எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 05, 2014

செல்லத்தோடு சில வருடங்கள்!

கொஞ்ச நாட்களாக செல்லப்பிராணிகள் குறித்துக் குறிப்பாய் நாய்கள் குறித்து அதிகம் படிக்க, கேட்க நேர்ந்தது.  முகநூலில் ஶ்ரீராம் அவரோட செல்லம் பேப்பரைக் கிழித்தது குறித்துப் பெருமைப்பட்டிருந்தார்.   எங்க மோதி பேப்பர் என்ன மெகானிகல் இஞ்சினியரிங் புத்தகத்தையே படிச்சுக் கிழிச்சிருக்கான். இதெல்லாம் ஜுஜுபி! :)))) மோதி வந்த கதை தான் இப்போச் சொல்லப் போறேன்.

இரண்டு நாட்கள் முன்னால்  சென்னையில் இந்திய நாய்கள் வளர்ப்பை அதிகரிக்கச் சொல்லி ஒரு கண்காட்சி நடத்தி இருக்காங்க.  எந்தவிதமான பேதமும் காட்டாமல் கலந்து கொண்ட எல்லா நாய்களுக்கும் பரிசும் அளிச்சிருக்காங்க. கல்கியிலும் செல்லம் வளர்த்த கதை குறித்து விமரிசனம் ஶ்ரீராம் எழுதி இருக்கார்.   இதிலே நாங்க நாய் வளர்த்த கதைகள் எல்லாமும் நினைவில் மோதின.

சின்ன வயசில் எல்லாம் அதிகம் தெரு நாய் பார்த்ததில்லை. இத்தனை நாய்கள் தெருக்களில் உலா வந்து சென்னையில் தான் அதிகம் பார்த்திருக்கேன். ஆனால் மதுரையிலும் தெரு நாய்களை விட அதிகம் பயந்தது மேலாவணி மூலவீதியில் இருந்தப்போப் பக்கத்து வீட்டில் வளர்த்த சான்டி என்னும் நாயைப் பார்த்தே! :) அது என் அம்மாவைக் கடித்தும் விட்டது.  அம்மா ஜிஎச்சிலே போய் ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை! ஆகையால் நாயெல்லாம் நினைச்சே பார்த்தது இல்லை.

ஆனால் கல்யாணம் ஆகி வந்ததும் புகுந்த வீட்டில் தெருநாய்களே செல்லங்களாக இருந்ததையும் பார்த்தேன். உள்ளூரக் கொஞ்சம் பயம் தான் என்றாலும் அது என்னை அங்கீகரித்துவிட்டதை வாலாட்டித் தெரிவிக்கவே கொஞ்சம் நிம்மதியும் கூட.  என்றாலும் சாதம் வைக்கவெல்லாம் போகவே மாட்டேன்.  நம்ம ரங்க்ஸோ நாய்க்குட்டியைப் பக்கத்தில் படுத்துக்க வைக்கும் ரகம். அது புரிய எனக்குக் குழந்தை பிறக்க வேண்டி இருந்தது. ஹிஹிஹி, கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் நாயெல்லாம் ஒண்ணும் வைச்சுக்கலை. நானும் வேலைக்குப்போனதாலோ என்னமோ தெரியலை. அதுக்கப்புறமா குழந்தை பிறந்து நாற்பத்தைந்து நாளிலேயே நான் ஏகப்பட்ட அமர்க்களத்துடன் மதுரையிலிருந்து சென்னைக்கு இரண்டு நாட்கள் பிரயாணம் செய்து சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் தான் ஆரம்பிச்சது நாய்க்கும் எனக்குமான தொடர்புகள்.

