எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 20, 2012

விடை கொடுக்கிறேன் சென்னைக்கு!

சென்னையில் இருந்து எழுதும் கடைசிப் பதிவு இது. திங்களன்று ஶ்ரீரங்கம் சென்று பால் காய்ச்சி விட்டு வந்தாச்சு. இன்னிக்குத் தொலைபேசியையும், ப்ராட்பான்ட் இணைப்பையும் சரன்டர் பண்ணுகிறோம். இனி அங்கே சென்று தான். அங்கே எல்லா ஏற்பாடுகளும் செய்து வைச்சாச்சு. நாங்க அங்கே போயிட்டுக் கணினியையும் இணைப்புகள் கொடுத்துத் தயார் செய்து வைக்கணும். எப்படியும் புதன் கிழமை தான் போகப் போவதால் அடுத்தவாரக் கடைசி ஆகும். ஆகவே ஒரு வாரம் நோ இணையம்.

ஊர்களுக்கெல்லாம் அடிக்கடி செல்வதில் இணையத்துக்கு வராமல் இருப்பதில் பிரச்னை ஒன்றும் இல்லை. அதோடு இங்கேயே சில சமயம் இணையத்திலே அதிகம் அமராமல் இருக்கவேண்டும் எனக் குறைத்துக் கொள்வதும் உண்டு.சில சமயம் bandwidth exceed ஆயிடுமேனும் குறைச்சுக்கறது உண்டு. ஆகவே புத்தகங்கள் துணையோடு ஒருவாரப் பொழுது போயிடும். :)))))) சில ஆண்டுகளாகவே சென்னையை விட்டுச் சென்றுவிடும் எண்ணத்தில் இருந்தோம். பல ஊர்களையும் சென்று ஆராய்ச்சிகள் செய்தோம். ஶ்ரீரங்கம் லிஸ்டிலேயே இல்லை. இது திடீர்னு யு.எஸ்ஸில் இருக்கையில் எடுத்த முடிவு. ஶ்ரீரங்கம் போகலாமானு யோசனையாத் தான் இருந்தது.  சென்னையை விட வெயில் அதிகம்.அதோடு பவர் கட்டும் அதிகம்.  முதலமைச்சர் தொகுதி என்பதால் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் இல்லை என்பதே உண்மை.

என்றாலும் மனசில் என்னமோ அங்கே செல்லவேண்டும் எனத் தோன்றியது. சென்னைக் காதலர்களுக்கு எனக்குச் சென்னை பிடிக்காது என்றால் ஆச்சரியமாய்ப் பார்க்கலாம். அவங்க கிட்டே எல்லாம் மன்னிப்புக் கேட்டுக்கறேன். என் பதிவுகளில் ஆரம்பக் காலத்திலேயே சென்னைனா பிடிக்காது என எழுதி இருப்பேன். :)))))) முக்கியமா இன்னம்புரார்! :)))) சென்னை என்றால் அவருக்கு ஒரு தீராத மயக்கம். என்னவோ எனக்கு அந்த மயக்கம் வந்ததில்லை. எப்படியோ, சந்திக்க ஒரு வாரம் ஆகும் என்பது தான் விஷயம். பின்னூட்டங்கள் எல்லாம் கொடுத்து வைங்க. இங்கே சொந்தக்காரங்க வீட்டிலே இணையம் கிடைச்சா பப்ளிஷ் பண்ணி வைக்கிறேன். :))))) அப்படிப் போட முடியலைனா யாரும் உண்ணும் விரதம், தீக்குளிப்புனு ஆரம்பிக்க வேண்டாம்.

எல்லாரும் சமத்தா அலகு குத்திக்கொண்டு, காவடி எடுத்தால், அல்லது மண்சோறு சாப்பிட்டாலே போதும்! 

33 comments:

  1. Sari ! namakku cheerangaththula vara aalu ippa irukku .enga thinneli yum nannaavae irukkum .rangaththil raagvendirar madam poi vaarungal . appallaam kai niRaiya rojappoo tharuvaa:]

    ReplyDelete
  2. என்றாலும் மனசில் என்னமோ அங்கே செல்லவேண்டும் எனத் தோன்றியது.//

    ரங்கன் அழைக்கிறார்.
    உள்ளிருக்கும் சிவம் வழி நடத்துகிறார்.

    என்னை அழைத்ததற்கு நன்றி.
    சுற்றுலாவை ஸ்ரீரங்கத்துக்கும் வைத்துக் கொள்ளலாம். ரங்கனையும், உங்களையும் தரிசிக்கலாம்.

    ReplyDelete
  3. ஸ்ரீராங்கம் ஆனாலும் சரி சென்னை ஆனாலும் தலைவி தலைவி தான் ;-))

    கலக்குங்க தலைவி..தொடர்பில் இருங்கள் ! ;)

    ReplyDelete
  4. ஸ்ரீரங்கத்தில் சென்று நல்லபடியாக செட்டில் ஆக என் பிரார்த்தனைகள் அம்மா.

