எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, December 13, 2011
180 அடி ஆழத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு!
அடுத்ததாய் நாங்க போனது காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைக் குகைகள். பூமிக்கடியில் 180 அடி ஆழத்தில் இதன் கடைசி அறை தற்போது அமைந்துள்ளது. இதை இன்னமும் ஆய்வு செய்கிறார்கள். அப்படி ஆய்வு செய்ததில் இன்னமும் சில நூறடிகள் கீழே செல்லமுடியும் எனக் கண்டறிந்திருக்கிறார்கள். தற்சமயம் 180 அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்கலாம். வழியெங்கும் விளக்குகள் போடப்பட்டு முக்கியமான இடங்களிலும் , மேலிருந்து நீர் சொட்டும் இடங்களிலும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. துணைக்கு வழிகாட்டி வருகிறார் . அனைத்து இடங்களையும் காட்டி விளக்கம் கொடுக்கிறார். அவர் என்னதான் சொன்னாலும் நம் கண்களுக்கு ஒரு இடத்தில் பிள்ளையாரின் தும்பிக்கையோடு கொழுக்கட்டையுமாகவே , கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியும், இன்னொரு இடத்தில் கோயில் கோபுரங்களும், குதிரையில் அமர்ந்திருக்கும் சாஸ்தாவுமாக, தெரிகிறது. இதோ தக்ஷிணாமூர்த்தியும் அவரை வணங்கும் தேவர்களும் தெரிகிறார்களா?
கிளம்பிட்டோம் என்றாலும் பையருக்குச் சந்தேகம். எங்களால் இறங்க முடியுமா என்றே. இரு பாதைகள் இருக்கின்றன. நீளம் அதிகமானதாகவும் அதே சமயம் செல்லும் பாதை ஒளியோடும், காற்று வசதியோடும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தோம். தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும் அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிக்குழந்தைகளும், சிறு குழந்தைகளும் அதிகம் வருகின்றனர். போய் வர ஒரு மணி நேரம் ஆகும். அதோடு இரண்டு இடங்களில் ஏறி, இறங்கப் படிகள். படிகள் குறைந்த பக்ஷம் 30 படிகள் இருக்கும். துணிஞ்சாச்சு. இனிமே இறங்காமல் முடியுமா? இறங்கியாச்சு.
குகைகளின் வரலாறு அடுத்து வரும். படங்களும் தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
சாஸ்தா பிள்ளையார் ஆகியோர் படங்களில் தெளிவாகத் தெரியவில்லை. அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் போலும்...!
ReplyDelete-ஶ்ரீராம்!!-
Jeyasri Nilakantan via mail,
ReplyDeleteStalagmite/ Stalactite caves are very common in NZ too .As you say
the rock formation reminds us of the forms we know . I too think
they look like lingam , Ganapathy , adhiseshan etc
They normally don't allow us to touch them as the rock shapes are
formed by minerals precipitating out of the water solution onto the
old surface. Our skin oil can interfere with water clinging to the
surface and thus affect the rock formation
They are awesome and the colours some times amaze you . We have a pom
pom formation in one of these caves on the west coast of South island
. You may get to see the photos if u google :))))
180 அடி பூமிக்குக் கீழன்னா சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்குமா? முதுகுல சிலிண்டர் மாட்டிட்டுப் போனீங்களா?ன்னு சொல்லவே இல்லயே... அனுபவம் சுவாரஸ்யமா இருக்கு. நன்றி!
ReplyDeleteஜெயஶ்ரீ, தகவல்களுக்கு நன்றிங்க.
ReplyDeleteவாங்க கணேஷ், அதெல்லாம் இல்லைங்க. சுவாசிக்க குகைகளின் மேலே டிரில்லிங் பண்ணிக்காற்று வர வசதி செய்திருக்காங்கனு நினைக்கிறேன். எதுக்கும் பையரைக் கேட்டுக்கிறேன். அது குறித்து என்ன செய்திருக்காங்கனு. :))))
ReplyDeleteஇதுக்கு 7 வருஷம் முன்னே டெனிசியிலே 150 அடி ஆழக் குகைக்குள்ளே போய் அங்கே இயற்கையாய் வரும் நீர் வீழ்ச்சியைப் பார்த்திருக்கோம். 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது. ரூபி ஃபால்ஸ்னு பெயர். அப்போப் படம் எல்லாம் எடுக்கலை.
ஶ்ரீராம், உங்க கமென்ட் என்ன இவ்வளவு சாவகாசமா வந்திருக்கு? :P தேடிக் கண்டுபிடிச்சேன். கொஞ்ச நாட்களா சில கமென்ட்ஸ் ஸ்பாமுக்குப் போயிடறது! ஏன்னு தெரியலை! :(
ReplyDeleteசாஸ்தா வேறே பக்கம் தெரிஞ்சார். இங்கே தக்ஷிணாமூர்த்திக்குக் கீழே யானை மட்டும் தெரியும். :))))) ரிஷிகள், வணங்குவது போல் தெரியும். இன்னொரு இடத்தில் கல்லாலமரமாகவே இருந்தது. அங்கே ஃபோட்டோ எடுத்தது இருக்கானு பார்க்கணும். ரொம்பக்கிட்டப் போய் எடுக்க முடியலை. நடுவில் பள்ளம்! :))))
// உங்கள் அம்பத்தூர் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு அனுபவங்கள் படிச்சிருக்கோமே.. !!//
ReplyDeleteரொம்பப் பேர் இப்படித்தான் படிச்சிருக்கிறதாச் சொல்றாங்க. ஆனால் பின்னூட்டம் தான் போடறதில்லை! :P//
http://www.blogger.com/comment.g?blogID=18675072&postID=8086399763128245563
மேலும் அப்போல்லாம் ஸ்ரீராம் ஆக இருந்தேன்... இப்போதான் ரீராம் ஆகி விட்டேன்....!! அவ்வ்வ்வவ்....:)))))).
