சான் அன்டானியோ நகரம் யு.எஸ்ஸில் ஏழாவது பெரிய நகரமாகவும், டெக்சாஸில் இரண்டாவது பெரிய நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு மத்தியபாகத்தில் அமைந்துள்ள இது 2.2. லக்ஷம் மக்கள் கொண்டதாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சுற்றுலா நகரான இந்த நகரில் ஓடும் சான் அன்டானியோ நதியின் இரு கரைகளிலும் மக்கள் நடக்க, படகில் பயணிக்க, ஆங்காங்கே அமர்ந்து இயற்கைக்காட்சிகளை ரசிக்க, அல்லது உணவு உண்ண, ஆட, பாட, கொண்டாட என ஏற்படுத்தப்பட்டிருக்கும் அநேகக் கடைகள், விடுதிகள், கண்காட்சி சாலைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ஐஸ்க்ரிம் கடைகள் எனப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத ஒன்று. உண்மையில் இது முக்கிய நதியே அல்ல. இது வந்த கதை தனி. வருடத்திற்கு 26 லக்ஷத்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வருகை புரிகின்றனர். இது இங்கே இந்த நதிக்கரையோரம் நடந்து செல்வதை ரிவர் வாக் என அழைக்கின்றனர். இது வந்த விபரம் பின்வருமாறு:
1921-ஆம் வருடம் திடீரென இந்த நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 50 உயிர்கள் பலியாயின. ஆகவே நதியில் ஏற்படும் உபரிநீரைத் தடுத்து ஒரு அணை கட்டத்தீர்மானித்தனர். அணை கட்டுகையிலேயே கூடவே ஒரு கால்வாயும் கட்டி அந்தக் கால்வாயை நகரின் முக்கிய வழிப்பாதையில் அமைத்து அதன் வழியாக நதி உபரி நீர் புகுந்து இரு கரைகளுக்குள்ளும் சுற்றி வருமாறு செய்தனர். 1926-இல் ஆரம்பித்த வேலை மெல்ல மெல்லச் சென்றது. ராபர்ட் ஹக்மேன் என்னும் சான் அன்டானியோவிலேயே பிறந்து வளர்ந்த கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் இந்த ரிவர் வாக் யோசனையைத் தெரிவித்தார். மெல்ல மெல்ல ஆரம்பம் ஆன இந்த வேலை, ஜாக் வொயிட் என்பவர் மேயராக வந்ததும் அவர் மூலம் பல முன்னேற்றங்களைக் கண்டு இன்று இம்மாதிரியானதொரு 2-1/2 மைல் சுற்றி வந்து நடக்கும் ரிவர் வாக் பாதையோடும் கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் போன்றவற்றோடு காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஹக்மேனுக்கு எதிர்ப்புகளே இருந்தது. மீண்டும் நதியில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படக் கூடும் எனப் பயந்தனர். ஆனால் நாளாவட்டத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறிப் போனது.
இட்ட தலைப்பு நன்றாகத் தான் இருக்கிறது. நதியோடு நடந்த கதையையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
ReplyDeleteஇரண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வரத்துக்குள்ள அருமையான 3 பதிவுகள் எழுதிட்டீங்களே?
ReplyDeleteஅமெரிக்கா பற்றிய அரிய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது, மாமி.தொடர்ந்து எழுதுங்கோ படித்து தெரிந்து கொள்கிறேன்.
Texas கதை அருமை. தெரியாத விஷயங்கள். எனக்கு தெரிந்த texas மெக்ஸிகோ போற வழியில் transit stop Dallas மற்றும் ஹூஸ்டன் மீனாக்ஷி :).
ReplyDeleteஒரு விதத்தில் கலிபோர்னியா கதையும் இதே மாதிரி தான். Baja California (பாஹா கலிபோர்னியா) என்ற மாகாணம் மெக்ஸிகோவில் உண்டு. கொடுத்த கடன் திருப்பி கொடுக்கவில்லை என US அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டதாக படித்த நினைவு. அது தான் தற்காலத்திய US கலிபோர்னியா. அப்புறம் gold rush ஏற்பட்டு நில மதிப்பு ஏறியது.
வாங்க சூரி சார், நன்றி.
ReplyDeleteவாங்க ராம்வி, அமெரிக்க ஹிஸ்டரி விக்கிபிடீயாவில் கிடைக்கும். நான் சும்மா போயிட்டு வந்த இடங்கள் குறித்து மட்டுமே சொல்றேன்.
ReplyDeleteஇங்கே பாருங்க
ஶ்ரீநி, இந்தப்பதிவுக்கு முதல்வருகைக்கு நன்றி. கோல்ட் ரஷ் பற்றி இன்னமும் படிக்கவில்லை. டெக்ஸாஸ் கதை முழுசுமெல்லாம் எழுதலை. சும்ம்ம்மா கொஞ்சம் போல......
ReplyDeletemaami
ReplyDeleteமழலைகள்.காமில் உங்களது அமெரிக்கா குறித்த கட்டுரைகள் நன்றாக உள்ளன. உங்களது உழைப்பு தெரிகிறது.
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு USA 101 course ஆக இதை வைக்கலாம்.
Boston Brahmins விளக்கம் எங்கேயிருந்து பிடித்தீர்கள் :) எங்களுக்கு தெரிந்த BB இங்கே வேறு (Whiskeyil சந்த்யாவந்தனம் செய்து கோழியைக் கடிப்பவர்கள்).
ஶ்ரீநி, பாராட்டுக்கு நன்றி. எங்க பொண்ணு அமெரிக்கன் ஹிஸ்டரி புத்தகம் ஒண்ணு (20 கிலோவுக்குக் குறையாது) கொடுத்திருக்கா. அதான் ரெஃபரன்ஸ். இங்கே எடுத்துட்டு வரமுடியலை. விக்கி பீடியாவே கதி! :(
ReplyDeleteசூரி சார் கமெண்ட்டை போட்டிருக்கலாம், இல்லையா?
ReplyDeleteஜீவி சார், அது வேறு பதிவிலே போட்டது, காப்பி, பேஸ்ட் கையிலே ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது. டெலீட் செய்ய நினைச்சு மறந்துட்டேன். :))))))))
ReplyDelete