எல்லா அப்பாக்களும் குழந்தைக்குத் தொட்டில், சட்டை, பொம்மைனு வாங்குவாங்க.  நம்ம ரங்க்ஸோ அவர் நண்பர் ஒருத்தர் கிட்டேச் சொல்லி வைச்சுக் குழந்தையையும், என்னையும் பார்த்துக்க(!!!!!!!!!!!!!) எங்களுக்குத் துணைக்குனு ஒரு நாய்க்குட்டியை வரவழைச்சிருந்தார்.  வீட்டிலே ஒரு புதிய ஜந்துவின் நடமாட்டம்.  ஒரு பக்கம் குழந்தையின் அழுகை ஆரம்பிச்சால், இந்த நாய்க்குட்டியும் இன்னொரு பக்கம் "கீங்கீங்க்" என்று கத்திக் கொண்டிருக்கும்.   எங்க பொண்ணு குழந்தையாய் இருக்கிறச்சேயே தூளியை விட்டு வெளியே எடுத்தால் தான் மூச்சா, ஆய் எல்லாம் போவா!  ஆனால் இவரோ எல்லாம் இருக்கிற இடத்திலேயே.  ஆக இரண்டு குழந்தைகளைப் பார்த்துக்கும்படி ஆயிடுச்சு என்னோட நிலைமை.  என் அம்மா இருக்கிற வரைக்கும் அவங்க கொஞ்சம் உதவிக்கு வருவாங்க.  அம்மா மதுரை போனதும் காலம்பர பத்து மணியிலிருந்து சாயந்திரம் ஐந்து மணி வரை நாய்க்குட்டி ஒரு பக்கமும், குழந்தை இன்னொரு பக்கமுமாப் பார்த்துக்கணும்.

இந்த அழகிலே என்னோட அண்ணா வேறே எங்களோட இருந்தாரா?  ஒருநாள் எங்க பொண்ணு மூச்சாப் போயிட்டானு துணி மாத்தப் போனாரா? இந்த நாயார் "வள் வள்"னு குரைச்சுட்டு அவரைக் கடிக்கப் போயிட்டார். (ஏற்கெனவே பல முறை சொல்லி இருக்கேன்.) அதோட எப்போவும் நான் கூடவே இருக்கிறதாலே நான் பாத்ரூம் போனால் கூட காலிடுக்கில் புகுந்து நுழைந்து கொண்டு கூடவே வரும்.  பால் வாங்கப் போனால் அதை ஏமாத்திட்டுப் போனால் கூட வேலி வழியா நான் போறதைப் பார்த்துட்டு வேலி தாண்டிக் குதிச்சு என்னோட வந்துடும்.  இப்படி ஒருநாள் வரச்சே தான் வண்டியிலே அடிபட்டுச் செத்துப் போச்சு! அது எங்களுக்குத் தெரியலை.  மறுநாள் தான் பக்கத்துவீட்டு மாமி பார்த்துட்டுச் சொன்னாங்க.  நாயைக் காணோமேனு நினைச்சுட்டு இருக்கிறச்சே இதைக் கேட்டதும் வருத்தமாயிடுச்சு.  ஆனால் அதன் பிறகு இன்னொரு நாயைக் கொண்டு வரலை. ஏன்னா அதுக்குள்ளே எனக்கு டைஃபாயிட் வந்து படுத்த படுக்கை.  அம்மா வந்து அழைச்சுட்டுப் போயிட்டாங்க.  நாயைப் பார்த்துக்க ஆளில்லைனு நாய் வைச்சுக்கலை.  நான் உடம்பு சரியாப்போய்த் திரும்பி வந்ததும் ராஜஸ்தானுக்கு மாற்றலும் ஆயிடுச்சு!

அங்கே செல்லங்களை வளர்க்கணும்னு இல்லாமல் அதுங்களாகவே நம்ம வீட்டுக்கு வந்து வளர ஆரம்பிச்சது.  இப்படி வர ஆரம்பிச்சவற்றில் ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனை, ஒரு சிட்டுக்குருவி ஜோடி, ஒரு புறா ஜோடி, ஆகியன.  ஒரு கிளியும், ஒரு மரங்கொத்தியும் கூடப் பழக்கம் ஆச்சு.  ஒரு தரம் ஒரு மீன் கொத்தி அடிபட்டுக் கொல்லை முற்றத்தில் விழ அதுக்கு சிசுருஷை பண்ணப் போன ரங்க்ஸ் கையை அது நல்லாக் கொத்திடுச்சு.  ஆனாலும் வீட்டை விட்டு வெளியே பறந்து போக முடியலை.

அது என்ன சாப்பிடும்னு புரியலை.  மீனுக்கு எங்கே போறது? :)))) ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உடைச்ச தானியங்களைப் போட்டு இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரும் வைச்சேன். அது மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து வீட்டு ஹாலைத் தாண்டி வாசல் வராந்தாவுக்கு வந்துடுச்சு.  அப்படியே மெல்ல மெல்ல அதை நகர்த்தி வாசல் கருவேல மரம் வரை கொண்டு போனோம்.  கருவேல மரத்தருகே அதை விட்டுட்டோம்.  அப்புறமா என்ன ஆச்சுனு தெரியலை.