    பத்து வருடங்களாக தில்லியில் இருந்தும் எனக்கு தில்லி பிடிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

    ReplyDelete
  5. பயணம் செளகரியமாக முடிந்து நலமாக அங்கே எல்லாம் அமைய வாழ்த்துக்கள்.
    அப்பார்ட்மெண்ட் என்று பார்க்கும் பொழுது சில விஷயங்களில் செளகரியம் தான். உங்களுக்கும் பிடித்துப் போகும் தான். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஸ்ரீ ரங்கம் போயி செட்டிலான பிறகு பதிவு போடுங்க

    ReplyDelete
  7. VAZTHUKKAL

    SRIRANGAM SELECT PANNIATHIN REASON ENNA?

    NANDRI
    KARUNAJI
    CHENNAI

    ReplyDelete
  8. வாழ்க வளமுடன். ஸ்ரீரங்கம் விலாசம் எங்கள் ப்ளாக் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அந்தப் பக்கம் வந்தால் விசிட் செய்கிறேன்.

    ReplyDelete
  9. சமயபுரத்தாள், புள்ளையார், ரங்கனைத் தினமும் தரிசிக்கும் வாய்ப்பு.. வாழ்த்துகள் கீதாம்மா.

    ReplyDelete
  10. உண்மையில் யாருக்கும் சென்னை பிடிக்காதுதான்...பிடிக்காது என்று சொல்வதை விட மற்ற ஊர்களை அல்லது அவரவர்கள் சொந்த, பழகிய ஊர்களை ரசிப்பார்கள்.

    //"ஸ்ரீரங்கம் லிஸ்ட்டிலேயே இல்லை"// எல்லாம் நன்மைக்கே...எல்லாம் அவன் செயல்!

    ReplyDelete
  11. திருவரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. சென்னை எனக்கு ரெம்ப பரிட்சாயம் இல்லை மாமி, எனவே நோ கமெண்ட்ஸ் அதை பத்தி...:) சீக்கரம் அரங்கன் ஊரில் செட்டில் ஆக வேண்டிக்கறேன் (ஆஹா... அப்ப இனி கொஞ்ச நாளைக்கி கண்ணன் வரமாட்டார் அரங்கன் தான் பதிவில் வருவாரோ?...;)

    ReplyDelete
  13. ஸ்ரீரங்கத்தை விடாதீங்கோ.. ஒரு வழி பண்ணிடுங்கோ.. :)
    happy transfer!

    ReplyDelete
  14. அம்பத்தூர் டு அம்மா மண்டபம்!!! தாயுமானவரும், அகிலாண்டேஸ்வரி-ஸமேத ஜம்புகேஸ்வரரும், அரங்கனும்,உச்சிப்பிள்ளையாரும் ஒரு சேர இழுத்திருக்கிறார்கள் போலும் :)). போய்தான் தீரணும்.
    அம்பத்தூர் வம்புதுபுகள் இல்லாத அமைதியான நாட்கள் மலரட்டும்.

    ReplyDelete
  15. அம்பத்தூருக்கு ச்ரி ரங்கம் தேவலாம் கிண்டிலேந்து அம்பத்தூர் போக 3 12 நேரம் திருச்சி 5 மணி ஸ்வாமியும் பத்தா மதிரி இருக்கும் பள்ளம் மேடு ஏறவேண்டாம்

    ReplyDelete
  16. சிறப்புற அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. 'எங்கும் சுத்தி ரங்கனை சேவி' ன்னு ஸ்ரீரங்கம் வந்தாச்சா! :)
    எங்க அப்பா ஊர் திருச்சிக்கு பக்கத்துல இருக்கற ஜீயபுரம்தான். ரங்கநாதர் இஷ்ட தெய்வம். இவர் சேவைக்காக அகண்ட காவிரியை கடக்கும் போதெல்லாம் எங்க அப்பாவும் பெருமாளை தூக்கி இருக்கார். ஸ்ரீ சக்கரத்தை தன் மார்லேயே வெச்சுண்டு இருக்கற தாயார்தான் ரங்கநாயகி. நிதானமா நன்னா சேவிச்சுட்டு ஊரை பத்தியும், கோவிலை பத்தியும் எழுதுங்கோ. :)

    ReplyDelete
  18. வாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கத்திற்கு உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கிச் செல்லலாம். :))))

    ReplyDelete
  19. கோமதி அரசு, நன்றி. கட்டாயமாய் வாருங்கள்.

