எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, December 08, 2011
கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!
அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.
நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.
இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள்.
திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.
பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..
சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.
திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:
கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.
என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.
கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,
"தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.
சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(
இன்று இந்தியாவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் அனைத்து நண்பர்களுக்கும் என் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள். என்னோட பதிவுகளில் முன்னர் எழுதியவற்றிலிருந்து சில பத்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறேன். மீள் பதிவுக்கு மன்னிக்கவும். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Thiruvannamalai is the epicenter to attract spritual energy of the universe. There is one more mountain exactly the opposite side of the earth (near australia i belive...dont know exactly)where the people do the same girivalam and its been considered as sacred as thiruvannamalai. Sri Ramana Maharshi expressed his doubts to his diciples and later they found this to be true. And this part is considered as female part (sakthi) and Thiruvannamalai is considered as Male part (Sivam).
ReplyDelete//கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
ReplyDeleteமுத்திவரம் கொடுப்போம் என்றார்.//
விவரணை அருமைங்க.
தங்களுக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
தீபத்திரு நாள் நல் வாழ்த்துக்கள். நல்லபதிவு படிக்க முடிந்தது.
ReplyDeleteதீபத் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeletevenkat,
ReplyDeleteநீங்கள் குறிப்பிடுவது பருவதமலை. அதுதான் திருவண்ணாமலைக்கு நேரே இருக்கிறது என்பார்கள். திருவண்ணாமலையை ஈசனாகவும், பர்வதமலையை சக்தியாகவும் வணங்குவதும் உண்டு. பெளர்ணமி தினங்களில் பர்வதமலை ஏறி மேலே போய் வழிபடுகின்றனர். இன்றளவும் அங்கே ஏறிச் செல்வது கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது . மலையில் அடிக்கப்பட்டிருக்கும் கம்பிகள், பொருத்தப்பட்டிருக்கும் தண்டவாளக்கம்பிகள் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டே ஏறவேண்டும்.
வாங்க ஜீவி சார், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, நன்றி. ரொம்பநாளாச்சு பார்த்து. :))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், வரவுக்கு நன்றி.
ReplyDeleteIts not...Another mountain corresponding to Arunachala at exactly the opposite side of the globe, the corresponding pole of the axis near the coast of peru (Bauer Basin) the south pole of spritual axis of the Earth...this Mountain Ramana bhagavan said does exist...after so many years devotees of bhagavan found that it does exist as bhagavan said.
ReplyDeleteஉங்களுக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் தலைவி ;-)
ReplyDeleteஅருமையான பதிவு ! நன்றி ;-)
\\திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் \\
\\பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன்\\
இந்த இரண்டு பகுதிகள் 2 முறை வந்திருக்கிறது...முடிந்தால் edit பண்ணிவிடுங்கள் தலைவி ;-)
அப்படியா, வெங்கட், அருணாசல மஹிமை புத்தகத்திலும், பரமாசாரியாள் அவர்களும் பர்வதமலையைத் தான் கூறியதாய்ப் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது புதுசு. தகவலுக்கு நன்றி.
ReplyDeleteகோபி, பல நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றிங்க. பதிவைத் திருத்திட்டேன். கவனிக்கலை. காப்பி, பேஸ்ட் பண்ணுகையில் தவறு நேர்ந்திருக்கிறது. :)))))))
ReplyDeleteFrom one of the discourses of a Mahan we heard recently I understood that
ReplyDeleteIt is all about spiritual journey and evolution process to realise self . Sashti viratham refines , further progress to karthik poornima to know thy self - the process of shiva shakthi Iykyam ( Ardhanari) and evolves further to be one with the divine light in sankaranthi !( makara jyothi )I found it interesting .
"I am in the light , the light is in me and then finally I AM THE LIGHT " process I suppose :)
"கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!"
ReplyDeleteஅருமயான ஜொலிக்கும் கார்த்த்கைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..
ஜோதி தரிசனத்தைப்பற்றிய நல்ல பதிவு.நிறைய விசயங்களுடன் நன்றி!
ReplyDelete//அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(//
ReplyDeleteஇதைப் பனம்பூ சுற்றுதல் என்போம். இதனைத் தயாரிப்பது ஒரு அருமையான கலை. தீபத்திற்கு முன் இரு நாட்கள் முன்பே தயாரிப்பைத் தொடங்கிவிடுவோம். ம்ஹ்ம், பனம்பூ சுற்றுதல் எல்லாம் மலையேறிவிட்டது. நி.த. நடராஜ தீக்ஷிதர் http://natarajadeekshidhar.blogspot.com
தீபத்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
இன்று மாலை 6 - 9 கிரகணம் இருப்பதால்
தீப விளக்கு வைக்க கூடாது என்று சொல்கிறார்களே
உங்கள் கருத்து கீதாமா ?
@ப்ரியா,
ReplyDeleteஎங்க வீடுகளில் எப்போவுமே அண்ணாமலை தீபம் தான் ஏத்துவோம் ப்ரியா. கார்த்திகை தீபத்திருநாள் எங்களுக்கு முடிஞ்சுடுத்து.
சர்வாலய தீபம் போடறவங்க இந்த வருஷம் கிரஹணம் வருவதால் கொஞ்சம் பிரச்னை தான். கோயில்களில் தான் கேட்கவேண்டும். அல்லது ஐந்து மணிக்கே தீபம் ஏற்றிவிட வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் இருந்திருந்தால் யாரையானும் கேட்டிருக்கலாம். :((((((((
நன்றி கீதாமா ;ஆறு மணிக்கு முன்னதாக தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்!
ReplyDeleteஅப்படித்தான் செய்யணும்னு நானும் நினைச்சேன். நல்லது ப்ரியா, தீபத்திருநாள் வாழ்த்துகள், உங்களுக்கும் இன்று தீபம் ஏற்றும் அனைவருக்கும் வாழ்வில் ஒளி வீசிப் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, நல்வரவு. ஆமாம், சொக்கப்பனை எல்லாம் இப்போ மறந்தே போயாச்சு! :((((
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, ப்ளாகர் அனுமதிக்கிறதில்லையா? இல்லைனா பாப்பா கதை உங்களுக்குப் பிடிக்கலையா? :)))))))) ஆனால் அப்படி எழுதுகையில் எனக்கு மனம் ரிலாக்ஸாக ஆகிறது. அந்த வகையில் எங்கள் ப்ளாகுக்கு நன்றி சொல்லணும். :)))
ReplyDelete"I am in the light , the light is in me and then finally I AM THE LIGHT " process I suppose :)//
உங்க கருத்துக்கு நன்றிங்க.
வாங்க ராஜராஜேஸ்வரி,
ReplyDeleteவரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
விச்சு, வரவுக்கு நன்றிங்க.
ReplyDeleteம்..ஹூம் . தவளை படிச்சேனே !!போட்டேனா .. உம்மாச்சி காக்கா ஓஷ் பண்ணிடுத்து!! 3 தடவை போட்டேன் . காணும்!!! இப்ப வந்தா உண்டு பாப்போம்
ReplyDeleteஜெயஶ்ரீ, ப்ரியாவும் புகார் பண்ணறாங்க. அது என்னமோ சிலரை விடறதில்லை; என்னனு புரியலை. தனி மெயிலிலும் சிலர் சொல்லி இருக்காங்க. :(( புரியலை. பின்னூட்டத்தை நேரமிருந்தா மெயில் பண்ணுங்க. இல்லைனாலும் பரவாயில்லை. அனுமதி எதுக்குக் கிடைக்கிறதோ அதுக்குப் பின்னூட்டம் கொடுங்க.
ReplyDelete