அங்கே இங்கே சுத்திட்டுக் கடைசியா பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும்னு சென்னைக்கே வந்தோமா, வந்தவுடனே எங்க பொண்ணு பக்கத்து வீட்டுப் பையர் கிட்டே நாய்க்குட்டி கேட்டா. உடனே ஒரே வாரத்தில் அவங்க கம்பெனியில் ஒரு பெண் நாய் போட்டிருந்த குட்டியைத் தூக்கி வந்து கொடுத்தார் அந்தப் பையர். 1995 ஆம் வருஷம் செப்டம்பர் மாசம் இப்படி எங்க கிட்டே வந்தவன் தான் மோதி.  அதுக்கு மோதினு பெயர் வைச்சது எங்க பொண்ணு தான்.  அவங்க அப்பா மாதிரி அவளுக்கும் நாய்களிடம் பிரியம் அதிகம். இது சின்னக் குட்டியாகக் கண்ணே திறக்காமல் வேறே இருந்தது. புசுபுசுவென ஒரு கறுப்புப் பந்து போல் உருண்டு உருண்டு வரும்.


23 comments:

  1. சுவாரஸ்யம்...!

    எத்தனை பிரியம் இருந்தால், உங்களுடன் பழக்கம் வைக்க வந்திருக்கும்...!

    ReplyDelete
  2. ஏகப்பட்ட அமர்க்களம் என்பது தெரியும் தான் அம்மா... ஹிஹி...

    ReplyDelete
  3. உங்களின் தகவலுக்கு மட்டும் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html

    ReplyDelete
  4. நாங்களும் மோதி என்ற பெயரில் ஒரு செல்லம் வளர்த்தோம் என்று சொல்லியிருக்கிறேன். அதன் கூடவே வளர்த்த இன்னொன்றின் பெயர் சாத்தி. அவற்றின் படம் கிடைத்ததும் முக நூல் மற்றும் பதிவுகளில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  5. வீட்டுக்குள் நுழைந்தால் மோத்தி பிரம்பு நாற்காலியில் படுத்திருக்கும் எங்கள் உறவினர்கள் சில பேர் கிண்டல் செய்வார்கள். 'இவங்க வீட்டுல மனுஷங்களுக்கு எல்லாம் நாற்காலி கிடையாது என்பார்கள்!@ மோத்தி கூட என் கூடவே என் அருகில் படுத்துக் கொள்ளும். என் கைகளில் தலை வைத்துப் படுத்துக் கொள்ளும். போர்த்திக் கொண்டிருப்பேன். போர்வையைத் தூக்கி விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்ளும்.

    ReplyDelete
  6. அது உள்ளே படுத்திருக்கும். (கட்டிப் போடும் வழக்கமில்லை) நான் வாசல் திண்ணையில் புத்தகத்தோடு வந்து அமர்ந்து "மோத்தி.." என்று குரல் கொடுத்தால் தலை நிமிர்ந்து பார்த்து விட்டு, புரிந்து கொண்டு, எழுந்து வந்து என் தலைமாட்டில் படுக்கும். அதன் வயிற்றின் மேல் தலை வைத்துப் படுத்து நான் புத்தகம் படிப்பேன்!

    ReplyDelete
  7. ஆமாம், இந்த வாயில்லா ஜீவன்களின் பிரியம் அசர வைக்கும். :)

    ReplyDelete
  8. அமர்க்களம்னு சொன்னால் போதாது டிடி. ஹிஹிஹி, அதை எல்லாம் ஏற்கெனவே பலமுறை எழுதிட்டேன். :))

    ReplyDelete
  9. பார்த்தாச்சு, பார்த்தாச்சு! :)

    ReplyDelete
  10. ஶ்ரீராம், என் நாத்தனார் பெண் இப்போ இரண்டு செல்லங்கள் வளர்க்கிறார்.:))) இரண்டும் நாங்க போனால் கூட வந்து உட்கார்ந்துக்கும். அதுவும் சோஃபாவில் பக்கத்திலேயே!

