சிதம்பரத்தில் எப்போவுமே தங்கும் இடம் கிடைப்பது பிரச்னை. நாங்க அதிகம் அங்கே தங்கியதும் இல்லை. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் வந்துடுவோம். ஆனால் இப்போ திருவிழா பார்க்கணுமே. தீக்ஷிதர் கிட்டே சொல்லித் தங்க ஏற்பாடு பண்ணச் சொல்லி இருந்தோம். அவரும் பண்ணிட்டேனு சொன்னார். அதனால் தைரியமாச் சிதம்பரம் இறங்கினோம். இரண்டுநாள் கழிச்சுத் தான் மாயவரம் போகணும். ரயிலில் தான் break of journey avail பண்ணும் வசதி உண்டேன்னு விடாப்பிடியா டிக்கெட்டில் எண்டார்ஸ்மெண்ட் வாங்கணும்னு நான் சொல்ல, ரங்க்ஸ் வேண்டாம் வா போனாப்போகட்டும்னு பெருந்தன்மையா ரயில்வேக்கு விட்டுக்கொடுக்கக் கடைசியில் நான் மட்டும் விடாப்பிடியாய்ப் போய்க் கேட்கலாம்னு ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குப் போனேன்.
அவர் நாங்க வந்த ரயிலை வழியனுப்பப் போயிருந்தார். சரி, வழியனுப்பிட்டு வரட்டும்னு காத்திருந்தேன். ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். அவர் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவரும் உதவுகிறேன்னு சொல்லிட்டு டிக்கெட்டைக் கொடுங்கனு கேட்டார். சரினு கொடுத்தேன். உடனே என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்க, என்ன இது அல்பம்! என்ற தோரணை அவர் முகத்திலே பளிச்சிடவே எனக்குக் கோபம் பொங்கியது. சற்று நேரத்தில் ரசாபாசம் ஆகியிருக்குமோனு தோணும்போது படம் முடியற சமயத்திலே தலையைக் காட்டுகிற தமிழ் சினிமா போலீஸ் மாதிரி நான் கோவிக்க ஆரம்பிக்கப் போற சரியான சமயத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். அது நாளைக்கு! வர்ட்டா???
தொடரும்!
அபி அப்பாக்கிட்ட போட்டு தரேன் இருங்கா :D
ReplyDeleteசெய்ங்க, செய்ங்க, அதெல்லாம் அபி அப்பா இங்கே கிட்டேக்கூட வரமாட்டார், அந்த தைரியம்தான் எழுதினேன். கடைசியில் மாயவரமே போகலை, அதான் விஷயம்! :)))))))
ReplyDelete