
புங்கவர்மன் யோசித்தான். “இது என்னடா வம்பு!”னு நினைத்தான். “ஏற்கெனவே ஜோசியருக்குச் சம்பள பாக்கி; காவலருக்குச் சம்பள பாக்கி. செலவாகும்னு கல்யாணம் வேறே செய்துக்கலை. இப்படி இருக்கிறச்சே இந்த அம்மா வந்து உதவி கேட்கிறாங்களே. இதனால் நம்ம கஜானாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்துட்டா என்ன செய்யறது? மாட்டேன்னு சொல்லிடுவோமா? “யோசித்தான். அப்போது அந்தப் பெண் தங்கள் நாட்டுக் கஜானா நிரம்பி வழிவதாகவும்,அத்தனை பணத்தையும் எடுத்துக்கவேண்டியே, முக்கியமாய் அதிலே ஓர் விலைமதிக்கமுடியாத நவரத்தினமாலை இருப்பதாகவும். அந்த மாலையைப் போட்டுக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றும் அந்த மாலையைத் தான் அரக்கன் கேட்டதாகவும், தன் கணவர் கொடுக்க மறுத்ததாலேயே அரக்கன் அவரைத் தூக்கிப் போய்த் தொந்திரவு கொடுப்பதாயும் சொன்னாள். பத்து நிமிஷத்துக்கு மட்டுமே தான் பெண்ணாக இருக்கமுடியும் என்றும் நிரந்தரமாக மாற அரக்கனைக் கொன்றுவிட்டு மந்திரம் ஜெபிக்கவேண்டும் என்றும் சொன்னாள். பணம் என்றதும் வாயைப் பிளந்தான் புங்கவர்மன். அதுவும் நவரத்தினமாலையாமே! விடக்கூடாது ஒரு கைபார்க்கணும்.
சரினு ஒத்துக்கொண்டு தொலைக்கலாம். ஆனால் ஏழுமலை ஏழுகடல் தாண்டி எப்படிப் போறதாம்? அந்த அரக்கன் நம்மைக் கொன்னுட்டா? யோசனையோடு அந்தப் பெண்ணை மறுபடி தவளையாக மாறிக்கச் சொன்னான். அவளும் மறுபடி தவளையானாள். அன்றிரவு அங்கேயே படுத்து உறங்கின மன்னனுக்கு ஒரு கனவு. அந்தக் கனவில் ஒரு பூனை வந்து அவனுக்கு உதவியது. அதுவும் அது ஏதோ பாட்டெல்லாம் பாடி டான்ஸும் ஆடினது. ஒரு இடத்தில் குதித்துக் குதித்துக் காட்டியது. சரி அந்த இடம் தான் முக்கியம்னு மனசுக்குள் குறித்துக்கொண்டான். விழித்தெழுந்த புங்கவர்மனுக்குத் தான் கண்டது கனவா, நனவானு கொஞ்சம் குழப்பம். ஏனென்றால் கனவில் கேட்ட அதே பாடல் இப்போ நனவிலும் கேட்டது. “வாரான் வாரான் பூச்சாண்டி மாட்டு வண்டியிலே! ரயிலு வண்டியிலே, மெயிலு வண்டியிலே!” என்று பாடல் சப்தம். மன்னன் மெல்ல எழுந்து வெளியே பார்த்தான். ஒரு அழகான வெள்ளைப் பூனை ஆடிப்பாடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் மற்ற மிருகங்கள் வேடிக்கை பார்த்தன. மன்னன் பார்த்துக்கொண்டே இருக்கையில் பூனை அவனைப் பாரத்துக் கண்ணைச் சிமிட்டியது அவனை வாவென அழைப்பது போல் இருந்தது. பூனை பின்னேயே சென்றான். பாட்டைப்பாடிக்கொண்டே சென்றது பூனை. புங்கவர்மனுக்கு எதுவும் புரியவில்லை.தொடர்ந்து சென்றான். சற்றுத் தூரம் சென்றதும், அந்தப் பூனை ஒரு மனிதனாக மாறிவிட்டது. ஆஹா! இது என்ன? புங்கவர்மன் யோசிக்கும் முன்னர் புங்கவர்மன் ஒரு பாம்பாக மாறிவிட்டான். புங்கவர்மன் அதிர்ச்சியோடு கூச்சல் போட்டான். கத்தினான். ஆனால் அவன் ஆட்கள் யாருக்கும் தெரியவில்லை. ஏதோ பாம்பு தான் வந்திருக்குனு நினைச்சுட்டாங்க போல!
