எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 28, 2014

விட்டுடுவோமா என்ன! :)

கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளைச் செய்ய வேண்டி, அண்டை மாநிலம், அண்டை நாட்டு எல்லை வரை சென்று வந்திருக்கிறேன்.  இரண்டு நாட்கள் சூறாவளிச் சுற்றுப் பயணம்.  மிகுந்த அலுப்பு, கால் வலி என்பதால்  கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன்.  பதிவுகள் schedule செய்து வைத்திருப்பதால் தானாக வெளி வரும். விட மாட்டோமுல்ல!

Wednesday, February 26, 2014

சுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை!

சுடிதார் வாங்கப் போறேன் கதையில் பாராட்டுக்கு ஏங்கும் மனித மனம்!      பாராட்டுக்கு ஏங்குவது கணவன்.   கடைத்தெருவுக்கே வராமல் இருக்கும்  மனைவியோ வாய் விட்டு எதுவும் சொல்வதில்லை     அவருக்குப் பிடித்ததா, பிடிக்கிறதா என்பதை விட மற்றவர்க்குப் பிடிக்கிறதா என்று பார்க்கிறார்.  அது தான் ஒத்த வயதுடைய சம்பந்தி அம்மாவின் ரசனையை அவர்கள் கேட்டு அறிவதிலிருந்து புரிகிறது.

திருப்தி அடையாத பெண்மனம்!   பெண்கள் உடைகளில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.  என்ன தான் நிறையப் பணம் போட்டுக் கடைகடையாய் ஏறி இறங்கி அலசி ஆராய்ந்து வாங்கினாலும் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.  அது மனதின் ஓர் ஓரத்தில் ஒளிந்தும் இருக்கும்.  அதே துணியை மற்றவர் பார்த்துப் பாராட்டினால் அந்தத் தேர்வு அவங்க சொந்தத் தேர்வாக இருந்தால் பெருமிதம் கட்டாயம் உண்டாகும்.  கணவன் வாங்கியதை மற்றவர் பாராட்டுகையில் அந்த உண்மையைச் சொல்ல விடாமல் சுய கெளரவம் தடுக்கிறது!   திரு வைகோ அவர்கள் மனைவியின் சுயநலம், கணவன் தனக்கே உரியவன்,   மற்றவர் பாராட்டுக் கூடாது என்னும் எண்ணம் இருப்பதாகச் சொல்கிறார்.  இருக்கலாம்.  தன் கணவனின் தேர்வைத் தான் பாராட்டாத போது இந்த இளம்பெண் பாராட்டுகிறாளே என்ற குற்ற உணர்வாகவும் இருக்கலாம்.  வெளிப்படையாக உணர்வுகளைப் பகிராதவரால் அதை வெளிக்காட்ட முடியவில்லை.

 கடைகளுக்குச் சென்று பேரம் பேசிப் பொருட்களை வாங்கும் பெண்கள் மத்தியில் இவர் அதிசயமானவரே!    அந்தக் கணவன் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல முடியுமா என்றால் கணவன்  கோணத்திலிருந்து பாராட்டு எதுவும் மனைவியிடமிருந்து வராததால் மன உளைச்சலில் இருக்கிறார்.!  ஒரு தரமாவது மனைவி தான் செய்வதைப் பாராட்ட மாட்டாளா? என ஏக்கம்.  கடைசியில் எதிர்பாரா இடத்திலிருந்து வருகிறது அந்தப் பாராட்டு.

வரப் போகும் மருமகளின் பிறந்த நாளுக்கு எனத் துணி எடுக்கும் அந்த மாமனார் அதற்கும் அலைகிறார்.  உண்மையில் அவருக்குக் குழப்பமே.  இப்படி இந்த உடையைப் போடுவாங்களா? கை இப்படி இருக்கலாமா? எல்லாம் ஒரே நிறத்தில் அமைய வேண்டாமா என்றெல்லாம் குழம்பிக் குழம்பிக் கடைக்காரப் பெண்ணின் சொல்லை நம்பி வாங்கிச் செல்கிறார்.   ஆனால் அதைப் பார்த்ததுமே புன்னகைக்கும் மனைவியின் முகம் அது நல்ல தேர்வு என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது.   மனைவியை அணிந்து பார்க்கச் சொல்லியும்  மனைவி மறுக்கிறார். இந்த வயதிலும் மனைவியிடம் இவர் வைத்திருக்கும் பாசமும், அன்பும், காதலும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வெளி வருகிறது.  ஆனால் மனைவியோ அதைப் புரிந்தும் புரியாதவளாகத் தன் வேலையே கண்ணாக இருக்கிறாள். மனைவி அலக்ஷியம் செய்வதாக எண்ணாமல் கணவனின் அன்பு தனக்கு என்றென்றும் மாறாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மனம் என்று புரிந்து கொண்டேன். 

மருமகளிடம் போய்ச் சேர்ந்த அந்த உடை அவளுக்கும் மிகவும் பிடித்துவிட்டதோடு இல்லாமல் தன் வருங்காலக் கணவனுக்கு அதைப் போட்டு ஃபோட்டோ பிடித்து அனுப்பி அவன் மகிழ்ந்ததையும் கண்டு தானும் மகிழ்கிறாள்.  அதே மகிழ்ச்சியோடு தன் வருங்கால மாமனார் வீட்டுக்கும் வந்து உடை மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறாள்.  எதிர்பாராமல் அவரின் மகனும் தொலைபேசியில் தன் வருங்கால மனைவிக்குத் தந்தை வாங்கித் தந்திருக்கும்  உடை மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைச் சொல்லிப் பாராட்டவே அவருக்குத் திகைப்பு!  பின்னர்  தன் வருங்கால மருமகள் தன் மகனுக்குப் படம் எடுத்து அனுப்பி இருப்பதைத் தெரிந்து கொண்டு மகன், மருமகள் இருவரின் பாராட்டும் ஒருசேரக் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் திளைக்கிறார்.  இப்போது தான் அவருக்குத் தன் தேர்வில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.  உள்ளரீதியாகத் தன் தேர்வெல்லாம் சரியில்லையோ என மனம் வருந்தியவருக்கு இளைஞர்களான மகன், வருங்கால மருமகள் மூலம் நம்பிக்கை என்னும் கீற்று ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்தக் கதை சாமானிய மனிதமனத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் என்றாலும் கடைசியில் பரமாசாரியாரின் அருள் வாக்கோடு முடிக்க எண்ணுகிறேன்.

"யாரையும் அவரவர்  நற்செயல்களுக்காகவோ, நற்குணங்களுக்காகவோ அதிகம் பாராட்டாதீர்கள்.  அவர்கள் நற்குணங்களையும், நற்செயல்களையும் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புவார்கள் தான்.  ஆனாலும் பாராட்டு என்பது ஒரு போதை!ஈஸ்வரனும், குருவும் மட்டுமே நேரிடையாகப் பாராட்டத் தக்கவர்கள். நண்பர்கள், உறவினர்களை  முகத்துக்கு நேரே பாராட்டக் கூடாது.  மற்றவரிடம் அவர்களைக் குறித்து நல்லவிதமாகச் சொல்லலாம்.  நம் வீட்டில் வேலை செய்யும் ஊழியனைக் கூட அவன் நல்லவிதமாக வேலையை முடித்துத் தந்ததும் அதற்காகப் பாராட்டலாம். அதே சமயம் உங்கள் சொந்த மகனைப் பாராட்டாதீர்கள்!"

இது பரமாசாரியாரின் அருள் வாக்கின் உட்கருத்து மட்டுமே.  ஒருவேளை இந்தக் கதையில் வரும் அந்த மனைவி இதைப் படித்தவராய் இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை. :))))


திரு வைகோ அவர்கள் அறிவித்த விமரிசனப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, எனக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் வழக்கமே இல்லை என்று சொன்ன போதிலும் கட்டாயமாய்க் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் கொடுத்தார்.  அது போலவே என்னிடமிருந்து விமரிசனம் வர தாமதம் ஆனாலும் நினைவு வைத்துக் கொண்டு கேட்டு வாங்குகிறார். அவரின் மூன்றாவது கதை சுடிதார் வாங்கப் போறேன் கதை விமரிசனத்தில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. உண்மையில் அதிசயமே!  நான் எதிர்பார்க்கவே இல்லை.  இதை ஒண்ணும் பிரமாதமாய் விளம்பரம் செய்ய வேண்டாம்னு நினைச்சேன்.  ஆனால் பாருங்க, அடுத்த விமரிசனப் போட்டியிலே முதல் பரிசே கிடைச்சிருக்கு.  அந்த விமரிசனம் நாளைக்கு.  குறைந்த பக்ஷமாக வைகோ சாருக்கு நன்றியாவது தெரிவிக்க வேண்டாமா?  அதுக்குத் தான் இந்தப் பதிவு.  தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

Monday, February 24, 2014

விட்டுடுவேனா உங்களை எல்லாம்!

கெஜ்ரிவால் கூப்பிட்டாக,
ராகுல் காந்தி கூப்பிட்டாக
சோனியா காந்தி கூப்பிட்டாக
மன்மோகன் ஜி கூப்பிட்டாக
அத்வானி ஜி கூப்பிட்டாக
மூணாவது அணி பத்திப்பேசக் கூப்பிட்டிருக்காக

இப்படித் தலைவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்க வேண்டி நம்ம ஆலோசனையைக் கேட்க நமக்கு அழைப்பு விடுத்திருப்பதால் தற்சமயம் நம் இருப்பிடம் சில நாட்களுக்குத் தலைநகர் டெல்லி அருகிலுள்ள  குட்காவ் எனத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். தொண்டர்கள், குண்டர்கள் முக்கிய ஆலோசனைகளுக்கு இங்கே தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கட்டளை (இகி, இகி இகி) பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.


மு.கு: இங்கே சுரதா மூலமே தட்டச்சுவதால் அதிலே கிரந்த எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் நம்ம பழைமை மாதிரி தமிழிலேயே சிரிச்சிருக்கேன். அடைப்புக் குறிக்குள்ளே இகி இகி நு போட்டிருப்பது  சிரிச்சிருக்கேனாக்கும்.

சுரதா மூலம் உங்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கும் சோதனைப் பதிவு.  இகி இகி இகி இகி

Sunday, February 23, 2014

ஶ்ரீராமனின் பாதையில் சென்று வந்தாச்சு! முடிவுப் பகுதி!

ஆனால் இத்தனை வளங்கள் இருந்தும் சிறு பிள்ளைகள், பள்ளியில் படிக்கும் வயதில் உள்ளவர்கள் அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளைத் தொந்திரவு செய்து பிச்சை கேட்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.  இன்னும் சொல்லப் போனால் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடப் பிச்சை கேட்கின்றனர்.  அதோடு எல்லா இடங்களிலும் யாகங்களும், யக்ஞங்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.  அதற்கான பண வசூல் வேறே குறைந்த பக்ஷம் ஐந்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்கிறது.  பேரம் பேசினால் ஐநூறுக்கு வரலாம்.  ஆனால் அவர்கள் பேசும் முறை சரியில்லை.  இதைச் செய்யவில்லை என்றால் உன் குடும்பம் அப்படிக் கஷ்டப்படும்; இப்படிக் கஷ்டப்படும் என்று சாமானிய மக்களைப் பயமுறுத்துவதோடு நாம் வேண்டாம் என விலகிப்போனால், "நீ என்ன தீர்த்த யாத்திரை செய்யறே?  தீர்த்த யாத்திரையின் பலனே உனக்குக் கிடைக்கப் போவதில்லை!  பணத்தை வைச்சு என்ன செய்யப் போறே? போகும்போது கொண்டு போகப் போகிறாயா?" என்றெல்லாம் பேசுகின்றனர்.  அதே பணத்துக்குத் தானே அவர்களும் நம்மைக் கேட்கின்றனர் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.  அதோடு நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு இடத்திலும் தானம் செய்யுமளவுக்குப் பணம் வேண்டுமெனில் குறைந்தது நாம் இரண்டு லக்ஷமாவது கொண்டு போகவேண்டும். எங்கே! :))))

எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு நைமிசாரண்யத்தில் இருந்து லக்னோ திரும்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது.  நாங்க தங்கி இருந்த லாட்ஜின் சாப்பாட்டுக் கொடுமையை நினைத்துக் கொண்டு நாங்க வரும்போதே வெளியில் இருந்து டோக்ளா, கசோடி என வாங்கி வந்துவிட்டோம்.  பின்னர் அந்த லாட்ஜுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குச் சென்று மறுநாள் காலை ஆகாரம் கிடைக்குமா என விசாரித்தோம்.  ஆலு பரோட்டா கிடைக்கும் எனச் சொல்லவே மறுநாள் காலை  பத்து மணிக்கு வருவதாய்ச் சொல்லிவிட்டு வந்தோம்.  மறுநாள் விமான நிலையம் செல்ல வேண்டி வண்டிக்கு ஹோட்டல்காரர்களிடமே சொல்லிவிட்டு பத்து மணி சுமாருக்கு பக்கத்து ஹோட்டலுக்குச் சென்று ஆலு பரோட்டாவும், லஸ்ஸியும் சாப்பிட்டோம்.  பின்னர் ஹோட்டலில் இருந்து அவங்க ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் பயணித்து லக்னோ விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின் போது நான் சோதனை முடிந்து வெளியே வந்துவிட்டேன்.  ஆனால் என் கைப்பை சோதனையிலிருந்து வெளியே வரவில்லை.  என்னடா இது சோதனைனு நினைச்சால் அங்கே இருந்த ஒரு மலையாளக் காவல் அதிகாரிப் பெண்மணி என்னிடம் அரைகுறைத் தமிழில் கைப்பையில் நிறையச் சில்லறை இருப்பதால் எல்லாத்தையும் எடுக்கும்படி சொன்னார்.  சரிதான் இங்கேயும் சில்லறைப் பிரச்னையானு நினைச்சு எல்லாத்தையும் கையில் வைத்திருந்த துண்டில் கொட்டிக் கொண்டேன்.  பின்னர் அவங்க முன்னாடியே சாவி, விமான டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றைக் காட்ட அவங்க மறுபடியும் கைப்பையை ஸ்கான் செய்து என்னிடம் கொடுத்தார்கள்.

