ஒரு நிமிஷம் திகைச்சுப் போய் உயிரே போயிட்டு வந்தது. என்னோட ப்ளாக் Not Available Message வந்தது. திகைப்பாய்ப் போயிட்டது. நேத்திக்குக் காலம்பர மின்சாரம் போனப்போ லாப்டாப்பில் என்ன ஆச்சுனு புரியலை. அப்புறமா மின்சாரம் வந்தப்போ மத்தியானமா போட்டப்போ Automatic Start Up Repair வந்தது. ஓகே கொடுத்தேன். அது ஸ்டார்ட் அப்பில் ஏதோ பிரச்னைகள் இருக்கிறதாச் சொல்லி சரி பண்ணறேன்னு சொல்லவும் அதுக்கும் ஓகே தான். அப்புறமாக் கணினியை ரீ ஸ்டார்ட் பண்ணினால் டெஸ்க் டாப் வருது; ஆனால் இணையம் வரலை. சரி இணையத்திலேதான் ஏதோ பிரச்னைனு பேசாம இருந்துட்டேன். இதுக்கு முன்னாலேயும் ஒரு தரம் வராம இருந்து மறுநாள் வந்தது. அது மாதிரித் தானே சரியாகும்னு நினைச்சுட்டேன்.
அப்புறமா என்னவோ தோணிப் போய் பிசியைப் போட்டால் அதிலே இணையம் நல்லாவும் வந்தது. டவுன்லோடும் ஆச்சு. சரி லாப்டாப்பிலே தான் பிரச்னைனு புரிஞ்சது. நேத்து முழுக்கப் பல முறை முயன்றும் வராமல் போகவே மருத்துவரைக் கூப்பிட வேண்டியதாப் போச்சு. நேத்திக்கு சாயந்திரமா வரேன்னு சொன்ன மருத்துவர் வரலை. நமக்கோ என்னதான் பிசி இருந்தாலும் லாப்டாப் இல்லையேனு கவலை. துக்கம். அப்படியே வருத்தம் தாங்காமல் படுத்துத் தூங்கியாச்சு. காலம்பர மறுபடி பார்த்தா அதே, அதே. சரினு மருத்துவர் நம்பரை அழைத்தால் அவர் எடுக்கவே இல்லை. ஒன்பது மணி வரை பார்த்தேன். அப்புறமா அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் கொடுத்தேன். ம்ஹ்ஹூம் அசையவே இல்லை.
மின்சாரம் அதிசயமா இருந்ததாலே என்னோட வீட்டு வேலைகளை முடிச்சாச்சு. அப்படியும் மின்சாரம் இருக்கவே ரங்க்ஸ் வெளியே போயிருந்தவர் வந்து, மருத்துவரை மின்சாரம் இருக்குனு சொல்லி உடனே வரச் சொல்லுனு சொல்ல, அவரும் அழைத்ததும் உடனே எடுத்தார். மின்சாரம் இருக்குனு நல்ல செய்தியைச் சொல்ல அவருக்கும் மூட் நல்லா இருக்க, சிறிது நேரத்தில் வந்தார். வந்து என்ன தவறுனு கண்டு பிடிச்சார். ஸ்டார்ட் அப் ரிபேர் எல்லாத்தையும் டிசேபிள் பண்ணி இருக்கு. திரும்ப எல்லாத்தையும் போட்டு...........கடவுளே, பிசியில் என்னோட ப்ளாக் திறந்தது. கமென்ட்ஸ் எல்லாமும் பப்ளிஷ் பண்ணினேன். இதிலே வராதுனு சொல்லவும் மயக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கமே வந்துடுச்சு. ஒரு வழியா வந்திருக்கு. இப்போக் கண்ணன் கதை எழுதற பக்கம் வராதுனு சொல்லிட்டு இருக்கு. அதைப் போய்ப் பார்க்கணும். என்னவோ நேரம்! :((((((
இந்தத் துக்கத்திலே யவனராணியை ஒரு வழியாப் படிச்சு முடிக்கப் போறேன். இரண்டு நாளா இதான் வேலை.

சரியா பப்ளிஷ் ஆகி எனக்குத் தெரியுது. ரசிகப் பெருமக்களும், தொண்டர்களும் சொல்லணும். சரியா இருக்கா இல்லையானு. இதுக்கெல்லாம் தீக்குளிக்கிற லெவலுக்குப் போக வேண்டாம் யாரும். அலகு குத்திண்டு காவடி மட்டும் (சர்ப்பக் காவடி) (சுப்புக்குட்டிகளை)எடுத்தால் போதும். :)))))
ReplyDelete:P:P::P
ReplyDeleteவலைச்சரப் பக்கத்துல பார்த்து விட்டு வருகிறேன். 'எங்களு'க்கு அப்டேட் ஆகலையே....எப்படியோ யவனராணி முடித்து விட்டீர்கள்! எத்தனையாவது தரம்?
