ஆனால் இத்தனை வளங்கள் இருந்தும் சிறு பிள்ளைகள், பள்ளியில் படிக்கும் வயதில் உள்ளவர்கள் அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளைத் தொந்திரவு செய்து பிச்சை கேட்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடப் பிச்சை கேட்கின்றனர். அதோடு எல்லா இடங்களிலும் யாகங்களும், யக்ஞங்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான பண வசூல் வேறே குறைந்த பக்ஷம் ஐந்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்கிறது. பேரம் பேசினால் ஐநூறுக்கு வரலாம். ஆனால் அவர்கள் பேசும் முறை சரியில்லை. இதைச் செய்யவில்லை என்றால் உன் குடும்பம் அப்படிக் கஷ்டப்படும்; இப்படிக் கஷ்டப்படும் என்று சாமானிய மக்களைப் பயமுறுத்துவதோடு நாம் வேண்டாம் என விலகிப்போனால், "நீ என்ன தீர்த்த யாத்திரை செய்யறே? தீர்த்த யாத்திரையின் பலனே உனக்குக் கிடைக்கப் போவதில்லை! பணத்தை வைச்சு என்ன செய்யப் போறே? போகும்போது கொண்டு போகப் போகிறாயா?" என்றெல்லாம் பேசுகின்றனர். அதே பணத்துக்குத் தானே அவர்களும் நம்மைக் கேட்கின்றனர் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். அதோடு நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு இடத்திலும் தானம் செய்யுமளவுக்குப் பணம் வேண்டுமெனில் குறைந்தது நாம் இரண்டு லக்ஷமாவது கொண்டு போகவேண்டும். எங்கே! :))))
எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு நைமிசாரண்யத்தில் இருந்து லக்னோ திரும்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நாங்க தங்கி இருந்த லாட்ஜின் சாப்பாட்டுக் கொடுமையை நினைத்துக் கொண்டு நாங்க வரும்போதே வெளியில் இருந்து டோக்ளா, கசோடி என வாங்கி வந்துவிட்டோம். பின்னர் அந்த லாட்ஜுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குச் சென்று மறுநாள் காலை ஆகாரம் கிடைக்குமா என விசாரித்தோம். ஆலு பரோட்டா கிடைக்கும் எனச் சொல்லவே மறுநாள் காலை பத்து மணிக்கு வருவதாய்ச் சொல்லிவிட்டு வந்தோம். மறுநாள் விமான நிலையம் செல்ல வேண்டி வண்டிக்கு ஹோட்டல்காரர்களிடமே சொல்லிவிட்டு பத்து மணி சுமாருக்கு பக்கத்து ஹோட்டலுக்குச் சென்று ஆலு பரோட்டாவும், லஸ்ஸியும் சாப்பிட்டோம். பின்னர் ஹோட்டலில் இருந்து அவங்க ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் பயணித்து லக்னோ விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின் போது நான் சோதனை முடிந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என் கைப்பை சோதனையிலிருந்து வெளியே வரவில்லை. என்னடா இது சோதனைனு நினைச்சால் அங்கே இருந்த ஒரு மலையாளக் காவல் அதிகாரிப் பெண்மணி என்னிடம் அரைகுறைத் தமிழில் கைப்பையில் நிறையச் சில்லறை இருப்பதால் எல்லாத்தையும் எடுக்கும்படி சொன்னார். சரிதான் இங்கேயும் சில்லறைப் பிரச்னையானு நினைச்சு எல்லாத்தையும் கையில் வைத்திருந்த துண்டில் கொட்டிக் கொண்டேன். பின்னர் அவங்க முன்னாடியே சாவி, விமான டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றைக் காட்ட அவங்க மறுபடியும் கைப்பையை ஸ்கான் செய்து என்னிடம் கொடுத்தார்கள்.
இதுக்குள்ளாக அந்த மலையாள அதிகாரியும் நானும் சிநேகிதமாகிவிட அவங்க என்னை எங்கே போயிட்டு வரீங்க னு விசாரிக்க நானும் சொன்னேன். அயோத்தியா, இங்கே ட்யூட்டி இருக்கிறச்சேயே நானும் போயிட்டு வந்துடறேன்னு சொல்லி அவங்க எல்லா விபரமும் கேட்டுக் கொண்டு எனக்குப் பிரியாவடை சே விடை கொடுத்து அனுப்பி வைச்சாங்க. மேலே விமானம் ஏறும் நடை மேடைக்கு வந்ததும் இருவரும் பணத்தைப் பத்திக் கவலைப்படாமல் ஆளுக்கு 90 ரூ கொடுத்து இரண்டு காஃபி வாங்கிக் குடித்து எங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டோம். லக்னோவில் இருந்து டெல்லிக்கு விரைவில் வந்த விமானத்திலிருந்து இறங்கி முன்னே சென்றது போல் மற்றொரு பகுதிக்குச் சென்று சென்னை செல்லும் விமானத்திற்குச் சென்றோம். இங்கே பாதுகாப்புச் சோதனையில் அவ்வளவு கெடுபிடி இல்லை. விரைவில் முடித்துக் கொண்டு பின்னர் எந்த வாயில் வழி எனக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து விமானத்திற்குச் சென்றோம். விமானம் மாலை ஏழரைக்குச் சென்னையில் தரை இறங்கியது. அங்கிருந்து ஒரு கால் டாக்சி வைத்துக் கொண்டு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம். எதிரே உள்ள சங்கீதா ஓட்டல் வாசலில் டிரைவர் இறக்கிவிட்டு விட்டுப் பெட்டிகளையும் உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்.
