யு.எஸ். வந்தால் அக்காவும், தம்பியுமாக நாங்கள் தங்கும் காலத்தைப் பங்கு போட்டுக்கொள்வது வழக்கமே. அது போல் இப்போதும் தம்பி வீட்டுக்கு முன்னால் வந்தாச்சுனு அக்கா கிட்டே இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு. ஒருவழியாக இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பெண்ணும், அவங்க குடும்பமும் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பையரோ விமானத்தில் போயிடுங்கனு அதைக் குறித்துச் செய்த ஆய்வுகளில் விமானப் பயணச்சீட்டின் விலை ஹூஸ்டனில் பையர் வீட்டை விட அதிக விலை என்பது தெரிந்தது மட்டுமின்றி, நாங்க ஹூஸ்டனில் இருந்து டாலஸ் போய் அங்கிருந்து இன்னொரு இடம் போய் மெம்பிஸ் போகும் விமானத்தைப் பிடிக்கவேண்டும். அல்லது ஷிகாகோ போய் அங்கிருந்து மெம்பிஸ் போகவேண்டும், இல்லைனா அட்லான்டா போய்ப் போகவேண்டும். ஆங்காங்கே காத்திருக்கும் நேரங்களை எல்லாம் கணக்குப்பண்ணினால் 10 மணி நேரம் ஆகிவிடும். ஆகவே நாங்க காரிலேயே போகலாம் என்ற எங்கள் விருப்பத்தைச் சொன்னதும் பெண் புறப்பட்டு வந்தாள். இங்கே கார் பயணம் அலுப்பைத்தராது. சுகமாகவே இருக்கும்.
எல்லாம் நல்லபடியாகவே இருந்தது. வழியெல்லாம் மழை கொட்டித்தீர்த்தது. ஆனால் இங்கே மழை பெய்தால் எல்லாம் பயணத்துக்கு அசெளகரியம் எல்லாம் ஏற்படாது. சாலைகள் எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்பதால் ஒரு பிரச்னையும் இருக்காது. திடீர்னு ஒரு இடத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. என்னனு பார்த்தால் இவ்வளவு அதிகவனமான ஏற்பாடுகளிலும் ஆங்காங்கே விபத்தும் நேரிடுகிறது. அது போல நாங்க மெம்பிஸ் போய்ச் சேர இரண்டு மணி நேரம் முன்னர் ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து ஏற்பட்டிருந்த விபத்தைப் பார்த்துக்கொண்டே சென்றோம். கார் அந்த இடத்தைக்கடக்க அரை மணி நேரம் ஆனது. ஒருவழியா மெம்பிஸும் வந்து சேர்ந்தோம்.
இரவு உணவுக்காக ஒரு நல்ல உணவு விடுதியில் நிறுத்தலாம் என எங்களுக்கு ஒத்துவருகிறாற்போல் ஒரு உணவு விடுதியில் காரை நிறுத்தினார் எங்கள் மருமகர். அனைவரும் இறங்கி உள்ளே போய் அவரவருக்கு வேண்டியதைச் சொல்லிவிட்டு உணவு வரக் காத்திருந்தோம். நாங்க ஆர்டர் செய்திருந்த தோசையும் வந்தது. உணவை வாயில் போடும்போது விடுதியின் மானேஜர் வந்து, கார் அடையாளத்தைச் சொல்லி, முன்புறத்து ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். உடனேயே பதறி அடித்துக்கொண்டு எல்லாரும் வெளியே பாய்ந்தோம். அன்னிக்குனு பார்த்து நான் எப்போதும் இணைபிரியாமல் கையிலேயே வைத்திருக்கும் என் கைப்பையை வண்டியிலேயே விட்டுட்டு வந்துவிட்டேன். பின் சீட்டிலே போர்வையைப் போட்டு மூடி வைத்திருந்தோம்.