இதுக்குள்ளாக அந்த மலையாள அதிகாரியும் நானும் சிநேகிதமாகிவிட அவங்க என்னை எங்கே போயிட்டு வரீங்க னு விசாரிக்க நானும் சொன்னேன். அயோத்தியா, இங்கே ட்யூட்டி இருக்கிறச்சேயே நானும் போயிட்டு வந்துடறேன்னு சொல்லி அவங்க எல்லா விபரமும் கேட்டுக் கொண்டு எனக்குப் பிரியாவடை சே விடை கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  மேலே விமானம் ஏறும் நடை மேடைக்கு வந்ததும் இருவரும் பணத்தைப் பத்திக் கவலைப்படாமல் ஆளுக்கு 90 ரூ கொடுத்து இரண்டு காஃபி வாங்கிக் குடித்து எங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டோம்.  லக்னோவில் இருந்து டெல்லிக்கு விரைவில் வந்த விமானத்திலிருந்து இறங்கி முன்னே சென்றது போல் மற்றொரு பகுதிக்குச் சென்று சென்னை செல்லும் விமானத்திற்குச் சென்றோம்.  இங்கே பாதுகாப்புச் சோதனையில் அவ்வளவு கெடுபிடி இல்லை. விரைவில் முடித்துக் கொண்டு பின்னர் எந்த வாயில் வழி எனக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து விமானத்திற்குச் சென்றோம்.  விமானம் மாலை ஏழரைக்குச் சென்னையில் தரை இறங்கியது. அங்கிருந்து ஒரு கால் டாக்சி வைத்துக் கொண்டு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம்.  எதிரே உள்ள சங்கீதா ஓட்டல் வாசலில் டிரைவர் இறக்கிவிட்டு விட்டுப் பெட்டிகளையும் உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்.

எங்கள் வண்டி இரவு பத்தேமுக்காலுக்குத் தான் என்பதால் நிம்மதியாக உட்கார்ந்து சங்கீதாவில் இரண்டு தோசையும், சூடான காஃபியும் சாப்பிட்டுவிட்டு நடைமேடையில் காத்திருந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து ஶ்ரீரங்கம் காலை வரப்போவதை எதிர்பார்த்துப் படுத்தோம்.  கடைசியிலே அந்த சங்கீதாவிலே தோசை சாப்பிட்டது தான் எல்லாத்திலேயும் க்ளாசிக்! 

Friday, February 21, 2014

எல்லாருக்கும் கொஞ்ச நாட்களுக்கு நிம்மதி!

ஶ்ரீரங்கத்திலே இல்லை. வழக்கம் போல் சொல்லாமல் காணாமல் போகணும்னு தான் நினைச்சேன்.  ஆனால் எல்லாரும் கவலைப்படறதாலே சொல்லிடறேன். நாங்க இப்போ டெல்லிக்குப் போயிட்டு இருக்கோம்.  என் மாமியாரைப் பார்க்கறதுக்காகப் போகிறோம்.  மார்ச் ஆறாம் தேதி தான் திரும்பறோம். இங்கே கணினியில் முடிஞ்சவரைக்கும் பின்னூட்டங்களைப் பார்த்து வெளியிடறேன்.  பதில் கொடுக்கிறதுக்கு முயல்கிறேன்.  எல்லாரும் அதுவரைக்கும் என் தொந்திரவு இல்லாமல்  அப்பாடானு ஜாலியா இருக்கலாம். ஷெட்யூல் பண்ணி வைச்சிருக்கும் பதிவுகள் வெளிவரும்.  ஆகவே ஒழுங்காப்பின்னூட்டம் போட்டுடுங்க.  

Thursday, February 20, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 5முடிவுரையுடன்


இப்போ அப்படியா வருது? கட்டிப்புடி, கட்டிப்புடிடானு எல்லாம் பாடல்கள்.



இதிலே என்ன அழகோ, நளினமோ இருக்கு? அப்புறமா ஒரு பாட்டு, அதிலே பெண்ணை

பாம், பாம் பெண்ணே னு கூப்பிடறாங்க.. படத்தோட பெயர் பிரியாணியாம். அதுவே சகிக்கலை.  நல்லவேளையா பாட்டைக் கேட்கலை இன்னமும், பிழைச்சேன். இன்னொரு பாட்டைப் பாருங்க, படம் பெயர்  எதிர்நீச்சலாம், ஆனால் பாட்டு! தமிழா அது!

http://www.youtube.com/watch?v=Afn9RCK-KCU

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

இப்படி எல்லாம் ஒரு பாட்டு, அதையும் கேட்டு ரசிக்கிறாங்க அப்பாவித் தனமான இன்றைய இளைஞர்கள்.  அதே நம்ம ஜோடிங்க பாருங்க

http://www.youtube.com/watch?v=UamHWAa6xGk

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னைச் சொந்தமாய்த் தீண்டுதே

னு பாடிட்டுப் படகிலே போறாங்க. அப்போத் தான் வில்லன் மறுபடி எங்கிருந்தோ வந்துடறான்.  தமிழ் சினிமாவாச்சே!  வில்லன் இங்கே எப்படினு எல்லாம் கேட்கக் கூடாது. அவன் வந்து ஹீரோ, ஹீரோயின் போகும் படகிலே உதவி கேட்கிறாப்போல் கேட்டு மெல்லப் படகில் ஏறிடறான்.  அவங்க

http://www.youtube.com/watch?v=oQVqfLIOis0

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

அப்படினு ஆனந்தமாப் பாடிட்டு இருந்தாங்க.  பாவம், இந்த வில்லன் வந்து பிரிச்சுட்டான். ஹீரோவுக்கு என்ன ஆகும்னு தெரியாமல் ஹீரோயின் அழுகிறாள்.

காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி
கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி 

எனப் பாடிக் கொண்டு செல்கிறாள். அவளைத் தேடி வந்த தோழி தாங்கிக் கொண்டு அழைத்துச் செல்கிறாள்.  அவள் அம்மாவிடம் உண்மை நிலையைச் சொல்லிக் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது தான் என்றும் சொல்கிறாள்.  அங்கே நம் நாயகனோ இல்லையே எனக் கதாநாயகி கலங்க, .  ஆனால் நம் கதாநாயகன் ஹீரோ ஆச்சே. அதோடு அவனுக்கு தண்ணீரின் உள்ளே போய் மூச்சை அடக்கிக் கொண்டு பின்னர் மேலே வரத் தெரியும் ஆகையால் வில்லன் செல்லும் வரை காத்திருந்து விட்டுப் பின்னர் மெல்ல மெல்ல மேலேறுகிறான்.

http://www.youtube.com/watch?v=0ZHl4peCi7U

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

னு பாடிட்டு வரார்.  வரவர் நேரே தன் காதலியைத் தேடிக் கொண்டே அவள் வீட்டுக்கே வந்துவிடுகிறார்.  கிட்டத்தட்ட மயக்கத்தில் இருக்கும் தன் காதலியைப் பார்த்து,

http://www.youtube.com/watch?v=3qF_urHj9zM

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

என அன்போடு அழைத்து அவளை ஆசுவாசப் படுத்த அவளும் உற்சாகம் அடைகிறாள்.  அதோடு அம்மா வேறே சம்மதம் சொல்லியாச்சே.  உடனே அவளும்

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே

 அப்போப் பார்த்து அவள் அப்பா வருகிறார்.  இது என்ன கண்டவரோடு நம்ம பொண்ணு பேசிட்டு இருக்காளேனு பார்க்க அவங்க அம்மா எல்லாத்தையும் எடுத்துச் சொல்றாங்க.  அவரும் கதாநாயகனிடம் பேசிப் பார்த்துட்டுக் கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணலாம்னு சொல்லிடறார்.



கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலாமா 

என இருவரும் ஆரம்பிக்க கல்யாணம் வரைக்கும் பொறுங்கனு கதாநாயகியின் அப்பா தடுத்து நிறுத்துகிறார்.

http://www.youtube.com/watch?v=YPkKcvAyE_0

நாளாம், நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் 

னு கடைசியில் அந்த நாளும் வந்துடுது.

அவங்க அப்பா

http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM

பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி

னு பாட்டுப் பாடிக் கொண்டே பெண்ணுக்குச் சீரெல்லாம் கொடுத்துக் கல்யாணம் செய்து கொடுக்கிறார்.


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்கக்
கல்யாணப் பந்தல் போட்டாராம்

னு எல்லாரும் பாட அவங்க கல்யாணமும் நடந்து முடிந்தது.  தோழிகள் எல்லாம்

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ 

அப்படினு பாடினால் கல்யாண மாப்பிள்ளைத் தோழர்கள்

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே,
தங்கச்சி கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு பெண்ணே

அப்படினு பெண்ணுக்கு புத்திமதிகள் சொல்லி வாழ்த்தறாங்க.

இப்படித் தான் பாருங்க சமய, சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தறாப்போல் பாடல்கள் அந்தக் காலங்களில் எழுதப்பட்டன.  கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இப்போ வரும் பாடல்களைப் போல் எல்லாம் எழுதலை.  படத்திலேயும் அழுத்தமான கதை அம்சம் இருக்கும், அதுக்கேற்றாற்போன்ற பாடல்களும் இருக்கும்.  இசையும் இனிமையாக இருக்கும்.  பாடல் வரிகளும் அனைவரும் கேட்டு ஆனந்திக்கும்படி சுத்தமாய்ப் புரியும்படி பாடப்பட்டிருக்கும்.

நடுவர் அவர்களே,

திரை இசைக் காதல் பாடல்களில் சிறந்தவை அந்தக் காலப் பாடல்களே என்ற நல்ல தீர்ப்பை வழங்கிப் பொற்கிழியை எங்கள் அணிக்கே தந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இல்லைனாலும் நாளைக்கு நம்மளே அறிவிச்சுக்கலாம்னு சுபா சொல்லிட்டாங்க. :)))


எதிரணிக்கு அளித்த பதில்


பரவாயில்லை பிரசாத்,

நேரமில்லைனாலும் உங்க அணியிலே மத்தவங்களை எழுதச் சொல்லுங்க. ஒண்ணுமே எழுதாம வெற்றி எப்படிக் கிடைக்குமாம்? :)

அந்தக் காலத்துக்காதலர்களிடையே அந்நியோன்னியம் தான் இருந்தது.  அன்னியம் இல்லை.  அதனால் தான் எல்லாத் தடங்கல்களையும் மீறி அவங்க ஜெயிச்சாங்க.  இந்தக் காலத்திலே பாருங்க நீங்களே ஒத்துண்டாப்போல் சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை, சச்சரவு, பேசறதில்லை.  இதிலே அந்நியம் கூட இல்லை. அலட்சியம் தான் தெரியுது. :))))

மரத்தை எல்லாம் சுத்த வேண்டாம்.  கொஞ்சம் கூட நம்பமுடியாதபடிக்கு வெளிநாட்டுக்கெல்லாம் போய் ஏன் பாடணுமாம்? :))) ஹிஹிஹி, காதலியைக் காதலன் பார்த்ததுமே ஐரோப்பா, யுஎஸ், இங்கிலாந்துனு இல்லைபோறாங்க. அப்புறமா ஆங்கில முறைப்படியான நடனம்.  அப்படித் தான் ஆடிட்டு இருக்கோமா? இல்லையே?  கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டாமா?  தமிங்கிலீஷ் வார்த்தைகள், அதிலே பாடல்கள்

இப்போவும் தமிழ் படிக்கிற பிள்ளைகள் இருக்காங்க.  இல்லாட்டியும் நாம் தமிழிலேயே புரியும்படி பேசி எழுதினாத் தானே பிள்ளைகளுக்குத் தமிழ் நல்லாப் புரிய ஆரம்பிக்கும்? தமிங்கிலீஷில் பாடிப் பேசினா எப்படியாம்? தமிழ் வளராட்டியும் வேண்டாம், அடியோடு அழிச்சுடுவாங்க போல இருக்கே! கொடுமை! எ.கொ.இ.ச.????

இரவு, பகல் எந்நேரமும் கேட்கும்படியான இனிமையான பாடல்கள் அந்தக் காலத்துப் பாடல்களே.  இந்தக்காலத்துப் பாடல் ஒண்ணைப் போட்டுட்டு பக்கத்திலே உட்கார்ந்திருப்பவரிடம் ஏதேனும் பேசுங்க பார்க்கலாம்.  நீங்க என்ன பேசறீங்கனே அவங்களுக்குப் புரியாது. ம்? ம்? ம்? னு கேட்டுட்டு இருப்பாங்க.

இந்தக் காலத்துப் பாடகர்கள் பாடுவது மட்டுமில்லாமல் கவிஞர்களும் சூழ்நிலைக்கு ஏத்தாப்போலவா எழுதறாங்க? பாடறாங்க? மெட்டுக்கு இல்லை எழுதிப் பாடறாங்க? :))))))) 

ஆகவே என்றென்றும் மனதில் நிலைத்து நிற்பவை அந்தக்காலப் பாடல்களே, அவை மட்டுமே.

Wednesday, February 19, 2014

தாத்தாவின் 160 ஆவது பிறந்த நாள்!


இன்று தமிழ்த்தாத்தாவின் 160 ஆவது பிறந்த நாள்



அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணம் ஆன பிறகு பந்தல் பிரிக்கும்
வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவை யடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரை யொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்ற குறை கூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. "

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும். மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது. "
"காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,  வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச் செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக் காலத்துப் பக்ஷியங்கள். "


தன் காலத்தில் நடந்த திருமணத்தைப் பற்றி தாத்தா எழுதியவை மேலே இடம் பெற்றிருக்கின்றன.

