எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 10, 2012

இந்தக் கதையை எப்படியும் முடிச்சுடுவேன்!:))))))


ரம்யா பிறந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. திடீர் என இரண்டு நாட்கள் முன்னாடி தான் வந்தாள்.  நல்ல வேளையாகத் தனியாக வரவில்லை. பாஸ்கருடனேயே வந்தாளோ, ஒரு கவலை விட்டதோ!  ராதாவின் மனதில் இரண்டு, மூன்று நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் ஓடியது.

அன்று காலை ஏழு மணி இருக்கும்.  செவ்வாய்க்கிழமை.  செவ்வாய்க்கிழமையிலேயே சஞ்சலம் வாய்ந்த செய்திகள் வரும் என சந்துரு சொல்லுவான்.  ராதாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் சந்துருவை மறுத்துப் பேசுவதில்லை.  காலை சந்துரு அலுவலகம் கிளம்பும்போது தொலைபேசி அழைப்பு வந்தது.  ராதா எடுத்துப் பேசினாள்.  ரம்யாவின் மாமியார் தான் பேசினார்.  ரம்யாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றும், அவர்களை எல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாள் என்பதால் பாஸ்கரே காரில் அழைத்து வந்து விடுவதாகவும், சில நாட்கள் அங்கே இருக்கட்டும், பின்னர் பாஸ்கரே வந்து அழைத்துச் செல்வான் என்றும், கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் கூறினாள்.  ஆனாலும் ராதாவுக்கு மனம் கிலேசம் அடைந்தது.  அன்று பேசினப்போ கூட நன்றாகத் தானே பேசினாள்!  திடீரென என்ன வந்துவிட்டது இந்தப் பெண்ணுக்கு!  கவலையுடன் சந்துருவிடம் விஷயத்தைத் தெரிவித்தாள்.  சந்துரு சிரித்தான்.

"நீ பெத்தியோ இல்லையோ, பாசம் உனக்கு அதிகமாய்த் தான் இருக்கு!  அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு அவங்களே சொல்லி இருக்காங்க இல்லை! அப்புறம் என்ன!  அநாவசியமாக் கற்பனைகளைக் கிளறி விட்டுக்காமப் பேசாம இரு.  அவ வந்தா இங்கே இருக்கேன்னு சொன்னா இருக்கட்டும்;  இல்லைனா  அந்த வீட்டுக்குப் போகட்டும்!" என்றான் சந்துரு.  என்னவோ சில மாதங்களாக அகிலாண்டத்திடம் முகம் கொடுத்துப் பேசாததோடு மட்டுமின்றித் தம்பி வீடு எனச் சொல்லி வந்ததையும் அந்த வீடு என்றே சொல்கிறான் சந்துரு.  என்னவோ ஒவ்வொருத்தர் போக்கும் ஒவ்வொரு மாதிரியா இருக்கு.  இதிலே ரம்யா வந்ததும் அகிலாண்டத்தை வேறே சமாளிச்சாகணும்.  ராதாவுக்குக் கவலைதான்.

