எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 18, 2011

யப்ப்ப்ப்ப்பா, இத்தனையானு கேட்காதீங்க! இம்புட்டுத்தான்!

உத்தமபுத்திரன்,= அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. சுமார் ரகம் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது சிவாஜி நடிச்சதோ பி.யு. சின்னப்பா நடிச்சதோ இல்லையாக்கும். தனுஷ்(?) நடிச்ச உத்தமபுத்திரன். நம்ம கணேஷ் கேட்டிருக்கார்; அதுக்கப்புறம் தான் செக் பண்ணினேன். மூணு உத்தமபுத்திரன்! :)))))))


த்ரீ இடியட்ஸ் = பிரமாதமாப் பேசினாங்க; ஆனால் சில இடங்களில் ரசிக்க முடியலை. சில இடங்களில் பரவாயில்லை. கடைசிக் காட்சியில் தான் அமீர்கான் தான் தான் சந்திக்கவேண்டிய வாங்க்டு என்று தெரிந்ததும் மனம் மாறுவது சரியான சினிமாத்தனமாக இருக்கிறது.


ஜப் வி மெட்= இது கொஞ்சம் பரவாயில்லை. ஜோடிப் பொருத்தமும் நல்லா இருந்தது. நான் கரீனா கபூர் நடிச்ச படங்கள் ஜாஸ்தி பார்த்ததில்லை. இதிலே பரவாயில்லாமல் நடிச்சிருக்காங்க என்றாலும் கரிஷ்மாவின் நடிப்போடு போட்டி போடமுடியுமா? சந்தேகம் தான். ஜுபைதாவும், சக்தியும் போதுமே கரிஷ்மாவுக்கு!


கோ = கொஞ்சம் இல்லை நிறைய யதார்த்தமான படம். ஆரம்பத்திலேயே ஊகிச்சுட்டேன். யார் வில்லன் என்று. அதனால் கடைசியிலே அதிர்ச்சியாக இல்லை. முழுக்க முழுக்க நடக்கக்கூடிய சாத்தியங்களே படம் முழுதும். எல்லாமும் வெகு இயல்பாக இருக்கின்றன. அரசியல்வாதிகள் அனைவரும் நிஜமான அரசியல்வாதிங்களோனு நினைக்க வைச்சுட்டாங்க. அவ்வளவு ஜகஜம்! ஹிஹிஹி!



ஜெரி= ஹிஹிஹிஹிஹி தான் படம் முழுசும்! பின்னே! மாது பாலாஜியும், கிரேசி மோகனும் வந்தால்! வேறே எப்படி இருக்கும்? என்றாலும் படம் நல்லதொரு கருத்தைச் சொல்கிறது. மென்டலி ரிடார்டட் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கும் கதாநாயகி ஜானகி(கிரேசியோட நிரந்தரக்கதாநாயகி பெயர் ஜானகி தான் இதிலேயும்) திருமணமாகாத கல்லூரிப் பெண். (இதிலே நடிக்கும் பெண் தான் இப்போ சீரியல் ஒண்ணிலே வர துளசி??) இந்தக் குழந்தையைத் தான் தத்து எடுத்ததை ஒப்புக்கொள்ளும் ஆணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று தனக்குள்ளாக சபதம் எடுத்திருக்கிறாள். அவங்க அப்பா, அம்மாவுக்குக் கூடத் தெரியாமல். அது நடக்கிறதா?

கதாநாயகனோ (யாருங்க அது?) செலக்‌ஷனே சரியில்லை; வேறே யாரையானும் போட்டிருக்கலாம்; நகைச்சுவைக்காட்சியிலே முகபாவம் சரியில்லை; மத்தது மட்டும் வாழ்ந்ததா? அதுவும் இல்லை! கதாநாயகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஒரே சமயம் மூணு பேரை லவ் பண்ணிக்காட்டுவதாக நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு மூணு பேரையும் ஒரே சமயம் காஃபி ஷாப், அங்கே இங்கேனு வர வைச்சுட்டுக் கடைசியிலே ஜானகியை லவ் பண்ண முடியாம அவ பிறந்த நாளுக்கு யாரையோ பார்க்கப் போறானு பின் தொடர்ந்து உண்மையைக் கண்டு பிடிச்சு...... உண்மையான காதல் பிறந்து....... மூணு பேரையும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லி......... ஹிஹிஹி மூணு பேரோட உறவினர்களிலேயும் ஒருத்தருக்கு அம்மா, அப்பா, இன்னொருத்தருக்கு அண்ணன், அண்ணி, மூன்றாமவருக்கு மாமா, அத்தை னு இருந்ததாலே மாப்பிள்ளை ஜெரியின்(ஜெயராமனுக்கு ஜெரியாம்) அப்பா மூணு பேரும் ஒரே பொண்ணு குடும்பம்னு நம்பக் குழப்பமோ குழப்பம்; அவங்களுக்கு இல்லை. நமக்கும் இல்லை. நல்லா ரசிக்க முடியுது! கிரேசியைக் கேட்க வேண்டுமா! வெளுத்துக் கட்டி இருக்கார்!

