எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 15, 2012

இதெல்லாம் ஒரு எழுத்தா!

//அப்பாடா! ஒரு வழியா முடிச்சாச்சு'லே ஒரு நிம்மதி தெரியறது. :))))//

நான் எழுதின கதைக்கு ஜீவி சாரின் கமென்டின் ஒரு பகுதி இது.  உண்மை தான். நிம்மதியாத்தான் இருந்தது.  என்னா நான் எழுத நினைச்சது ஒண்ணு;  அது எங்கேயோ போயிடுச்சு!  எழுதினது வேறே.  அதை முடிக்க நினைச்சது ஒரு மாதிரி.  ஆனால் அந்த முடிவைக் கூடக் கொடுக்கலாமா வேண்டாமானு யோசிக்க வைச்சது கதையோட போக்குப் போன விதம்.  இதுக்கு நான் பொறுப்பில்லை.  ஏன்னா எழுத ஆரம்பிச்சது கொஞ்சம் உண்மைக்கதை.  ஆனால் பின்னால் அது கற்பனையாக மாறிவிட்டது.  உண்மையை உள்ளது உள்ளபடியே சொன்னால் யாரு தாங்கிப்பா?  சரினு கதை போன போக்கிலே போக ஆரம்பிச்சுட்டேன்.

இதுக்கு நடுவிலே ஜீவி சார் அகிலாண்டம் மாதிரி அம்மாக்கள் இருக்க வாய்ப்பில்லை; அதனால் அவங்க ஏதோ ஒரு காரணத்துக்காகத் தியாகம் பண்ணினாங்கனு எழுதுங்கனு ஐடியா கொடுத்தார்.  அகிலாண்டத்தை விட மோசமான அம்மாக்களைப் பார்த்தாச்சு! :)))  நல்லதே பார்க்கலையானு கேட்க வேண்டாம்.  நல்ல அம்மாக்களையும், மாமியார்களையும், நாத்தனார்களையும், மருமகள்களையும் பார்த்தாச்சு!  ஆனால் இங்கே எழுத வந்ததோ சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் கண்டு கேட்டறிந்த ஒரு உண்மையான நபரின் உண்மையான வாழ்க்கை.  

இப்போ எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களை உடன் பிறந்த சொந்தங்களே ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுட்டாங்க என்பதை மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்தேன்.  திருமதி திலகவதி ஐபிஎஸ் மூலம் அவங்க முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாலும் அவங்க நிம்மதியாகவோ சந்தோஷமாகவோ இல்லை;  இருக்கவும் இருக்காது.  ஏனெனில் அப்படிப் பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க.  அம்மாதிரியான வாழ்க்கையை வாழாவிட்டாலும் கல்யாணம் ஆனது முதல் பிறருக்கு உழைத்துத் தனக்கென சொந்தமாக ஒரு குழந்தைக்கு ஏங்கிய ஒரு பெண்ணின் கதையை எழுதப் போய் கடைசியில் சொல்லத் தெரியாமல் எதையோ எழுதி ஒப்பேத்தினேன்.  அதுக்கும் பாராட்டுகளைப் பார்க்கிறச்சே மனம் கூசுகிறது.   ஏனெனில் நான் எதையோ எழுதி ஒப்பேத்தினேன் என்பதை நான் மட்டுமே அறிவேன்.  கடைசி நேர மாற்றமும் திடீர்னு தோன்றிய ஒன்று.  ஏனெனில் அகிலாண்டத்தை விட மோசமான அம்மாக்களைப் பார்த்திருக்கேன்.  அந்தப் பாத்திரப் படைப்பு ஓரளவு உண்மையானதே.  குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் சொல்வது தவிர.  நிஜத்தில் அப்படி நடக்கலை.  ஆனால் மகன், மருமகளுக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என்று சொன்ன தாய்மார்களை சினிமாவில் மட்டுமில்லாமல் நேரிலும் பார்க்கலாம். ஆகவே அதில் மாற்றம் செய்ய விருப்பம் இல்லை.  ஆனால் பாராட்டுக்கள் தான் மனம் உறுத்துகிறது. 

