்பு ;))
கோபி, தலைப்புக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கோ?
ReplyDeleteபெண் குழந்தைகள் பிறப்பு ரொம்பவே குறைஞ்சு போச்சு. இன்னும் 10- 15 வருஷங்கள்லே கன்யா சுல்கம் கொடுத்துதான் பொண்ணு வாங்கணும்.
:-))