வியாழக்கிழமை மதுரையிலே ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். தெரியாத்தனமா இன்டர்சிடி எக்ஸ்பிரஸில் டிக்கெட் வாங்கிட்டார். போதும்டா சாமினு ஆயிடுச்சு. ரயில் நடைமேடைக்கே ஏழு மணி ஐந்து நிமிடங்களுக்குத் தான் வந்தது. அறிவிப்பும் செய்யலை. அறிவிப்புப் பலகையிலும் தகவல்கள் தரவில்லை. ஏழு ஐந்துக்கு வந்துட்டு உடனே ஏழு பதினைந்துக்கு வண்டி கிளம்பிடுது. கூட்டமெல்லாம் இல்லை என்றாலும் வழியில் கொளத்தூரிலேயே போட்டுட்டாங்க ஒரு மணி நேரம். அதுக்கப்புறம் வையம்பட்டியிலே அரைமணி நேரம். ஒன்பதே காலுக்கு மதுரை போக வேண்டிய வண்டி பத்தரைக்குத் தான் போச்சு. விசேஷம் முடிஞ்சாச்சு. :)))) கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))
என்றாலும் வழியில் திண்டுக்கல் தாண்டிக் கொடை ரோடு செல்லும் வழியில் கண்ட காட்சிகள் இவை. தென்னந்தோப்பாக வரிசையாக வரும். அவற்றைக் கண்டதும் காட்சியாக்கக் கைகள் துடித்தாலும் காமிரா எடுத்துச் செல்லவில்லை. செல்லில் முடிஞ்ச மட்டும் படமாக்கினேன். கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு.
என்றாலும் வழியில் திண்டுக்கல் தாண்டிக் கொடை ரோடு செல்லும் வழியில் கண்ட காட்சிகள் இவை. தென்னந்தோப்பாக வரிசையாக வரும். அவற்றைக் கண்டதும் காட்சியாக்கக் கைகள் துடித்தாலும் காமிரா எடுத்துச் செல்லவில்லை. செல்லில் முடிஞ்ச மட்டும் படமாக்கினேன். கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு.
ReplyDeleteபயண அனுபவங்கள் என்றுமே ரசிக்கத் தக்கவை. காட்சிகளும். கவிதை எழுதியிருக்கணுமே இந்நேரம்!
தொடர.
ReplyDeleteஅதான் நேரத்துக்கு போயாச்சே! அப்புறம் என்ன?
ReplyDeleteநாலு நாள் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்க வேண்டும் ன்னு அழைப்பிதழ் ல போடலியா?
கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு.
ReplyDeleteகண்கொள்ளாக் காட்சிப்
பதிவுக்குப் பாராட்டுக்கள்..
நாங்க கூட திருனெல் வேலிந்து சென்னை போகும்போது நாங்கள்ளாம் அரமணி நேரம் முன்னயே ப்ளாட்பாரம் வந்துட்டோம். ஆனா வண்டி வரலே.ஆற அமர வண்டி வந்தா எங்க கம்பார்ட்மென்டெ இனைக்கலே. வேர கம்பார்ட்மெண்ட்ல ஏறினா அங்குள்ளவங்க எதிர்ப்பு தெரிவிக்கராங்க. ரயில்வே காரங்க கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்க மாட்டாளோ??????
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், ஆமாம், நிறைய அனுபவங்கள் உள்ளன. 2006-ஆம் வருஷப் பதிவுகளில் பாருங்க. எங்க தூர தேசப் பயணங்கள் பத்தி எல்லாம் எழுதி இருப்பேன். :)))
ReplyDeleteவாங்க வா.தி. சாப்பாட்டு நேரத்துக்குப் போயிட்டோம் தான்! ஹிஹிஹி,
ReplyDeleteம்ஹும், அதெல்லாம் நாலு நாள் முன்னாடி வரச் சொல்லலை. அண்ணா பையர் கல்யாணத்துக்குத் தான் ஒரு வாரம் முன்னாடியே போயிட்டேனே! அந்த மாதிரி இவங்களும் சொல்லக் கூடாதோ! :P :P :P :P
வாங்க ராஜராஜேஸ்வரி, அதோடு மட்டுமில்லாமல் இன்னமும் மாடு பூட்டி ஏர் உழுவதையும் பார்த்தேன். வண்டி போன வேகத்தில் படம் எடுக்கிறதுக்குள்ளே வேறே காட்சி வந்துடுத்து! :(
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, ஆமாம், பொறுப்பின்மை தான் அதிகமாக இருக்கிறது. என்ன செய்ய முடியும்? ஒண்ணும் கேட்கவும் முடியலை. :(
ReplyDeleteஅம்பத்தூர் வாசம் மாதிரி இல்லை; இப்பொழுதெல்லாம் மதுரைக்குப் போவது ஏதோ பக்கத்து தெருவுக்குப் போகிற மாதிரி ரொம்பவும் செளகரியமாக அமைந்துவிட்டது போல இருக்கே!
ReplyDeleteஎன்னடா மதுரைக்கு போகாதடின்னு சொல்றீங்களேன்னு பாத்தேன். :))
ReplyDeleteசெல் போன் என்றாலும் படம் பாக்க ரொம்ப நல்லாதான் இருக்கு.
// கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))// அதானே. பந்திக்கு முந்தியாச்சு. :)
நடைமேடை - இப்பதான் தெரிஞ்சுண்டேன். நன்றி!
ஹிஹி, ஜீவி சார், பேருந்திலே போனால் இரண்டரை மணி நேரத்தில் போக வேண்டியவங்க வீட்டுக்கே போயிடலாம். :))))) நாங்க இன்டர்சிடியில் ஒரு நாள் பயணிச்சுப் பார்க்கணும்னு போனதாலே அன்னிக்கு லேட்! :)))))
ReplyDelete// கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))// அதானே. பந்திக்கு முந்தியாச்சு. :)//
ReplyDeleteபின்னே! விடுவோமா?? சேமியா பாயசமுல்ல போட்டாங்க! :))))))
//நடைமேடை - இப்பதான் தெரிஞ்சுண்டேன். நன்றி!//
பல வருடங்களாகப் பயன்படுத்திட்டு இருக்கேனே! :)))))