ரம்யாவும், பாஸ்கரும் வந்தார்கள்.  பயப்படும்படியாக உடல் நலக்கேடு ஒன்றும் இல்லை என்றாலும் ரம்யாவின் வாடிய முகமும், ஏதோ கவலையில், ஆழ்ந்த குழப்பத்தில் இருப்பது போல் தோற்றமளித்த கண்களும், கண்களைச் சுற்றிக் கட்டி இருந்த கருவளையமும்  ரம்யாவின் மனக்குழப்பத்தைக் கட்டியம் கூறின.  பாஸ்கர் கலகலப்பாக இருந்ததோடு அல்லாமல் ரம்யாவை வம்புக்கும் இழுத்து விளையாடினான்.  ரம்யாவின் குழப்பத்தை அவன் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை.  ரம்யாவோ எதிலும் ஈடுபாடு இல்லாமலேயே பதில் கொடுத்தாள். ராதாவின் கவலை அதிகம் ஆனது.  என்னவோ தெரியவில்லை. அகிலாண்டம் ரம்யா வந்திருக்கும் செய்தி தெரிந்தும் வந்தும் பார்க்கவில்லை.  ரம்யாவும் அகிலாண்டத்தைப் பார்க்க ஆசைப்படவில்லை.  கூப்பிட்டு அனுப்பறேன் என்றதற்கும் வேண்டாம் மன்னிம்மா என்றுவிட்டாள்.  ஒரு காலத்தில் அவள் அம்மா எனக் கூப்பிடாவிட்டாலும் மன்னினாவது என்றோ ஒரு நாள் கூப்பிட்டால் போதும்னு நினைத்த ராதாவுக்கு இப்போது அவள் மூச்சுக்கு மூச்சு மன்னிம்மா, மன்னிம்மா என்பது மன நிறைவைத் தந்தாலும் அவள் மனம் விட்டு எதுவும் சொல்லாதது உறுத்தவே செய்தது.

மத்தியானம் சாப்பிட்டுச் சிறிது நேரம் படுக்கலாம் எனத் தலை சாய்க்கும்போது வாசலில் அகிலாண்டம் வருவது தெரிந்தது.  என்னவோ புதுசாய் வருவது போல் தயங்கித் தயங்கி, பதுங்கிப் பதுங்கி வந்தாள் அகிலாண்டம்.  ராதாவுக்கு ஆச்சரியம்.  ரம்யாவோ அவளைக் கண்டதுமே தன் அறைக்குப் போய்க் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.  அகிலாண்டம் வந்ததும் பெண்ணைப் பற்றிக் கேட்டாள்.  எதுக்கு வந்திருக்கா?  சும்மாத்தானே!  இல்லைனா குழந்தை உண்டாயிருக்காளா?  அங்கே மாமியார் எப்படி வைச்சுக்கறாங்க னு எல்லாமும் விசாரித்தாள்.  வந்த காரணம் என்னனு ஏதேனும் சொன்னாளானும் கேட்டாள்.  பல வகையிலும் ராதாவைத் துருவித் துருவிக் கேட்டும் அவளுக்கு எதுவும் தெரியாது என்பதில் அகிலாண்டம் நிம்மதி அடைந்ததாகவே தோன்றியது.  ரம்யா வெளியே வருவாளா என எதிர்பார்த்த அகிலாண்டம் அவள் வராதது குறித்து வருந்தினாலும் ஏதோ பெரிய சண்டை ஒன்றை எதிர்பார்த்து வந்துவிட்டு அது இல்லாமல் போனதில் உள்ளூர மகிழ்ந்தவள் போல் காணப்பட்டாள்.  அதற்குள்ளாகச் சந்துருவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

ராதா தான் எடுத்துப் பேசினாள். அகிலாண்டத்தைப் பார்க்க ஒருத்தர் மறுநாள் வரப் போவதாய்க் கூறினான்.  அதை ஏன் உங்களிடம் சொல்லணும்! நேரே உங்க தம்பிக்கே தொலைபேசிச் சொல்லி இருக்கலாமே என ராதா கேட்டதுக்கு வருபவர் தனக்கு உறவினர் என்றான் சந்துரு.  ராதா கேலியாகச் சிரித்தாள்.  "உங்களுக்கு உறவுன்னா உங்க தம்பிக்கும் உறவில்லையா!  என்ன பேசறீங்க நீங்க! " என்றாள். "ஆமாம், ராதா, அவனுக்கும் உறவு தான்!: சிரித்த சந்துரு, "கொஞ்ச நாட்களா நான் இப்படி இருக்கேன்;  அப்படி இருக்கேன்னு எல்லாம் கேட்டுட்டு இருந்தியே ! நாளைக்கு எல்லாத்துக்கும் விடை கிடைச்சுடும்.  உன் பிரச்னைகள் எல்லாமும் தீரும்.  இனிமே உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது. " என்றான்.