    ReplyDelete
  11. எங்க மோதியை சோஃபாவில் எல்லாம் உட்காரக் கூடாது; சாமி அலமாரிகிட்டேப் போகக் கூடாதுனு எல்லாம் பழக்கி இருந்தோம். :)))அதோட படங்கள் நிறையவே இருக்கு. எல்லாம் மேலே இருக்கு. கீழே வைச்சிருக்கும் ஒரே ஒரு படம் மட்டும் நாளைக்கு ஸ்கான் பண்ணிப் போடறேன். :)

    ReplyDelete
  12. எங்க மோதி காலடியில் தான் உட்காரும்.:)))

    ReplyDelete

  13. விஜயவாடாவில் நாங்கள் இருந்தபோது என் இளைய மகன் பள்ளி விட்டு வரும்போது அவன் பின்னால் சுமார் ஏழெட்டு நாய்கள் தொடர்ந்து வரும். இவனுடைய மாலை உணவெல்லாம் நாய்களுக்குத்தான். எங்கள் செல்லி பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன். அதனால் நாய் புராணத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்

    ReplyDelete
  14. எங்கள் மோத்தி கூட சமையலறைக்குள் தப்பித் தவறிக் கூட நுழையாது. ரோட்டை ஒட்டி வீடு. தெருவில் பள்ளிப் பிள்ளைகள் பள்ளி விட்டுச் செல்வார்கள். இதை வம்பிழுத்துக் கொண்டே செல்வார்கள். இது லேசான குரலில் உறுமும். என் அருகில் உட்கார்ந்திருக்கும். உறுமும்போது நான் மெல்ல அதிருப்தியாய் "ப்ச்' என்றால் போதும் பேசாமல் இருந்து விடும். இயற்கையின் அழைப்புக்கு வெளியே செல்ல வேண்டுமென்றால், 'எனக்கு அவசரம்' என்று ஓடி ஓடி உணர்த்தி, அது எங்களிடம் அனுமதி கேட்கும் அழகு...! அனுமதித்தால்தான் செல்லும்.

    ReplyDelete
  15. காலிடுக்கில் புகுந்து ஓடிவரும்னு படிச்சு ரசிக்குறப்ப ணங்குனு குட்டினாப்புல ஆயிடுச்சே.. கொடுமை.
    சரியாப் போச்சு.. நாய், கிளி, மீன்கொத்தி.. இன்னும் ஜீவகாருண்யம் எதையாவது விட்டு வச்சீங்களா?

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், எனக்கும் இந்த அனுபவம் உண்டு.அம்பத்தூரிலே வாசல்லே வர பசுமாடுங்க, நாய்ங்கனு எல்லாத்துக்கும் சாப்பாடு போடுவேன். அதிலே ஒரு பசுமாடு என்னை எங்கே பார்த்தாலும் விடாது. கையிலே உள்ளதைக்கொம்பாலே முட்டித் தள்ளிப் பிடுங்கும். அந்தப் பையோட சாப்பிட முயற்சிக்கும். :)))) ஒருமுறை அது இடுப்பில் பலமாக முட்டியதில் அடியே பட்டிருக்கு. அதுக்கப்புறமா என் கணவர் இந்தப் பழக்கத்தை விட்டுடுனு கடுமையா எச்சரிக்கும்படியா ஆயிடுச்சு. :))))

    ReplyDelete
  17. உங்க செல்லியோட சுட்டி கொடுங்க ஜிஎம்பி சார். :)

    ReplyDelete
  18. ஶ்ரீராம், மோதி புராணம் இன்னும் தொடருமாக்கும். நிறைய இருந்தாலும் முக்கியமான இரு சம்பவங்களை மட்டும் பகிர்ந்துக்கறேன்.:)))

    ReplyDelete
  19. அப்பாதுரை, நான் நாய், பூனைக்கெல்லாம் பிரசவம் பார்த்த கதையெல்லாம் பதிவாப் போட்டிருக்கேனே, பார்க்கலையா? :)))))

    ReplyDelete
  20. @அப்பாதுரை சுட்டி கொடுத்திருக்கேன், பாருங்க.

    ReplyDelete
  21. செல்லமே செல்லம்.....

    எங்கள் வீட்டில் இப்படி செல்லங்களை வளர்த்ததில்லை. ஏனோ வளர்க்கத் தோன்றியதும் இல்லை!

    ReplyDelete
  22. படிக்கும்போது கொசுவத்தி சுற்றுகிறது.

    ReplyDelete