    ReplyDelete
  20. கோபி, உண்மைத் தொண்டரான உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :))))

    ReplyDelete
  21. கோவை2 தில்லி, ஸ்ரீரங்கம் வந்தாச்சா? :)))

    ReplyDelete
  22. வாங்க ஜீவிசார், என்னோட வாழ்நாளில் இருந்ததெல்லாம் தனி வீடுகளில் தான். ராணுவக் குடியிருப்பில் கூட தனி பங்களாதான் கிடைத்திருக்கின்றன. இப்போத் தான் வாழ்க்கையில் முதல்முறையாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாசம். :)))) அக்கம்பக்கம் மனிதர்கள் இருப்பதன் அறிகுறி தென்பட்டுக்கொண்டே இருக்கிறது.. ஆனால் சப்தம் இல்லை. குழந்தைகள் விளையாடும் சப்தம் தவிர. குழந்தைகள் விளையாடுவதே பெரிய விஷயம் என்பதால் அப்போது வரும் சப்தம் ரசிக்கவே தோன்றுகிறது.

    ReplyDelete
  23. வாங்க லக்ஷ்மி, நேத்துத் தான் இணையம் வந்தது. பதிவும் போட்டிருக்கேன். நிதானமாவாங்க. உங்க பதிவுக்கெல்லாம் வரணும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. :D

    ReplyDelete
  24. கருணாகரன், முதல் வரவு? வருகைக்கு முதலில் நன்றி. ஸ்ரீரங்கத்தில் எங்கேயும் டூவீலரிலேயோ அல்லது நடந்தோ சென்றுவிட முடியும். பிரயாணம் செய்து எதுவும் வாங்க வேண்டியதில்லை. கிராமத்துக்கு கிராமம், நகரத்துக்கு நகரம். எனக்கென்னவோ கிராமத்துச் சூழ்நிலையே பிடித்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
  25. வாங்க கெளதம் சார், சம்பந்தி வீட்டுக்கு வரிசைகள் எடுத்துட்டு வரச்சே நம்மளையும் நினைவில் வைச்சுக்கோங்க. :))))))))

    ReplyDelete
  26. அமைதி, முக்கியமாய்ச் சென்னைப் புழுதியிலிருந்து விடுதலை; அமைதி! அதான்! :))) நன்றிம்மா.

    ReplyDelete
  27. வாங்க ஸ்ரீராம், சென்னைக் காதலர்கள் பலரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருக்காங்க. :)))) பழகிய ஊர் என்று பார்க்கப் போனால் பிறந்து, வளர்ந்து, இருந்த ஊரான மதுரையே இப்போப் பிடிக்கலை. :(

    எங்களுக்குப் பிடிச்சதுனு பார்க்கப் போனால் குஜராத்தில் பரோடா தான். ஆனால் அங்கே போனால் சொந்த மனிதர்கள் இல்லை என்பதால் யோசித்துவிட்டு வேண்டாம்னு விட்டுட்டோம். அங்கே உள்ள அமைதியும், வசதியும், தண்ணீரும், காற்றும், மின்சாரமும் இந்தியாவில் எங்கேயுமே கிடைக்காது. நடைப்பயிற்சி செல்ல வசதியான தெருக்கள் என்பதோடு ஆங்காங்கே உட்கார்ந்து செல்லும் வகையில் பெஞ்சுகள் நகராட்சியால் அமைக்கப் பட்டிருக்கும். நடைபாதையில் கடைகள் கிடையாது; பார்க்க முடியாது. நடைபாதை நடக்கவே! இது ஒண்ணு போதாதா?

    ReplyDelete
  28. வாங்க வெங்கட், ஊருக்கு வந்தாச்சா?

    ReplyDelete
  29. ஏடிஎம், ஒரு மாசமாய் எதுவுமே எழுதலை. கண்ணன் கதைகள் இனிமேல் தான் எழுத ஆரம்பிக்கணும். வேணும்னே கணினி கிட்டே வராமல் தவிர்த்தேன். இனி எழுதணும். :))))) அரங்கனும் வருவார்; கண்ணனும் வருவான்.

    ReplyDelete
  30. அப்பாதுரை, உங்க இந்தியப் பயணத்தில் இதுவும் லிஸ்ட்லே இருக்குதானே? :)))))

    ReplyDelete
  31. வாங்க கபீரன்பன், ஆமாம், வம்பு, தும்புக்கு நாம் போகாட்டியும் அங்கே தினம் தேடிட்டு வரும். இங்கேயானும் இல்லாமல் இருக்க அரங்கன் பார்வை காப்பாற்றும். நன்றிங்க.

    ReplyDelete
  32. வாங்க திராச சார், நீங்க சொல்றது உண்மையே. இங்கே மேடு, பள்ளம் எல்லாம் கிடையாது. அன்னிக்கு வந்தீங்களே, காரை ஒரு மைல் தள்ளி நிறுத்திட்டு நடந்து வெயிலில்! :(((( இங்கே காரோட வந்தா, நம்மப் பார்க்கிங் ஏரியாவிலேயே நிறுத்திக்கலாம். :))))) வாங்க!

    ReplyDelete
  33. நன்றிம்மா மாதேவி.

    ReplyDelete