ராதா குழப்பமடைந்தாள்.  என்ன புதிர் போலப் பேசுகிறார் இவர்!

16 comments:

  1. வரப்போகிறது கிருஷ்ணமூர்த்தி சாரா??

    ReplyDelete
  2. ஆமாம்.... என்ன புதிர் யோசித்து வைத்திருக்கிறீர்கள்?!

    ReplyDelete
  3. கதைல ஒரே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். மண்டை குடையுதே.

    ReplyDelete
  4. வாங்க வல்லி, தெரியலையே! :)))))

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, ஆமா இல்ல, என்ன புதிர்?

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், சொல்லுங்க, என்ன புதிர் அது?

    ReplyDelete
  7. வாங்க மீனாக்ஷி, என்ன ட்விஸ்ட்? மண்டை குடையுதா! ஹிஹிஹி! ஓகே,ஓகே!

    ReplyDelete
  8. இன்னைக்கே அடுத்ததையும் போட்டிருக்க கூடாதா மாமி....:)

    சுவாரசியம்.....

    ReplyDelete
  9. மீனாக்ஷி, பூவை பூவை மாத்தியாச்சா?

    ReplyDelete
  10. வாங்க கோவை2தில்லி, ஹிஹிஹி, ரொம்பவே சுவாரசியமா?? எனக்கே கொஞ்சம் சந்தேகம், ஆச்சரியம், எழுதறது நான் தானானு! :))))))

    ReplyDelete
  11. பூ மாத்தின அப்பறம் போட்ட முதல் கமெண்ட் இங்கதான், நீங்க கவனிக்கனும்னுதான். :) கவனிச்சதுக்கு நன்றி! இது எனக்கு ரொம்ப பிடிச்ச மெஜண்டா. அதான்
    இந்த பூ.

    ReplyDelete
  12. ஹிஹிஹி, மீனாக்ஷி, எப்போவுமே சுத்தி நடக்கிறதைக் கவனிக்கிறதிலே தான் சுவாரசியம். சீரியலை விடவும் அதிலே வர விளம்பரங்களே என்னைக் கவரும். அது மாதிரி ஒவ்வொருத்தர் பேரோடயும் வர அடையாளங்களைக் கவனிப்பேன். அதனால் நீங்க மாத்தினால் உடனே தெரியும். :))) வல்லி இங்கே இந்தக் கிருஷ்ணர். இன்னொரு இடத்திலே வேறே மாதிரி அடையாளம் னு வைச்சிருக்காங்க. :))))))))

    ReplyDelete
  13. வல்லிக்கென்ன, மாத்திக்கிட்டே இருப்பாங்க. பொழுதுதான் போணுமே:)

    கூகிள்ள ஒரு தனி படம் கேட்டாங்க. அதனால டால்ஃபின் படம் போட்டேன்.:)

    ReplyDelete
  14. ஆனாலும் அதுக்குப் போய் புதிர்ன்னு பெயர் கொடுத்திருக்க வேண்டாம். சந்துருவைக் கேட்டாலும் இதைத் தான் சொல்லுவான்.

    கிருஷ்ணமூர்த்தி தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தேவலை என்றாலும் கிருஷ்ண மூர்த்தி அவரே அறியாமல் இந்தக் கதையை முடிப்பதை நினைச்சால் தான் வேடிக்கையாய் இருக்கிறது. எத்தனை பேரை வருந்தி வருந்தி அழைத்தீர்கள்?.. கட்டக் கடைசியில் தேமேனென்று இருந்த கிருஷ்ண மூர்த்தி வந்து சேர்ந்தார் பாருங்கள்.

    ReplyDelete
  15. புதிராகவே இருக்கின்றது. பொறுத்திருந்து பார்க்கின்றேன். :))

    ReplyDelete