பூனை மந்திரவாதியோ “ஹோஹோஹோ” என்று சிரித்தான். இது என்ன இப்படிச் சிரிக்கிறான் என்று நினைப்பதற்குள் அவனே, “ ஏ, புங்கா, உன் பழைய நிலைமை வரணும்னால் இந்த மந்திரத்தைச் சொல்லணும். ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! இதை இந்த வரிசைப்படியே மாத்தாமல் சொன்னால் தான் நீ மறுபடி புங்கவர்மனாவாய். இல்லைனா அம்புடுதேன்! “ இதைச் சொல்லிவிட்டு மறுபடி ஹோ ஹோ எனச் சிரித்தான். புங்கவர்மப் பாம்பு சீறியது. மந்திரவாதியோ இப்போக் கீரிப்பிள்ளையாக மாறி ஓட்டம் எடுத்தான். புங்கவர்மப்பாம்புக்கு இவன் தான் அந்த அரக்கன் எனப் புரிந்தது. ஆனாலும் என்ன செய்யமுடியும்? அப்போது அங்கே வந்த தங்கத்தவளைப் பெண்ணைப் பார்த்ததும், அவன் பாம்பு மனம் அவளைப் பிடித்துத் தின்னச் சொல்ல, அவளைத் துரத்தினான். அவளோ பயந்து போய், ஒரு மரத்தின் அடியில் போய்க் குரல் கொடுக்க அங்கே இருந்த ஒரு கிளி எட்டிப் பார்த்தது.

ஆனால் அவனுக்கு ஒரு சந்தேகம். கிளி சொன்னதும் தவளைப்பெண் பெண்ணாக மாறிய மாதிரி நம்மையும் கிளியே மாத்தி இருக்கலாமேனு. ஆனால் தவளைப்பெண் சொன்னாள். “அப்படி எல்லாம் முடியாது. இதுதான் என் கணவரின் தங்கை. அந்த அரக்கன் இவளுக்கு மந்திரமெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கல்யாணம் செய்துக்க நினைச்சுக் கூட்டிட்டு வந்துட்டான். இவளோ அவனக் கல்யாணம் செய்துக்க விரும்பலை. அதனால் கிளியாக மாத்திட்டான். கிளியெல்லாம் எங்கே மந்திரம் சொல்லப் போகிறது அலக்ஷியமாக இருந்துவிட்டான். ஆனால் அது கற்றுக்கொண்டு என்னைப் பெண்ணாக மாற்றியதைக் கண்டதுமே பத்து நிமிஷத்துக்கு மட்டுமே செல்லும் என்றதோடு அதற்குப் பின்னர் சொல்லும் மந்திரமெல்லாம் கிளி மூலம் பலிக்காதபடி பண்ணிட்டான். “ என்றாள். “பின்னர் எப்படி நீ மறுபடியும் ராஜகுமாரி ஆவாய்? இந்தக் கிளிப்பெண்ணை எப்படி மாற்றுவது?” எனப் புங்கவர்மன் கேட்க, “அதுக்குத் தான் உன் உதவியை நாடினோம்.” ஏழுமலை, ஏழு கடல் தாண்டிப் போனால் அங்கே என் கணவரைக் கட்டி வைத்திருக்கும் இடத்தில் ஒரு அவரைக்காய் இருக்கும். அந்த அவரைக்காய் நிஜமானது இல்லை. அதை எடுத்துத் தோலை உரித்து உள்ளிருக்கும் பருப்புப் பளபளவென ரத்தினம் போல் இருக்கும். ஆசைப்பட்டுக்கொண்டு எடுத்து வைச்சுக்காதே. அந்த ரத்தினத்தை இரண்டாகப் பிளந்தால் உள்ளே ஒரு சின்னக்கடுகு இருக்கும். அதை நசுக்கினால் அரக்கன் இறப்பான். அப்புறமாய் நீ மந்திரங்களைச் சொல்லி என்னையும், கிளிப்பெண்ணையும் பெண்களாக்கலாம். அப்படி ஆக்கினால் இவளை உனக்கே கல்யாணம்செய்து தரச் சொல்றேன்.” என்றாள்.