Monday, February 17, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 4

காதலன் நினைவு மிகவும் அதிகம் ஆகிறது.  எப்படியானும் அவனுடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.  ஆகவே அவனைப் பார்த்துப் பேசி இதுக்கு ஒரு ஏற்பாடு செய்ய நினைக்கிறாள்.  ஆனால் அவள் காதலனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றும் அவன் ஊரில் இல்லை; எங்கேயோ போய்விட்டான் எனத் தெரிகிறது.  ஆஹா, நமக்குத் தெரியாமலா என எண்ணிக் கொண்டாள்.  யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் பூக்களைப்பார்க்கிறாள்.  பூக்கள் வண்ணமயமாகச் சிரிப்பது அவள் உள்ளத்தில் சோகத்தை அதிகப்படுத்துகிறது.

http://www.youtube.com/watch?v=oCmKaOSY1Oc

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
(சோலை..)

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா

என்றெல்லாம் கவலைப்படுகிறாள். அங்கே அவனும் அவள் நினைவில் சோகம் பொங்க

http://www.youtube.com/watch?v=LuvHFE-oivU


அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்குத் தாளமடினு

சோக கீதம் இசைக்கிறான். இதற்கு நடுவிலே இவங்க இரண்டு பேரையும் பிரிக்க நினைச்சவங்க இரண்டு பேர் கிட்டேயும் சண்டையை மூட்டி விடறாங்க. இரண்டு பேருக்கும் சந்தேகம் வருது.  தன் மாமனுடன் சாதாரணமாப் பேசிட்டு இருந்தவளைப் பார்த்து அவனுக்குக் கோபம் பொங்குகிறது.  அதே போல் அவளைக் கண்டு அவனுக்குக் கோபம் பொங்க,  இரண்டு பேரும் தாங்கள் ஒரு காலத்தில் ரசித்த அதே நிலாவைக் கண்டு இன்று கோபத்துடன் பாடுகின்றனர்.

http://www.youtube.com/watch?v=VHntnPyW6YE

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையை

என ஆரம்பித்துப் பாடுகின்றனர்.  என்ன இருந்தாலும் கோபம் வந்தால் விட்டுட்டு ஓடிப் போக இந்தக் காலத்துக் காதல் நாயகியா நம் நாயகி? சமாதானம் ஆயிடறா.  இரண்டு பேரும் ஊட்டிக்குச் சுற்றுலா செல்கின்றனர்.  அங்கே இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கவர,
ஆஆ.. ஆஆஆ ஓஹோஹோ.. ஆஹா ஹா. ஆஆஆஆஆஆ

இந்தப் பாடல் என்னமோ ஒரு வாரமாத் தேடியும் யூ ட்யூபில் கிடைக்கலை! :(

http://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ...​

என்ன அழகான பொருள் பொதிந்த பாடல்.  பாட்டைக் கேட்கும்போதே தலை விரித்தாடும் தென்னையும் இலைகள் நிறைந்த மரங்களும் மரங்கள் காணக்கிடைக்கும் மலைகளும் மலையைத் தழுவிக் கொண்டோடும் நீர் விழ்ச்சிகளும், அப்போத் தெரிந்தும் தெரியாமலும் வரும் சூரியனும், அதன் மஞ்சள் நிற ஒளியும் கண்ணில், மனதில் காட்சியாக விரியுமே!  இப்படி இன்றைய நாட்களில் பாடப்படும் எந்தப் பாட்டுக்காவது இத்தகைய சக்தி இருக்கிறதா?  ம்ஹூம், இல்லவே இல்லை.


எனப் பாடி ஆடுகிறார்கள்.  இதிலே பாடல் வரிகளைப் பாருங்கள் எத்தனை அழகு கொஞ்சும்படியா இயற்கையை வர்ணிச்சு எழுதப் பட்டிருக்கு

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 3

காணாமல் போன நடுவர் அவர்களே,

நடுவரைத் தேடிக் கொண்டிருக்கும் இரு அணித் தலைவ, தலைவியரே,

இது நியாயமா, தர்மமா?  கடைசி பெஞ்சில் இருந்தவளை வேலை மெனக்கெட்டு அழைத்துப் பட்டிமன்றத்தில் பங்கெடுக்கச் சொல்லிட்டு  இப்போ எல்லாரும் காணாமல் போனதுக்கு என்ன காரணம்??  நான் பாட்டுக்கு எட்டி எட்டிப் பார்த்து அவ்வப்போது சிரிச்சுக்கிட்டிருந்தேன்.  யார் கண்களிலும் படக் கூட இல்லை.  இப்போப் பாருங்க, தன்னந்தனியாக் கூவிட்டு இருக்கேன்.  நாளைக்குப் போட்டியில் வெற்றி, தோல்வியை அறிவிக்கப் போவது யார்? பொற்கிழியைப் பெறப்போவது  யார்?



என் கேள்விக்கு என்ன பதில்?
என் கேள்விக்கு என்ன பதில்?


தோழியும் தூது போகிறாள்.  தலைவியின் மடலைக் கொடுக்கிறாள். உடனே காதலன் பதில் மடல் எழுதுகிறான்.  அதுவும் எங்கே தன் கண்களில்!

http://www.youtube.com/watch?v=Zy8RM-nayTg

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
என் கண்களில் எழுதி வந்தேன்

இந்தப் பாடலில் காதலியை மிகவும் அருமையாக மான்விழியே என அழைக்கிறான்.  அதோடு இல்லாமல், கம்பராமாயணத்தில் ஶ்ரீராமனும், சீதையும் கண்களால் பேசிக் கொண்டதைக்குறிப்பிடுவது போல் இங்கேயும் தன் கண்களிலேயே அந்தக் கடிதத்தை எழுதி வந்ததாகவும் கூறுகிறான்.

அப்படினு பாடிட்டுக் கடிதம் எழுதித் தோழியிடம் கொடுத்துவிட்டுத் தலைவியைத் தொலைபேசியில் பேசச் சொல்லுகிறான்.  அவளும் வீட்டில் யாரும் இல்லாத சமயமாய்ப் பார்த்துத் தொலைபேசுகிறாள்.  இங்கே தங்கள் படிப்பறிவையும் காட்டிக்கொள்கின்றனர் இந்தப் பாடல் மூலமாக.

http://www.youtube.com/watch?v=-IPts7W8WsQ

ஹலோ ஹலோ சுகமா
ஆமா நீங்க நலமா?

என்று இருவரும் தொலைபேசியிலேயே நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.  பின்னர் தோழியுடன் தலைவி செல்லும் ஒரு நிகழ்ச்சிக்குக் கதாநாயகனும் வருகிறான்.  ஆனால் மாறுவேடத்தில்.  அங்கே தான் வில்லன் கோஷ்டி ஆட்கள் இருப்பாங்களே!  ஆனால் தலைவிக்குத் தன் காதலன் வந்திருப்பது தெரிஞ்சு போச்சு.  தான் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பால் காதலனுக்கு உணர்த்துகிறாள் கீழ்க்கண்ட பாடல் மூலமாக.

http://www.youtube.com/watch?v=JnY7aCBaF0g

"மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?
அழகர் மலை அழகா இந்தச் சிலை அழகா?

என்று பாட ஆரம்பிக்கிறாள்.  யாரானும் தன்னைப் பார்த்துடப் போறாங்கனு தலைவன் ஓட்டம் பிடிக்கிறான். இவளோ விடாமல் அவன் எங்கே சென்றாலும் தான் அவனுடன் தான் இருப்பேன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ போபோபோ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா

பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் - நீ
பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

என்று தொடர்ந்து செல்கிறாள். அப்போது இனிமையான காற்று வீச, அவள் மனம் அதில் லயிக்கிறது.  மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கையை ரசிக்கும் அவள் மனதில் அப்போது காதல் நினைவுகளும் தென்றலைப் போல் வீசுகின்றன.

http://www.youtube.com/watch?v=8SHUS6Mm5Mk

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு.


தென்றல் காற்று தழுவிச் செல்வதை எப்படி அனுபவிக்கிறாள் பாருங்கள்.  இன்றைய பாடல்களில் இவற்றைப் பார்க்க முடியுமா? பாடல்களே ஒரு புயல் வீசுவதைப் போன்ற சப்தங்கள், இரைச்சல்கள், கூச்சல்கள், புரியாத மொழி!

அப்படியே வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.  ஆனாலும் காதலன் நினைவு வாட்டுகிறது  ஜன்னலைப் பிடித்துக் கொண்டு வெளியே பார்க்கிறாள்.  அங்கே ஒரு தென்னை மரம்.  அதில் இரு  கிளிகள் ஒன்றையொன்று கொஞ்சுகின்றன.  தோட்டத்தில் மலர்கள் மலர ஆரம்பித்திருக்கின்றன.  உடனேயே தோட்டத்துப் பூக்களைப் பார்த்து,



என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே


மறுபடி இயற்கையின் அழகில் மனதைப் பறி கொடுப்பவளுக்குக் காதலும் தோன்றுவது அந்த இயற்கையால் தானே!


பி.கு.  நாளைக்கு முடிச்சாலும் முடிச்சுடுவேன்.  அப்புறமா எல்லாருக்கும் ஜாலிலோ ஜிம்கானா தான்! :)))))

Sunday, February 16, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 2

எங்கள் அணித் தலைவி சுபா கேட்டுக் கொண்டதற்கிணங்க  இன்னும் சில பழைய பாடல்கள்.  ஆஹா!  அவை காதலை மட்டுமா சொல்கின்றன! அப்படியே உள்ளத்து உணர்வுகளை வடித்து எடுத்துக் காட்டுகின்றனவே! இப்படி எல்லாம் பாடல்கள் எழுத இப்போது யாரும் இல்லை.  மிஞ்சி மிஞ்சிப் போனால், "கொலவெறிடா"னு பாடறாங்க.  கேட்டால் காதல் பாட்டாம். இல்லைனா, "வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" அப்படினு சம்பந்தமே இல்லாமல் பாடச் சொல்றாங்க.  இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?? என்ன அர்த்தம்னு கேட்கிறேன்.  நம்ம காதலர்கள் பாருங்க இயல் தமிழை மட்டுமில்லாமல் இசைத் தமிழையும் வளர்க்கிறாங்க.  இதுவன்றோ பாடல்கள்!  இங்கே பாருங்க, எப்படி எல்லாம் சம்பவங்கள் நடக்கின்றன நம்ம கதாநாயகி வாழ்க்கையிலே.


காதல் மயக்கத்திலே தன்னந்தனியாகப் பாடிட்டு இருந்தாள் கதாநாயகி.

http://www.youtube.com/watch?v=KYrJMTS1eqc

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கிவிட்டதா
இதயம் சொல்லி விட்டதா சொல்மனமே

அங்கே கதாநாயகனோ

http://www.youtube.com/watch?v=aHr31vJV5qk

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

உடனே தன் காதலியைக் காணும் ஆவல் பொங்க அவளுக்குத் தகவல் அனுப்பிவிட்டுச் செல்கிறான்.  அவளும் வருகிறாள்

http://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
ஏன் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!

நீயல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!!

பாருங்க ஒருத்தருக்காக ஒருத்தர் எப்படித் துடிக்கிறாங்கனு!  இந்த வரிகளிலேயே காதலனின் அன்பும், காதலியின் அன்பும் தெள்ளத் தெளிவாகப் புலப்படவில்லையா?

அப்படினு பாடி ஆடறாங்க ரெண்டு பேரும். அப்போத் தான் இதை ஒளிஞ்சுட்டு இருந்து வில்லன் பார்த்துடறான்.  இந்த வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் பல காலமாப் போட்டி, பொறாமை. இப்போ நல்ல பொண்ணு நமக்குக் கிடைக்கலையேனு பொறாமை ஜாஸ்தி ஆக, காதலி வீட்டில் வத்தி வைக்கிறான். காதலியின் அப்பாவும் இதை எல்லாம் கேட்டுட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிடறார். பெண்ணின் சம்மதத்தைக் கேட்கவே இல்லை.  கதாநாயகி சோகம் பொங்க

விதி செய்த சதியோ அத்தான்
இது எல்லாம் நீயே அத்தான்
சதி பதியாய் வாழ அத்தான்
கெதி இல்லாமற் போனோம் அத்தான்!

என சோக கீதம் இசைக்க அவள் தோழிக்கு விஷயம் தெரிந்து அங்கே வருகிறாள்.

https://www.youtube.com/watch?v=NMbmPvRBFLk


யாருக்கு மாப்பிள்ளை யாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு..)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு..)

ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு..)

அவள் யாருக்கு மாப்பிள்ளை யாரோ னு சொல்லித் தன் சிநேகிதிக்கு ஆறுதல் கொடுக்கிறாள்.  உனக்குனு ஒருத்தன் ஏற்கெனவே பிறந்துட்டான்.  அவன் நீ காதலிப்பவன் தான் என்றெல்லாம் சொல்லிக் காதலனுக்குக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்கிறாள்.  அவளும் உடனே எழுதுகிறாள்.

http://www.youtube.com/watch?v=PQ0Bfm1gF7I


அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள்   ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்

(அன்புள்ள ....
மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்

இந்தக் கடிதத்தை எழுதிட்டு உடனே தன் தோழியிடம்

http://www.youtube.com/watch?v=CZ6bwPzd1v4

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி

என்று சொல்லித் தோழியை தூது அனுப்புகிறாள்.  மிச்சமெல்லாம் நாளைக்குத் தான்! இன்னிக்கு இதுவே ஜாஸ்தி. :))))

Saturday, February 15, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா?

