எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 17, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 3

காணாமல் போன நடுவர் அவர்களே,

நடுவரைத் தேடிக் கொண்டிருக்கும் இரு அணித் தலைவ, தலைவியரே,

இது நியாயமா, தர்மமா?  கடைசி பெஞ்சில் இருந்தவளை வேலை மெனக்கெட்டு அழைத்துப் பட்டிமன்றத்தில் பங்கெடுக்கச் சொல்லிட்டு  இப்போ எல்லாரும் காணாமல் போனதுக்கு என்ன காரணம்??  நான் பாட்டுக்கு எட்டி எட்டிப் பார்த்து அவ்வப்போது சிரிச்சுக்கிட்டிருந்தேன்.  யார் கண்களிலும் படக் கூட இல்லை.  இப்போப் பாருங்க, தன்னந்தனியாக் கூவிட்டு இருக்கேன்.  நாளைக்குப் போட்டியில் வெற்றி, தோல்வியை அறிவிக்கப் போவது யார்? பொற்கிழியைப் பெறப்போவது  யார்?



என் கேள்விக்கு என்ன பதில்?
என் கேள்விக்கு என்ன பதில்?


தோழியும் தூது போகிறாள்.  தலைவியின் மடலைக் கொடுக்கிறாள். உடனே காதலன் பதில் மடல் எழுதுகிறான்.  அதுவும் எங்கே தன் கண்களில்!

http://www.youtube.com/watch?v=Zy8RM-nayTg

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
என் கண்களில் எழுதி வந்தேன்

இந்தப் பாடலில் காதலியை மிகவும் அருமையாக மான்விழியே என அழைக்கிறான்.  அதோடு இல்லாமல், கம்பராமாயணத்தில் ஶ்ரீராமனும், சீதையும் கண்களால் பேசிக் கொண்டதைக்குறிப்பிடுவது போல் இங்கேயும் தன் கண்களிலேயே அந்தக் கடிதத்தை எழுதி வந்ததாகவும் கூறுகிறான்.

அப்படினு பாடிட்டுக் கடிதம் எழுதித் தோழியிடம் கொடுத்துவிட்டுத் தலைவியைத் தொலைபேசியில் பேசச் சொல்லுகிறான்.  அவளும் வீட்டில் யாரும் இல்லாத சமயமாய்ப் பார்த்துத் தொலைபேசுகிறாள்.  இங்கே தங்கள் படிப்பறிவையும் காட்டிக்கொள்கின்றனர் இந்தப் பாடல் மூலமாக.

http://www.youtube.com/watch?v=-IPts7W8WsQ

ஹலோ ஹலோ சுகமா
ஆமா நீங்க நலமா?

என்று இருவரும் தொலைபேசியிலேயே நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.  பின்னர் தோழியுடன் தலைவி செல்லும் ஒரு நிகழ்ச்சிக்குக் கதாநாயகனும் வருகிறான்.  ஆனால் மாறுவேடத்தில்.  அங்கே தான் வில்லன் கோஷ்டி ஆட்கள் இருப்பாங்களே!  ஆனால் தலைவிக்குத் தன் காதலன் வந்திருப்பது தெரிஞ்சு போச்சு.  தான் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பால் காதலனுக்கு உணர்த்துகிறாள் கீழ்க்கண்ட பாடல் மூலமாக.

http://www.youtube.com/watch?v=JnY7aCBaF0g

"மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?
அழகர் மலை அழகா இந்தச் சிலை அழகா?

என்று பாட ஆரம்பிக்கிறாள்.  யாரானும் தன்னைப் பார்த்துடப் போறாங்கனு தலைவன் ஓட்டம் பிடிக்கிறான். இவளோ விடாமல் அவன் எங்கே சென்றாலும் தான் அவனுடன் தான் இருப்பேன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ போபோபோ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா

பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் - நீ
பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

என்று தொடர்ந்து செல்கிறாள். அப்போது இனிமையான காற்று வீச, அவள் மனம் அதில் லயிக்கிறது.  மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கையை ரசிக்கும் அவள் மனதில் அப்போது காதல் நினைவுகளும் தென்றலைப் போல் வீசுகின்றன.

http://www.youtube.com/watch?v=8SHUS6Mm5Mk

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு.


தென்றல் காற்று தழுவிச் செல்வதை எப்படி அனுபவிக்கிறாள் பாருங்கள்.  இன்றைய பாடல்களில் இவற்றைப் பார்க்க முடியுமா? பாடல்களே ஒரு புயல் வீசுவதைப் போன்ற சப்தங்கள், இரைச்சல்கள், கூச்சல்கள், புரியாத மொழி!

அப்படியே வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.  ஆனாலும் காதலன் நினைவு வாட்டுகிறது  ஜன்னலைப் பிடித்துக் கொண்டு வெளியே பார்க்கிறாள்.  அங்கே ஒரு தென்னை மரம்.  அதில் இரு  கிளிகள் ஒன்றையொன்று கொஞ்சுகின்றன.  தோட்டத்தில் மலர்கள் மலர ஆரம்பித்திருக்கின்றன.  உடனேயே தோட்டத்துப் பூக்களைப் பார்த்து,



என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே


மறுபடி இயற்கையின் அழகில் மனதைப் பறி கொடுப்பவளுக்குக் காதலும் தோன்றுவது அந்த இயற்கையால் தானே!


பி.கு.  நாளைக்கு முடிச்சாலும் முடிச்சுடுவேன்.  அப்புறமா எல்லாருக்கும் ஜாலிலோ ஜிம்கானா தான்! :)))))

17 comments:

  1. இது வெளியாகும் முன்னே அடுத்த பகுதி வெளியாகி டிடியோட கமென்டும் வந்துடுச்சு! :)))))

    ReplyDelete
  2. தென்றல் வந்து என்னை... + என் வீட்டுத் தோட்டத்தில்... - அட... அக்காலப் பாடல்களுடன் இடைக்காலப் பாடல்களையும் இணைத்தது நல்ல ரசனை...