ஆஹா, கல்யாணமா? வாயைப் பிளந்தான் புங்கவர்மன். ரொம்பக்கஷ்டப்பட்டு அவனோட குதிரையிலே ஏறிக்கொண்டு ஏழு மலையைத் தாண்டி விட்டான். ஏழு கடலை எப்படித் தாண்டறது? அப்போத் தான் அவனுக்கு நினைப்பு வந்தது. “அன்டா கா கஸம்; அபுல் கா கஸம்; பறந்திடு ஸீசேம்” சொன்னாக் குதிரை பறக்கும்னு அவன் கிட்டே குதிரை வித்தவங்க சொன்னதை நினைப்பு வரவே அந்த மந்திரத்தைச் சொல்லிக் குதிரையில் பறந்தான். கீழே பார்க்கிறச்சே குலை நடுங்கியது.

விழுந்துடப் போறோம்னு பயந்து குதிரையைக் கெட்டியாப் பிடிச்சுக்கக் குதிரை திட்ட ஆரம்பிச்சது. ஒரு மாதிரியா சண்டை போட்டுக் குதிரையை சமாதானம் செய்து வந்து சேர்ந்தான். தவளைப்பெண்ணின் கணவன் நல்லவேளையா மனுஷ ரூபத்திலேயே இருந்தான். (பின்னே? இதுக்கு மந்திரம் யார் கிட்டே கேட்டுக்கறது? :P இப்படி எல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தே பழக்கம் இல்லையாக்கும்.) அவனைப் பார்த்து அவரைக்காயைக் கேட்க, அவன் அங்கே இருந்த ஒரு பாம்புப் புற்றைக் காட்ட பயந்து போனான் புங்கவர்மன். அப்புறமா இருக்கிற கொஞ்சூண்டு மூளையைக் கசக்கிட்டு யோசிச்சுத் தானும் ஒரு பாம்பா மாறித்தான் அந்த ரத்தினத்தை எடுக்கணும்னு புரிஞ்சது அவனுக்கு.
உடனே அந்த அரசகுமாரனிடம்(அவனுக்கு என்ன பேர்?) போய் என்னைப் பாம்பாக மாத்துனு சொன்னான். அரசகுமாரன் ஙே என விழித்தான். தலையிலே அடிச்சுக்கொண்ட புங்கவர்மன் , “ ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! “ மந்திரத்தைச் சொல்லச் சொல்ல ம்ஹும் எதுவும் நடக்கலை! :P உடனே அரசகுமாரனை மண்டையிலே கொட்டப் போகையில் அவன் பயந்து போய் “ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு” என்று குழற ஆரம்பிக்க, என்ன ஆச்சரியம் புங்கவர்மப்பாம்பு அங்கே காணப்பட்டது. புங்கவர்மப்பாம்புக்கு நல்லவேளையா ரத்தினத்தை எடுக்கத் தான் வந்தது நினைவிலிருக்கவே அந்தப் புற்றுக்குள் போய் நுழைந்தது.


நல்லவேளையா அங்கே அப்போத்தான் தத்தித்தத்தி வந்த தவளைப்பெண் எல்லாத்தையும் பார்த்துட்டு நடந்ததை (புத்திசாலியாச்சே) புரிஞ்சுட்டா.