காதலர் தினம் வரதுக்குப் பத்து நாட்கள் முன்னரே மின் தமிழ்க்குழும நண்பர்களால் "காதல் ரதம்" என்னும் கவிதைத் தொடர் எழுதும் பதிவு ஆரம்பிக்கப் பட்டது.  அதிலே விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் இன்றைய திரைப்படங்களின் காதல் பாடல்களுக்கும், பழைய காலப் படங்களின் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகள்.  யாரோ இதை ஒரு பட்டிமன்றமாக வைக்கலாம்னு சொல்ல உடனடியாக முடிவு செய்யப்பட்டு எங்கோ ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு காதல் ரதத்தை இழுப்பவங்களை வேடிக்கை பார்த்து ரசிச்சுட்டு இருந்த என்னை இந்தப் பட்டி மன்றத்தில் எழுதச் சொல்லிட்டு ஆசான்(ஜீவ்ஸ்) காணாமல் போயிட்டார்.  ஒரு நாளைக்கு மட்டும் அவர் எழுதினார். அதுக்கு பதிலும் வந்திருக்க மறுநாள் ஆசானும் எழுதலை; மத்தவங்களும் எழுதலை.  நடுவரும் நடுவிலே காணாமல் போயிட்டார்.  ஆனாலும் ஆசான் சொன்னதைத் தட்டாத மாணவியாக நான் மட்டுமே எழுதிட்டிருந்தேன்.  இன்னிக்கு முடிக்கணும்.  இன்னும்  முடிக்கலை! :) அதுக்குள்ளே அலுப்பு!  கீழே பழைய பாடல்களின் தொகுப்பைக் கூடியவரை படிக்கிறாப்போல் தொகுத்திருக்கேன்.


மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,

கடைசி பெஞ்சில் நல்லா ஜாலியாக் குறட்டை விட்டுத் தூங்கிட்டிருந்த என்னை இங்கே இழுத்து வந்து பேச வைத்த ஆசானை வன்மையாகக் கண்டிக்கிறேன். சே, சே, ஆசானை வன்மையாகப் புகழ்கிறேன்.  இப்படியா என்னையும் இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது என மனதுக்குள் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிக் கொண்டே) பெருமையுடன் இதை எழுதுகிறேன் என்பதைப் பெருமிதம் பொங்கச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நீஙக்ளெல்லாம் உணர்வீர்கள் என நான் அறிவேன் என்று சொல்லிக் கொள்கிறேன். (அப்பா, இப்போத் தான் பட்டிமன்றத்தில் கலந்துக்கிறாப்போல் ஒரு உணர்ச்சி)

எதிரணித் தலைவர், தலைவியரே!(எல்லாரையும் தலைவர், தலைவியர்னு சொல்லிட்டா பிரச்னையே இல்லை பாருங்க)

எங்க அணியில் யார் இருக்காங்கனே தெரியாமல்(என்னையும் ஆசானையும் மட்டும் தான் இங்கே பார்க்கிறேன்) இருக்கும் அனைவரையும் வணங்கிக்கறேன்.

ஒரு மாதிரியா ஆரம்பிச்சுட்டேன்!  இப்போ என்னோட வாதம் அந்தக்காலத் திரைப்படங்களின் காதல்பாடல்கள் உள்ளத்து உணர்வுகளை அப்படியே எடுத்துச் சொல்வதோடு அல்லாமல் நல்ல தமிழில் பொருள் புரிந்து பாடப்பட்டு(பின்னணி சப்தம் இல்லாமல்) கேட்பவர்கள் காதுகளுக்கும் இனிமையும், குளுமையுமாய் இருந்தன என்று சொல்லிக் கொண்டு கீழ்க்கண்ட வாதத்தை முன் வைக்கிறேன்.

இங்கே தன் காதலியை ஒரு ரோஜாமலராகக் கண்டு ஆனந்திக்கிறான் காதலன்.  அதுக்காக என்னவெல்லாம் சொல்கிறான் தெரியுமா?

ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக்கிளியே அழகிய ராணி

அப்படினு தன் காதலியை மலர், கிளினு எல்லாம் வர்ணித்த பின்னாடியே அவள் அருகில் வரட்டுமானு அநுமதி கேட்கிறான்.

அருகில் வரலாமா ஓய்ய்ய்

அப்படினு   நாசுக்காக் காதலி தன்னையும் காதலிக்கிறாள்னு தெரிஞ்சும் கேட்டு உறுதிப் படுத்திட்டு, காதல் உறுதியானதும் என்ன பாடறாங்கனு பார்க்கலாமா?

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்

னு சொல்லிட்டுப்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்,

எனச் சொல்கிறான் காதலன்.  கண்களாலேயே பேசிப் புரிய வைக்கிறாளாம் அந்தப் பெண்பாவை.  அதைத் தான் கடைசியிலே

"பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்!"

அப்படினு சொல்றார் போல. ஆனாலும் காதலிக்கு இன்னும் பயம் போகலையாம். சுத்தி முத்திப் பார்க்கறா போலிருக்கு.  அதைக் கண்ட காதலன் அவளிடம்

"அச்சமா நாணமா, இன்னும் வேண்டுமா?"

னு கேட்பதோடு இல்லாமல்,

"அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?"

 னு சொல்லி பயப்படாதேனு ஆறுதலும் தரார்.

ஆனால் அந்தக் காதலியோ இன்னமும் அக்கம்பக்கத்து பயம் போகாமல் காதலனிடம்

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன் - உன்
மடி மீது தான் கண் மூடுவேன்

அப்படினு சொல்லிடறா. அதோட இல்லாமல் அவள் வளர்ந்தாலும் இன்னும் சிறு பிள்ளைதான் என்பதையும்,

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

அப்படினு காதலனையே  எல்லாத்துக்கும் பொறுப்புனு சொல்லிடறா. காதலனைக் கண்டுவிட்டுத் திரும்பும் அவளை வழியில் தோழி பார்க்கிறாள். பயந்து கொண்டு சுத்தும் முத்தும் பார்த்தபடியே வரும் தன் சிநேகிதியிடம் தெரியும் மாறுதலைக் கண்டுவிட்டு அவள் திகைக்க சிநேகிதி அந்தப்பெண் தனக்குள்

"ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

னு முணுமுணுப்பதையும் கேட்கிறாள்.

அவள் தோழி  இவள்  அடியோடு மாறிப் போய் இருக்கிறதைப் பார்த்துட்டு

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?


கேட்டுடறாளா.  இவளுக்கு என்ன சொல்றதுனு தெரியலை.

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத்
தெரியாமலே நான் ஏன் மாறினேன்

அப்படினு தோழியையே கேட்டுடறாளா,

அவ உடனே
அடி போடி பைத்தியக்காரி நான் அறியாதவளா
சின்னஞ்சிறுசா

னு கேட்டுட்டு இவளுக்குக் காதல் நோய் பிடிச்சிருக்கிறதை உறுதியும் செய்துடறா. ஆனால் அந்தக் காதலிக்கோ

காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா

என்றெல்லாம் ஆசை வரக் காதலனை நினைத்து ஏங்கிக் கொண்டே மறுபடியும் பாடுகிறாள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

என்பதோடு

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

அப்படினு சொல்லித் தன் காதலனுக்குத் தன் காதலை உறுதியும் செய்து விடுகிறாள்.அப்புறம் என்ன ஆகிறது?


அப்புறமா என்ன ஆகிறதுனு அடுத்த பதிவிலே பார்க்கலாம்.  ஆனால் பாருங்க இந்தப் பாடல்கள் எல்லாம் எப்படித் தெள்ளத் தெளிவாகக் காதலன் நிலையை, காதலி நிலையை, தோழி செய்யும் உதவியைனு எடுத்துச் சொல்வதோடு எப்படிப் புரியுது எல்லாம்.  வார்த்தைகள் எல்லாம் அழுத்தம் திருத்தமாக வந்து விழுந்திருக்கின்றன பாருங்க. ஆகவே எதிரணித் தலைவர், தலைவியர், எங்க அணித் தலைவர், தலைவியர் எல்லாரும் ஒத்துக்கோங்க, பழைய திரைப்படக் காதல் பாடல்களே இனிய இசை, நல்ல தமிழ், நல்ல ராகங்கள், அழுத்தமான படப்பிடிப்புனு எல்லாமும் நிறைந்து இருக்கிறது எனச் சொல்லி முடிச்சுக்கறேன்.


பி.கு. நினைவிலே வந்த பாடல்களை மட்டும் பகிர்ந்திருக்கேன்.  இனி இதுக்குப் பொருத்தமா அடுத்தது போடணும்னா தேடிப் பார்க்கணும்.   ரெண்டு நாளைக்கு ஒளிஞ்சுக்கலாமானு நினைக்கிறேன்.  என்ன சொல்றீங்க?

Friday, February 14, 2014

உள்ளம் என்னும் கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா! ( காதலர் தினத்துக்கான மீள் பதிவு)


அன்பு என்னும் பண்பு மட்டும் என்றும் ஒரே தன்மையாகவே இருந்து வருவதாகும். எப்போதும் மனதுக்கு இன்பம் அளிக்கும். மற்றக் கஷ்டங்களை எல்லாம் துச்சமாய் நினைக்கவைக்கும். சகித்துக்கொள்ளும் வல்லமையைத் தரும். அன்பு மனிதவாழ்க்கையின் ஒரு பொக்கிஷமாகும். அந்த பொக்கிஷத்தை அடைந்தவர்களுக்கு மற்றக் கஷ்டங்கள் துச்சமாயும், தூசியாகவும் தெரியும். ஆகவே இந்த அன்பு என்னும் வற்றாத ஜீவநதியைப் பொங்கிப் பெருகி ஓட வைக்கும் ஓர் நாளே நாளைய தினம் பெப்ரவரி பதினான்காம் தேதி. இது காதலர்க்கு மட்டும் உரியதினமன்று. காதல் என்றாலே அன்பு என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். காதல் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ன?? ஆச்சரியமாய் இருக்கிறதா? உண்மை அதுதான். காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்றைய தினங்களில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் தனிப்பட்ட அன்பை, சிநேகிதத்தைக் குறித்தாலும், இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னர் திருஞானசம்பந்தர், ஈசனிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இருப்பதை அறிவோமல்லவா?

""காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. ""

ஆண்டாளும் ரங்கநாதர் மேல் காதல்தான் கொண்டாள். அவள் பெண் என்பதால் அவளுடைய காதலில் சற்று வேறுபாடுகள் கூறப்பட்டாலும் இவ்வுலக வாழ்க்கையை அவள் விரும்பவில்லை என்பது தெளிவு. இறைவனிடம் கொண்ட மாறா பக்தியைத் தான் காதல் என்றும் கூறி வந்திருக்கின்றனர். அதே சமயம் கணவன், மனைவி மேல் கொண்ட அன்பு, உடன்பிறந்தோர் சக உடன்பிறந்தோரிடம் கொள்ளும் அன்பு, மாணவன் ஆசிரியருக்குக் காட்டும் மரியாதை கலந்த அன்பு, நண்பர்களின் அன்பு, சிநேகிதிகளின் அன்பு, வீட்டுப் பெரிய்வர்களிடம் காட்டும் அன்பு, சக மனிதர்களிடம் காட்டும் மனித நேயம் கலந்த அன்பு, என அன்பை வெளிப்படுத்தும் ஓர் தினமே நாளைய தினம்.

வெளிநாட்டில் இருந்து எல்லாக் கலாசாரங்களையும் அப்படியே பின்பற்றும் நாம் அவர்களின் இந்த உயரிய பண்பைப் பின்பற்றாமல் வெறும் காதலர்களுக்கு மட்டுமே என ஊடகங்களால் கற்பிக்கப் பட்டு, வணிகர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு நாளைய தினம் ரோஜாப்பூக்களின் விலை எக்கச்சக்கமாய் இருக்கும், பரிசுப் பொருட்கள், மழையெனப் பொழியும், எங்கே சென்றாலும் இளம் காதலர்கள் ஜோடியாகச் செல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில் நிரம்பிவழியும் வண்ணம் போதையுடன் கூடிய டிஸ்கோ பாடல்களும், ஆடல்களுமாக அமர்க்களப்படும். ஒரு வாரமாக எஸ்.எம்.எஸ்ஸில் நாளைய தினம் சலுகைகள் எதுவும் கிடையாது என்ற அறிவிப்பு வந்த வண்ணமாக இருக்கிறது. அப்படி என்றால் எத்தனை எஸ்.எம்.எஸ்.கள் போகும் என நினைக்கவே அச்சமாய் இருக்கிறது.

இது நம்முடைய கலாசாரமே அல்ல. என்றாலும் பின்பற்றத் தொடங்கியவர்களை நிறுத்தச் சொல்வதும் என்னுடைய வேலை அன்று. நாளை உங்கள் காதலியிடமோ, காதலரிடமோ காட்டப் போகும் அன்பை அதை வெளிப்படுத்தும் முன்னர் முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினரிடம் காட்டுங்கள். உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என அவருக்கு வெளிப்படுத்துங்கள். தாய்க்கு நாளைய தினம் உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். சகோதரனோ, சகோதரியோ இருந்தால் அல்லது அக்கம்பக்கத்தினருக்கு நாளைய தினம் சிறு உதவி ஏதாவது செய்வது என முடிவு செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது இப்படித்தான். பேருந்திலோ, ஆட்டோவிலோ பயணிக்க நேர்ந்தால் அதன் நடத்துநரிடமோ, ஓட்டுநரிடமோ நன்றி கூறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

வெகு தூரப் பயணத்தின் முடிவில் நாங்கள் ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ நன்றி கூறி விடைபெறுவதை வழக்கமாய் வைத்திருக்கிறோம். ஏனெனில் நம்முடைய சாலைகளின் தரத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் ஓட்டிக்கொண்டும் பேருந்தை நடத்திக்கொண்டும் நாம் செல்லவேண்டிய இடத்துக்குக் கூட்டிச் செல்லுவதில் அவர்கள் உயிரையும் சேர்த்துப் பணயம் வைக்கின்றனர். இங்கே மாநரகப் பேருந்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? அது இன்னும் கொடுமை! அவர்களும் மனிதர்கள் தாமே? ஆகவே நம் கண்ணில் பட்ட தெரிந்த நபர்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவிக்கலாம். நம் அன்பை இப்படி வெளிப்படுத்தலாம். அவர்கள் மனம் மகிழ்வது உங்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்திருக்கும், முயன்று பாருங்கள். பெரிய விருந்தே சாப்பிட்டாற் போன்ற உணர்வு வரும். வங்கிக்குப் போனால் வங்கி ஊழியர், காய்கறி வாங்கும் கீரைக்காரி, பால் ஊற்றும் பால்காரர் என நாம் நேசிக்கவும் அன்பு காட்டவும் இந்த உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. மறவாதீர்கள்.