    இன்றைய பாடல்களில் இவ்வாறு இருக்காது என்பதும் உண்மை தான்... ஆனாலும் வரிகள் ரசிக்கும் படி, இசை அதிகம் இல்லாமல் கேட்கும் படி, சில பாடல்களும் உள்ளன...

    பாடல்களை தேட ஆரம்பித்தால் தேடிக் கொண்டே இருக்கலாம்... சிறிது சிரமம் இருந்தாலும் கச்சிதமான பாடல்களை இணைத்து விட்டால், அந்த திருப்தியே தனி...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  3. 'தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று துயர் கொண்டாயோ தலைவி' பாடல் சேர்த்திருக்கலாமே!

    "நான் அனுப்புவது கடிதம் அல்ல... உள்ளம்..."
    ஹலோ மை டியர் ராங் நம்பர்... கேட்டது உந்தன் குரல் சொர்க்கம்...

    இப்படி ஒவ்வொன்றுக்குமே எனக்கும் வெவ்வேறு பாடல்கள் தோன்றுகின்றன!

    //முத்தம்மிடும்,// நோ 'ம்'!

    //பண்ணீரை// பன்னீரை!


    .

    ReplyDelete
  4. கடைசி பாட்டு சினிமா பாட்டா?

    ReplyDelete
  5. ஜன்னல் கம்பியை கேட்கணுமா.. ஹ்ம்.

    ReplyDelete
  6. வாங்க டிடி, நன்றி. 2000 ஆம் வருஷத்துடன் சேர்ந்த பாடல்களைத் தான் பழைய பாடல்கள் வரிசையில் சொல்லி இருந்தாங்க. அதனால் இடைக்காலப் பாடல்களும் வந்துவிட்டன! :))))

    ReplyDelete
  7. ஶ்ரீராம், என்ன படிக்கிறீங்க போங்க, தேர்வு வைச்சால் நீங்க அரியர்ஸ் தான் வாங்கப் போறீங்க. இந்தப் பாடலை ஏற்கெனவே முதல் பகுதியிலேயே சேர்த்துட்டேன். :)))) அவ்வளவு அழகாப் படிக்கிறீங்க! :))))))))))
    விவிசி.

    நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்! :))))

    ReplyDelete
  8. அப்பாதுரை,

    ஆமாம், சினிமாப்பாட்டுத் தான். பல வருஷங்களுக்கும் இந்தப் பாட்டு "பூவெல்லாம் கேட்டுப் பார்" படப்பாடல்னே நினைச்சேன். இப்போத் தான் தேடும்போது ஜென்டில்மேன் படப் பாடல்னு தெரிய வந்தது. ஹிஹிஹி, பாடல்களோடு பரிச்சயம் ஆன அளவுக்குப் படங்களோடு பரிச்சயம் இல்லை! :)))) பாடல்களைக் கேட்டே பழக்கம்.

    ReplyDelete
  9. நீங்க வேறே அப்பாதுரை, ஜன்னல்கம்பி மட்டுமா?

    "என் வீட்டுச் சமையலறையில் நீ உப்பா, சர்க்கரையா" னு கூட ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?

    இன்னும் புளியா, தக்காளியா, சாம்பாரா, ரசமானு தான் வரலைனு நினைக்கிறேன். :P :P :P :P

    ReplyDelete
  10. ஶ்ரீராம், உங்களையோ, டிடியையோ கேட்கணும்னு தான் முதல்லே நினைச்சேன். அப்புறமா நம்மளுக்கு எவ்வளவு தெரியுதுனு பார்க்கலாமேனு ஒரு எண்ணம். அதான் எனக்கு நினைவில் வந்த பாடல்களை மட்டுமே தொகுத்தேன். :))))

    ReplyDelete
  11. ஜென்டில்மேன்னு ஒரு படமா? ரைட்டு. சமீபத்துல ஒரு படம் பேரு இதுக்கா ஆசைப்பட்டாய் பாலகுமாரானு வச்சிருந்தாங்க.. ஜென்டில்மேன் தேவலாம்.

    ReplyDelete
  12. உப்பா சர்க்கரையா... ரொம்ப கருத்தாழம்.

    ReplyDelete
  13. எழுதினவர் வைரமுத்தா?.ஒரு கீபல் பரிசு ரெடியா இருக்கு.

    ReplyDelete
  14. ஆமாம், அப்பாதுரை, நேத்திக்குக் கூட எதிலேயோ, "இதுக்குத் தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா"னு ஒரு சினிமாப் படம் இருக்கிறதைப் படிச்சுட்டு நானும் ஆச்சரியப்பட்டேன். இன்னொரு படத்தோட பெயர், "நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!" :))))

    ReplyDelete
  15. அந்தப் பாடல் எழுதினது வைரமுத்துவா யாருனு நம்ம டிடியோ, ஶ்ரீராமோ தான் சொல்லணும் அப்பாதுரை!:)))

    ReplyDelete
  16. ஆமாம், உப்பா, சர்க்கரையால இல்லாத கருத்தாழமா? :))))) இது ஏதோ கமலஹாசன் படப் பாடலோனு நினைக்கிறேன். அவர் தானே அறிவு ஜீவி! :)))))

    ReplyDelete
  17. நல்ல பாடல்கள்.....

    எதிர் அணியிலிருந்து இன்னும் யாரும் பாட்டு எழுதலை போல!

    ReplyDelete