அதிலும் இன்னிக்குக் கல்கியில் வந்திருக்கும் ரிஷபனின் கதையைப் படிச்சப்புறம்,  அதிலே வரும் குஞ்சம்மாவைப் பார்த்தப்புறம், அப்பாதுரையின் அறுந்த காற்றாடியைப் பார்த்தப்புறம், ராமலக்ஷ்மி மாமியும், பசுபதி சாரும் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தப்புறம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆகிவிட்டது.

இதெல்லாம் ஒரு எழுத்தானு தோன்றுகிறது.

24 comments:

  1. இல்லே கீதா கதையை நல்ல விதமாகத்தான் சொல்லி இருந்தீங்க. எல்லாருக்குமே சில சமயம் இப்படி குழப்பங்கள் தோன்றுவது உண்டு. எழுத நினைப்பது ஒன்றாகவும் எழுத்தில் வருவது ஒன்றாகவும் வந்துவிடும்.

    ReplyDelete
  2. அகிலாண்டம் போன்ற அம்மாக்கள் நிறைய இருக்கிறார்கள். என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு நாற்சந்தியில் என்னைக் கொஞ்ச நேரம் இடித்துப் போன ஒரு 'தாய்', உலகின் மோசமான தாய்.

    மோசமான தாய் எனும் தகுதி பெற எத்தனை மோசமான செயல்கள் உங்களால் கற்பனை செய்ய முடியுமோ செய்து சொல்லுங்கள் - இந்தத் தாய் அதைவிட மோசமானவர் என்று என்னால் சொல்ல முடியும். இவர் செய்த ஒரு செயலை எவராலும் கற்பனை கூட செய்ய முடியாது என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. //எழுத ஆரம்பிச்சது கொஞ்சம் உண்மைக்கதை. ஆனால் பின்னால் அது கற்பனையாக மாறிவிட்டது.

    எழுத்துச் சிக்கலை இதைவிட சிறப்பாகச் சொல்ல முடியாது.

    ReplyDelete
  4. என்ன திடீர்னு உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்குக் குறை? உங்கள் பல்வேறு தளங்களில் பல்வேறு விதமாக எழுதும் திறன் யாருக்கு வரும்? ரிஷபன் சார் கதையா, இனிதான் படிக்கணும். இசை விழா மும்முரம்! அப்பாதுரை எழுத்து சந்தேகமில்லாமல் பாராட்டுக்குரியது. உண்மை எவ்வளவு சதவிகிதம், கற்பனை எவ்வளவு சதவிகிதம் என்று சொல்ல முடியாத அளவு எழுதுவார். நசிகேத வெண்பாவும் எழுதுவார். யுவதியும் எழுதுவார். கசம் சேயும் எழுதுவார்.

    அகிலாண்டம் பற்றிய என் முந்தய பதிவுக்கான கமெண்ட் இங்கு போட்டிருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  5. நான் படிக்கவே இல்லை. ஜாலி

    ReplyDelete
  6. // அகிலாண்டத்தை விட மோசமான அம்மாக்களைப் பார்த்தாச்சு! :))) // சரிதான். இன்னும் கூட மோசமா நடந்துக்கரவங்க இப்பவும் இருக்காங்க என் தோழிக்கு மாமியாரா.

    //அதுக்கும் பாராட்டுகளைப் பார்க்கிறச்சே மனம் கூசுகிறது. ஏனெனில் நான் எதையோ எழுதி ஒப்பேத்தினேன்// என்ன இப்படி சொல்றீங்க. கதை உண்மையிலேயே அருமையா இருந்துது. இதுல உங்களுக்கு எங்கிருந்து வந்துது இந்த ஐயம்.

