எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 25, 2011

நாசாவில் ஆலோசனை நடத்திய விபரங்கள்! :))

ஒபாமா கூப்பிட்டாஹ, பான் -கீ--மூன் கூப்பிட்டாஹ, ஹிலாரி கிளின்டன் கூப்பிட்டாஹ! இப்படி எல்லாரும் கூப்பிட்டு நாம யு.எஸ். வந்திருக்கோம். (ஹிஹிஹி, நுழையறச்சேயே கஸ்டம்ஸ்காரங்க சொன்னதை எல்லாம் கண்டுக்கக் கூடாது!) வந்துட்டு உலக சமாதானத்துக்காக எதுவுமே செய்யாமல் இருந்தால் எப்பூடி? அதான் நாசாவுக்கு விசிட் செய்து இந்தியாவுடனான ஒப்பந்தங்களைப் பத்திப் பேச்சு வார்த்தை நடத்தப் போயிருந்தோம். என்ன மரியாதை! என்ன மரியாதை! ஆங்காங்கே போஸ்டர்! வாண வேடிக்கை! ரெட் கார்ப்பெட் வெல்கம்!னு ஏக மரியாதை போங்க! அங்கே நடந்த பேச்சு வார்த்தையைப் பத்தி பப்ளிக்கா எல்லாம் சொல்ல முடியாது. சும்மாப் போய் வந்த விபரம் மட்டும் கீழே! :))))))

நாசா ஸ்பேஸ் சென்டருக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை. ஆகவே இம்முறையாவது அங்கே செல்ல நினைத்தோம். ஒருநாள் சென்றோம். உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு உண்டு. சிறுவர்கள், மாணவர்களுக்குச் சலுகை. உள்ளே நுழைகையிலேயே பெரியதொரு கூடம் பல்வேறு அலங்காரங்கள், கடைகள், விளையாட்டுக் கூடங்கள் என வரவேற்கிறது. ஒரு பக்கம் உணவு உண்ணும் விடுதி. எல்லாம் யானைவிலை, குதிரை விலை விற்கும் எனப் பையர் சொன்னார். உள்ளே நுழைகையில் சோதனைகள் உண்டு. என்னைச் சோதனை போடுகையில் என்ன காரணமோ தெரியலை உள்ளே அனுப்பிட்டார் காவலாளி. உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை; என்றாலும் நாங்க உணவைக் காட்டிவிட்டு வழக்கம்போல் என் கணவரோட சர்க்கரை வியாதியைச் சொல்லிவிட்டு உள்ளே கொண்டு போனோம். உள்ளே போனதும் பையர் முதலில் ட்ராம் கார் சுற்றுலாவை முடித்துக்கொள்வோம் என அதற்குச் சென்று வரிசையில் நிற்கச் சொன்னார். அதற்குள்ளாக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு திசையில் போய்விட, எல்லாரையும் கூட்டி வந்து உள்ளே சென்றோம். உள்ளே நுழைகையில் எல்லாரையும் ஒன்றாக வைத்துக் குடும்பமாகப்படம் எடுத்தார் ஒருத்தர். ஆஹானு ஆச்சரியப்பட்டுப் போனேன். பையர் படம் வாங்கிக்க வேண்டுமெனில் 30 டாலரிலிருந்து 50 டாலர் வரை கொடுக்க வேண்டும் என்றும் இது ஒரு பிசினஸ் எனவும் சொன்னார்.

