இந்தப் படம் விக்கி பீடியாவின் தளத்தில் இருந்து எடுத்தேன். மற்றப் படங்கள் கீழே போட்டிருப்பவை அங்கே கோட்டையின் வெளிச் சுற்றில் வைத்திருந்த புகைப்பட ஓவியக் காட்சிகளில் சில. உள்ளே படம் எடுக்கக் கட்டாயமாய் அநுமதி இல்லை. அப்படியும் ஒரு சில இடங்களில் எடுக்க முயற்சித்தேன். அவை வெளியே இருந்த சிறைச்சாலை அறைகள். உள்ளே முக்கியத் தலைவர்கள் இருந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தாலும் செப்பனிட்டுப் பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர். அங்கே முற்றிலும் படம் எடுக்கத் தடை
1836-ஆம் ஆண்டு. மெக்ஸிகோவில் இருந்த ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த டெக்ஸாஸ் மாநிலத்தவர்களுக்கு காலனி ஆதிக்கம் பிடிக்கவில்லை. மெக்ஸிகோ ஸ்பெயின் நாட்டோடு தொடுத்த விடுதலைப் போராட்டத்தில் ஜயித்து 1821-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அதிலிருந்து 1836-ஆம் ஆண்டு வரை டெக்ஸாஸ் மாநிலமும் ஸ்பானிஷ் டெக்ஸாஸ் ஆக, மெக்ஸிகோவின் கீழ் இருந்த ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. ஆனால் 1824-இல் போடப்பட்டப் பொதுக்காலனிக்குடியேற்றச் சட்டம் மூலம் பல தொழில் முனைவோர்கள் அமெரிக்க ஐக்கியக் குடியரசிலிருந்து இங்கே வந்து குடியேறினார்கள். அவர்களில் பலரும் டெக்ஸாஸில் நிலங்களை வாங்கிப் பெரும்பண்ணைக்காரர்களாகவும், பல அடிமைகளையும் வைத்திருந்தனர். அடிமைகளை விடுவிக்கும்படி மெக்ஸிகோவின் அதிபர் 1830 ஆண்டு அவசரச் சட்டம் பிறப்பித்தும் டெக்ஸாசிற்கு மட்டும் சலுகை தருமாறு கேட்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே சலுகை கிடைக்கப் பெரும்பாலான பண்ணைக்காரர்கள் ஒப்பந்த அடிப்படையில் அனைத்து அடிமைகளையும் வாழ்நாள் முழுவதுக்கும் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டுவிட்டனர். 1836 வரையிலும் கிட்டத்தட்ட 5,000 அடிமைகள் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.
1830-ஆம் ஆண்டு அதிபர் மீண்டும் அடிமைகளை விடுவிக்கும்படியும், அடிமைகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கடுமையாகத் தடை செய்தார். மேலும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இங்கு குடியேறும் வெள்ளையர்களையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தார். வெள்ளையர் குடியேற்றம் முற்றிலும் தடுக்கப்பட்டது. சுங்கச்சாலைகளில் கண்காணிப்பு, பண்ணைகளில் கண்காணிப்பு எனத் தனிப்பட்ட கண்காணிப்புக்களும், எல்லைகளில் கண்காணிப்பும் தடுத்து நிறுத்துவதும் அதிகமாகிக் கொண்டே போனது. இங்கிருந்த காலனி மக்கள் ஐக்கிய அமெரிக்க மக்கள் டெக்ஸாஸிற்கு வருவதையும் குடியேறுவதையும் தடுக்கக் கூடாது எனக் கூட்டம்போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் டெக்ஸாஸைத் தனி நாடாக அறிவிப்பும் செய்தார்கள். எந்த நாட்டோடும் சார்ந்திராத தனி மாநிலம் என அறிவிக்கப்பட்டது. மெக்ஸிகோவின் அரசும், அதிபரும்பல விதங்களிலும் டெக்ஸாசின் குடியிருப்போரையும், அங்கே குடியிருக்க வந்த மற்ற ஐக்கிய அமெரிக்க வெள்ளையர்களையும் திருப்தி செய்ய முயன்றது. ஆனால் மெல்ல மெல்ல அதிபரின் நடவடிக்கைகளால் அதிருப்தியே மேலோங்க டெக்ஸாஸ் வாழ் மக்கள் புரட்சிக்குத் தயாரானார்கள்.
1832-ஆம் ஆண்டு முதல் புரட்சியும், நடந்தது. அதன் பின்னர் வந்த நான்கு வருடங்களில் 1836-ஆம் வருடம் டெக்ஸாஸின் முக்கிய அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்களால் டெக்ஸாஸ் சுதந்திரமான தனி நாடாக அறிவிக்கப்பட்டது. புரட்சி முடிந்து மேற்கு நாடுகளின் அடுத்த நெப்போலியன் என வர்ணிக்கப்பட்ட சான்ட் அன்னா சிறையில் அடைக்கப்பட்டார். அன்றிலிருந்து டெக்ஸாஸ் நிர்வாகத்தை அதன் மக்களே கவனித்துக்கொண்டாலும் மெக்சிகோ அதன் சுதந்திரத்தை அங்கீகரிக்கவே இல்லை. 1836-ஆம் ஆண்டு சான் அன்டானியோ என்னும் இந்த ஊரின் கோட்டையில் நடந்த புரட்சிப் போரே பாட்டில் ஆஃப் அலமு என அழைக்கப்படுகிறது. டெக்சாஸில் குடியேறிய அனைவருமே இந்த சுதந்திரச் சண்டையில் பங்கெடுக்க அழைக்கப்பட்டனர். ஆனால் மெக்சிகோ தரப்போ பூரண படை பலத்தோடு இருந்தது. டெக்ஸாஸின் படைவீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் கிடைக்கவில்லை. கிடைத்த ஆயுதங்களப் பலராலும் பயன்படுத்தவும் முடியவில்லை. எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.
சான்ட் அன்னா அலமோ கோட்டையை முற்றுகை இட முன்னேறி வருவது தெரியாமல் டெக்ஸாஸின் வீரர்கள் உள்ளூர்ப் பொதுமக்களோடு சேர்ந்து அமெரிக்க ஐக்கியக் குடியரசின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.
மேலுள்ள மூன்று படங்களும் நான் எடுத்தவை. இவை தவிர அந்தக் காலகட்டத்து அரவை இயந்திரம், ஆயுதங்களின் ஒரு பார்வை போன்றவை அடுத்த பதிவில்
டெக்ஸாஸ் புரட்சியும்,அலமோ முற்றுகையும்!"
ReplyDeleteபடங்களுடன் விளக்கம் நிறைய அறிந்துகொள்ள முடிந்தது.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
படங்களை ரசித்ததுடன், புதிய பல விஷயங்களையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
ReplyDeleteஒண்டர்புல்! இதையெல்லாம் விவரித்துச் சொல்வதற்காகத் தான் இந்தப் பயணம் என்கிற மாதிரியாக இருந்தது. வர்ணிப்பின் தத்ரூபத்திற்காகச் சொன்னேன். பாராட்டுகள்.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, பாராட்டுக்களுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க கணேஷ், முதல் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஜீவி சார் உங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி.
ReplyDelete