சொல்ல மறந்துட்டேனே, வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது ஆறு. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம்.

Thursday, February 13, 2014

நாங்களும் போடுவோமுல்ல!

விரைவில் எதிர்பாருங்கள்.  திரைப்படத்தில் காதல்பாடல்கள் குறித்த ஒரு தொகுப்பு

Tuesday, February 11, 2014

நைமிசாரண்யத்தில் ஓர் நாள் தொடர்ச்சி!

பிரமசாரியான ஆஞ்சநேயனுக்கு மகனா எனத் திகைப்பு வரலாம்.  ராம--ராவண யுத்தத்தின் போது ராவணனின் நண்பன் ஆன மயில் ராவணன், விபீஷணனைப் போல் உருமாறி ராம லக்ஷ்மணர்களைப் பாதாளத்திற்குக் கடத்திச் செல்கிறான்.  அவர்களை மீட்டு வரப் பாதாளம் சென்ற அநுமனை அங்கிருந்த ஓர் இளைஞன் தடுத்து நிறுத்திச் சற்றும் அயர்வில்லாமல் அநுமனோடு போரிடவே அனுமனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.  அந்த இளைஞனை யார் என விசாரிக்க அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தார் அனுமன்.

தான் அனுமனுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்த பிள்ளை என்றும், அனுமனின் பிள்ளை என்பதால் தன்னிடம் வீரம் மிகுந்திருப்பதாகவும் கூறவே தன் பிரமசரியத்துக்கு விரோதமாய்ப் பேசும் அந்த இளைஞனிடம் கோபமும் வந்தது அனுமனுக்கு.  தான் தான் அந்த அனுமன் என்பதைத் தெரிவித்துவிட்டு பூரண பிரமசாரியான தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்கிறார்.  தன் தாய் சுவர்ச்சலா தேவியை அந்த இளைஞன் அழைக்க அங்கே வந்த சுவர்ச்சலா தேவி அனுமனைக் கண்டதுமே பணிந்து வணங்கினாள். அனுமனிடம், தான் மகர வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், இலங்கையில் அநுமன் வாலில் தீ மூட்டியபோது அதை அணைக்க அனுமன் கடல் நீரில் வாலை நனைத்தபோது அவர் உடலின் வியர்வை கடலில் விழுந்ததாகவும், அந்த நீரைத் தான் விழுங்கியதால் தன் வயிற்றில் தோன்றியவனே இந்தக் குமாரன் என்றும் கூறினாள்.  மேலும் மயில் ராவணன் தன் மாயா சக்தியால் மகரத்வஜனை மயக்கித் தன் பிடியில் வைத்திருப்பதையும் தெரிவித்தாள்.

அனுமனும் மயில் ராவணனின் அரண்மனைக்குள் புகுந்து அவனை அடியோடு அழித்துத் தன் மகனையும் மயக்கத்திலிருந்து மீட்டு அங்கே அரசனாக்குகிறார். சிவ சக்தி ஐக்கியமின்றிப் பிறந்த விநாயகரையும், முருகனையும் போலவே சிவ சொரூபமான அனுமனுக்கும், அம்பிகை சொரூபமான சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் தான் மகரத்வஜன்.



அங்கிருந்து லலிதா தேவி கோயிலுக்குச் சென்றோம்.  இது ஒரு சக்தி பீடம் என்கின்றனர். நைமிசாரண்யத்தில் வந்து விழுந்த மனோமய சக்கரத்தை லலிதா தேவி தான் நிறுத்தினதாகவும் சொல்கின்றனர்.  மஹிஷாசுரனை வதைத்த பின்னர் தேவாதி தேவர்களுக்கு தரிசனம் கொடுத்த இடமாகவும் சொல்கின்றனர்.

தேவியின் சக்தி பீடம், கீழே சந்நிதிக்கு இருபக்கமும் அமர்ந்திருந்த பண்டிட்கள். அதிசயமாக இவர்கள் பணம் வசூலிக்கவே இல்லை.  நல்லா தரிசனம் பண்ண உதவி செய்தாங்க.




தேவி லிங்கதாரிணி என அழைக்கப்படுகிறாள். அதோடு இல்லாமல் ததீசி முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதம் செய்வதற்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்ததும் நைமிசாரண்யத்திலே என்பதும் தெரிய வருகிறது.

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தைப் பாடி இருப்பது குறித்து ஏற்கெனவே பார்த்தோம். அதைத் தவிரவும் இங்கே அஹோபில மடமும் ராமாநுஜ கூடமும் இங்கே மடங்கள் அமைத்திருக்கின்றன.  ராவணனைக் கொன்ற பாவம் தீர ஶ்ரீராமன் இங்கே வந்து தீர்த்தத்தில் நீராடியதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையும் இங்கே சிறப்பாகக் கருதப்படுகிறது.  லலிதா தேவி கோயிலே முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதோடு இல்லாமல் ஸ்வாயாம்புவ மனு தவம் செய்கையில் ஶ்ரீமந்நாராயணனே தனக்கு மும்முறை மகனாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டதாகவும். அவ்வாறே ஸ்வாயாம்புவ மநு தசரதனாகவும், வசுதேவராகவும் பிறந்து முறையே ஶ்ரீராமரும், ஶ்ரீகிருஷ்ணரும் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்ததும் நைமிசாரண்யத்தில் செய்த தவத்தையே முன் வைத்துச் சொல்கின்றனர்.  மேலும் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் எனச் சொல்லும் வட இந்திய மக்கள் ஶ்ரீராமனின் அவதாரமாக ஒர்ச்சா என்னும் இடத்தை ஆண்ட மன்னன் ஒருவனைக் கூறுகின்றனர்.  இவரே கலியுகத்தில் ஶ்ரீராமனுடைய மூன்றாம் அவதாரம் எனப்படுகிறது.  இந்த ஒர்ச்சா குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கணும்.


ஓர்ச்சா குறித்த தகவல்கள்

ஓர்ச்சா குறித்த தகவல்களுக்கு கூகிளாரைக் கேட்டப்போ நம்ம வெங்கட் நிறையவே கொடுத்திருப்பது தெரிய வந்தது.  அதோட சுட்டி மேலே! :)))) பழம் நழுவிப் பாலிலே விழுந்து அந்தப் பழம் நேரே வயித்துக்குள்ளேயும் போயிடுச்சு. :)))))

Monday, February 10, 2014

குளிர்பானம் குடித்துக் குழந்தை பலி

சற்று முன் தொலைக்காட்சிச் செய்தியில் குளிர்பானம் குடித்துக் குழந்தை பலி எனச் செய்தி வந்தது.  குளிர்பான பாட்டில் பெரியது வாங்கிச் சென்றது குழந்தைகளின் தந்தை.  மளிகைக்கடையிலே வாங்கி இருக்கார்.  அது வழக்கமாக வாங்குவது தான் என்கிறார்கள்.  குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததிலே ஒரு குழந்தை குடித்த அரைமணிக்குள் இறந்து போல மற்றக் குழந்தைகள் கவலைக்கிடம்.  இது தேவையா?

நம் நாட்டில் எத்தனையோவிதமான சுதேசிக் குளிர்பானங்கள் இருந்தன.  கிராமங்களில் அதை "கலர்" என்றே சொல்வார்கள்.  அத்தகைய கலரில் ஜிஞ்சர் பீர், பன்னீர் சோடா, போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்காத குளிர்பானங்களே இருந்தன. செயற்கையான ரசாயனக் கலவை இல்லாமல் தயாரிக்கப்பட்டவை.  இன்று அவை எல்லாம் சென்ற இடமே தெரியவில்லை. காளிமார்க் ஒன்று தான் நிலைத்து நிற்கிறது.  மற்ற மாநிலங்களின் சுதேசிக் குளிர்பானங்களின் செய்முறைக் காப்பிரைட்டோடு வெளிநாட்டுக் குளிர்பானக் கம்பெனிகள் வாங்கிவிட்டு அவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டுத் தங்கள் செயற்கைக் குளிர்பானங்களையே அறிமுகம் செய்துவிட்டார்கள்.

இன்று யார் கையில் பார்த்தாலும் வெளிநாட்டுக் குளிர்பானபாட்டில்களே. அவற்றின் தீமையை நாம் யாரும் நன்கறிந்திருக்கவில்லை;  அல்லது அறிந்திருந்தாலும் அதன் மோகத்தால் கவரப்பட்டிருக்கிறோம். இது இன்று உயிரை வாங்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது!  என்ன இல்லை நம் நாட்டில்?


இந்தக் குளிர்பானங்கள் வாங்கும் பணத்துக்கு இளநீரோ, பன நுங்கோ, அல்லது தர்பூஷணிப் பழமோ, கிர்ணிப்பழமோ, அல்லது ஏதேனும் பழச்சாறுகளோ வாங்கித் தரலாம் குழந்தைகளுக்கு. உடலுக்கும், வயிற்றுக்கும் கேடு விளைவிக்காத ஒன்று இவை அனைத்தும். ஆனால் யார் கேட்கிறார்கள்?  பெரிய கிரிக்கெட் வீரர்கள் இதற்கு ப்ரான்ட் அம்பாசடர்களாக இருந்து விளம்பரம் செய்கையில் எல்லாருடைய மனமும் இதை வாங்கிக் குடித்து ஹீரோ மாதிரி இருக்கணும்னு தான் தோணுது.  கடைசியில் ஜீரோ ஆகப் போவதை நினைக்கிறதில்லை.

அடுத்த விஷம் இந்த லேஸ் எனப்படும் சிப்ஸ் பாக்கெட்கள். இதில் உள்ள கொழுப்புச் சத்து குறித்து யாரும் அறியவில்லை. அரை கிலோ எண்ணெய் வாங்கி உருளைக்கிழங்கை வாங்கிச் சீவி சிப்ஸ் பண்ணிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  ஆனால் அதைச் செய்ய அம்மாமார்களுக்கு சோம்பல்.  இதை ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்துடறதோடு அல்லாமல் அவங்களும் சாப்பிடறாங்க.  இன்னிக்கு எங்க அம்மா சூப்பர் உமன் அப்படினு குழந்தைகள் சொல்வதே இந்த திடீர் தயாரிப்பில் விதவிதமான பலகாரங்கள் செய்து கொடுக்கும் அம்மாக்களைத் தான்.  அடுப்படியில் வெந்து கொண்டு சிரமப்பட்டுச் செய்வதெல்லாம் கனவாகிக் கொண்டு வருகிறது.  இன்னும் போனால் சாப்பாடு எல்லாமே டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும்.  அதை வாங்கிச் சாப்பிடப் போறாங்கனு நினைக்கிறேன்.  வீட்டில் சமையல்னா அதிசயமாப் பார்ப்பாங்க போல!

தயவு செய்து இந்த செயற்கைக் குளிர்பானங்கள், செயற்கை உணவுகள் வாங்குவதையும், அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதையும் யாரும் ஆதரிக்காதீர்கள்.  உங்கள் குழந்தைக்கு நீங்க எப்படிச் செய்து கொடுத்தாலும் அது அம்மா செய்தது; அவங்களுக்கு அது அமிர்தமே!

Sunday, February 09, 2014

மோதியோட நினைவுகள்!

விஷயம் என்னன்னா, கீழ்ப்பாக்கத்தில் எங்க பையருக்கு எடுக்க வேண்டிய ஸ்கான் வசதி இல்லாததால் நுங்கம்பாக்கம் தாண்டி ஓர் இடத்திற்கு அனுப்பி இருக்காங்க.  அது எங்களுக்குத் தெரியலை.  நாங்க கீழ்ப்பாக்கத்தில் இருந்தே வரதாத் தான் நினைச்சோம்.  என் தம்பியும், அவர் தம்பியும் வந்து விஷயத்தை விளக்கியதும் தான் தெரிந்தது என்றாலும் ஏழரை மணி வரை என்ன ஆச்சு? கடைசியா ஏழே முக்காலுக்கு இனி காத்திருக்க முடியாது, கிளம்பவா, நிச்சயம் முடிச்சுக்கலாமானு புரோகிதர் கேட்க, எங்கள் மாப்பிள்ளை மச்சினன் வரணும்னு சொல்ல, அந்த நேரம் வாசலில் ஒரே சப்தம். எல்லாருமே அதோ, அதோ வந்துட்டான் என்று ஒரே குரலில் கூவ சற்று நேரம் குழப்பமான சப்தங்கள்.

ஏன் இத்தனை நாழி?

எங்கே போனீங்க?

வண்டியிலே வரதுக்கு இவ்வளவு நேரமா?

ஒருத்தருக்கும் ஒண்ணும் ஆகலையே?

சரி, சரி, சீக்கிரமாக் கைகால், அலம்பிட்டு வா, நிச்சயதார்த்தம்உனக்காகக் காத்துட்டு இருக்கு.