உள்ளே பார்த்தால் எங்க மருமகரின் லாப்டாப் இல்லை; குழந்தைகள் சினிமா பார்க்கவென்று அதை எடுத்திருந்தது. அவங்க பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஊர் வந்துவிட்டதால் திரும்ப உள்ளே வைக்காமல் டிரைவிங் சீட்டின் அடியிலேயே வைத்திருந்திருக்கிறார். யாருமே அதைப் பெரிசாக நினைக்கவில்லை. தெரிந்த ஊர், தெரிந்த இடம் என்ற அலட்சியமா? அல்லது நேரமா! புரியவில்லை. எப்போதும் கவனத்தோடு இருக்கும் நானும் என் கைப்பையை வைத்துவிட்டுப் போயிருந்தேன்! ஆகவே இது நேரம் தான் காரணம் என நினைக்கிறேன். லாப்டாப்பைக் காணோம் என்றதும் வண்டியை மறுபடி சோதனை போட்டோம். நல்லவேளையாகக் கைப்பை இருந்தது. வேறு பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தன. எங்க வண்டிக்கு அருகே இருந்த மற்றொரு வண்டியும் முன்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவங்க உள்ளூரிலேயே இருந்து வந்திருப்பதால் அதிகம் சாமான்கள் இல்லை. ஆனாலும் வண்டி ஜன்னல் உடைந்ததைச் சொல்லி ஆகவேண்டும். அப்போத் தான் இன்ஷூரன்ஸ் காரங்க மாத்திக் கொடுக்க வசதி. உடனே போலீஸும் வந்தது. கேஸ் பதிவு செய்திருக்கிறார்கள். லாட்டாப்பை வாங்கிய கம்பெனிக்குத் தொலைபேசி லாப்டாப் சென்றிருக்கும் வழியைத் தேடச் சொன்னது. அவங்க பார்த்ததில் லாப்டாப்பில் இருந்து எதையும் நீக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
கூடியவரை உடனடியாக வங்கிக்கணக்கெல்லாம் முடக்கி, க்ரெடிட் கார்ட் கணக்குகள் மற்ற முக்கியக் கணக்குகளை எல்லாம் முடக்கியாச்சு. முதலில் உணவை வாங்கிக்கொண்டு வீட்டில் போய் உண்பதாக இருந்தது. ஆனால் திடீரெனத் தோன்றியதொரு யோசனையில் எல்லாருமே அங்கேயே சென்று உண்பதாக முடிவு செய்தோம். அது ஒருவேளை நன்மைக்குத்தானோ என இப்போது தோன்றுகிறது. எல்லாரும் வண்டியிலேயே அமர்ந்திருந்து ஒருத்தர் மட்டும் இறங்கிப் போய் உணவு வாங்கச் சென்றிருந்தாலோ அல்லது பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டும் போயிருந்தாலோ, அந்த ஆள் வந்து வண்டியில் இருந்தவங்களை மிரட்டி இருக்கலாம்.அல்லது துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கலாம். என்ன ஒரு விந்தை என்றால் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்கையில் பாதுகாப்பிற்கெனப் பொருத்தி இருக்கும் எச்சரிக்கை மணி இரண்டு கார்களில் இருந்துமே ஒலிக்கவில்லை. வந்தவன் சாமர்த்தியமாக அதைச் செயலற்றதாக்கி இருக்கிறானோ? தெரியவில்லை. உடைந்த கண்ணாடியை ஓரளவுக்குத் திரட்டிப் போட்டுவிட்டு போலீஸ் எங்களை அங்கிருந்து கிளம்ப அனுமதி கொடுத்ததும் மிச்சம் உடைந்த துகள்கள் மேலேயே அமர்ந்த வண்ணம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒருத்தருமே சாப்பிடவில்லை. மற்ற பாதுகாப்பு வேலைகளைப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்து தொடர, குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு எங்களுக்கு இரவு முழுதும் சிவராத்திரியும், ஏகாதசியுமாகப் பொழுது கழிந்தது.
மூன்றுமுறை யு.எஸ். வந்து சென்றதில் இம்மாதிரி நடந்தது இதுவே முதல்முறை. இறை அருளால் தப்பிப் பிழைத்திருக்கிறோம். இதுவே கடைசிமுறையாகவும் இருந்து வரப் போகும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறோம்.
அடடா. எந்த ஊர்லைங்க இப்படி நடந்துச்சு?
ReplyDeleteMemphis le Vivasayee! :(
ReplyDeleteஎன்ன தான் ஜாக்கிரதையா இருந்தாலும் சில நேரங்கள்ல இப்படி நடந்திருது. :-(
ReplyDeleteபுகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்கள் இன்னும் என்னென்னவோ மடிக்கணியில் இருந்திருக்கும். கொஞ்சம் நாள் மனசுல 'ஐயோ அந்தத் தகவல் இருந்திருக்குமோ, இந்தத் தகவல் இருந்திருக்குமோ'ன்னு ஒரு பயத்தோட எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருக்கும். உங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்க.
அட கொடுமையே ! ;(
ReplyDeleteகவனம் தலைவி !
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் பொருளிழப்பை சரி செய்து கொள்ளலாம். உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றும் நேராமல் இருந்ததே அதுவே இறையருள்.
ReplyDeleteகவலை பட வேண்டாம். புதிய ஆண்டு அருமையானதாக அமைய வாழ்த்துக்கள்.
நினைச்சாலே பயமா இருக்கு அம்மா. நல்ல வேளையாக நீங்களும் மற்றும் அனைவரும் நலம் என்பது அறிந்து நிம்மதி.