ReplyDeleteவா.தி. (க்)ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், வலைச்சரத்திலே என்னோட பதிவா? ம்ம்ம்ம்ம்?? எங்களுக்கு வரலையா? என்னனு தெரியலை. உங்க பதிவுகள் எனக்கு அப்டேட் ஆகாம இருக்கும். அதுக்காக கூகிள் பழி வாங்கி இருக்குமோ? :)))))))))
ReplyDeleteயவனராணி எத்தனாம் தரம்னு எல்லாம் சொல்ல முடியாது. கணக்கே இல்லை. :)))))))
ReplyDeleteஎனக்கும் ஒரு தரம் படுத்திட்டு அப்புறம் சரியாயிடுச்சு
ReplyDeleteஅப்பப்ப இந்த மாதிரி பிரச்சனைகள் தான்... :)
ReplyDeleteயவன ராணி எத்தனாவது முறை? நானும் கேட்க நினைத்தேன்.
வணக்கம் அம்மா. சரியாதான் இருக்கு :)
ReplyDeleteலாப் டாப், கம்ப்யுட்டர் எல்லாமே நம்மளை அதோட விளையாட்டு சினேகிதியாக நினைக்குதோ என்னமோ? நம்ம கூட புரியாதபடில்லாம் விளையாடுது டாக்டர்லாம் கூப்பிட்டதும் வந்ததாக சரித்திரமே கிடையாதே.னாமல்லாம் பதிவு எழுதரோம் பின்னூட்டம் ப்-ஓடரோம் அதைதாண்டி எதையுமே முயற்சிக்கரதே இல்லியே.அப்பப்ப இப்படி அவஸ்தைப்படத்தானே வேண்டி இருக்கு
ReplyDeleteமுதல் வரியைப் படிச்சதும் என்னவோ ஏதோனு படிச்சா..
ReplyDelete//மின்சாரம் அதிசயமா இருந்ததாலே
சே! சிரிக்கக் கூடாதுனு நினைச்சாலும் முடியலே. இந்த அளவுக்கு ஆயிடுச்சு பாருங்க!
வாங்க ரிஷபன், ஒருதரம் தானே?? நமக்கெல்லாம் அப்படி இல்லையாக்கும். ஏதேனும் படுத்தல் இருந்துட்டே இருக்கும். :))))))
ReplyDeleteவாங்க வெங்கட், தொழில் நுட்பம் தெரிந்தால் நாமளே சரி பண்ணிடலாம். அது தெரியாமத் தான் பிரச்னையே! :)))))
ReplyDeleteயவனராணி எத்தனாம் தரம்னு சொல்றது கஷ்டம். ஹிஹிஹி
அது குமுதத்திலே வரச்சே நான் பள்ளி மாணவி. அப்போல்லாம் குமுதமே சின்னப் பசங்கல்லாம் படிக்க முடியாது. வீட்டிலே அதுக்கு 144 தடை உத்தரவு. நான் முதல்லே யவனராணி படிச்சது அது குமுதத்திலே வந்து பல வருஷங்களுக்கு அப்புறம் தான். :)))))
ReplyDeleteவாங்க கவிநயா, அதிசய வருகை. நன்றி வருகைக்கும், சரியா இருக்குனு சொன்னதுக்கும்.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, இங்கே மருத்துவரும் அப்படித்தான் கூப்பிட்டதும்லாம் வரமாட்டார். இரண்டு நாளாவது ஆகும் வர. நல்லவேளையா பிசி இருக்கு; அதிலே இணையமும் இருக்குனு என்னை விடவும் என் ரங்க்ஸுக்குத் தான் நிம்மதி. :)))))))
ReplyDeleteவாங்க அப்பாதுரை,
ReplyDeleteசிரிச்சா என்ன? எழுதறதே எல்லாரும் சிரிக்கத் தானே. தப்பில்லை. இங்கே எங்களுக்குப் பழகிப் போச்சு. அதனால் ஜோக் தான் அடிக்கிறோம். :))))
மின்சாரம் இருக்கறதே எப்பவாவது தானே....:)
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... :)))
இப்போ சரியானதில் மகிழ்ச்சி.
வாங்க கோவை2தில்லி, உங்களுக்கும் மின்சாரம் இருக்கா? அதிசயம் தான் போங்க. லாப்டாப் இன்னும் சரியாகலை. என்னமோ சின்னப் பிரச்னை இருக்கு. பார்க்கலாம். :)))))
ReplyDeleteஆஆஆஆ!இணையம் இல்லையாஆஆ.
ReplyDeleteஇது கூட நல்ல தலைப்பா இருக்கே:)
இப்பதானே லாப்டாப் வந்தது. அதுக்குள்ள ரிப்பேரும் வந்துடுத்தா.
கீதாவைக் காணோமேன்னு என் கணினி தேடிக் கொண்டு இருந்ததது.!
யவனராணி பைண்ட் செய்ததுக்கு அப்புறம்தான் நானும் படித்தேன்.
அதுக்காகக் காவடி அதுவும் சுப்புக் குட்டியெல்லாம் கூப்பிடறது பாவம் பா. அதுகள் மாட்டுச் சந்தோஷமா இருக்கட்டும்:)
யவனராணி ஆரம்பமாகிவிட்டது.... அடுத்து வருகின்றேன்.
ReplyDelete