அவங்க இரண்டு பேரும் வண்டியில் வந்தும் ஏன் தாமதம் ஆச்சுன்னா. நுங்கம்பாக்கம் டாங்க்பன்ட் வரும்போது வண்டியின் ஸ்பார்க் ப்ளகில் ஏதோ பிரச்னை.  அங்கே இருக்கும் ஏதாவது ஒரு மெகானிக் கிட்டே காட்டித் தாற்காலிகமாக ஏற்பாடு செய்யலாம்னு பார்த்தால் டாங்க்பன்டில் இருந்து ஆரம்பிச்சு, லயோலா காலேஜும் தாண்டி, நெல்சன் மாணிக்கம் சாலை வரை ஒரு மெகானிக்கும் இல்லை.  இதே மாதிரி நாங்களும் ஒரு முறை தி.நகரில் ஸ்கூட்டரிலேயே கல்யாணம் ஒண்ணு முடிந்து திரும்பி வரச்சே அவதிப்பட்டோம்.  டாங்க்பன்டில் இருந்து நெல்சன் மாணிக்கம் ரோடு வரை வண்டியைத் தள்ளிக் கொண்டு ரங்க்ஸ் வர, நானும் விதியேனு கூட நடந்து வந்திருக்கேன்.  அவங்களுக்கும் அதே போல் நடந்திருக்கு.  வண்டியை இரண்டுபேருமாக மாத்தி, மாத்தித் தள்ளி இருக்காங்க.  பெரிய வண்டி.

பையரால் அதிகமாத் தள்ளவும் முடியலை.  ஆகவே அவங்க நெல்சன் மாணிக்கம் சாலை வரச்சே ஆறு மணி ஆகி இருக்கு.  அதுக்கப்புறமா வண்டியைச் சரி செய்து கொண்டு அங்கிருந்து கிளம்ப ஏழு மணி ஆகி இருக்கு. அதான் நேரம் ஆகி இருக்கு.  மொத்தத்தில் விஷயம் ஒண்ணும் இல்லை என்பது எங்களுக்கு எல்லாம் ஆறுதல்.

யாருமே எதுவுமே பேசாமல் அடுத்து நடக்கவேண்டிய நிச்சயதார்த்தத்தையே நினைக்க, எல்லாரும் திட்டப் போறாங்கனு நினைச்சுட்டு வந்த பையர் தனக்குக் கிடைத்த திடீர் முக்கியத்துவத்தில் மனம் மகிழ்ந்து போய் உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வர, நிச்சயம் நடந்து முடிந்தது. அன்று இரவுப்பொழுது நல்லபடியாகக் கழிந்து மறுநாள் கல்யாணமும் அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது.

ஆனால் மோதிக்கு எங்க பொண்ணு கல்யாணம் ஆகிப்போனதிலிருந்து ஒரே கவலை.  அவள் படுக்கை அருகே சென்று முகர்ந்து முகர்ந்து பார்க்கும். எங்க வீட்டில் தொலைபேசி அப்போது தான் இணைப்பு வாங்கி இருந்தோம். பலரிடமிருந்தும் தொலைபேசி அழைப்பு வரும்.  அப்போதெல்லாம் எங்கேயோ இருக்கும் மோதி, எங்க பொண்ணு கிட்டே இருந்து அழைப்பு வருகையில் எப்படித் தான் தெரிஞ்சுக்குமோ, உடனே தொலைபேசியில் நாங்க பேசிட்டு இருக்கிற இடத்துக்கு வந்துடும்.  குழைவாகக் குரல் கொடுக்கும். செல்லமாகக் குலைக்கும்.  தொலைபேசிக் கருவியை அதன் வாய்க்கு நேரே பிடிப்பார் ரங்க்ஸ். உடனே அங்கிருந்து கேட்கும் பெண்ணின் குரலை அடையாளம் கண்டு கொண்டோ என்னமோ மகிழ்ச்சிக் குரல் கொடுத்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வரும்.  எல்லாம் சுமுகமாத் தான் போய்க் கொண்டிருந்தது.

வாசலுக்கு அதை வாக்கிங் அழைத்துச் சென்றால் கூட அக்கம்பக்கம் வீடுகள் அருகே அசிங்கம் செய்யாது.  தூரமாகத் தள்ளிப் போய்த் தான் இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ளும்.  அப்படி இருந்தும் ஒரு முறை பக்கத்து வீட்டு மாமி அதை மிக மோசமாகக் கடிந்து கொண்டார். அவங்களுக்கு நாங்க நாய் வளர்ப்பது ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலை. அதுக்கப்புறமா நாங்க அந்தப்பக்கமாக் கிழக்கே செல்லாமல் மேற்கே எங்கள் பாதையை மாற்றிக் கொண்டோம். தெருவுக்கே ஒரு கிலியைக் கொடுத்து வந்தது.  யாருமே எங்க வீட்டருகே வரவே பயப்படுவாங்க.  ரொம்பத் தெரிந்தவர்கள் கூட வாசலில் தள்ளி நின்று கொண்டே கூப்பிடுவாங்க.  நவராத்திரி சமயம் அதை உள்ளே இருக்கும் இரண்டாவது படுக்கை அறையில் கட்டிப் போட்டுக் கதவை மூடிவிட்டே இங்கே வரவங்களை வரவேற்பேன்.

மத்தியானமெல்லாம் என்னருகேயே படுத்துக்கும்.  என் கணவர் அலுவலகத்திலிருந்து வரச்சே தெரு முக்கில் திரும்புகையில் ஸ்கூட்டர் ஹார்ன் கொடுப்பார்.  அதை  இங்கிருந்தே கேட்கும்.  காதுகளைத் தூக்கிக் கொண்டு கேட்டுவிட்டுக் குதித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வாசல் கதவு அருகே கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு வாலாட்டிக் கொண்டு நிற்கும். கதவைப் பிறாண்டும்.  நடுவே நம்மையும் உள்ளே வந்து அழைத்து வாசலுக்கு வரச் சொல்லும்.

ஸ்வாமி அலமாரி, சமையலறைக்கு உள்ளே வரக் கூடாதுனு அதுக்குத் தெரியும்.  அதே போல் ஆசாரம் பார்க்கும் என் மாமியார் கிட்டே கூடப்போகாது. எதிரே உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும்.  தப்பித் தவறிக் கூட மேலே படாது. ரொம்பச் சமர்த்தாக இருக்கும். திடீர்னு ஒரு நாள் 1998 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி விடியற்காலை அன்னிக்கு மார்கழி முதல் தேதி, நான் வாசலில் கோலம் போடனு வந்தப்போப் பார்த்தா இது மாடிப்படி அருகே ஒரு மாதிரியாகப் படுத்துக் கிடந்தது.  கிட்டப் போய் மோதி, மோதி னு கூப்பிட்டா ரொம்பச் சிரமப்பட்டு அரைக்கண்ணைத் திறந்து பார்த்தது.  நான் உடனே உள்ளே போய் ரங்க்ஸை அழைத்து வந்தேன்.


அவரும் அருகே உட்கார்ந்து என்னடானு விசாரிச்சார்.  அவரையும் ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவிட்டு உடனே கண்ணை மூடிவிட்டது.  என்ன ஆச்சுனு தெரியலை.  பத்து நாள் முன்னே தான் மருத்துவர் வந்து பார்த்துச் சென்றிருந்தார். முதல்நாள் இரவு கூடச் சப்பாத்தி சாப்பிட்டது. எப்போவும் இரவில் அவிழ்த்து விடுகிறாப்போல் அன்னிக்கும் அவிழ்த்து விட்டிருந்தோம். நல்லா இருந்தது திடீர்னு போனது எங்க அனைவருக்கும் அதிர்ச்சி.  அப்போத் தான் பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருந்தது.  அவ கிட்டே ரொம்ப நாட்கள் விஷயத்தைச் சொல்லவே இல்லை.  மெதுவா மாப்பிள்ளை கிட்டேச் சொல்லி அவரை விட்டுச் சொல்லச் சொன்னோம். :(

அதுக்கப்புறமா அதே பக்கத்துவீட்டுப் பையர் இன்னொரு நாய் கொண்டு வந்தார்.  ஆனால் ரங்க்ஸ், என் மாமியார் இருவருமே அதனால் எனக்கு உடம்பு பாதிக்கிறதுனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறமா வேறே செல்லமே வைச்சுக்கலை. விட்டுட்டோம். :(


வேறே படம் எடுக்க முடியலை.  அதே படம் திரும்பப் போட்டிருக்கேன்.

Saturday, February 08, 2014

நிச்சயதார்த்தத்தில் அமர்க்களம்! :)))

டிடி, முதல்லே வேறே தலைப்புத் தான் கொடுத்தேன். அப்புறமாத் தான் நமக்கும் அமர்க்களத்துக்கும் நெருங்கிய உறவுனு இந்தப் பேரை வைச்சுட்டேன்.  உங்களுக்கும் பிடிக்கும்னு தான்! :))))  //

பையர் மேலே ஓங்கிய உளி அப்படியே விழுந்திருந்தால் தலை இரண்டாகப் போயிருக்கும்.  அல்லது தோள்பட்டையில் விழுந்திருந்தால் தோள் பட்டையில் முறிவு ஏற்பட்டிருக்கும். (பையருக்கு மூணாம் வருஷம் படிக்கையிலேயே எல்&டியில் தேர்வாகிப் பரிக்ஷை எழுதிய உடனே சேரச் சொல்லி இருந்தாங்க.  அது கடைசி வருஷம்.  முதல் செமஸ்டர். அக்கா கல்யாணத்துக்காகவே குஜராத்திலிருந்து வந்திருந்தார். )  அந்த உளி என்ன காரணமோ அதைக் கோர்த்திருந்த மரப்பிடியிலிருந்து நழுவிப் பையரின் தலையையும், தோள்பட்டையையும் உரசிக் கொண்டு விழுந்திருக்கிறது.  உளி படாத கோபத்தில் அந்தத் தொழிலாளி பையரின் சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பிக்க பையரும் மன்னிப்புக் கேட்டிருக்கார்.  ஆனாலும் அவருக்குக் கோபம் அடங்கலை.  கன்னத்தில் அடிச்சிருக்கார்.  தெரியாமல் பட்டிருக்குனு சொன்னபோதும் விடலை.

அதுக்குள்ளே அங்கே தற்செயலாக நம்ம ரங்க்ஸின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த வண்டி வீட்டிலிருந்து சாமான்கள் எடுத்துச் செல்ல வந்திருக்கு.  வண்டி ஓட்டுநர்களுக்குப் பையரை அடையாளம் தெரியவே, உடனே உதவிக்கு ஓடி வந்து இருக்காங்க.  வீட்டுச் சொந்தக்காரரை வரவழைத்து, (அவரும் தெரிஞ்சவரே) இது தற்செயலாகப் பட்டது, திட்டமிட்டுப் படலைனு சொல்லி அந்தத் தொழிலாளிக்கு மருத்துவத்துக்குப் பணமும் கொடுத்து(இதுக்குத் தான் அவர் சண்டை போட்டிருக்கார் என்பதும் தெரிந்தது.) சமாதானம் பண்ணி இருக்காங்க.  அவங்க அப்புறமா சத்திரம் வந்தாச்சு.


இது இத்தனையும் நடந்ததை எல்லாம் பையர் என் கிட்டேயே அவங்க அப்பா கிட்டேயோ சொல்லலை.  நாங்க மணமேடையில் பிசியாக இருந்தோம். அடி வாங்கியதிலோ அல்லது உளி பட்டதிலோ பையருக்குத் தலை வலி வந்திருக்கு.  கண்ணும் ஒரு மாதிரி இருட்டவே அப்படியே என் தம்பி மனைவி மடியில் படுத்து,"மாமி, ரொம்ப முடியலை!" னு சொல்லி இருக்கார். அவ உடனே என் தம்பி கிட்டே விஷயத்தைச் சொல்லவும், தம்பியும் என் அண்ணாவுமா சத்திரத்துக்கு எதிரேயே இருக்கும் மருத்துவரிடம் அழைச்சுப் போயிருக்காங்க.  இந்த விஷயம் மெல்ல மெல்ல எல்லாருக்கும் பரவி என் மாமியார், நாத்தனார்கள், மைத்துனர்கள்னு எல்லாருக்கும் தெரியவே இரண்டு மைத்துனர்களும் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டாங்க.  வாசல்லே என்னமோ கூட்டம்னு பார்க்கப் போன ரங்க்ஸ் அங்கேயே விஷயத்தைக் கேட்டுவிட்டு செட்டில் ஆகிவிட்டார்.

என்னிடம் சொன்னால் பயப்படுவேன்னு யாருமே சொல்லலை.  எங்க பொண்ணை உடை மாத்திக்க அனுப்பிட்டு, நான் வாசலுக்கு வந்து என்ன எல்லாரும் என்னை விட்டுட்டு ரகசிய மீட்டிங்கா? னு கேட்டேனா!  எல்லாரும் திருதிரு!  உடனே சந்தேகம் ஜனிக்க என்ன விஷயம்னு கேட்டா யாருமே வாயைத் திறக்கலை.  தம்பியோட பெரிய பையர் அப்போ மருத்துவமனையிலிருந்து வந்து நேரடி ரிப்போர்ட் கொடுத்தார். மருத்துவர் ஸ்கான் பண்ணணும்னு சொல்றார்னு சொல்லவே, நான் சாவகாசமா யாருக்கு என்னனு கேட்க அந்தப் பையர் பட்டுனு போட்டு உடைச்சுட்டார்.  உடனே அங்கிருந்து எதிரிலிருந்த மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் ஓடினேன்.  பின்னாலே ரங்க்ஸ், என் மாமியார் எல்லாம் ஓடாதே, ஓடாதே, இரு ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டு வராங்க.

