1960 ஆம் ஆண்டு சில மாணவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது இந்தச் சுண்ணாம்புப் பாறைக்குகைகள். மூன்று கல்லூரி மாணவர்கள் இந்த இடத்திற்குச் சுற்றுலா வந்தபோது தற்செயலாகக் கண்டுபிடித்து முதல்முறை ஒரு மைல் தூரம் செல்லும் குகைப்பாதையைக்கண்டறிந்தார்கள். மேலும் மேலும் அங்கே சென்று ஆய்வுகள் செய்ததில் மேலும் இரண்டு மைலுக்கும் மேலுள்ள பாதையும் அதை ஒட்டிய குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதை வடக்குக் குகைகள் என்றனர். குகைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவை தனியார்களின் நிலங்களில் இருந்ததினால் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலமே குகைகளின் பராமரிப்பும் செய்யப்பட்டு குகைப்பாதையும் மேம்படுத்தப்பட்டது. நிலத்தின் சொந்தக்காரப் பெண்மணி இதை உலகுக்கு அறிவிக்க விரும்பினாள். கல்லூரி மாணவரான ஓரியனால் இது டெக்சாஸின் நகர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அவர்களிடம் தேவையான நிதி உதவி இல்லை எனச் சொல்லப்பட்டது.
ஓரியனும், அவர் நண்பரும் துணை செய்ய நிதியைப் பெருக்க முடிவு செய்தார் நிலச் சொந்தக்காரப் பெண்மணி. அவரின் கணவரும் தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் வேலை செய்தவர் என்பதால் அவரும் தன் பங்குக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். அவர்களின் குமாரனும் சேர்ந்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் மூவரும் ஓரியன், அவர் நண்பர் ஆகியோர் துணையோடு குகையை மேலும் பரிசோதித்துக் கொண்டு முன்னேற ஆரம்பித்தனர். அப்போது சில படிவங்கள் 5,000 வருடங்களுக்கும் முன்னால் ஏற்பட்டவை என்பது தெரிய வந்தது. மேலும் மேலும் சோதித்ததில் கறுப்புக்கரடி ஒன்றின் தொடை எலும்பும், தாடை எலும்பும் கிடைத்தது. அது குறைந்த பட்சமாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற தகவலும் கிடைத்தது. மேலும் உள்ளே சென்று சோதனைகள் செய்ய விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளே சென்றனர். பின்னர் 1964-ஆம் வருடம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பொதுமக்கள் பலரால் இது பார்வையிடப்பட்டு வருகிறது. இதை நிர்வகிப்பது இன்றளவும் நிலச்சொந்தக்காரப் பெண்மணியின் குடும்பத்தினரே. வேறு எவராலும் நிர்வகிக்கப்படவில்லை.1968-ஆம் ஆண்டு மேலும் சோதித்ததில் அவர்கள் தோண்டியதற்குக் கீழே இன்னமும் ஆழத்தில் ஒரு பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது. உள்ளே காமிராவை விட்டுப் பார்த்ததில் அங்கே ஒரு பெரிய அறை இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் குகைப்பாதையை இன்னும் சீரமைத்துக் கீழே இறங்க வழி செய்து கீழே தவழ்ந்தே சென்று அந்த அறையை அடைந்தனர். அந்த அறையை முதலில் சென்றடைந்த ஜாக், ரெக்கி, மைல்ஸ் மூவரின் பெயரிலும் அந்த அறை ஜாரெமி அறை என்றே அழைக்கப்படுகிறது. மேலும் மேலும் குகையைத் துளைத்துக்கீழே கீழே செல்கையில் குகையின் வடபாகத்து நேர் எதிரே தென்பாகத்திலும் ஒரு குகைப்பாதை செல்வதும், அதை ஒட்டியதொரு பெரிய அறையும் கண்டெடுக்கப்பட்டது. இது இன்னும் அரை மைல் தூரத்தை அதிகரித்தது. சமீபத்தில் 2005-இல் செய்த ஆய்வின்படி, இன்னும் சில நூறடிகளுக்கும் கீழே இந்தக் குகைப்பாதை செல்லும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
அந்த ஆய்வு இன்னமும் முடிவடையவில்லை. என்றாலும் இவை தற்சமயம் இருக்கும் வடக்குப்பக்கத்துக் குகைக்கு அருகே இருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்சமயம் இந்தப் பெயரை மாற்றி உள்ளனர். தென்பக்கம் செல்லும் பாதையை மறைந்திருக்கும் பாதை/ஹிட்டன் பாசேஜஸ். என்றும், வடபக்கம் செல்லும் பாதையை டிஸ்கவரி பாசேஜ்/புதிய கண்டுபிடிப்புப் பாதை எனவும் மாற்றி இருக்கின்றனர். இந்தப்பாதையில் கொஞ்ச தூரம் இருட்டிலேயே செல்ல வேண்டி இருக்கும். இரண்டு பாதைக்கும் தனித்தனியாகச் செல்ல வேண்டும்.
தென் பக்கம் செல்லும் பாதை இரண்டு மைல் தூரத்திற்குச் சென்று திரும்பும் வகையிலும், அந்தப்பக்கம் பெரிய அறைகள் இரண்டும் உள்ளன. வடப்பக்கம் செல்லும் பாதை அரை மைல், முக்கால் மைல் என்றாலும் செல்லும் பாதை கொஞ்சம் கடினமானதாகவும் இருக்கும். இரண்டையும் பார்ப்பது அல்லது ஒன்றை மட்டும் பார்ப்பது என்பது நம் விருப்பத்தைப் பொறுத்து.
சுவாரஸ்யமான தகவல்கள். நம் ஊராய் இருந்திருந்தால் இந்நேரம் அரசாங்கம் கையகப் படுத்தி தொல் பொருள் துறைக் கையகப் படுத்தியிருக்கும்!
ReplyDeleteஇதுவரை தெரிந்திராத தகவல்கள். மிக சுவாரசியம்.
ReplyDeleteஅருமையான தகவல்கள்.படங்கள் சிறப்பாக இருக்கு.
ReplyDelete:-))
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம், கையகப்படுத்திக் கொண்டு நாசமாக்கி இருக்கும். ஒரே ப்ளாஸ்டிக் குப்பைக்காடாக மாறி இருக்கும். :))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, நன்றி.
ReplyDeleteவாங்க ராம்வி, நன்றி.
ReplyDeleteவா.தி. என்ன சிரிப்பு??? :P
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமானத் தகவல்கள். அருமையான புகைப்படங்கள். படித்ததும் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.
ReplyDelete