உடனே தன் கணவன் காலடியில் போய், “ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ட்ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”னு கத்த வெறுத்துப் போன ராஜகுமாரன், சேச்சே, நானே என் ஜிக்கியைக் காணோமேனு தேடறேன். நீ எங்கே வந்தேனு அந்தத் தவளைப்பெண் தான் தன் மனைவினு தெரியாமல் அதைத் தள்ளிவிட்டான். உடனே தன் கிளிமூக்கால் தலையிலே அடிச்சுக்க முடியாத கிளிப்பெண் “ஜெய் ஜிக்கி! ஜிக்கி ஜெய்! ஜெய் ஜெய் ஜிக்கி!” னு சொல்லவே தவளைப்பெண் உருமாறினாள். அவள் அவசரம் அவசரமாக புங்கவர்மப்பாம்பைப் பார்த்து, ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! னு சொல்ல அப்பாடா! ஒருவழியாப் புங்கவர்மன் புங்கவர்மனாக மாறினான். தன் பச்சைச்சட்டைக்காவலனையும், ஜோசியரையும் பார்த்து, “இருங்க வச்சுக்கறேன்” அப்படினு கறுவினான். அதுக்குள்ளே கிளிப்பெண் அவனைக்கொத்த, தன் நினைவுக்கு வந்து தங்கத்தவளைப்பெண்ணை நிரந்தரமாக்கும் மந்திரத்தைச் சொல்ல அவளும் நிரந்தரப் பெண்ணானாள். பின்னர் கிளிப்பெண்ணுக்கும் பெண்ணாக மாறும் மந்திரத்தைச் சொல்லிப் பெண்ணாக மாற்றினான்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பச்சைச்சட்டைக்காவலன் தன்னோட ராஜாவுக்கு அதிக சக்தி வந்திருக்குனு புரிந்து கொண்டு ஜோசியர் தான் பணத்தைத் திருடச் சொன்னார்னு ஒரேயடியாப் பொய் சொல்லிட்டு புங்கவர்மன் காலில் விழுந்தான். கிளிப்பெண்ணை விட்டால் தனக்குப் பெண்ணே கிடைக்காமல் போயிடப் போறதுனு அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த புங்கவர்மன் ஜோசியர் ஓடறதைப் பார்த்துட்டு, சத்தமாய்க் கூவினான்.
“பிடியுங்கள், விடாதீர்கள் அவரை!”
ஹாஹாஹா, கற்பனை வளம் திடீர்னு அதிகரிச்சுடுச்சு. கஷ்டப்பட்டு நிறுத்தினேனாக்கும். நானே எண்ணிட்டேன். 1039 வார்த்தைகள் :))))
இங்கே
1)"ஙே " என்று சரியாக விழித்திருக்கிரீர்கள்! நிறைய பேர் "ஞே" என்று விழிப்பார்கள்!!!
ReplyDelete2) ஏகப் பட்ட மந்திரங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!
என்ன வேகம்? என்ன வேகம்? ஹிஹிஹி, மந்திரம் நிறையக்கைவசம் இருக்கு! :))))))
ReplyDeleteஙே னு விழிச்சு விழிச்சுப் பழக்கமாயிடுத்தே! :)))))
ReplyDeleteகுழந்தைகளுக்கு போர் அடிக்காம இழுத்து சொல்லாம் அவ்வளவு பெரிய கதை.ஆனா ரொம்ப நன்றாக இருக்கு.
ReplyDeleteஹிஹிஹிஹி, ராம்வி, இந்த நீஈஈஈஈஈஈஈளத்துக்குப் பயந்தே நிறையப்பேர் பதிவுப்பக்கம் வரதில்லையாக்கும்! :))))))) தொடராப் போடக்கூடாதுனு நிபந்தனை விதிச்சுட்டாங்க! இல்லைனா இன்னும் இழுழுழுழுழுழுழுழுழுழுக்கலாம். :))))))
ReplyDeleteஅடடா.. நிறைய மந்திரம் ஸ்டாக் வெச்சிருப்பீங்க போலருக்கே... உருமாறுவது, சாகசங்கள்னு நகைச்சுவையையும் விடாம கலக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
ReplyDeleteபூனையாட்டமும் பூச்சாண்டி பாட்டும் ரகளை போங்க! ஜாலியா படிக்க முடியுதுனா ஜாலியா எழுதியிருக்கீங்க அதான். மறுபடியும் சிரிப்பா சிரிச்சேன் :)
ReplyDeleteநானும் தவளைக் கதையில கிளி எழுதி எழுதிவச்சேன்.. அதுலயும் பாருங்க சட்டை போடாத கிளி. ஆபாசம்னு சொல்லிடுவாங்கனு பயந்து பதிவிடலை..