ட்ராம் காரில் ஏறிக் கொண்டு சுற்றுலாவுக்குக் கிளம்பினோம். முதலில் அப்போலோ மிஷின் கன்ட்ரோல் சென்டருக்குச் சென்றோம். அங்கே சுற்றிப் பார்த்துவிட்டு ராக்கெட் பார்க் சென்று அங்கே உள்ளவைகளையும் சுற்றிக்காட்டினார்கள். உள்ளே கன்ட்ரோல் ரூமில் வேலை செய்வதை விளக்கப்படங்களோடு ஒளிக்காட்சியாகவும் காட்டுகிறார்கள். இவை அனைத்தும் உண்மையாகவே வேலை செய்யும் இடங்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என்ற அறிவிப்பும் வேறு கொடுக்கிறார்கள். நாம் செல்லும் தினம் நம்மால் பார்க்க முடிந்தால் நம் அதிர்ஷ்டமே. இது தவிர விண்வெளியைக் குறித்தும், செயற்கைக்கோள்கள் குறித்தும் விளக்கப் படம், துரதிர்ஷ்டம் பிடித்த கொலம்பியா விண்கலத்தில் பயணம் செய்த நபர்கள்(கல்பனா சாவ்லா உள்பட) அவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்ட முறைகள் எனக் காட்டுகின்றனர். அந்தக் குறுகிய பாதை வழியாக வெளியே சறுக்கிக் கொண்டு வந்து இறங்குகையில், எனக்கு நல்லவேளையா நமக்கு விஞ்ஞானத்தில் அறிவு கொஞ்சம் தான் என நிம்மதி ஏற்பட்டது. எப்படித்தான் வராங்களோ தெரியலை! அந்த உடையைப் போட்டுக்கொள்ளவும் இருவராவது உதவிக்குத் தேவை. இவ்வளவு செய்து முடித்து விண்வெளிப்பயணமும் செய்த பின்னர் அவர்கள் இப்படி இறந்து போனது துரதிர்ஷ்டவசமானதே. அவர்கள் நினைவாக ஞாபகார்த்தக் கல் பொறித்து அங்கே மரங்களை வளர்க்கின்றனர்.

இதை எழுதிப் போடறதுக்குள்ளே பப்ளிஷ் ஆகி இருக்கு; அதுக்குள்ளே கமென்ட்ஸும் வந்தாச்சு! துரோகி கூகிள் ப்ளாகர்!

6 comments:

  1. நாசாவில் தலைவி ;-))

    கலக்குறிங்க ;-)

    ReplyDelete
  2. எங்களையும் டிக்கெட் இல்லாமல் நாசா அழைத்துச் சென்றதற்கு நன்றி. முன்னரே சொல்லியிருந்தால் என் ஒன்று விட்ட அத்தையின் மூன்று விட்ட சித்தப்பாக்குப் பிள்ளையின் மைத்துனரின் மனைவியின் சித்தப்பாக்கு அத்தை மகனின் கசினின் மனைவியின் ஒன்று விட்ட அண்ணாவோட ரிலேஷன் ஒருத்தர் அங்கதான் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். (குடும்பப் பாட்டுக் கூட இல்லை!!) யாரென்று விசாரிக்கச் சொல்லியிருப்பேனே....:))

    ReplyDelete
  3. பையர்!? அடடா... உங்களின் மரியாதைப் பன்மையை வியக்கிறேன். அவ்வ்வ்வ்வ். நாசா அனுபவங்கள் சுவாரஸ்யம். அதிலும் கடைசியில் முடிக்கும்போது ஒரு பன்ச் கொடுத்தீர்களே... ஜுப்பருங்கோ!

    ReplyDelete
  4. வாங்க கோபி, கூகிளோட துரோகத்திலே மனம் நொந்ந்ந்து போயிட்டேன் போங்க! :)))))

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், நான் என்ன சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படிப் பார்க்கவா போனேன்! ஹும் எவ்வளவு முக்கியப் பேச்சு வார்த்தைக்குப் போயிருந்தேன்! அது சரி! அது எப்படி குடும்பப் பாட்டு இல்லை? அப்புறம் எப்புடிக் கண்டு பிடிக்கிறதாம்?

    ReplyDelete
  6. வாங்க கணேசரே, ஹிஹிஹி, பையர் என்பது இன்னைய தேதிக்கு வலை உலகில் அங்கீகாரம் பெற்று நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்க இப்போத் தான் கவனிச்சிருக்கீங்க. ரொம்ப லேட் சார்! :)))))

    ReplyDelete