எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 08, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது! தொடர்ச்சி


ரம்யாவின் திருமண தினமும் நெருங்கியது.  அகிலாண்டத்தின் விருப்பத்துக்கு மாறாக ராதாவே மணையில் அமர்ந்து கல்யாண விசேஷங்களில் கலந்து கொள்ள வைத்தாள் ரம்யா.  அவள் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.  தான், தன் சுகம் என்றே வாழ்ந்து வந்த அகிலாண்டத்தைத் தன் தாய் எனச் சொல்லவும் அவளுக்கு இஷ்டமே இல்லை.  ஆகவே கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள்.  ஏதேனும் கேட்டால் பதில், இல்லைனா எதுவும் இல்லை.  அகிலாண்டத்தின் கடைசிப் பொறுப்பும் தீரப் போகிறது.  ஆனால் ராதாவுக்குப் பொறுப்புத் தீர்ந்ததா?  அடுத்துத் தன் பிரசவம், குழந்தைப் பேறுனு நிற்காதே.  இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்.  தான் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது.  ரம்யா முடிவெடுத்தாள்.  அதைச் செயலிலும் காட்ட வேண்டும்.  ஒரு குழந்தைக்கு ராதாவை ஏங்க வைத்த அகிலாண்டம் இனி தன் வாழ்நாள் முழுதும் எனக்குக் குழந்தை பிறந்து பார்க்கக் கூடாது.  ஆம்;  இதான் சரியான தண்டனை அவளுக்கு.

திருமணமும் முடிந்து அனைவரும் பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பும் நேரம்.  ரம்யாவுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது.  அங்கே ஓடோடி வந்த அகிலாண்டம் அவளை அணைத்துக் கொண்டு, "என் கண்ணே, உனக்குத்தான் எத்தனை பாசம்!" எனத் தானும் அழுதாள்.  அனைவர் எதிரிலும் கத்த வேண்டும்போல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ரம்யா, அவள் காதுகளில் மட்டும் விழும் வண்ணம், " இதோ பார்!  நடிக்காதே.  நீ என்னைப் பெற்றிருக்கலாம்.  ஆனால் வளர்த்தது ராதா மன்னிதான்.  அவளுக்குத்தான்ன் முன்னுரிமை.  இப்போ நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கேள்.  நீ எப்படி ராதா மன்னியின் குழந்தையை வெளிவர முடியாமல் அழித்தாயோ/அழிக்கச் சொன்னாயோ, அப்படியே இப்போவும் நடக்கப் போகிறது.  அவ்வளவு ஏன்?  ஒரு குழந்தையை நான் வரவிடவே போகிறதில்லை.  நீ உயிரோடு இருக்கும் வரை எனக்கு ஒரு குழந்தை பிறந்து பார்க்கப் போவதில்லை. இதான் நான் உனக்குக் கொடுக்கும் தண்டனை!"  என்றாள் கடுமையான குரலில்.

அகிலாண்டத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.  ராதாவிடம் இவளை வளர விட்டதே தவறோ எனக் கூட ஒரு நிமிஷம் எண்ணினாள்.  அடுத்து ரம்யா செய்த காரியம் இன்னமும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட வைத்தது.  நேரே ராதாவிடம் சென்ற ரம்யா,  அவளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவளையும், அண்ணனையும் இழுத்து அருகருகே நிற்க வைத்து அழகு பார்த்தாள்.  மீண்டும் ராதாவைக் கட்டிக் கொண்டாள்.  " இந்த நாற்பத்தி ஐந்து வயசிலேயும் நீ எவ்வளவு அழகா இருக்கே!" என வியந்தாள்.

"இதோ பார் ராதாம்மா, என்னை வளர்க்கணும்னு நீ இன்னொரு குழந்தை வேண்டாம்னு இத்தனை நாள் இருந்தது போதும்.  இப்போத் தான் நான் கல்யாணம் ஆகிப் போகிறேனே.  இனி நீ எனக்குக் கொடுக்க வேண்டிய ஒரே பரிசு தம்பிப் பாப்பா தான்.  இதோ பார்.  இன்னும் நான்கே மாசங்களில் நீ என்னோட தம்பிப் பாப்பாவையோ, தங்கைப் பாப்பாவையோ சுமக்கணும்.  உன் பிரசவத்துக்கு நான் வந்து தான் உதவிகள் செய்யப் போறேன்.  உன்னை என்னோட அம்மாவா இல்லாம, பெண் போலப் பார்த்துக்கறேன்.  கவலைப்படாதே!"  என்றாள்.

ராதாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இந்த வயசில் குழந்தையா எனக் கூறிவிட்டு மெளனம் ஆனாள்.  ஆனால் சந்துருவின் கண்களில் தெரிந்த அந்த ஆசை! அவனுக்குத் தன்னுடைய வாரிசு என ஒன்று வேண்டும் என நினைப்பதைப் புரிய வைத்தது.  ஆனால் அகிலாண்டம்????  அவள் ராதா-சந்துரு இருவரின் சேமிப்பெல்லாம் தன் குழந்தைகளுக்கே சேர வேண்டும் எனத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாளே;  ராதாவுக்குக் குழந்தை பிறந்தால் பொறுப்பாளா?  என்ன இருந்தாலும் சொந்தப் பிள்ளைக்கு ஒரு வாரிசு என்பதை ஏன் இவள் எதிர்க்கிறாள்??? ராதாவுக்கு மனதில் சின்னக் குழப்பம்.  தனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.  ஆனால் அகிலாண்டமோ ஒரே பிடிவாதமாக அல்லவோ இருக்கிறாள்.  சொல்லப் போனால் இரண்டு பேரில் ஒருத்தரைக் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலாமே என்று கூட அல்லவோ யோசனை கொடுத்தாள்!  சந்துருவின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அது கொஞ்சம் குறைந்தது.   ஆனாலும் இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்ன?

12 comments:

  1. ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்ன?

    என்னதான் முடிவு ??????

    ReplyDelete
  2. இன்னும் தொடருமோ? முதலில் ராதா செய்ய நினைத்தது வேறு போலேருக்கே...

    ReplyDelete
  3. வாங்க ராஜராஜேஸ்வரி, இன்னிக்குத் திடீர்னு தோன்றிய ஒரு மாற்றம். ஆனால் சீக்கிரமா முடிச்சுடுவேன்.:))))

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், ராதா செய்ய நினைத்ததா? ரம்யா செய்ய நினைத்ததா? :)))) அதெல்லாம் தொடராது. விரைவில் முடிச்சுடுவேன். சூப்பர் பஞ்ச் சஸ்பென்ஸான ஒரு ரகசியம் கிடைச்சது.அதாவது என் வரையில் சூப்பர் பஞ்ச் ரகசியம் அது. :))))))

    ReplyDelete
  5. அந்த சூப்பர் பஞ்ச் ரகசியம் என்னன்னு சீக்கிரம் சொல்லுங்கோ மாமி...

    ReplyDelete
  6. ரம்யாதான்...... அவசியம் அ வ சி தான்! :)))

    ReplyDelete
  7. திடீர்னு ட்ரேக் மாறினாப்புல இருக்கே.. பின்றீங்க போங்க.

    ReplyDelete
  8. ஹிஹிஹி, அப்பாதுரை, திடீர்னு தான் கற்பனை எல்லாம் வருமாக்கும்! :)))) அதுவும் என் போன்ற திறமையான (ஹிஹிஹிஹி) எழுத்தாளிகளுக்குச் சொல்லணுமா! :P :P :P இந்த :P எனக்கு நானே கொடுத்துண்டது. :))))))

    ReplyDelete
  9. வீடு பூரா குழந்தை சப்தம் கேட்கிற உணர்வு. :)) ஆனால், அந்த அகிலாண்டத்திற்குத் தான் இதெல்லாம் பொறுக்காதே!

    ReplyDelete
  10. ஜீவி சார், அடுத்ததையும் போட்டுட்டேன். அதையும் படிச்சுட்டுச் சொல்லுங்க. :))))))

    ReplyDelete
  11. கீதா!! இப்படி ஒரு கதை எழுதுவதே எனக்குத் தெரியாமல் போச்சே . தலையும் காலும் புரியலை. நவம்பர் 10இல் ஒரு பதிவு பார்த்தேன். இப்பதான்.
    ப்ளீஸ் லின்க் கொடுங்கப்பா.ராதா ரம்யா. அகிலாண்டம்,லதா எல்லோருடைய பின்னணியும் வேணும். ஏனெனில் கதை பிரமாதமாக இருக்கு.:)

    ReplyDelete
  12. வாங்க வல்லி, நானே தேடித்தான் பார்க்கணும். நல்லவேளையா சில பதிவுகளோட டாகுமென்ட் இருக்கு. :)))))சுட்டியை மெயிலறேன்.

    ReplyDelete