    //இதெல்லாம் ஒரு எழுத்தானு தோன்றுகிறது.// நீங்க இப்படி சொல்றது மனசுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு. எவ்வளவு அருமையா எழுதறீங்க நீங்க. உங்கள் எழுத்து நடைக்காகவும், எதை எழுதினாலும் அதை ரொம்ப சுவாரசியமா எழுதரதாலேயும், உங்களுடைய ரசிப்பு தன்மையின் அழகு உங்கள் எழுத்துகளில் அப்படியே உணர முடியரதாலேயும் நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை விரும்பி படிக்கிறேன். தினமும் ஒரு குட் மார்னிங், ஒரு குட் நைட் உங்கள் பதிவுக்கு சொல்றேன். நீங்க என்னடான்னா இப்படி சொல்லிடீங்களே. தயவு பண்ணி இனிமே இந்த மாதிரி சொல்லாதீங்க. தொடர்ந்து உங்கள் ஸ்டைலில் எழுதி கலக்குங்க. :))

    ReplyDelete
  7. என்ன கீதா இது. கதை நன்றாகவே இரூந்தது.கதை கதையாக இர்ருப்பது எழுதுபவரின்ன் கற்பனையில் உண்மைச் சம்பாம்மும் கலக்கும்போத்ஹு கொஞ்சம் தடுமாறும். சுவாரஸ்யமான கதையைக் கொடுத்துவிட்டு இப்படி வருத்தப் படலாம்மா. நீங்களே உங்களுக்குச் சீத்தலைச் சாத்தனார் ஆக வேண்டாம். அப்புறம் நானெல்லாம் எங்க கொண்டு போய் வச்சுக்கிறட்து என் தலையை:)

    ReplyDelete
  8. ?? இன்னும் படிக்கலைப்பா ..வந்து படிக்கிறேன் Happy Christmas

    ReplyDelete
  9. அறுந்த காற்றாடி உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு நினைக்கிறேன்.. மத்தபடி எப்பவும் எழுதுறது தான். குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி.
    கண்ணனுக்காக மாதிரி எழுத வரவில்லையே என்று எனக்கு படிக்கிறப்பல்லாம் தோன்றும்.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, எழுத நினைச்சதை இப்போதைக்கு ஊறப் போட்டு வைக்கிறேன். மற்றபடி பாராட்டுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  11. அப்பாதுரை, உண்மைதான். மோசமான தாய்மார்மட்டுமில்லை, தந்தைமாரும் உண்டு தான். :((( பெற்ற பிள்ளை, பெண்ணிற்கே துரோகம் நினைக்கும் தந்தையையும் கேள்விப் பட்டிருக்கேன். நேரிலும் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  12. //எழுத்துச் சிக்கலை இதைவிட சிறப்பாகச் சொல்ல முடியாது.//

    நன்றி அப்பாதுரை.

    ReplyDelete
  13. அது ஒண்ணுமில்லை... அப்பாதுரை கேட்டிருக்காப்போல பெயர்க் காரணம்தான். ஆண்டாண்டு காலமா தமிழ் சினிமாக்களிலும் நாடகங்களிலும் வருவது போல, வில்ல கேரக்டர்களுக்கு சில பெயர்கள் பொருந்தும். சில பெயர்கள் பொருந்தாது! அதனால் சும்மா சொல்லி வச்சேன்! நத்திங் சீரியஸ்! :))

    ReplyDelete
  14. நன்றி ஸ்ரீராம், ரிஷபன் சார் கதை இந்த வாரக் கல்கியில் வந்திருக்கு. இசைப் பாடகி குறித்த கதைதான். இந்த சீசனுக்கு ஏற்ற கதையே! :)))) கண்ணீர் வந்துவிட்டது.

    அப்பாதுரை மாதிரியெல்லாம் எழுதச் சான்சே இல்லை. அந்த ஆசையும் இல்லை. :)))) ஆனால் சொதப்பிட்டேனோனு ஒரு சந்தேகம். :))))) அதான்!