அங்கே போனால் அந்த மருத்துவர், (கல்யாணம் ஆனதிலிருந்து தெரிஞ்சவர்) என்னைப் பார்த்துட்டு, உன் பிள்ளையா? என்னம்மா இப்படி அடி வாங்கி இருக்கானே! சின்னப் பையன்ம்மா.  தலை வலிக்குதுனு சொல்றான், ஸ்கான் ப்ண்ணினாத் தான் என்னனு புரியும்னு சொல்றார்.  ஒரே தலை சுத்தல்.  அவரிடமே எங்கே ஸ்கான் பண்ணறதுனு கேட்டு அதுக்குச் சீட்டும் வாங்கிக் கொண்டு அவசரம்  அவசரமாச் சாப்பிட்டுட்ட் என் தம்பியும், ரங்க்ஸோட கடைசித் தம்பியுமா, என் கடைசி நாத்தனார் கணவரையும் அழைச்சுண்டு,  ஒரு ஆட்டோ வைச்சுட்டுப் பையரை அழைச்சுட்டுப் போனாங்க.  நாங்க இங்கே என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்.  பையர் ஒண்ணுமே சாப்பிடலை.  ஸ்கான் பண்ணணுமே!

அங்கே இருந்து உடனே ரிப்போர்ட் வேணும்னு சொல்லி இருக்கிறதாலே ஸ்பெஷலிஸ்டுக்கும் பணம் கட்டி வரவழைச்சிருந்தோம்.  போய் ஸ்கான் பண்ணி இருக்காங்க.  தோள் பட்டையில் மட்டும் உளி பட்டு லேசா உள் காயம் இருந்தது.  நல்லவேளையாத் தலையில் இல்லை.  தோள்பட்டை வலியால் கூடத் தலையில் வலி தெரிஞ்சிருக்கலாம்னு அங்கே மருத்துவர் சொல்லிட்டு அவரே மருந்துகளையும் கொடுத்திருக்கார்.  அங்கிருந்து ரங்க்ஸோட தம்பி உடனே தொலைபேசித் தெரிவிக்க நாங்களும் கொஞ்சம் நிம்மதியாகி சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பிச்சோம்.

சாயந்திரம் ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.  இவங்கல்லாம் கீழ்ப்பாக்கத்திலிருந்து நாலு  மணிக்குக் கிளம்பிட்டாங்க.  நாத்தனார் கணவர் வண்டியிலே போயிருந்தார்.  ஆகவே பையரை அவரோட அனுப்பிட்டு, நிச்சயதார்த்தம் போது பெண்ணின் சகோதரன் வேண்டுமே!  என் தம்பியும், ரங்க்ஸின் தம்பியும் ஆட்டோவில் வரோம்னு சொல்லி இருக்காங்க.  இவங்க இரண்டு பேரும் ஆட்டோவில் வந்து சேர ஐந்து மணி ஆயிடுச்சு.  ஆனால் பையரும், நாத்தனார் கணவரும் வரலை.  இவங்க வந்ததுமே, அவங்க வந்தாச்சானு கேட்க, நாங்க வரலைனு சொல்ல இருவருக்கும் திகைப்பு.  நாலு மணிக்கே அனுப்பிட்டு, நாங்க கொஞ்ச தூரம் நடந்து வந்து ஆட்டோ பிடிச்சோம்.  அம்பத்தூருக்குனு வரமாட்டேனு சொல்றாங்க.  ஆட்டோ பிடிச்சு வரதுக்குத் தான் இத்தனை நாழி ஆச்சு.  அவங்க அப்போவே வ்ந்திருக்கணுமேனு சொல்றாங்க.

மணி ஆறும் ஆச்சு, ஆறரையும் ஆச்சு.  இதுக்குள்ளே முழு விஷயமும் பிள்ளை வீட்டுக்கும் தெரிஞ்சு போக அவங்களும் பெண்ணின் தம்பி வரட்டும் அப்புறம் தான் நிச்சயம்னு சொல்லிட்டாங்க.  புரோகிதர்கள் வந்தாச்சு. உறவினர்கள் வந்தாச்சு. சத்திரத்தில்  எல்லா நாற்காலிகளும் நிரம்பி வழியறது. மணி ஏழும் ஆச்சு. இவங்க ரெண்டு பேரையும் காணவே காணோம்.  இப்போ எங்க நாத்தனாருக்கும் கவலை வர அவளும் ஒரு பக்கம் அழ ஆரம்பிச்சாச்சு. ஏழரை மணி.  ம்ஹூம் இரண்டு பேரும் வரவே இல்லை.!!!!


Friday, February 07, 2014

இதோ, இவன் தான் மோதி!


இவன் தான் எங்க மோதி. படங்கள் இன்னும் இருக்கின்றன.  ஆனால் எல்லாம் எடுக்க முடியா உயரத்தில் உள்ளன. வெளியே வைச்சிருக்கும் இந்தப் படத்தை வீட்டுக்கு வந்தவங்க பார்த்திருக்கலாம். கண் திறக்காமல் வந்த இந்தக் குட்டியை நானும் பெண்ணுமாகப் பார்த்துக் கொண்டாலும் இது என்னமோ நான் சாப்பாடு கொடுத்தால் தான் சாப்பிடும்.  நான் வெளியே சென்றால் எங்க பொண்ணு சாப்பாடு கொடுத்தால் அது பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும்.  சாப்பிடாது.  நான் வந்தப்புறமாத் தான் சாப்பிடும்.  இது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.  ஆனால் நாய் காவலுக்குனு வளர்க்கிறச்சே மத்தவங்க சாப்பாடு கொடுத்தா சாப்பிடாதது நல்லது தான் என மருத்துவர் சொன்னாலும், வீட்டில் உள்ள மத்தவங்களை விட்டும் சாப்பாடு கொடுத்துப் பழக்கினோம். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது.

லூட்டி அடிக்கும். தினம் சாயந்திரம் அலுவலகத்திலிருந்து வரும் ரங்க்ஸ் இதுக்கு பொறை, பிஸ்கட், ப்ரெட்னு வாங்கிட்டு வருவார்.  இது வந்தப்போ பையர் குஜராத்தில் படிச்சுட்டு இருந்தார்.  அவர் கிட்டே இதோட ஒவ்வொரு கட்ட வளர்ச்சி குறித்தும் நேர்முக வர்ணனை கொடுப்போம்.  அவரும் தீபாவளி லீவுக்காக வந்தார்.  வரும்போதே இது ஆக்ரோஷக் குலையல்.  பையர் நடுங்கிட்டுத் தான் வந்தார்.  ஆனால் அரைமணி நேரத்திலேயே சிநேகம் ஆகிவிட்டது.  இது கிட்டே புதுசா யாரானும் வந்தாங்கன்னா அவங்களை நாம தொட்டுக் கொண்டு, "ஃப்ரன்ட்" "ஃப்ரன்ட்" அப்படினு சொல்லிக் கொடுத்தால் போதும்.  அடுத்த முறை அவங்களைப் பார்த்தால் குலைக்காது.  ஆனால் தெரிஞ்சவங்களுக்குனு தனிக் குரல்.  மத்தவங்களுக்கு வேறு குரல்னு வைச்சுக்கும்.

இதுக்குக் கழுத்துக்கு மணியெல்லாம் வாங்கி அலங்கரித்தது நம்ம ரங்க்ஸ் தான். குட்டியா இருந்ததால் எங்கே இருக்குனு சமயத்திலே தெரியாமல் இருந்தது. அப்போக் கட்ட ஆரம்பிச்சது. அது பெரிசா ஆனப்புறமாக் கூட பெல்ட் மாத்தறச்சே மணியை வாயில் கவ்விக் கொண்டு வந்து கொடுத்து கட்டச் சொல்லும்.  பையரோட சிநேகம் ஆகி அவர் காலடியிலேயே கிடக்கும். ஆனாலும் உள்ளூர அவரிடம் இதுக்கு ஒரு பயமும் உண்டு.  ஒருநாள் மொட்டை மாடியில் பையர் பரிக்ஷைக்குப் படிச்சுட்டு இருந்தார்.  தேநீர் கேட்டிருந்தார்.  தேநீர் போட்டுட்டு மேலே கொண்டுவரவானு கேட்டதுக்குக் கீழே வரேன்னு சொல்லிட்டு வந்தார். புத்தகத்தை மாடியிலேயே நாற்காலியில் வைச்சுட்டு வந்துட்டார்.  நல்ல காற்று நாள்.  காற்றிலே புத்தகம் பக்கம், பக்கமாகப் பறக்க நம்ம மோதியார் பையரோட மாடியிலே இருந்தவருக்குக் குஷி தாங்கலை.

புத்தகத்தை நாற்காலியில் இருந்து கீழே தள்ளி உருட்டிப் புரட்டி ஒரு வழி பண்ணிட்டார்.  தேநீர் குடிச்சுட்டு சாவகாசமாப் பையர் மேலே போய்ப் பார்த்தால் இது ஏதோ பெரிய சாதனை பண்ணிட்டாப்போல் அவர் கிட்டே புத்தகத்தைக் காட்டிக் குதியான குதி.  அவருக்கு வந்ததே கோபம். ஒரு அடி கொடுத்துட்டார். புத்தகம் கல்லூரி நூலகப் புத்தகம் வேறே.  பரிக்ஷைக்கும் படிக்க முடியாமல் போச்சு. நல்ல அடி வாங்கிண்டு வந்தது.  அதுக்கப்புறமாக் கீழே ஒரு சின்னத் தாள் இருந்தாலும் பொறுக்காது.  அது தெருவிலே இருந்தால் கூட.

புத்தகம் எப்படியோ சமாளிச்சோம்.  நூலகத்துக்கு வேறே புத்தகம் வாங்கிக் கொடுத்தது.  இதுக்கு மாசா மாசம் மருத்துவர் வந்து பார்க்கிறச்சே அவரைக் கண்டாலே ஓடிப் போய் ஒளிஞ்சுக்கும்.  தடுப்பு ஊசி எல்லாம் போட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்துனு இதுக்கு சிசுருஷை பண்ணிட்டு இருந்தோம். மாத்திரை கொடுக்கிறது தான் பெரிய விஷயம்.  அதுக்கும் பொண்ணு ஒரு வழி கண்டு பிடிச்சா. இதுக்குச் சப்பாத்தின்னா ரொம்பப் பிடிக்கும்.  சப்பாத்திக்குள் மாத்திரையைச் சுருட்டி வைச்சு அதை அப்படியே லபக் பண்ண வைப்பா. எங்க பொண்ணை ஒருதரம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல எங்க அண்ணா பையர் வந்தார். அவரை உள்ளேயே விடலை.  பொண்ணை அழைச்சுட்டுப் போறாராம்.  அதுக்காகக் கோபம். எங்க பொண்ணையும் வெளியே விடலை.  வீட்டிலே இரண்டு வாசல் இருந்ததால் இன்னொரு வாசல் வழியாகப் பொண்ணு வெளியே வந்தா.  அதுக்குள்ளே இதைப் பிடிச்சுக் கட்டிப் போட்டு வைச்சோம்.

அவ கல்யாணத்தையும் இதுக்காகவே அம்பத்தூரிலேயே வைச்சோம். நாங்க யாரும் வீட்டிலே இல்லைனா பாடாய்ப் படுத்திடும். அக்கம்பக்கம் எல்லாம் புகார் வரும்.  ஆகவே சொந்தக் காரங்க கல்யாணம்னா எங்க பக்கத்துக் கல்யாணங்களுக்கு நான் மட்டும் போவேன்.  அன்னிக்கு ரங்க்ஸ் லீவு போடுவார். பொண்ணையும் சில சமயம் அழைச்சுட்டுப் போறாப்போல் இருக்குமே.  அவர் பக்கத்துக் கல்யாணம்னால் அவர் மட்டும் போவார்.  சொந்தக்காரங்க இதைப் புரிஞ்சுக்கலங்கறது வேறே விஷயம்! :))) மத்தவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு யாரானும் ஒருத்தர் போனாப் போதும்.  சொந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு வீட்டோட எல்லாரும் போகணுமே!  அதுக்காகவே வீட்டிலிருந்து கிட்ட இருக்கும் சத்திரமாவே பார்த்தோம்.  கிடைத்தது.  வீட்டிலிருந்து ரங்க்ஸோ, நானோ, பையரோ யாரானும் அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போகலாம்னு முடிவு.

அப்படித் தான் கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம், நாந்தி எல்லாம் நடந்துட்டு இருந்தப்போ, இதுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் பையர் ஸ்கூட்டரிலே வீட்டுக்குப் போனார்.  போற வழியிலே தெருவிலே ஒரு முக்கிலே புதுசா வீடு கட்டிட்டு இருந்தாங்க.  அந்தத் தெரு வழியாப் போனால் எங்க வீடு நேரே வரும்.  இல்லைனா அடுத்த தெருக்கள் வழியாச் சுத்தி வரணும்.  பையர் இப்படியே போயிடலாம்னு முடிவு பண்ணி வந்திருக்கார். கூட என்னோட தம்பி மனைவியும்.  அவளை முக்கிலே இறக்கிட்டு, அவங்க போய் ஏதோ துணி எடுக்க அவங்க வீட்டுக்குப் போக அனுப்பிட்டு இங்கே திரும்பி இருக்கார்.  கம்பி கட்டறவங்க நட்ட நடுவிலே கம்பிகளைப் போட்டுப் பெரிய உளியால் கம்பிகளை வெட்டிட்டு இருந்திருக்காங்க.  பையர் வழி கேட்டுக் கொண்டே மெல்ல வருகையில் கிக் ஸ்டார்டர் ஒரு கம்பி கட்டறவரோட முழங்காலுக்குக் கீழே பட்டுக் காயத்தை ஏற்படுத்தி விட்டது.  அவர் கோபத்தோட பையரைப் பார்த்துக் கூச்சல் போட்டுக் கொண்டே அந்த உளியை ஓங்கி அவர் தலையில் போட்டிருக்கார்.

