நேற்றைய வானில் சந்திரன் பிறையாகத் தெரிந்ததையும் கீழே சாய்வான கோணத்தில் ஒரு கிரஹத்தையும் பார்த்தேன். காவிரியில் கர்நாடகாவின் கருணையில் வந்த ஒரு நாள் தண்ணீரைப் படம் எடுக்கத் தயாராப் போனால், சந்திரன் முன்னே வந்து என்னை எடுனு சொல்ல, அவரை எடுத்துட்டுக் காவிரியையும் எடுத்தேன். அடுத்துக் காவிரியில் தண்ணீர்க் காட்சிகள். நான் முதல்லே பார்த்தப்போ அகண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காவிரியின் அகலத்தைப் பார்த்துப் பிரமித்திருக்கேன். இப்போ மனிதர்கள் மனம் போல் சுருங்கிய காவிரியின் முகம்.
இது கொஞ்சம் தென் மேற்குப் பகுதியில் தெரியும் காட்சி. எதிர்க்கரையில் திருச்சியின் சிந்தாமணிப் பகுதி விளக்குகளோடு தெரிகிறது.
இது மேற்குப் பக்கமாகத் தெரியும் காட்சி. எதிர்க்கரையில் கரூர் செல்லும் ரயில், சாலைப் போக்குவரத்துத் தடங்கள் இருக்கும்.
கொஞ்சம் தென் கிழக்குப்பக்கத்தின் காட்சி. அடர்த்தியாக வீடுகள் இருப்பதால் முழுக் காட்சியும் தெரியாமல் மறைக்கிறது.
இது கொஞ்சம் தென் மேற்குப் பகுதியில் தெரியும் காட்சி. எதிர்க்கரையில் திருச்சியின் சிந்தாமணிப் பகுதி விளக்குகளோடு தெரிகிறது.
இது மேற்குப் பக்கமாகத் தெரியும் காட்சி. எதிர்க்கரையில் கரூர் செல்லும் ரயில், சாலைப் போக்குவரத்துத் தடங்கள் இருக்கும்.
கொஞ்சம் தென் கிழக்குப்பக்கத்தின் காட்சி. அடர்த்தியாக வீடுகள் இருப்பதால் முழுக் காட்சியும் தெரியாமல் மறைக்கிறது.
1961 லே காவிரிலே வெள்ளம் புரண்டோடியபோது அந்த சிந்தாமணி கிட்டத்தட்ட முழுக்கிப்போய்
ReplyDeleteஅங்கு வசிப்பவர்கள் எல்லாமே நாங்க இருந்த ஆண்டார் தெரு, மலைக்கோட்டை உச்சி வீதிகளுக்கு வந்து விட்டார்கள்.
அங்கெங்க கொஞ்சம் தைரியசாலிகள் மட்டும் அங்கு வீட்டுக்கு காவலாய் இருந்தார்களாம்.
எங்க இ.ரெ.உயர்னிலைப்பள்ளி, எங்க காலேஜ் செயின்ட் ஜோசப் கல்லுரிக்குள்ளேயும் தண்ணீர்.
அது போன்ற வெள்ளம் என்ன தண்ணீரையே பார்க்கமுடியவில்லையே !!
சுப்பு ரத்தினம்.
61-ஆம் வருட வெள்ளத்தைப் பற்றி சிந்தாமணியில் இருந்த உறவினர்கள் சொல்லிக் கேள்வி. ஒவ்வொரு வீட்டிலும் மொட்டை மாடியில் நான்கைந்து தினங்கள் தங்கி இருப்பார்களாம். தைரியமில்லாதவர்கள் மட்டும் வேறே இடங்களுக்குப் போவார்களாம். மொட்டை மாடிகளில் அடுப்பிலிருந்து துடுப்பு வரை சகல வசதிகளும் செய்து கொள்வார்களாம். சொல்லி இருக்காங்க. எல்லாம் ஒரு அட்வென்சர் தானே.
ReplyDeleteமதுரையிலேயே பிறந்து வளர்ந்த நான் இதெல்லாம் பார்த்து வாயைப்பிளந்து கொண்டு கேட்டுப்பேன். அதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகி வந்து எல்லாவிதத்திலும் பார்க்காத வெள்ளம் இல்லை. :))))))
பதினெட்டாம் பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் ரயில் பாலத்திலிருந்து நீரில் குதிப்போம் என்று அங்கு படித்த என் அண்ணா சொல்வதை வாய் மூடாமல் கேட்ட நினைவு வந்தது.
ReplyDeleteவானம் பொழிந்து காவேரியில் மறுபடி நீர் வரத்துப் பெருகட்டும்!