உங்கள் படைப்பாற்றல் எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது கீதாமா
ReplyDeleteகுழந்தைகளுக்கு சொல்ல இன்னொரு கதை கிடைச்சாச்சு :))
வாங்க கணேஷ், நிஜம்மாவே ரசிச்சீங்களா? நன்றிங்க.
ReplyDeleteஎப்படி இருந்தாலும் எழுதுகையில் மனம் லேசாக ஆவதை உணர முடிகிறது. அதற்காகவே எங்கள் ப்ளாகுக்கு நன்றி.
நானும் தவளைக் கதையில கிளி எழுதி எழுதிவச்சேன்.. அதுலயும் பாருங்க சட்டை போடாத கிளி. ஆபாசம்னு சொல்லிடுவாங்கனு பயந்து பதிவிடலை..//
ReplyDeleteபோனால் போகட்டும், எங்கள் ப்ளாகுக்குக் கொடுத்து வைக்கலை. உங்க பதிவிலே போட்டுடுங்க. :)))))
அப்பாதுரை, பூச்சாண்டி பாட்டு ஏதோ சினிமாப்பாட்டாமே! ஆபாவாணனோடதுனு சமீபத்திலே தான் கேள்விப் பட்டேன். முடிஞ்சா பகிர்ந்துக்கறேன்.
ப்ரியா, ஹிஹி,ஹிஹிஹி, படைப்பாற்றல்? கன்னாபின்னாவென மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதுவது ஆற்றலா?? ஹிஹிஹிஹி, நன்றிங்க.
ReplyDeleteகுழந்தைங்களை ரொம்பவே பயமுறுத்தறீங்களோ? :)))))))))
manthirangal ena...ungalukku niraiya theriyumo.... www.rishvan.com
ReplyDeleteவாங்க ரிஷ்வன், முதல் வருகைக்கு நன்றி. இந்த மாதிரி மந்திரங்கள் நிறையவே கைவசம் ஸ்டாக்கிலே இருக்கு. :)))))))
ReplyDeleteவிதவிதமா கற்பனை பண்ணி எழுதறீங்க. அதுவும் வித்தியாசமான மந்திரங்கள். கலக்கறீங்க.
ReplyDeleteநீங்க வேறே கீதா சந்தானம், உங்களுக்கானும் உங்க அண்ணா இருக்கார் ஓட்டுப் போட, எனக்கு ஓட்டுப் போட யாருமே இல்லாமக் கவலைப்பட்டு உருகிட்டு இருக்கேனாக்கும்! :))))))))
ReplyDeleteஎன்னங்க இது! ரெண்டு கதை எழுதி, ரெண்டு பரிசை தட்டிடலாம்னு எண்ணமா!
ReplyDeleteகலக்கலா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்! இந்த 'அண்டா காகசம், அபு காகசம், திறந்திடு சீசே' மந்திரம் குகையை திறக்க அலிபாபா சொன்னது. இதை நைசா
கொஞ்சம் மாத்தி, அழகா குதிரையை பறக்க வைச்சுட்டீங்க. பலே, பலே! அட்டகாசம்தான் போங்க! படங்களும் ரொம்ப ஜோரா இருக்கு.
கீதா, கவலைப்பட்டு ரொம்ப எல்லாம்
உருகிடாதீங்க. நான் இருக்கேன் உங்களுக்கு ஓட்டு போட. எல்லாரும் வீடு வீடா போய் ஓட்டு கேப்பாங்க. நான் வீடு வீடா போய் ஓட்டு போடலாம்னு இருக்கேன். அதுல ஒரு ஒட்டு நிச்சயமா உங்களுக்கு உண்டு. :)
பேத்திகளுக்குக் கதை சொல்லி சொல்லி இந்த லெவலுக்கு ஏறிட்டேங்களே. அருமையான மாயாஜால மந்திர தந்திரக் காட்சிகள் நிறைந்த சினிமா பார்த்த மாதிரி இருக்கு கீதா. வாழ்த்துகள் உங்கள் கற்பனா சக்திக்கு.:)
ReplyDelete