Thursday, February 06, 2014

ரத சப்தமி- ஒரு மீள் பதிவு! தெரியாதவங்களுக்காக!



இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு. 

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள். இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே நகருவது போலப் போடுவதே வழக்கம். (ஹிஹி, போன வருஷம் இதை எழுத மறந்து போச்சு, இன்னிக்குக் காலம்பர கோலம் போடறச்சே நினைச்சேன், எழுதினேனா பார்க்கணும்னு, எழுதாமல் விட்டிருக்கேன்.) தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும். 

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் எருக்க இலை என்றாலே யாருக்கும் தெரியறதில்லை, யாரும் குளிக்கிறதும் இல்லை எருக்க இலைகளை வைத்துக் கொண்டு. இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு.

Wednesday, February 05, 2014

செல்லத்தோடு சில வருடங்கள்!

கொஞ்ச நாட்களாக செல்லப்பிராணிகள் குறித்துக் குறிப்பாய் நாய்கள் குறித்து அதிகம் படிக்க, கேட்க நேர்ந்தது.  முகநூலில் ஶ்ரீராம் அவரோட செல்லம் பேப்பரைக் கிழித்தது குறித்துப் பெருமைப்பட்டிருந்தார்.   எங்க மோதி பேப்பர் என்ன மெகானிகல் இஞ்சினியரிங் புத்தகத்தையே படிச்சுக் கிழிச்சிருக்கான். இதெல்லாம் ஜுஜுபி! :)))) மோதி வந்த கதை தான் இப்போச் சொல்லப் போறேன்.

இரண்டு நாட்கள் முன்னால்  சென்னையில் இந்திய நாய்கள் வளர்ப்பை அதிகரிக்கச் சொல்லி ஒரு கண்காட்சி நடத்தி இருக்காங்க.  எந்தவிதமான பேதமும் காட்டாமல் கலந்து கொண்ட எல்லா நாய்களுக்கும் பரிசும் அளிச்சிருக்காங்க. கல்கியிலும் செல்லம் வளர்த்த கதை குறித்து விமரிசனம் ஶ்ரீராம் எழுதி இருக்கார்.   இதிலே நாங்க நாய் வளர்த்த கதைகள் எல்லாமும் நினைவில் மோதின.

சின்ன வயசில் எல்லாம் அதிகம் தெரு நாய் பார்த்ததில்லை. இத்தனை நாய்கள் தெருக்களில் உலா வந்து சென்னையில் தான் அதிகம் பார்த்திருக்கேன். ஆனால் மதுரையிலும் தெரு நாய்களை விட அதிகம் பயந்தது மேலாவணி மூலவீதியில் இருந்தப்போப் பக்கத்து வீட்டில் வளர்த்த சான்டி என்னும் நாயைப் பார்த்தே! :) அது என் அம்மாவைக் கடித்தும் விட்டது.  அம்மா ஜிஎச்சிலே போய் ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை! ஆகையால் நாயெல்லாம் நினைச்சே பார்த்தது இல்லை.

ஆனால் கல்யாணம் ஆகி வந்ததும் புகுந்த வீட்டில் தெருநாய்களே செல்லங்களாக இருந்ததையும் பார்த்தேன். உள்ளூரக் கொஞ்சம் பயம் தான் என்றாலும் அது என்னை அங்கீகரித்துவிட்டதை வாலாட்டித் தெரிவிக்கவே கொஞ்சம் நிம்மதியும் கூட.  என்றாலும் சாதம் வைக்கவெல்லாம் போகவே மாட்டேன்.  நம்ம ரங்க்ஸோ நாய்க்குட்டியைப் பக்கத்தில் படுத்துக்க வைக்கும் ரகம். அது புரிய எனக்குக் குழந்தை பிறக்க வேண்டி இருந்தது. ஹிஹிஹி, கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் நாயெல்லாம் ஒண்ணும் வைச்சுக்கலை. நானும் வேலைக்குப்போனதாலோ என்னமோ தெரியலை. அதுக்கப்புறமா குழந்தை பிறந்து நாற்பத்தைந்து நாளிலேயே நான் ஏகப்பட்ட அமர்க்களத்துடன் மதுரையிலிருந்து சென்னைக்கு இரண்டு நாட்கள் பிரயாணம் செய்து சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் தான் ஆரம்பிச்சது நாய்க்கும் எனக்குமான தொடர்புகள்.

எல்லா அப்பாக்களும் குழந்தைக்குத் தொட்டில், சட்டை, பொம்மைனு வாங்குவாங்க.  நம்ம ரங்க்ஸோ அவர் நண்பர் ஒருத்தர் கிட்டேச் சொல்லி வைச்சுக் குழந்தையையும், என்னையும் பார்த்துக்க(!!!!!!!!!!!!!) எங்களுக்குத் துணைக்குனு ஒரு நாய்க்குட்டியை வரவழைச்சிருந்தார்.  வீட்டிலே ஒரு புதிய ஜந்துவின் நடமாட்டம்.  ஒரு பக்கம் குழந்தையின் அழுகை ஆரம்பிச்சால், இந்த நாய்க்குட்டியும் இன்னொரு பக்கம் "கீங்கீங்க்" என்று கத்திக் கொண்டிருக்கும்.   எங்க பொண்ணு குழந்தையாய் இருக்கிறச்சேயே தூளியை விட்டு வெளியே எடுத்தால் தான் மூச்சா, ஆய் எல்லாம் போவா!  ஆனால் இவரோ எல்லாம் இருக்கிற இடத்திலேயே.  ஆக இரண்டு குழந்தைகளைப் பார்த்துக்கும்படி ஆயிடுச்சு என்னோட நிலைமை.  என் அம்மா இருக்கிற வரைக்கும் அவங்க கொஞ்சம் உதவிக்கு வருவாங்க.  அம்மா மதுரை போனதும் காலம்பர பத்து மணியிலிருந்து சாயந்திரம் ஐந்து மணி வரை நாய்க்குட்டி ஒரு பக்கமும், குழந்தை இன்னொரு பக்கமுமாப் பார்த்துக்கணும்.

இந்த அழகிலே என்னோட அண்ணா வேறே எங்களோட இருந்தாரா?  ஒருநாள் எங்க பொண்ணு மூச்சாப் போயிட்டானு துணி மாத்தப் போனாரா? இந்த நாயார் "வள் வள்"னு குரைச்சுட்டு அவரைக் கடிக்கப் போயிட்டார். (ஏற்கெனவே பல முறை சொல்லி இருக்கேன்.) அதோட எப்போவும் நான் கூடவே இருக்கிறதாலே நான் பாத்ரூம் போனால் கூட காலிடுக்கில் புகுந்து நுழைந்து கொண்டு கூடவே வரும்.  பால் வாங்கப் போனால் அதை ஏமாத்திட்டுப் போனால் கூட வேலி வழியா நான் போறதைப் பார்த்துட்டு வேலி தாண்டிக் குதிச்சு என்னோட வந்துடும்.  இப்படி ஒருநாள் வரச்சே தான் வண்டியிலே அடிபட்டுச் செத்துப் போச்சு! அது எங்களுக்குத் தெரியலை.  மறுநாள் தான் பக்கத்துவீட்டு மாமி பார்த்துட்டுச் சொன்னாங்க.  நாயைக் காணோமேனு நினைச்சுட்டு இருக்கிறச்சே இதைக் கேட்டதும் வருத்தமாயிடுச்சு.  ஆனால் அதன் பிறகு இன்னொரு நாயைக் கொண்டு வரலை. ஏன்னா அதுக்குள்ளே எனக்கு டைஃபாயிட் வந்து படுத்த படுக்கை.  அம்மா வந்து அழைச்சுட்டுப் போயிட்டாங்க.  நாயைப் பார்த்துக்க ஆளில்லைனு நாய் வைச்சுக்கலை.  நான் உடம்பு சரியாப்போய்த் திரும்பி வந்ததும் ராஜஸ்தானுக்கு மாற்றலும் ஆயிடுச்சு!

அங்கே செல்லங்களை வளர்க்கணும்னு இல்லாமல் அதுங்களாகவே நம்ம வீட்டுக்கு வந்து வளர ஆரம்பிச்சது.  இப்படி வர ஆரம்பிச்சவற்றில் ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனை, ஒரு சிட்டுக்குருவி ஜோடி, ஒரு புறா ஜோடி, ஆகியன.  ஒரு கிளியும், ஒரு மரங்கொத்தியும் கூடப் பழக்கம் ஆச்சு.  ஒரு தரம் ஒரு மீன் கொத்தி அடிபட்டுக் கொல்லை முற்றத்தில் விழ அதுக்கு சிசுருஷை பண்ணப் போன ரங்க்ஸ் கையை அது நல்லாக் கொத்திடுச்சு.  ஆனாலும் வீட்டை விட்டு வெளியே பறந்து போக முடியலை.

அது என்ன சாப்பிடும்னு புரியலை.  மீனுக்கு எங்கே போறது? :)))) ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உடைச்ச தானியங்களைப் போட்டு இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரும் வைச்சேன். அது மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து வீட்டு ஹாலைத் தாண்டி வாசல் வராந்தாவுக்கு வந்துடுச்சு.  அப்படியே மெல்ல மெல்ல அதை நகர்த்தி வாசல் கருவேல மரம் வரை கொண்டு போனோம்.  கருவேல மரத்தருகே அதை விட்டுட்டோம்.  அப்புறமா என்ன ஆச்சுனு தெரியலை.

அங்கே இங்கே சுத்திட்டுக் கடைசியா பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும்னு சென்னைக்கே வந்தோமா, வந்தவுடனே எங்க பொண்ணு பக்கத்து வீட்டுப் பையர் கிட்டே நாய்க்குட்டி கேட்டா. உடனே ஒரே வாரத்தில் அவங்க கம்பெனியில் ஒரு பெண் நாய் போட்டிருந்த குட்டியைத் தூக்கி வந்து கொடுத்தார் அந்தப் பையர். 1995 ஆம் வருஷம் செப்டம்பர் மாசம் இப்படி எங்க கிட்டே வந்தவன் தான் மோதி.  அதுக்கு மோதினு பெயர் வைச்சது எங்க பொண்ணு தான்.  அவங்க அப்பா மாதிரி அவளுக்கும் நாய்களிடம் பிரியம் அதிகம். இது சின்னக் குட்டியாகக் கண்ணே திறக்காமல் வேறே இருந்தது. புசுபுசுவென ஒரு கறுப்புப் பந்து போல் உருண்டு உருண்டு வரும்.


Tuesday, February 04, 2014

நைமிசாரண்யம்-- அநுமன் கடியில்--படங்களுடன்

நைமிசாரண்யத்தில் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவிட்டுக் கடைசியில் லலிதா தேவி கோயிலைப் பார்க்க இருந்தோம்.  அதற்கு முன்னால் நாங்கள் சென்ற இடம் அனுமன் கடி என்னும் இடம்.  சித்ரகூடத்தில் அனுமான் தாராவை மலை ஏறிப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு நிறையவே இருந்தது.
அந்த வருத்தம் இங்கே அறுபது, எழுபது படிகள் மேலே ஏறி அனுமான் கடியில் அனுமனைத் தரிசிக்கையில் கொஞ்சம் தீர்ந்தது என்பதே உண்மை.

பாதாளத்தில் இருந்து அநுமன் மேலே வருவதால் மிகப் பெரிய உருவம். அதை முழுவதும் எடுக்க முடியலை.  ஓரளவுக்குக் கீழ்ப் பாதியும், மேல் பாதியுமாக எடுத்தேன்.  என்றாலும் முழுவதும் வரவில்லை. :(



அதே அநுமனைக் கொஞ்சம் தள்ளி நின்று எடுக்க முயன்றேன்.  கீழ்ப்பாகம் வரலை. :(  ஏணி மேல் ஏறித்தான் அபிஷேஹம், அலங்காரம் எல்லாமும். :)

இங்கே ஶ்ரீராமனையும், லக்ஷ்மணனையும் அஹிராவணன், மஹி ராவணன் இருவரிடமிருந்தும் காத்து அனுமன் அழைத்து வந்த இடமாகச் சொல்லப்படுகிறது.  இருவரையும் தன் தோள்களில் சுமந்து  கொண்டு அசுரன் அஹிராவணன்  பாதாளத்திற்குச் சென்றுவிட்டானாம்.  இருவரையும் அனுமன் பாதாளம் சென்று அஹிராவணனைக் கொன்று மீட்டு வந்த போது அனுமனின் மகன் மகரத்வஜன் அனுமனின் பாதையை மாற்றிச் செல்லும்படி சொல்ல, அப்போது அனுமன் அவர்களோடு வந்து சேர்ந்த இடம் நைமிசாரண்யம் எனப்படுகிறது.


இங்கே அனுமனின் பிள்ளையாகக் கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது.  அதைத் தவிரவும் பல சந்நிதிகள் இருக்கின்றன.

 நம்ம நண்பர்!  இவர் இல்லாத இடமே இல்லை. :)))


நாங்கள் சென்ற சமயம் அங்கே பல சாதுக்களுக்கு ஆந்திராவில் இருந்து வந்திருந்த ஒரு தெலுங்குக் குடும்பம் அன்னதானம் அளித்துக் கொண்டிருந்தது.  அன்னதானம் என்றால் சும்மா சாதாரணச் சாப்பாடு எல்லாம் இல்லை. பூரி சப்ஜி, பாயசம், கோதுமை லட்டு, சாதம், தால் போன்ற முழுச் சாப்பாடு.  எல்லாரும் பந்தியில் அமர்ந்து கொண்டிருக்க அவர்களே பரிமாறினார்கள்.  படம் எடுக்கவில்லை.  ஏனெனில் பெண்கள் அதிகமாய் இருந்ததால் அவங்க படங்கள் எடுப்பதை விரும்ப மாட்டார்கள் என்று எடுக்கவில்லை.