அப்புறமாக் கடைசிலே உண்மை தெரிஞ்சதும் ஜெரியோட அப்பா மாட்டேன்னு சொல்லியும் ஜெரி மற்ற இரண்டு மணப் பெண்களின் துணையோடும் (அவங்களும் உண்மை தெரிஞ்சு மனசு மாறிடறாங்களாம், :P) கல்யாணம் செய்துக்கறார். அதோடு இரண்டு பேரும் குழந்தையே பெத்துக்கப் போறதில்லைனு முடிவு எடுத்திருப்பதாயும், இந்தக் குழந்தையைத் தான் வளர்க்கப் போவதாயும் சொல்லுகிறார். நல்லதொரு செய்தி இருக்கே படத்தில்; அந்த வகையில் பாராட்டலாம்.

கடைசி சீன் சூப்பரோ சூப்பர்! :)))))))


சென்னை 28 ரொம்ப எதிர்பார்ப்போட பார்த்த படம். கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடிக்கும். படம் தொய்வில்லைனாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை. சென்னை -28 இரண்டாம் பாகம் வந்தாச்சா? யாராவது சொல்லுங்கப்பா!

கண்ட நாள் முதல் = கிட்டத்தட்ட ஜப் வி மெட் படத்தோட கதை தான் என்றாலும் அதிலே எதிர்பாராமல் சந்திக்கறாங்க. இதிலே அப்படி இல்லை. சின்ன வயசிலே இருந்து பழகிட்டுச் சண்டை போட்டுட்டு, ஹீஹிஹி, ரெண்டு பேரும் என்ன ஒரு இயல்பா சண்டை போடறாங்க! லைலாவுக்கு (கல்யாணத்துக்கு அப்புறம்??) இதெல்லாம் என்ன இயல்பா வருதுங்கறீங்க! அருமையாச் சண்டை போடறாங்க. ஆனால் அடிக்கிறது தான் கொஞ்சம் என்னவோ போல் இருக்கு. அதிலும் முதல் தரம் அடிக்கிறதை நியாயப்படுத்த முடியுது. படம் முடியறச்சே அடிக்கிறது ம்ஹும்; அந்த சீனுக்கு உள்ள மகத்துவத்தையே அந்த அடி குறைச்சுடுது! ஆனால் கண்ணுக்கு இனிமையான வீடுகளிலே நடக்கிற சம்பவங்கள் தான். பக்கத்து வீட்டிலே நடக்கிறதைக் காதால் கேட்டுக்கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே நம் வீட்டில் குளிர்ந்த மாலை நேரத்தில் கையிலே ஒரு நல்ல புத்தகத்தை வைத்துக்கொண்டு சூடாய் பஜியாவோ, பக்கோடாவோ சாப்பிட்டுக்கொண்டு அவ்வப்போது புத்தகத்தில் ஒரு கண்ணும், பக்கத்து வீட்டு நிகழ்ச்சியில் இன்னொரு கண்ணுமாக இருப்பது போல் ஓர் உணர்வு.


இன்னும் சில மனதில் நிற்காத படங்கள். ம்ஹும், சுகமில்லை.

17 comments:

  1. தலைப்பைப்பார்த்ததும் சரி கேட்க வேணாம்னு தான் நினைச்சேன்.ஆனா,படிச்சு முடிச்சதும்......இத்தனையா??

    ReplyDelete
  2. ஏங்க... டபுள் ஆக்ட்ல சிவாஜி சார் கலக்கிருப்பாரு... உத்தமபுத்திரன் சுமார்ன்னு இத்தனை வருஷம் கழிச்சா விமர்சனம் போடுவீங்க... ரொம்ப ஸ்ஸ்ஸ்லோஓஓஓஓ போங்க...

    ReplyDelete
  3. அவ்வ்வ் தலைவி எப்போ எழுதிவச்ச பதிவு இது ;-)))

    \\சென்னை 28 ரொம்ப எதிர்பார்ப்போட பார்த்த படம். \\

    இதுக்கு அப்புறம் 2 படம் எடுத்தட்டார் வெங்கட்பிரபு ;-)

    ReplyDelete
  4. ஹிஹிஹி, ராம்வி, பொழுதைப் பிடிச்சுத் தள்ள வேண்டி இருக்கு! அப்போ சில நாட்கள் இப்படி நல்லபடம்னு தெரிஞ்சா உட்கார்வது உண்டு. :))))) சென்னைனா அடுத்தடுத்து ஏதேனும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  5. @கணேஷ், ஹிஹிஹி, இது தனுஷ் நடிச்சதுனு நினைக்கிறேன். பதிவிலே திருத்திட்டேன் பாருங்க. :)))))

    ReplyDelete
  6. கோபி, ஹிஹிஹி, நேத்துத் தான் எழுதினேன். நான் பார்த்தப்புறமாத் தானே விமரிசிக்க முடியும்? அதான்! :))))))

    ReplyDelete
  7. வெங்கட் பிரபு எடுத்திருப்பார்; நான் மெதுவாப் பார்த்துக்கறேனே! :))))

    ReplyDelete
  8. படங்கள் பற்றிய அலசல்?

    அமீர்கான் படங்களில் ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர் பார்த்திருக்கிறீர்களா....

    சென்னை 28 குழுவினர் எடுத்த படங்களில் சரோஜா ஒரு நல்ல த்ரில்லர். காமெடியுடன் சேர்ந்து. அடுத்து சுமாரான படம் நாணயம். இவை பார்த்திருக்கிறீர்களோ...

    ReplyDelete
  9. அதை ஏன் கேட்கறீங்க ஶ்ரீராம், சரோஜாவுக்கு என்னைக்கூப்பிடாமலேயே எல்லாரும் பார்த்திருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    நாணயம்? ஹிஹிஹி, ஒரு நிமிஷம் அசந்துட்டேன். இப்படி ஒரு படம் வந்திருக்கா! தெரியலை; கேட்டுப்பார்க்கிறேன். அப்படியே சரோஜாவும் வருவாளானு கேட்கணும்! :)))))))

    ReplyDelete
  10. ரங் தே பசந்தி பார்த்தாச்சு! தாரே ஜமீன் பர் பார்க்கமுடியலை!

    ReplyDelete
  11. தியேட்டரில் போயெல்லாம் பார்க்கிறதில்லை; இப்படி எப்போவானும் பார்க்கிறது. அதுவும் யு.எஸ்.வந்தால் தான் அதிகமாய் சினிமா பார்ப்பது! வேறே பொழுது போக்கு இல்லை. வாக்கிங் போனால் கூட ஒரு மணி நேரம் தான். பொழுது வளருது இங்கே! :(

    ReplyDelete
  12. எங்கே பாத்தீங்க இதெல்லாம்?

    உத்தமபுத்திரன் சுமார்னதும் ஆட்டோவைக் கூப்பிட்டாச்சு.. அப்புறம் மிச்சதைப் படிச்சு நிறுத்த வேண்டியதாச்சு.

    ReplyDelete
  13. @ அப்பாதுரை,

    இங்கே தான், அதான் யப் டிவியா? அதிலே எல்லா மொழியிலேயும் படங்கள் வந்துட்டு இருக்கே! மத்தியானமா இப்படிப் படங்கள் வந்தால் பார்ப்பேன். இப்போக் கூட நவாப் நாற்காலி பார்த்துட்டு இருக்காங்க. நான் பார்க்கலை! அலை பாயுதே பார்த்தேன் முதல் முறையா! ஹிஹிஹிஹிஹிஹிஹி

    படையப்பா, அருணாசலம் எல்லாம் பார்த்ததில்லைனு சொன்னா அடிக்க வராங்க. வற்புறுத்தி பம்மல் கே.சம்பந்தம் பார்க்க வைச்சாங்க. தசாவதாரத்துக்கு ஜூட் விட்டுட்டேன். :))))))

    ReplyDelete
  14. சினிமான்னா என்னங்க? :P

    ReplyDelete
  15. Jeyasri via mail,

    ஒரு தானை தலைவியா இருந்து ஒரு action thriller பாக்கலைன்னா என்னப்பா அது நல்லாவா இருக்கும் ஜம்முன்னு ஐ மாக்ஸ்போய் உட்க்கார்ந்து அட்டகாஸமா கட்டாயம் Ghost Protocol பாத்துட்டு எழுதுங்கப்பா அசத்தலா இருக்கு என் ஜென்மத்துல முதல் தடவை ஊருக்கு கிளம்பறத்துக்கு முதல்நாள் ஃப்ரீயா படம் பாத்தது இன்னிக்குத்தான் :) இல்லைனா எப்பவும் 11 மணிவரை வீடு க்ளீன் பண்ணியே ஓய்ந்துபோயிடும் !
    ஜெ

    ReplyDelete