ReplyDeleteஅங்கே திருட வருபவர்கள் இரக்கமில்லாமல் தாக்கவும் கொல்லவும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லவேளை... தப்பினீர்கள்! இனிஎன்ன... புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும்!
ReplyDeleteதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்பார்கள் அது போல... நல்ல வேளை.. உள்ளே பொருத்தப் பட்டிருக்கும் எச்சரிக்கை மணி எப்படி செயலிழந்திருக்கும்? ஜாமர் போல ஏதும் வைத்துச் செய்வார்களோ?
ReplyDeleteபோனதெல்லாம் போகட்டும் பொருள் இழப்புதானே நீங்கல்லாம் பத்திரமா இருக்கீங்களே அதுவே போதும் வரும் புது வருடம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteTake care... :-(
ReplyDeleteஇப்போலாம் அமெரிக்கா/அமெரிக்கர்கள் மாறிவிட்டன(ர்). திருடர்கள் எங்கும் உண்டு. அமெரிக்காவிலும்.
ReplyDeleteபொது இடங்களில் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை. என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது.
இப்போலாம் அமெரிக்கா/அமெரிக்கர்கள் மாறிவிட்டன(ர்). திருடர்கள் எங்கும் உண்டு. அமெரிக்காவிலும்.
ReplyDeleteபொது இடங்களில் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை. என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது.
மூன்றுமுறை யு.எஸ். வந்து சென்றதில் இம்மாதிரி நடந்தது இதுவே முதல்முறை. இறை அருளால் தப்பிப் பிழைத்திருக்கிறோம். இதுவே கடைசிமுறையாகவும் இருந்து வரப் போகும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறோம்.//
ReplyDeleteநிச்சியம் நீங்கள் எல்லோரும் இறை அருளால் தான் தப்பிப் பிழைத்திருக்கிறீர்கள்.
வரும் புத்தாண்டு உங்களுக்கு நன்மையைக் கொடுக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
கேட்க மிக வருத்தமாக உள்ளது. அங்குமா இப்படி?? :))
ReplyDeleteTake care.
வாங்க குமரன், ரொம்பநாட்களாகின்றன பார்த்து. நீங்க சொல்வது சரியே. இந்த பயம் இன்னும் சரியாகவில்லை என்பதும் உண்மை.
ReplyDeleteகோபி, கொடுமைதான், என்ன செய்யறது. :((((
ReplyDeleteநன்றி சத்யப்ரியன். பொருளிழப்பைக் குறித்துக் கவலை இல்லை. அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. :(
ReplyDeleteநன்றி கவிநயா, உங்க பிசியான நேரத்திலும் வந்து ஆறுதல் சொன்னதுக்கு நன்றிம்மா.
ReplyDeleteவாங்க கணேஷ், கன் கலாசாரம் தானே இங்கே. நல்லவேளை வண்டியில் யாரும் தங்காமல் எல்லாருமாய் உள்ளே சென்றோம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஆட்டோமொபைல் மெகானிசம் தெரிஞ்சிருக்கிறவங்க யாரோதான் செய்திருக்கணும்னு சொல்றாங்க. அவங்களுக்குத் தான் காரின் செக்யூரிடி அலார்மை எங்கே பொருத்தறது, எப்படி டிசேபிள் பண்ணறதுனு தெரியும் இல்லையா! என்னவோ பண நஷ்டத்தோட போச்சே!
ReplyDeleteநன்றி லக்ஷ்மி, வரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றிம்மா.
ReplyDeleteஶ்ரீ, நன்றி.
ReplyDeleteஆதிமனிதன்,
ReplyDeleteகாரின் கண்ணாடியை ஏற்றிவிட்டுக் காரைப் பூட்டிட்டுத் தான் போனோம். காரின் கண்ணாடியை உடைச்சுத் திருடறவங்களை என்ன செய்ய முடியும்? அதுவும் பொதுவான பார்க்கிங். ஹோட்டல் வாசல். பக்கத்தில் வேறு பலரின் கார்கள் நின்று கொண்டிருந்தன.
வாங்க கோமதி, வரவுக்கும் நல்வார்த்தைக்கும் மிக்க நன்றிம்மா.
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சி பதிவு பக்கம் வந்தேன். படிக்க வருத்தமாக இருந்தது.
ReplyDeleteஒரு பொருள் தொலைந்தால் அது மனசை குடைந்து கோண்டே இருக்கும்.வெளியே போகும் போது ஒரு பதற்றமாகவும் இருக்கும்.;-(
Please take care. All the best. And a Happy New year.
வாங்க வெற்றிமகள், அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteபடித்ததும் கவலையாகி விட்டது :(
ReplyDeleteஇறையருளால் நீங்கள் தப்பியதே போதும்.
மலரும் ஆண்டு நன்மைகளைக் கொண்டு வரட்டும். வாழ்த்துகள்.