    ReplyDelete
  15. எல்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  16. நன்றி மீனாக்ஷி, உண்மையிலே எல்லாரும் பாராட்டுகையில் மனசுக்கு ஆறுதலாகவும், சந்தோஷமாவும் இருக்கு. ஆனாலும் இன்னமும் என்னை நான் திறனாளியாக்கிக்கணும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. முயல்கிறேன். நீங்கல்லாம் பாராட்டும் அளவுக்கு என் தகுதியை நானும் வளர்த்துக்கணும் இல்லையா? :))))))

    ReplyDelete
  17. வாங்க வல்லி, நீங்க எழுதறது படிக்கிறாப்போலவே எனக்குத் தோணாது. உங்களோட அருமையான குரலில் நீங்க பேசறதைக் கேட்கறாப்போலவே இருக்கும். :)))) ஆகவே குறைப்பட்டுக்காதீங்க. என்னவோ கொஞ்சம் சரியில்லையோனு தோணித்து. அதான் அப்படியே பகிர்ந்துண்டேன். எழுதிட்டு அதைத் திரும்பக் கூடப் படிக்கவில்லை. இன்னிக்குத் தான் இனிமேத்தான் பார்க்கணும். :))))))

    ReplyDelete
  18. மெதுவாப் படிங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாளாச்சு! இந்தியா வந்தாச்சா? நியூசி தானா? ரொம்ப பிசி போல! :))))

    ReplyDelete
  19. வாங்க அப்பாதுரை, அறுந்த காற்றாடி மட்டுமில்லை, உங்களோட எல்லாக் கதைகளும், எழுத்தும், அதன் தன்மையும், அதன் உயிரோட்டமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை, இங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் எல்லாருக்குமே இதே அபிப்பிராயம் உண்டுனும் எனக்குத் தெரியும்.

    புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்க முடியுமா? எனக்கு நல்லா வர விஷயம் இந்தப் புராணங்கள் தான். ஆனால் அதிலேயும் உங்க அபிராமி அந்தாதி மாதிரியும், நசிகேத வெண்பா போலவும் எழுத வராது. நீங்க ஆன்மிகவாதி இல்லைனு சொல்லிக் கொண்டாலும் உங்களோட லாஜிகல் எல்லைக்கும் ஆன்மிகத்துக்கும் மயிரிழை கூட இல்லை. அந்த எல்லையை நீங்க தாண்ட மறுக்கிறீர்கள். பயம் இல்லை; நிச்சயமா பயப்படலை, கோபம் அல்லது இயலாமை உங்களை ஆட்டி வைக்கிறது. அதான். கடவுள் இல்லை; இல்லைனு திரும்பத் திரும்பச் சொல்றீங்க. இல்லாத ஒண்ணை ஏன் இல்லைனு சொல்லி நிரூபிக்கணுமாம்?? :))))))

    நான் எழுதிட்டிருக்கும், "கண்ணனுக்காக"
    கதைகள் மொத்தமும் என்னை விடவும் நீங்க நல்லாவே எழுதுவீங்க. இன்னும் அதிக உயிரோட்டம் இருக்கும்.

    ReplyDelete
  20. ரொம்ப தேங்க்ஸ்.

    எனக்கு ஆன்மீகம் பிடிக்கும். ஆன்மிகம் மெய். தேவையென்று நம்புகிறேன்.

    ஆத்திகம் தான் தேவையில்லை, பொய் என்று தெளிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  21. மோசமான தந்தைமாருக்கு நான் உதாரணம் வெளியே தேட வேண்டிய அவசியமே இல்லை. எங்கப்பனை மோசமான அப்பா காம்பெடிஷ்னில் பீட் பண்றது கஷ்டம்.

    ReplyDelete
  22. //ஆத்திகம் தான் தேவையில்லை, பொய் என்று தெளிந்திருக்கிறேன்.//

    உண்மை. ஒரு சில போலி ஆத்திகவாதிகளுக்காக நாம ஏன் மனசை அலட்டிக்கணும். அவங்க செயல்களோட பலாபலன் அவங்களுக்கு. :)))))

    ReplyDelete
  23. உண்மையை உள்ளது உள்ளபடியே சொன்னால் யாரு தாங்கிப்பா?

    கூடவே சேர்த்த கற்பனைகள் கதைக்கு அழகு சேர்த்தன ...

    ReplyDelete
  24. வாங்க ராஜராஜேஸ்வரி, ரசித்தமைக்கு நன்றி. :))))

    ReplyDelete