நான் பிறந்த ஊர் என்பதால் ஸ்ரீரங்கத்தின் மேல், கொள்ளிடம், காவேரி மீது தீராத காதல்!
சில வருடங்களுக்கு முன் மூலத்தோப்பு வரை வெள்ளம் வந்திருக்கிறது. அகண்ட காவிரியை தான் சுருக்கி வீடுகள் கட்டி விட்டோமே :(
ReplyDeleteதுக்குணூண்டு படம் போட்டா எந்த பூதக்கண்ணாடி வெச்சு பாக்கிறது? :-))))))
ReplyDelete//மதுரையிலேயே பிறந்து வளர்ந்த நான் இதெல்லாம் பார்த்து வாயைப்பிளந்து கொண்டு கேட்டுப்பேன்..//
ReplyDeleteமதுரையில் மட்டும் என்னவாம்?'49- '50-வாக்கில் வைகையில் வந்த வெள்ளம்?.. அதுவும் அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது, 'குபுகுபு'வென்று நீர்ப்பெருக்கு சுழித்துக் கொண்டு ஓடி வந்து, ஜனங்கள் அடித்துப் பிடித்து
பயந்து ஓடி, சின்ன கல்பாலத்தில் (இப்போ இருக்கோ?..) ஏறி எகிறிப் பாய்ந்து..
சந்தரசேகரர்.. ஹி..ஹி..
ReplyDeleteஅட, ஒருத்தர் கூட இவர் மஹாத்மியத்தைக் கண்டு கொள்ளவே இல்லையே!
சந்திரனும் சசேகரனும் ஒண்ணு தானா?
ReplyDeleteநிலா கிரகம் படம் நல்லாவே இருக்கு - must be a powerful camera. இல்லின்னா must be a powerful camera woman.
காவிரியே... மறுபடி கருணை காட்ட மாட்டாயா?
ReplyDeleteகர்நாடகாவை நம்பிப் பயனில்லை.
கார்மழை கொண்டுவர மாட்டாயா...
விவசாயிகளுக்குத்
துன்பம் நேர்கையில்
நீரெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா....
கடைசியா ரெண்டாயிரத்து அஞ்சோ ஆறோ ஆடை மழை பெஞ்சு அப்பாவும் தண்ணி அதிகமா ஓடினது.. அதுதான் கடைசி
ReplyDeleteஎன்னே ஒற்றுமை அதே சமயத்தில் பூனாவிலும் வெள்ளப்பெருக்குதான். அதுபத்தி என் மலரும் நினைவுகளில் கூட சொல்லி இருக்கேன்
ReplyDeletehttp://echumi.blogspot.sg/2011/04/10.html
வாங்க ரஞ்சனி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த ஊரிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் அப்படித்தான் சொல்றாங்க. இப்போத் தான் தண்ணீர் நமக்குச் சொந்தமில்லைனு ஆயிப் போச்சே! :))))))
ReplyDeleteவாங்க வெங்கட், அந்த வெள்ளம் குறித்தும் கேள்விப் பட்டோம். மூலத்தோப்புப் பக்கம் இன்னும் போகவில்லை. :))))
ReplyDeleteஹிஹிஹி, வா.தி. நினைச்சேன், சொன்னீங்க நூறு வயசு! :P:P:P:P:P
ReplyDelete49- '50-வாக்கில் வைகையில் வந்த வெள்ளம்?.//
ReplyDeleteஹிஹிஹி, ஜீவி சார், அம்மா வயித்திலே கூட அப்போ நான் இல்லை. :)))) அதனாலே அது பத்தித் தெரியாது. யாரும் சொல்லியும் கேட்கலை. எனக்குத் தெரிஞ்சு 60-களில் நான் ஓசிபிஎம்மில் படிக்கிறச்சே ஒரு தரம் வைகையிலே வெள்ளம்னு ஸ்கூல் லீவு விட்டாங்க. கல்பாலமெல்லாம் முழுகிப் போயிருந்தது.
இப்போவும் அந்தப் பழைய கல்பாலமும் இருக்கு. புதுசா ஒண்ணு கட்டி இருக்காங்களே அதுவும் இருக்கு.