எங்கள் வண்டி இரவு பத்தேமுக்காலுக்குத் தான் என்பதால் நிம்மதியாக உட்கார்ந்து சங்கீதாவில் இரண்டு தோசையும், சூடான காஃபியும் சாப்பிட்டுவிட்டு நடைமேடையில் காத்திருந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து ஶ்ரீரங்கம் காலை வரப்போவதை எதிர்பார்த்துப் படுத்தோம். கடைசியிலே அந்த சங்கீதாவிலே தோசை சாப்பிட்டது தான் எல்லாத்திலேயும் க்ளாசிக்!

திருப்தியான பயணம்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteபயணம் இனிதாக முடித்து விட்டீர்கள். சங்கீதாவில் சாதா தோசையா, ரவா தோசையா? (எனக்கு மற்றதை விட இதுதானே முக்கியம்!)
ReplyDeleteபணம் தராவிட்டால் உங்களுக்கு யாத்திரையின் பலனே கிடைக்காது என்று மிரட்டல் சாபமிடும் அவர்களை என்ன செய்யலாம்?
//கடைசியிலே அந்த சங்கீதாவிலே தோசை சாப்பிட்டது தான் எல்லாத்திலேயும் க்ளாசிக்!//
ReplyDeleteரொம்ப நாளுக்கப்புறம் நம்மூர்ச் சாப்பாட்டை ருசிச்சிருக்கீங்க இல்லையா?. அதனால்தான் கூடுதல் ருசி :-)))
நல்லபடியாக ஸ்ரீராமனைப் பார்க்க முடிந்தது. கையோடு பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் போய் எங்களுக்கும் புண்ணியம் செய்து வைத்தீர்கள். பத்திரமாகப் போய் வந்ததுதான் மிகச் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி கீதா.
ReplyDeleteநன்றி டிடி.
ReplyDelete(காகாகா)haahaahaahaa ஸ்ரீராம், சாதா தோசை தான். காஃபியும் கூட சாப்பிட்டோம். நல்லாவே இருந்தது.
வாங்க அமைதி, அதே, அதே, சபாபதே
ReplyDeleteஆமாம் வல்லி, நீங்க ஃபோன் செய்தப்போ நைமிசாரணியத்தில் அனுமான் கடிக்குப் போயிட்டிருந்தோம். :))))
ReplyDeleteபயணங்களில் பிரச்சனைகள் இருந்தாலும் பயணம் செய்த நிம்மதி......
ReplyDeleteசங்கீதாவில் சாப்பிட்ட உணவு நிச்சயம் தேவாமிருதமாக இருந்திருக்கும்... :)
வடக்கில் சாப்பிட்ட சாப்பாடு அப்படி! :)))
அன்பு கீதா,
ReplyDeleteஅடுத்த 108 பயணமாக வட இந்தியா போகணும். பத்ரிநாத், நைமிசாரண்யம், ஜோஷிமட், தேவப்ரயாகை கூடவே நேபாளத்தில் முக்திநாத்.
உங்க நைமிசாரண்யம் பதிவு படித்தேன். அதன் தொடர்ச்சி முன்னும் பின்னுமாக எங்கே இருக்கு? சுட்டிகளை அனுப்பித் தந்தால் உதவியாக இருக்கும். முன்கூட்டிய நன்றிகள்.
http://tamil.pratilipi.com/geetha-sambasivam/sriramanin-paadhayil-oru-siru-payanam//
Deleteஇந்தச் சுட்டியில் முழுதும் கிடைக்கும். படிக்கலாம். நைமிசாரணியம் உத்தரப் பிரதேசம். பத்ரிநாத், ஜோஷிமட், தேவப்ரயாகை எல்லாம் உத்தராகண்ட். ரிஷிகேஷில் இருந்தோ ஹரித்வாரில் இருந்தோ காரில் அல்லது சொகுசுப் பேருந்துகள் அல்லது புனித யாத்திரை நடத்துவோர் மூலம் செல்லலாம். எங்களைப் பொறுத்தவரை இங்கே பயணம் செய்ய ஏற்ற மாதம் செப்டெம்பர் தான். தேவப்ரயாகை கொஞ்சம் கீழேயே வந்துடும். எனினும் பத்ரி செல்லும் வழி தான். பத்ரி செல்லும் பாதி வழியில் கேதார்நாதுக்குப் பாதை பிரியும். எனினும் கேதார்நாத் செல்கையில் தீர விசாரித்துக் கொன்டு செல்லவும். ஜோஷிமட்டில் தான் பத்ரி யாத்ரிகர்களை நிறுத்தி மேலே அனுப்பலாமா வேண்டாமா எனக் கேட்டுக் கொண்டு உத்தரவு வந்ததும் அனுப்புவார்கள். மாலை நான்கு மணிக்குள் என்றால் மேலே செல்லமுடியும். இல்லை எனில் ஜோஷிமட்டில் இரவு தங்கிவிட்டுக் காலை தான் செல்ல முடியும்.
நீங்க அயோத்யா போனப்போவே நைமிசாரணியமும் சென்றிருக்கவேண்டும். லக்னோவிலிருந்து நூறு மைலுக்குள் தான்!
Deleteஉண்மைதான். ஆனால் அப்போ காசி மட்டுமே கவனத்தில் இருந்தது. வேற எதையும் நினைக்கத் தோணலை.
ReplyDeleteஉடனடி பதிலுக்கும் சுட்டிக்கும் மிகவும் நன்றி கீதா.