ReplyDeleteசாஸ்தா பிள்ளையார் ராமர் க்ருஷ்ணர் நரசிம்மர் கொஞ்ச இருங்கோ அன்னபூரணி அலமேலுமங்கா சித்த தள்ளி யாரது காமாட்சி..துர்கா பரமேஸ்வரி.. விடமாட்டேளே?
ReplyDeleteஉங்க கண்ணில் உங்க மனம். சுவாரசியம்.
180 அடி ஆழத்துல மயக்கம் வரும்னு சொல்வாங்களே? ஏதாவது instability அனுபவிச்சீங்களா?
ReplyDeleteஎனக்கு பிள்ளையார் நன்றாக தெரிகிறார் மாமி.உங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.
ReplyDeleteநம்ம பக்கங்களில்கூட இப்படிக் குகைக்குள் போய் 'சாமி'களைப் பார்க்கமுடியும். என்ன ஒன்னு அவர் 'நம்ம கண்களுக்கு மட்டுமே' தெரிவார்:-))))
ReplyDeleteமைசூர்பாகு அடுப்பிலிருந்து இறக்கி ட்ரேயிலே ஊத்துறமாதிரி கூட இருக்கும்.(சரியான இனிப்புப் பிசாசு நான்)
நல்ல அனுபவங்கள். எஞ்சாய்!
http://www.blogger.com/comment.g?blogID=18675072&postID=8086399763128245563//
ReplyDeleteஶ்ரீராம், ஸ்கையை வாங்கிட்டீங்க! :))))))) ஹிஹிஹி அ.வ.சி. மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
நீங்க ரீராம்னு தட்டச்சினா அப்படித்தான் வரும்! :P
ReplyDeleteஉங்க கண்ணில் உங்க மனம். சுவாரசியம்.//
ReplyDeleteஅப்பாதுரை, இருக்கலாம். சில இடங்களில் ராணி, ராஜா குதிரை சவாரி, காந்தித்தாத்தானு கூட தெரிஞ்சாங்க. :))))))
ஏதாவது instability அனுபவிச்சீங்களா?//
ReplyDeleteஇல்லை, அதெல்லாம் ஒண்ணும் தெரியலை. குழந்தைங்க கூட நிறையத் தூக்கிட்டு வந்தாங்களே. ஸ்ட்ராலர் தான் உள்ளே கொண்டுவரக்கூடாது என்பதால் பெற்றோருக்குக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு ஏறி இறங்க வேண்டிய சிரமம் இருந்தது. மற்றபடி யாருக்கும் சிரமம் இருந்ததாய்த் தெரியவில்லை.
நன்றி ராம்வி. என் கண்களுக்கும் யானை எல்லாம் தெரியுது. :)))))
ReplyDeleteவாங்க துளசி, நீங்க சொல்றாப்போல் சில இடங்களில் அடுப்பெல்லாமும் தெரியுது. :)))))
ReplyDeleteஅனுபவம் அருமை. இயற்கையின் அதிசயம் இல்லையா? சுத்தி இருக்கற எல்லாத்துலயும் ஈஸ்வரனைப் பாக்கறதுனால, இந்த குகைகள்ளையும் பகவான் தெரியறார் போல இருக்கு.
ReplyDeleteஇங்கே அருகில் pennsylvania வில் ஒரு stalagmite cave உண்டு - Penn Caves. Cavern ride என்று ஒரு படகில் அழைத்துச் செல்வார்கள்.
Jshri - நீங்கள் குறிப்பிட்டது போல NZ தென் தீவா இல்லை வட தீவா? நான் சென்றது வட தீவில் ஆக்லாந்து அருகில் ஒன்று - Glowworm caves. படகில் அழைத்துக் கொண்டு போவார்கள். சில இடங்களில் நடந்தும். உள்ளே இந்த formation வானில் உள்ள நட்சத்திரம் ஜொலிப்பது மாதிரியே இருக்கும்.
உருவங்கள் முக்கியமா மனசில இருக்கும்!
ReplyDeletesky flying!
வாங்க ஶ்ரீநி, பாராட்டுக்கு நன்றி. ஜெயஶ்ரீ நீங்க கேட்டதைப் பார்த்துட்டுப் பதிவிலே சொல்ல முடியலைனாலும் மெயில் போடுவாங்க. நான் காப்பி, பேஸ்ட் பண்ணிடறேன். :)))))
ReplyDeleteவாங்க வா.தி. வரவுக்கு நன்றி. ஹிஹிஹி!
ReplyDeleteகுகைக்குள் நாங்களும் இறங்கி விட்டோம் :))
ReplyDelete