சந்திரசேகரரை ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னாடியும் பார்த்துட்டுத் தான் இருக்கேன். படம் எடுக்க நினைச்சு எடுக்க முடியலை. இந்தத் தரம் ஒரு வழியா எடுத்தேன். ஆனால் சின்னதாய்த் தான் வந்தது. ஜூம் பண்ணித்தான் எடுத்தேன். அவ்வளவு தொழில் நுட்பம் தெரியாது. :((((
ReplyDeleteசந்திரசேகரரை ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னாடியும் பார்த்துட்டுத் தான் இருக்கேன். படம் எடுக்க நினைச்சு எடுக்க முடியலை. இந்தத் தரம் ஒரு வழியா எடுத்தேன். ஆனால் சின்னதாய்த் தான் வந்தது. ஜூம் பண்ணித்தான் எடுத்தேன். அவ்வளவு தொழில் நுட்பம் தெரியாது. :((((
ReplyDeleteஅப்பாதுரை, ஹிஹிஹிஹி, ஓகே, ஓகே. :)))))
ReplyDeleteஸ்ரீராம், மக்கள் மனம் மாறப் பிரார்த்தனையை விடச் சிறந்த ஒன்று வேறில்லை. நம்ம ரங்க்ஸ் தினமும் காயத்ரி பண்ணும்போது பிரார்த்தனைகளில் இதையும் சேர்த்துக்கிறார். ஒரு நல்ல வழி கிடைக்காதா! பார்ப்போம்.
ReplyDeleteஎல்கே, 2005-இல் தான் மறக்க முடியாத மழைநாட்கள். எங்க பையருக்கு டிசம்பரில் கல்யாணம் வைச்சுட்டு, டிசம்பர் 11 கல்யாணம், டிசம்பர் 9-ஆம் தேதி புயல் எச்சரிக்கை. அந்த வருஷத்துக்கு அது எத்தனாவது புயல்னு நினைவில் இல்லை. எல்லாரும் கல்யாணம் உண்டானு தொலைபேசிக் கேட்டுட்டு இருந்தாங்க. யார் வந்தாலும் வராட்டியும் கல்யாணப் பொண்ணு அவங்க அம்மா, அப்பா, நாங்க எங்க பையர் மட்டும் இருந்தாலும் கல்யாணம் நடக்கும்னு சொன்னோம். நல்லவேளையாப் பத்தாம் தேதியே புயல் திசைமாறிப் பலவீனமடைந்து போனது. கல்யாணமும் நல்லா நடந்தது.
ReplyDeleteஅதோடு அந்த வருஷம் ஆஸ்த்மா தொந்திரவில் மிகவும் அவதியும் பட்டேன். பையர் கல்யாணத்தப்போ தலை தூக்க முடியாமல் இருமலும், ஜுரமும். உட்கார முடியாமல் ஒரு வழி பண்ணிடுச்சு. பேசக் கூட முடியாது. :(
2005-ஆம் வருஷம் மழை மறக்க முடியாத ஒன்று தான்.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, புனா வெள்ளப் பெருக்கு பத்தி எனக்குத் தெரியாது. 63-க்குப் பின்னர் வந்ததுன்னா என் கணவருக்குத் தெரிஞ்சிருக்கும். அதுக்கு முன்னாடின்னா அவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்க வலைப்பக்கம் வந்து அந்தப் பதிவைப் படிக்கிறேன்.
ReplyDeleteசந்திர சேகரர் படம் பலிச் னு இருக்கு. சின்னதாத் தெரிஞ்சாலும் திவ்யமா இருக்கு. 80 களில் வந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டதை எங்கள் சம்பந்தி கதை கதையாய்ச் சொல்லுவார். எங்க மாப்பிள்ளையும் அம்மாவும் மொட்டை மாடியில் இருந்தார்களாம். அவர் அப்பா மற்ற குழந்தைகளை ஆண்டார் வீதியில் தந்தங்கை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பி முழங்கால் தண்ணீரில் வந்துசேர்ந்தாராம். வெள்ளத்தோடு அத்தனை சமாசாரங்களும் வீட்டுக்குள் வந்துவிடுமாம்:( எல்லாம் கனவாய்க் கற்பனையாய்ப் போச்சு.
ReplyDeleteவாங்க வல்லி, சந்திரசேகரரைப் பெரிசாக்க மிகவும் முயன்றேன். முடியலை; எனக்குத் தெரியலை! :)))))
ReplyDeleteமற்றபடி எண்பதுகளின் வெள்ளம் குறித்தும் தெரியாது தான். அப்போத் தான் சிகந்திராபாதில் இருந்து சென்னை மாற்றல் ஆகி வந்திருந்தோம். :))))
கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து காவிரியில் புதுப்புனல் பார்க்க வேண்டுமென்று ஆசை. இப்போது காவிரியில் வெள்ளம் வருவதே அரிதாகி வருகிறது.
ReplyDeleteஎங்கள் வைகையில் வெள்ளம் வருவது வருடத்திற்கு ஒருமுறைதான்.
-சித்திரவீதிக்காரன்.
மூன்றாம் பிறையையும், காவிரியில் வெள்ளம் போவதையும் எடுத்த படங்கள் அருமை. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete